-->
சமூக அறிவியல் முதல் பருவம் தொகுதி – 3 வரலாறு அலகு 1 இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள் படம், ஓலைச்சுவடி, கல்வெட்டு மற்றும் செப்புப்பட்டயம் படம் கொடுக்கப்பட்டுள்ளது. படவிளக்கம் முடிவடைகிறது. கற்றலின் நோக்கங்கள் இடைக்கால இந்தியாவின் வரலாற்றுக்கான சான்றுகளை அறிந்துகொள்ளுதல் கோவில்கள், மசூதிகள், கல்லறைகள், அரண்மனைகள், கோட்டைகள் ஆகிய முக்கியச் சான்றுகளை அறிதல் இலக்கியங்கள், பொறிப்புகள் ஆகியவற்றைப் புரிந்துகொள்ளுதல் அரேபிய, துருக்கியப் பயணிகளின் பயண நூல்களை அறிந்துகொள்ளுதல் அறிமுகம் இந்திய வரலாற்றில் கிறிஸ்து பிறப்பிற்கு பின், (பொது ஆண்டு), 700 முதல் 1200 மற்றும் கிறிஸ்து பிறப்பிற்கு பின், (பொது ஆண்டு), 1200 முதல் 1700 வரையிலான காலப்பகுதிகள் முறையே தொடக்க இடைக்கால இந்திய வரலாறு என்றும் பின் இடைக்கால இந்திய வரலாறு என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இடைக்கால இந்திய வரலாற்றைக் கற்கும் அறிஞர்களுக்கு நல்வாய்ப்பாக அதிக எண்ணிக்கையிலான பல்வகைப்பட்ட சான்றுகள் கிடைக்கப் பெறுகின்றன. கல்வெட்டுகள், செப்புப்பட்டயங்கள், நினைவுச்சின்னங்கள், நாணயங்கள் ஆகியவை அதிகச் செய்திகளை வழங்குகின்றன. அவற்றுடன் அரேபிய, பாரசீக, துருக்கிய வரலாற்றுத் தொகுப்பாளர்களின் பதிவுகள் மேலதிகச் செய்திகளை முன்வைக்கின்றன. இச் சான்றுகள் பல்வகைப்பட்ட விவரங்களைக் கொண்டுள்ளன. சாதாரண மக்களின் வாழ்நிலை குறித்துக் குறைவான செய்திகளை மட்டுமே முன் வைக்கும் இச் சான்றுகள் அரசர்களின் வாழ்க்கை பற்றி நேரடியான, செறிவான, அதிக எண்ணிக்கையிலான தகவல்களை வழங்குகின்றன. அரசர்களின் சாதனைகள் பற்றிய, அரசவையைச் சார்ந்தோரின் கருத்துக்களும், வரலாற்று நிகழ்வுத் தொகுப்பாளர்களின் கருத்துக்களும், பெரும்பாலும் ஒருதலைப்பட்சமானதாகவும் மிகைப்படுத்தப்பட்டதாகவும் உயர்வுநவிற்சி மொழி நடையிலுமே அமைந்திருக்கின்றன. இடைக்கால இந்திய வரலாற்றைத் தெரிந்துகொள்ளக் கிடைக்கப்பெறும் பல்வகைப்பட்ட சான்றுகளை நாம் ஆய்வு செய்வோம். பெட்டிச் செய்தி ஔரங்கசீப்பின் அவைக்கள வரலாற்று அறிஞராக இருந்த காஃபிகானின் புகழ்பெற்ற கூற்று உங்களுக்குத் தெரியுமா? “விசுவாசம் உள்ளவராக இருத்தல், லாப நோக்கம் இன்மை, ஆபத்துக்கு அஞ்சாமை, ஒருதலைபட்சமாக இல்லாதிருத்தல், விருப்பு வெறுப்பின்றி இருத்தல், நண்பருக்கும் அந்நியருக்குமிடையே வேற்றுமை பாராமை, நேர்மையுடன் எழுதுதல் ஆகியவை வரலாற்று ஆசிரியரின் கடமைகள்" என அவர் கூறியுள்ளார். சான்றுகள் கடந்த காலத்தை மறுபதிவு செய்வதற்கு உதவக்கூடிய ஆதாரங்களான ஆவணங்கள் அல்லது பதிவுகளே சான்றுகள் எனப்படும். சான்றுகளின் உதவியுடன் நாம் அரசியல், பொருளாதார, சமூக மற்றும் பண்பாட்டு வளர்ச்சி விவரங்களைத் திறனாய்வு செய்கிறோம். படம், சான்றுகளை வகைப்படுத்துதல் படம் கொடுக்கப்பட்டுள்ளது, பட விளக்கம் தொடங்குகிறது, படத்தில், சான்றுகளின் வகைகள் கொடுக்கப்பட்டுள்ளன, அவை, முதல்நிலைச் சான்றுகள் இரண்டாம் நிலைச் சான்றுகள் ஆகும். பட விளக்கம் முடிவடைகிறது. முதல்நிலைச் சான்றுகள் பொறிப்புகள், (கல்வெட்டுகள், செப்புப்பட்டயங்கள்), நினைவுச்சின்னங்கள், நாணயங்கள் ஆகியவையும் அவற்றிலிருந்து கிடைக்கப் பெறுகின்ற செய்திகளும் முதல்நிலைச் சான்றுகள் ஆகும். இரண்டாம் நிலைச் சான்றுகள் இலக்கியங்கள், காலவரிசையிலான நிகழ்வுப்பதிவுகள், பயணக்குறிப்புகள், வாழ்க்கை வரலாற்று நூல்கள், சுயசரிதைகள் ஆகியன இரண்டாம் நிலைச்சான்றுகள் ஆகும். பொறிப்புகள் (Inscriptions) பொறிப்புகள் என்பன, பாறைகள், கற்கள், கோயிற்சுவர்கள், உலோகங்கள் ஆகியவற்றின் கடினமான மேற்பரப்பின் மேல் பொறிக்கப்படும் எழுத்துக்களாகும். அரசர் பிறப்பித்த பேராணைகள், அவர் அர்ப்பணித்தவை, கொடுத்த கொடைகள், போர்களில் பெற்ற வெற்றிகளின் நினைவாகவும் போரில் மடிந்த வீரர்களின் நினைவாகவும் எழுப்பப்பட்ட நினைவுச்சின்னங்கள் ஆகியவை அக் காலக் கட்டம் குறித்த பல செய்திகளைத் தம்மகத்தே கொண்டுள்ளன. கொடைகள் வழங்கப்பட்டதைக் குறிக்கும் செப்புப்பட்டயங்கள் சட்டபூர்வமான ஆவணங்களாக ஐயப்பாடுகளுக்கு இடமில்லாத மதிப்பினைக் கொண்டுள்ளன. 13ஆம் நூற்றாண்டு முதலாக இஸ்லாமியப் பாரசீகத்தின் நடைமுறைகளின் காரணமாகவும் செப்புப்பட்டயங்கள் விலை அதிகமாக இருந்ததன் விளைவாகவும் அவற்றுக்கு மாற்றாக குறைந்த செலவிலான பனையோலைகளும், காகிதமும் பயன்பாட்டுக்கு வந்தன. படம், பாறைப் பொறிப்பு படம் கொடுக்கப்பட்டுள்ளது, பட விளக்கம் தொடங்குகிறது, படத்தில் பாறையில் செதுக்கப்பட்டுள்ள கல்வெட்டு ஒன்று இடம்பெற்றுள்ளது. பட விளக்கம் முடிவடைகிறது. பிற்காலச் சோழர்கள் காலத்தில் (பத்து முதல் பதிமூன்றாம் நூற்றாண்டு வரை) வெளியிடப்பட்ட பல செப்புப்பட்டயக் கொடை ஆவணங்களில் இந்து, பௌத்த அல்லது சமண சமயத்தைச் சேர்ந்த தனிப்பட்ட குருமார்களுக்கோ, துறவிகளுக்கோ அல்லது புகழ்பெற்ற மனிதர்களுக்கோ வழங்கப்பட்ட கொடைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. படம், செப்புப்பட்டயம் படம் கொடுக்கப்பட்டுள்ளது, பட விளக்கம் தொடங்குகிறது, படத்தில் செவ்வக வடிவில் சில செப்புத் தகடுகள், ஒரு ஓரத்தில் துளையிடப்பட்டு, ஒரு தடித்த செப்புக்கம்பியால் பிணைக்கப்பட்டுள்ளன, படவிளக்கம் முடிவடைகிறது. இவற்றில் கொடை வழங்கியவர், கொடை பெற்றவர் ஆகியோர் குறித்து விரிவான செய்திகள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் கொடை வழங்கியவரின் அறச்செயல்களே அதிகம் பதிவு செய்யப்பட்டுள்ளன. கொடை வழங்கியவர் மட்டுமே சிறப்புக் கவனம் பெறுகிறார். முதலாம் ராஜேந்திர சோழனின் திருவாலங்காடு செப்பேடுகளும் சுந்தரச் சோழனின் அன்பில் செப்பேடுகளும் குறிப்பிடத்தக்க எடுத்துக்காட்டுகளாகும். காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் எனும் ஊரிலுள்ள கல்வெட்டுகள், கிராமங்கள் எவ்வாறு நிர்வகிக்கப்பட்டன என்பது குறித்த விவரங்களைத் தெரிவிக்கின்றன. சோழ அரசர்களால் வழங்கப்பட்ட பல்வகைப்பட்ட நிலக்கொடை கல்வெட்டுகள், செப்புப்பட்டயங்கள் வாயிலாக நாம் அறிந்துகொள்ள முடிகிறது. அவை: அட்டவணை தொடங்குகிறது, வேளாண் வகை பிராமணரல்லாத உடைமையாளருக்குச் சொந்தமான நிலங்கள். பிரம்மதேயம் பிராமணர்க்குக் கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள். சாலபோகம் கல்விநிலையங்களைப் பராமரிப்பதற்காக வழங்கப்பட்ட நிலங்கள். தேவதானம் கோவில்களுக்குக் கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள். பள்ளிச் சந்தம் சமண சமய நிறுவனங்களுக்குக் கொடையாக அளிக்கப்பட்ட நிலங்கள். அட்டவணை முடிவடைகிறது நினைவுச் சின்னங்கள் விரைவுத் துலங்கள் குறியீடு கொடுக்கப்பட்டுள்ளது, எண் R, 7, J, Q, H கோவில்கள், அரண்மனைகள், மசூதிகள், கல்லறைகள், கோட்டைகள், ஸ்தூபிகள் ஆகிய கட்டடங்கள் நினைவுச் சின்னங்கள் எனும் வகையைச் சார்ந்தவையாகும். டெல்லி சுல்தான்கள் புதுவகையான கட்டடக் கலையை அறிமுகம் செய்தனர். வளைவுகள், ஒடுங்கிய வடிவக்கோபுரங்கள், குவிமாடங்கள் ஆகியன அதன் முக்கியக் கூறுகளாகும். இந்த நினைவுச் சின்னங்களிலுள்ள கல்வெட்டுகள், வரலாற்றைக் கட்டமைக்கத் தேவைப்படும் சிறந்த தகவல்களைக் கொண்டுள்ளன. இடைக்காலத்தைச் சேர்ந்த கஜுராகோ (மத்தியப்பிரதேசம்) எனுமிடத்திலுள்ள கோவில்கள், ராஜஸ்தான் மாநிலம், தில்வாரா (அபு குன்று) எனுமிடத்திலுள்ள கோவில்கள், கொனார்க்கில் (ஒடிசா) உள்ள கோவில்கள் ஆகியவை வடஇந்தியாவில் சமயத்தை மையமாகக் கொண்ட பண்பாட்டின் பரிணாம வளர்ச்சியைப் புரிந்துகொள்ள சான்றுகளாகும். தஞ்சாவூரிலுள்ள சிறந்த பெரிய கோவில் (பிரகதீஸ்வரர் கோவில்), கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம் ஆகிய இடங்களிலுள்ள கோவில்கள் பிற்காலச் சோழர்கள் தமிழ்நாட்டில் கட்டியெழுப்பிய நேர்த்தியான பிரமாண்டமான கட்டடங்களுக்கு அடையாளங்களாகும். படம், தில்வாரா கோவில், அபு குன்று படம் கொடுக்கப்பட்டுள்ளது, படவிளக்கம் தொடங்குகிறது, படத்தில் தில்வாரா கோவிலில் உள்ள உட்புற குவிமாடமும் அதில் செதுக்கப்பட்டுள்ள அழகிய வேலைபாட்டுடன் கூடிய சிற்பங்களும் காணப்படுகின்றன, மேலும் அழகிய சிற்ப வேலைபாட்டுடன் கூடிய தூண்களும் காணப்படுகின்றன, அக் கோவிலைச் சுற்றி சுற்று மண்டபமும் காணப்படுகிறது. படவிளக்கம் முடிவடைகிறது. படம், ஹம்பி, விஜயநகர் படம் கொடுக்கப்பட்டுள்ளது, படவிளக்கம் தொடங்குகிறது. படத்தில் ஹம்பி கோவிலின் பிரதான கோபுரமும், தேர் போன்ற அமைப்புடன் கூடிய ஒரு மண்டபமும், அம் மண்டபம் இரு சக்கரம், மற்றும் முகப்பில் இரு யானைகளுடன், காணப்படுகின்றது, உட்பகுதியில் ஒரு சுற்றுமண்டபம் உள்ளது, தரைத்தளம், கோபுரம், மண்டபம் இவையனைத்தும் கருங்கற்களால் கட்டப்பட்டுள்ளன. இவற்றைப் போலவே ஹம்பியிலுள்ள வித்தாலா, விருப்பாக்சா கோவில்கள் விஜயநகர அரசர்களின் (15ஆம் நூற்றாண்டு) பங்களிப்பைப் பறைசாற்றுபவையாகும். பட விளக்கம் முடிவடைகிறது. குவ்வத்-உல்-இஸ்லாம் மசூதி, மோத்- கி-மசூதி, ஜமா மசூதி, பதேப்பூர் சிக்ரி தர்கா (இவையனைத்தும் டெல்லியிலும் அதற்கருகாமையிலும் அமைந்துள்ளன), சார்மினார் (ஹைதராபாத்) ஆகியன இடைக்காலத்தைச் சேர்ந்த முக்கிய மசூதிகளாகும். படம், சார்மினார் படம் கொடுக்கப்பட்டுள்ளது, பட விளக்கம் தொடங்குகிறது. படத்தில் கட்டடம் சதுர வடிவில் காணப்படுகிறது, சார்மினாரின் அழகிய வேலைபாட்டுடன் கூடிய உயரமான மூன்று மினார்கள், காணப்படுகின்றன, சார்மினார் முழுவதும் வெள்ளை மற்றும் சிவப்பு நிறத்தில் காணப்படுகிறன, உயர்ந்த வளைவுகளைக் கொண்ட இரு வாயில்கள் இதில் காணப்படுகின்றன. பட விளக்கம் முடிவடைகிறது. ஆக்ரா கோட்டை, சித்தூர் கோட்டை, குவாலியர் கோட்டை, டெல்லி செங்கோட்டை மேலும் தௌலதாபாத் (ஔரங்காபாத்), பிரோஷ் ஷா கொத்தளம் (டெல்லி) ஆகிய இடங்களிலுள்ள கோட்டைகளும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். ஜெய்பூர், ஜெய்சால்மர், ஜோத்பூர் ஆகிய இடங்களிலுள்ள அரண்மனைகள், மேன்மைக்கான குதுப்மினார், ராஜபுத்திரர்களின் அடையாளங்களாகும். அலெய்-தர்வாஷா மற்றும் இல்துமிஷ், பால்பன் ஆகியோரின் கல்லறைகள், அனைத்து முகலாய அரசர்களின் கல்லறைகள் ஆகியவை மதிப்புமிக்க சான்றுகளாக அங்கீகரிக்கப்பட்ட சிறப்புமிக்க கட்டடங்களாகும். வடஇந்தியாவிலுள்ள பாழடைந்த நகரங்களான பிரோஷாபாத், துக்ளகாபாத் ஆகியனவும் தென்னிந்தியாவிலுள்ள ஹம்பியும் இடைக்கால இந்திய வரலாற்றுக்கான சான்றுக் கருவூலங்களாகும். நாணயங்கள் நாணயங்களில் பொறிக்கப்பட்டுள்ள படங்களும் உருவங்களும், அரசர்களுடைய பெயர்கள், பட்டங்கள், அவர்களின் உருவப்படங்கள், நிகழ்வுகள், இடங்களின் பெயர்கள், காலங்கள், அரசவம்சத்தின் பெயர்கள், அரசச் சின்னங்கள் ஆகியவற்றை நமக்கு உணர்த்துகின்றன. நாணயங்களில் உள்ள உலோகக்கலவை பேரரசின் பொருளாதார நிலை குறித்த செய்திகளை வழங்குகின்றன. அரசர்களின் ராணுவப் படையெடுப்புகள், பிரதேச விரிவாக்கம், வணிகத் தொடர்புகள், சமய நம்பிக்கைகள் போன்றவையும் நாணயங்களில் இடம்பெற்றுள்ளன. முகமது கோரி தான் வெளியிட்ட தங்க நாணயத்தில் பெண் தெய்வமான இலட்சுமியின் வடிவத்தைப் பதிப்பித்துத் தனது பெயரையும் பொறிக்கச் செய்திருந்தார். படம், நாணயங்களின் படங்கள் கொடுக்கப்பட்டுள்ளன, படவிளக்கம் தொடங்குகிறது. படத்தில் இலட்சுமி உருவம் பொறித்த கோரியின் தங்க நாணயம் மற்றும் கில்ஜி அரசு நாணயங்கள் இடம் பெற்றுள்ளது. கோரியின் நாணயம் தங்கத்திலும், கில்ஜியின் நாணயம் செப்பிலும் செய்யப்பட்டுள்ளன. படவிளக்கம் முடிவடைகிறது. இந்நாணயம், இந்தத் தொடக்ககாலத் துருக்கியப் படையெடுப்பாளர் மதவிசயங்களில் தாராளத்தன்மையுடன் நடந்துகொண்டார் என்பதற்கான அனைத்துச் சாத்தியக் கூறுகளையும் உணர்த்துகிறது. டெல்லி சுல்தான்களின் காலகட்டத்தை அறிந்துகொள்ள 'ஜிட்டல்' என்னும் செப்பு நாணயங்கள் பயன்படுகின்றன. இல்துமிஷ் அறிமுகம் செய்த 'டங்கா' எனப்படும் வெள்ளி நாணயங்கள், அலாவுதீன் கில்ஜியின் தங்க நாணயங்கள், முகமதுபின் துக்ளக்கின் செப்பு நாணயங்கள் போன்றவை நாணயங்கள் பரவலான பயன்பாட்டில் இருந்ததையும் நாட்டின் பொருளாதார வளம் அல்லது நலிவு ஆகியவற்றைச் சுட்டுவதாகவும் அமைந்துள்ளன. உங்களுக்குக் தெரியுமா? படம், உங்களுக்குத் தெரியுமா? கொடுக்கப்பட்டுள்ளது. படவிளக்கம் தொடங்குகிறது. படத்தில், ஒரு ஜிட்டல் 3.6 வெள்ளி குன்றிமணிகளைக் கொண்டது ஆகும். 48 ஜிட்டல்கள் 1 வெள்ளி டங்காவுக்குச் சமமாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது, மற்றும் இரண்டு செப்பு நாணயங்கள் எடுத்துக்காட்டாக அதில் இடம் பெற்றுள்ளது. படவிளக்கம் முடிவடைகிறது. சமய இலக்கியங்கள் தொடக்கத்தில் தென்னிந்தியாவிலும் பின்னர் வடஇந்தியாவிலும் தோன்றிய பக்தி இயக்கம், பக்தி இலக்கியங்களின் வளர்ச்சிக்கு வழியமைத்தன. சோழர்களின் காலம் பக்தி இலக்கியங்களின் காலம் என்று அழைக்கப்படுகின்றது. கம்ப ராமாயணம்', சேக்கிழாரின் 'பெரியபுராணம்', பன்னிரு ஆழ்வார்களால் இயற்றப்பட்டு நாதமுனியால் தொகுக்கப்பட்ட நாலாயிர திவ்விய பிரபந்தம்', அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் இயற்றப்பட்டு நம்பியாண்டார் நம்பியால் தொகுக்கப்பட்ட 'தேவாரம்', மாணிக்கவாசகரின் 'திருவாசகம்' ஆகியவை சோழர்காலப் பக்தி இலக்கியங்களாகும். ஜெயதேவரின் 'கீதகோவிந்தம்' (12ஆம் நூற்றாண்டு) தென்னிந்திய பக்தி இலக்கிய மரபின் தொடர்ச்சியாகும். பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த இறைநிலை உணர்வு பெற்ற கவிஞரான கபீர்தாஸ் பக்தி இயக்கத்தால் கவரப்பெற்றவராவார். சமயச் சார்பற்ற இலக்கியங்கள் கங்காதேவியால் இயற்றப்பட்ட 'மதுரா விஜயம், கிருஷ்ணதேவராயரின் 'அமுக்த மால்யதா’ ஆகிய இலக்கியங்கள் விஜயநகரப் பேரரசுடன் தொடர்புடைய நிகழ்வுகளையும் தனிநபர்களையும் நாம் அறிந்துகொள்ள உதவுகின்றன. சந்த்பார்தை எழுதிய 'பிருதிவிராஜ ராசோ' ராஜபுத்திர அரசர்களின் வீரத்தை விளக்குகிறது. இஸ்லாமுக்கு முந்தைய காலம் குறித்து உள்ள ஒரே சான்று கல்ஹணரின் 'ராஜதரங்கிணி' (11ஆம் நூற்றாண்டு) மட்டுமே. நூல்கள், வாழ்க்கை வரலாறுகள், சுயசரிதைகள் அடிமை வம்சத்தைச் சேர்ந்த சுல்தான் நஸ்ருதின் மாமூதுவால் ஆதரிக்கப்பட்ட மின்கஜ் உஸ் சிராஜ் என்பார் 'தபகத்-இ-நஸிரி' எனும் நூலை எழுதினார். இந்நூலின் சுருக்க உரை முகமது கோரியின் படையெடுப்பில் தொடங்கி கிறித்து பிறப்புக்குப் பின் 1260 வரையிலான நிகழ்வுகள் குறித்த செய்திகளைக் கூறுகின்றன. தன்னை ஆதரித்த சுல்தானின் பெயரையே இச்சுருக்க உரைக்கும் மின்கஜ் உஸ் சிராஜ் சூட்டினார். பதின்மூன்றாம் நூற்றாண்டில் சுல்தான் இல்துமிஷின் இறுதிக்காலத்தில் கஜினியிலிருந்து புலம் பெயர்ந்து வந்திருந்த ஹசன் நிஜாமி என்பார் 'தாஜ்-உல்-மா-அசிர்' எனும் நூலை எழுதினார். குத்புதீன் ஐபக் பற்றிய பல செய்திகளை இந்நூல் முன்வைக்கிறது. இந்நூலே டெல்லி சுல்தானியத்தின் வரலாற்றைக் கூறும், அரசின் இசைவு பெற்ற முதல் நூலாகும். முகமது பின் துக்ளக்கின் அரசவை வரலாற்றாசிரியர் ஜியா- உத்-பரணி 'தாரிக்-இ-பிரோஷாகி' எனும் நூலைப் படைத்தார். இந்நூல் கியாசுதீன் பால்பன் முதல் பிரோஷ்-ஷா துக்ளக்கின் தொடக்கக்கால ஆட்சி வரையிலான டெல்லி சுல்தானியத்தின் வரலாற்றை விளக்குகிறது. பெரிஷ்டாவின் (16ஆம் நூற்றாண்டு) தாரிக்-இ-பெரிஷ்டா இந்தியாவில் முகலாய ஆட்சியின் எழுச்சி குறித்து விவரிக்கின்றது. தபகத் – அரேபியச் சொல், இதற்கு தலைமுறைகள் அல்லது நூற்றாண்டுகள் என்று பொருள். தஜூக் - பாரசீகச் சொல், இதற்கு சுயசரிதை எனப்பொருள். தாரிக் அல்லது தாகுயூக் - அரேபியச் சொல், இதன் பொருள் வரலாறு என்பதாகும். பதினாறாம் நூற்றாண்டில் பாபரின் பாபர் நாமா', அபுல் பாசலின் 'அயினி அக்பரி', 'அக்பர் நாமா ஆகிய நூல்கள் இவ்விரு பேரரசர்கள் குறித்த முழுமையான விவரங்களை எடுத்துரைக்கின்றன. 17ஆம் நூற்றாண்டில் தனது வாழ்க்கை நினைவுகளாக ஜஹாங்கீர் எழுதிய "தசுக்-இ-ஜாஹாங்கீரி" அக்காலக் கட்ட வரலாற்றின் மீது அதிக வெளிச்சத்தைப் பாய்ச்சுகிறது. பேரரசர்கள்எழுதியுள்ள சுயசரிதை நூல்கள் தவிர நிஜாமுதீன் அகமத் என்பவரால் "தபகத்-இ-அக்பரி" எனும் நூல் எழுதப்பட்டது. அபுல் பாசலின் மிகைப்படுத்திக்கூறும் பாங்கினைக் கொண்ட நூல்களைக் காட்டிலும் இந்நூல் நம்பகத்தன்மை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இதைப்போன்று பதானி எழுதிய மற்றொரு நூலான "தாரிக்-இ-பதானி" (பதானியின் வரலாறு) ஒரு மிகச் சிறந்த நூலாகும். ஆயிரத்து ஐநூற்று தொண்ணூற்றைந்தில் வெளியிடப்பட்ட இந்நூல் மூன்று தொகுதிகளைக் கொண்டுள்ளது. அக்பருடைய ஆட்சியைப் பற்றி பேசுகிற தொகுதி, அவரின் நிர்வாகம் தொடர்பாக, குறிப்பாக மதக்கொள்கை குறித்து, ஒளிவுமறைவின்றி வெளிப்படையாக விமர்சன பூர்வமான கருத்துக்களை முன்வைக்கிறது. பயணிகளும் பயணநூல்களும் பதின்மூன்றாம் நூற்றாண்டுத் தமிழகத்தில் பாண்டிய அரசு வலிமை வாய்ந்த சக்தியாக மாறிக்கொண்டிருந்தபொழுதில் வெனிஸ் நகரைச் சேர்ந்த பயணி மார்கோபோலோ வருகை புரிந்தார். அவர் தமிழகத்தில் காயல் (இன்றைய தூத்துக்குடி மாவட்டத்திலுள்ளது) எனும் ஊருக்கு இருமுறை வந்துள்ளார். அக்காலத்தில் காயல் துரைமுகம், அரேபியாவிலிருந்தும், சீனாவிலிருந்தும் வந்த கப்பல்களால் நிரம்பியிருந்த துறைமுகப்பட்டினமாகும். சீனாவிலிருந்து தாம் கப்பலில் வந்ததாய் மார்க்கோபோலோ நம்மிடம் கூறுகிறார். அரேபியாவிலிருந்தும் பாரசீகத்திலிருந்தும் ஆயிரக்கணக்கில் குதிரைகள் தென்னிந்தியாவில் கடல் வழியாக இறக்குமதி செய்யப்பட்டதாக மார்க்கோபோலோ குறிப்பிடுகின்றார். கஜினி மாமூதின் ஒரு படையெடுப்பின்போது அவருடன் அல்-பரூனி (11ஆம் நூற்றாண்டு) இந்தியாவிற்கு வந்து இங்குப் பத்து ஆண்டுகள் தங்கியிருந்தார். கஜினி மாமூதின் சோமநாதபுரப் படையெடுப்பு குறித்தத் துல்லியமான தகவல்கள் இவர் கொடுத்ததாகும். ஒரு கற்றறிந்த அறிஞரான இவர் இந்தியா முழுவதும் பயணம் மேற்கொண்டு இந்தியாவையும் அதன் மக்களையும் புரிந்துகொள்ள முயன்றார். சமஸ்கிருத மொழியைக் கற்றுக்கொண்ட அவர் இந்தியத் தத்துவங்களையும் கற்றார். "தாகுயூக்-இ- ஹிந்த்" என்ற தனது நூலில் இந்தியாவின் நிலைகளையும் அறிவு முறையினையும், சமூக விதிகளையும், மதத்தையும் குறித்து விவாதித்துள்ளார். அரேபியாவில் பிறந்த மொராக்கோ நாட்டு அறிஞரான இபன் பதூதா (14ஆம் நூற்றாண்டு) மொராக்கோவிலிருந்து புறப்பட்டு, எகிப்தைக் கடந்து மத்திய ஆசியா வழியாக இந்தியா வந்தடைந்தார். அவருடைய பயணநூல் (ரிக்ளா [பயணங்கள்]) அவர் பயணம் செய்த நாடுகளையும் மக்களையும் பற்றிய விவரங்களைக் கொண்டுள்ளது. அவருடைய கருத்தின்படி எகிப்தே செல்வம் கொழித்த நாடாகும். ஏனெனில் மேற்கத்திய நாடுகளுடனான இந்தியாவின் வணிகம் முழுவதும் எகிப்தின் வழியாகவே நடைபெற்றது. இந்தியாவின் சாதி குறித்தும் சதி (உடன்கட்டை ஏறுதல்) பற்றியும் கூறியுள்ளார். வெளிநாட்டுத் துறைமுகங்களில் இந்திய வணிகர்களின் விறுவிறுப்பான வணிக நடவடிக்கைகள் குறித்தும் கடலில் காணப்பட்ட இந்தியக் கப்பல்கள் பற்றியும் நாம் அவரிடமிருந்து தெரிந்துகொள்கிறோம். டெல்லி ஒரு பரந்து விரிந்த, நேர்த்தியான நகரமென்று அவர் விவரிக்கின்றார். இந்நாட்களில்தான் சுல்தான் முகமது பின் துக்ளக் தலைநகரை டெல்லியிலிருந்து தெற்கேயிருந்த தேவகிரிக்கு (தௌலதாபாத்) மாற்றி டெல்லியை பாலைவனமாக்கினார். படம், இபன் பதூதா படம் கொடுக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவைப் பொருத்தமட்டிலும் பல அயல்நாட்டுப் பயணிகள் விஜயநகரம் வந்துள்ளனர். அவர்கள் விஜய நகர் அரசைப் பற்றிய முழுமையான விவரங்களை எழுதிவைத்துச் சென்றுள்ளனர். நிகோலோ கோண்டி எனும் இத்தாலியப் பயணி ஆயிரத்து நானுற்று இருபதில் விஜய நகர் வந்தார். ஆயிரத்து நானூற்று நாற்பத்து மூன்றில் மத்திய ஆசியாவின் ஹீரட் நகரிலிருந்து (மத்திய ஆசியாவின் மாபெரும் அரசனான செங்கிஸ்கானின் அரசவை இருந்த இடம்) அப்துர் ரஸாக் விஜய நகருக்கு வந்தார். போர்த்துகீசியப் பயணியான டோமிங்கோ பயஸ் ஆயிரத்து ஐநூற்று இருபத்து இரண்டில், இந் நகருக்கு வருகை தந்தார். இவர்கள் அனைவரும் தாங்கள் கண்டவற்றை பதிவுசெய்துள்ளனர். அவை விஜய நகரப் பேரரசின் பெரும் சிறப்பை நாம் புரிந்து கொள்ள உதவுகின்றன. சுருக்கம் கிறிஸ்து பிறப்பிற்கு பின், 700 முதல் கிறிஸ்து பிறப்பிற்கு பின், 1200 வரையிலான காலப்பகுதி தொடக்க இடைக்காலமென்றும் கிறிஸ்து பிறப்பிற்கு பின், 1200 முதல் கிறிஸ்து பிறப்பிற்கு பின், 1700 வரையிலான காலகட்டம் பின் இடைக்காலமென்றும் வகைப்படுத்தப்படுகின்றன. சான்றுகள் முதல்நிலைச் சான்றுகள், இரண்டாம் நிலைச் சான்றுகள் என வகைப்படுத்தப்படுகின்றன. கற்கள், பாறைகள், கோவில் சுவர்கள் ஆகியவற்றின் மீதுள்ள பொறிப்புகள், அரசு ஆணைகளையும் அரசவை நிகழ்வுகளையும் கொண்டுள்ள செப்புப்பட்டயங்கள் ஆகியவை தெளிவான சான்றுகள் ஆகும். தொடக்க, இடைக்கால நினைவுச் சின்னங்களான முகலாயர் காலக் கோவில்கள், அரண்மனைகள், மசூதிகள், கோட்டைகள், ஸ்தூபிகள், கோபுரங்கள், கல்லறைகள் ஆகியவை கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன. இல்துமிஷ், அலாவுதீன் கில்ஜி ஆகியோரின் நாணயங்கள், பிற்கால முஸ்லீம் அரசர்களின் செப்பு நாணயங்கள் ஆகியவை பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது. பக்தி இயக்க சகாப்தத்தைச் சேர்ந்த பக்தி இலக்கியங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இடைக்கால அரசியல், சமூகப் பொருளாதார நிலைகள் குறித்த தகவல்களை வழங்கும் நூல்கள், வாழ்க்கை வரலாறுகள், சுயசரிதைகள் ஆகியன விவரிக்கப்பட்டுள்ளன. இந்தியாவிற்கு வந்த பெரும்பாலான அரேபிய, பாரசீகப் பயணிகளின் பயண நூல்கள் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளன. சொற்களஞ்சியம், அட்டவணை தொடங்குகிறது வரலாற்றுப் பதிவாளர் chronicler a person who writes accounts of important விரோதம், பகைமை animosity historical events பயணக்குறிப்புகள் travelogue hostility, antagonism நினைவாக commemoration a book or illustrated account of the places visited விரிவாக elaborately and experiences encountered by a traveller தூபிகள் minarets in remembrance of களஞ்சியங்கள் repositories in detail உருவப்படங்கள் portraits a tall tower, typically part of a mosque தொகுப்பு compendium the places, buildings where materials are stored or kept சான்றுகளுடன் நிரூபித்தல் substantiate pictures, images in drawing or painting அட்டவணை முடிவடைகிறது பயிற்சி விடைவுத் துலங்கள் குறியீடு கொடுக்கப்பட்டுள்ளது, எண் L, R, 8, G, Y, 1, சரியான விடையைத்தேர்வு செய்க 1, டேஷ் என்பவை பாறைகள், கற்கள், கோவில் சுவர்கள், உலோகங்கள் ஆகியவற்றின் கடினமான மேற்பரப்பின் மீது செதுக்கப்படும் வாசகங்களாகும். அ, காலவரிசையிலான நிகழ்வுப்பதிவுகள் ஆ, பயணக்குறிப்புகள் இ, நாணயங்கள் ஈ, பொறிப்புகள் 2, கோவில்களுக்குக் கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள் டேஷ் ஆகும். அ, வேளாண்வகை ஆ, சாலபோகம் இ, பிரம்மதேயம் ஈ, தேவதானம் 3, டேஷ் களின் காலம் பக்திகாலமென இலக்கியங்களின் அறியப்படுகிறது. அ, சோழர் ஆ, பாண்டியர் இ, ராஜபுத்திரர் ஈ, விஜயநகர அரசர்கள் 4, முதல் டெல்லி சுல்தான் பற்றிய தகவல்களைக் கூறும் நூல் ஆகும். அ, அயினி அக்பரி ஆ, தாஜ் - உல் - மா -அசிர் இ, தசுக்-இ-ஜாஹாங்கீரி ஈ, தாரிக் இ -பெரிஷ்டா 5, அரேபியாவில் பிறந்து இந்தியாவிற்கு வந்த மொராக்கோ நாட்டு அறிஞர் ஆவார். அ, மார்க்கோபோலோ ஆ, அல்-பரூனி இ, டோமிங்கோ பயஸ் ஈ, இபன் பதூதா 2, கோடிட்ட இடங்களை நிரப்புக 1, டேஷ் கல்வெட்டு ஒரு பிரம்மதேயக் கிராமத்தின் நிர்வாகம் குறித்து விவரித்துக் கூறுகிறது. 2, தன்னுடைய தங்க நாணயங்கள் மீது பெண் தெய்வமான இலட்சுமியின் உருவத்தைப் பதித்து தன்னுடைய பெயரையும் பொறித்தவர் டேஷ் ஆவார். 3, ஒரு டேஷ் என்பது 3.6 வெள்ளி குன்றிமணிகளைக் கொண்டிருந்தது. 4, அடிமை வம்சத்தைச் சேர்ந்த சுல்தான் நஸ்ருதீன் மாமூதுவால் டேஷ் ஆதரிக்கப்பட்டவர் ஆவார். 5, கிறித்து பிறப்புக்குப் பின்1420 இல் விஜயநகருக்கு வருகைபுரிந்த இத்தாலியப் பயணி டேஷ் ஆவார். 3, பொருத்துக 1, கஜுராகோ, ஒடிசா 2, கொனாரக், ஹம்பி 3, தில்வாரா, மத்தியப்பிரதேசம் 4, விருப்பாக்சா, ராஜஸ்தான் 4, சரியா? தவறா? 1, பள்ளிச்சந்தம் என்பது சமண சமய நிறுவனங்களுக்குக் கொடையாக வழங்கப்பட்ட நிலமாகும். 2, நாணயங்களிலுள்ள உலோகங்களின் கலவை பேரரசின் அரசியல் நிலை குறித்த தகவல்களை நமக்கு வழங்குகின்றன. 3, தாமிரத்தின் விலை அதிகமாக இருந்ததால் அரசு ஆணைகளையும் அரசவை நிகழ்வுகளையும் பதிவு செய்வதற்கு குறைந்த செலவிலான பனையோலைகளும் காகிதமும் பயன்படுத்தப்பட்டன. 4, டோமிங்கோ பயஸ் எனும் போர்த்துகீசியப் பயணி கிறித்து பிறப்புக்குப் பின் 1522 இல் சோழப்பேரரசுக்கு வருகை புரிந்தார். 5, கூற்றைக் காரணத்தோடு பொருத்துக (பொருத்தமான விடையை டிக் இட்டுக் காட்டவும்) 1, கூற்று, முகமதுகோரி தனதுநாணயங்களில் தங்க பெண் தெய்வமான இலட்சுமியின் உருவத்தைப் பதிப்பித்தார். காரணம், இத்துருக்கிய படையெடுப்பாளர் மத விசயங்களில் தாராள மனப்பான்மை கொண்டவராய் இருந்தார். அ, காரணம் விளக்கமே. கூற்றுக்கான சரியான ஆ, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை. இ, கூற்று தவறு, காரணம் சரி. ஈ, கூற்று, காரணம் இரண்டுமே தவறு. 2, தவறான இணையைக் கண்டறியவும்: அ, மதுரா விஜயம்- கங்காதேவி ஆ, அபுல் பாசல்- அயினி அக்பரி இ, இபன் பதூதா- தாகுயூக்-இ-ஹிந்த் ஈ, அமுக்தமால்யதா- கிருஷ்ணதேவராயர் 3, பொருந்தாததைக் கண்டுபிடி அ, பொறிப்புகள் ஆ, பயணக்குறிப்புகள் இ, நினைவுச் சின்னங்கள் ஈ, நாணயங்கள் 6, ஓரிரு வாக்கியங்களில் பதில் அளிக்கவும் 1, நாலாயிர திவ்விய பிரபந்தத்தைத் தொகுத்தவர் யார்? 2, 'தசுக்' எனும் வார்த்தையின் பொருள் யாது? 3, ஜஹாங்கீர் எழுதிய நினைவுக் குறிப்பின் பெயர் என்ன? 4, வரலாற்றை அறிந்துகொள்வதற்கான இருவகைச் சான்றுகளைக் கூறுக. 5, இடைக்காலத்தில் கட்டப்பட்ட முக்கிய மசூதிகளையும், கோட்டைகளையும் பட்டியலிடவும். 6, இடைக்காலத்தில் இந்தியாவிற்கு வருகைதந்த முக்கியமான அயல்நாட்டுப் பயணிகளின் பெயர்களைக் கூறவும். 7, கீழ்க்காணும் வினாவுக்கு விடையளிக்கவும் 1, டெல்லி சுல்தான்கள் அறிமுகம் செய்த பலவகைப்பட்ட நாணயங்களை விவரிக்கவும். 8, கட்டக வினாக்கள் 1, டேஷ் பேரரசர் ஔரங்கசீப்பின் அரசவை அறிஞர் ஆவார். விடை, 2, திருவாலங்காடு செப்பேடுகள் டேஷ் காலத்தைச் சேர்ந்ததாகும். விடை: 3, டேஷ் என்பது கல்விக் கூடங்களைப் பாராமரிப்பதற்கான நிலமாகும். விடை: 4, பெரியபுராணத்தைத் தொகுத்தவர் டேஷ் ஆவார். விடை: 5, டேஷ் ஓர் அரேபியச் சொல். இதன் பொருள் 'வரலாறு' என்பதாகும். விடை: 6, முகமது பின் துக்ளக் தனது தலைநகரை டெல்லியிலிருந்து தெற்கே அமைந்திருந்த டேஷ் க்கு மாற்றினார். விடை: 9, உயர் சிந்தனை வினா 1, "நாணயங்களிலுள்ள உலோகங்களின் கலவை பேரரசின் பொருளாதாரச் செழிப்பைச் சுட்டிக்காட்டுகிறது. விளக்குக. 10, மாணவர் செயல்பாடு இடைக்கால இந்தியாவின் அரண்மனைகள், கோட்டைகள், மசூதிகள், கல்லறைகள் ஆகியவற்றின் படங்கள் அடங்கிய செருகேடு (ஆல்பம்) ஒன்றைத் தயார் செய்யவும். 11, வாழ்க்கைத் திறன் உனது நகரத்தில் அல்லது கிராமத்திலுள்ள நூலகங்களிலிருந்து அங்குக் கிடைக்கும் முதல் நிலை, இரண்டாம் நிலைச் சான்றுகளைக் கண்டறிந்து அறிக்கை ஒன்றைத் தயார் செய்யவும். மேற்கோள் நூல்கள் 1, Abraham Eraly, The Age of Wrath, New Delhi:Penguin Group, 2014. 2, Burton Stein, A History of India, New Delhi: Oxford University Press, 2004 (Reprint). 3, K.A. Neelankanta Shastri, Cholas. Madras: University of Madras (Reprint). 4, S.K. Singh, History of Medieval India. New Delhi: Axis Books Private Ltd, 2013. இணையச் செயல்பாடு இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள் நாணயங்களைக் கொண்டு இடைக்கால இந்தியாவைப்பற்றி அறிவோமா? படம், இந்திய நாணயங்கள் குறித்த இணைய செயல்பாட்டுப் படம் கொடுக்கப்பட்டுள்ளது. பட விளக்கம் தொடங்குகிறது. படத்தில் எவ்வாறு இணைய செயல்பாட்டைச் செய்வது என்ற படிநிலைகள் கொடுக்கப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு, படிநிலைகள்: படி 1: கீழ்காணும் உரலி / விரைவுக் குறியீட்டைப் பயன்படுத்தி இச்செயல்பாட்டிற்கான இணையப் பக்கத்திற்குச் செல்லவும். படி 2: மேலே "INDIA" என குறிப்பிடப்பட்டிருக்கும், அதனை தேர்ந்தெடுக்கவும். படி 3: பின்பு அதில் கொடுக்கப்பட்டுள்ள DYNASTY யில் எதேனும் ஒரு KINGDOM ஐ தேர்வு செய்யவும். படி 4: நாணயங்களை படத்தில் கொடுக்கப்பட்டுள்ள விளக்கங்களைக் கொண்டு ஆராய்க. படம், படிநிலைகள் படம் கொடுக்கப்பட்டுள்ளது, படத்தில் படி 1, 2, 3, மற்றும் நான்குக்கான நிலைகள் கொடுக்கப்பட்டுள்ளது. படவிளக்கம் முடிவடைகிறது. இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள் உரலி: https://www.mintageworld.com/ படங்கள் அடையாளத்திற்கு மட்டுமே தேவையெனில் 'Adobe Flash' ஐ அனுமதிக்கவும். விரைவுத் துலங்கள் குறியீடு கொடுக்கப்பட்டுள்ளது, எண் E, W, 3, 1, N அலகு – 2 வடஇந்தியப் புதிய அரசுகளின் தோற்றம் படம், வடஇந்திய கட்டடக் கலைக்குச் சான்றாக ஒரு கோவில் கோபுரம் கொடுக்கப்பட்டுள்ளது, படவிளக்கம் தொடங்குகிறது. அகோபுரம் முழுமைக்கும் நுணுக்கமான சிற்ப வேலைபாடுகளுடன் காணப்படுகிறது. படவிளக்கம் முடிவடைகிறது. கற்றலின் நோக்கங்கள் வடஇந்தியாவின் ராஜபுத்திர அரசுகள் மற்றும் அவற்றைப் போன்ற ஏனைய அரசுகள் குறித்த அறிவினைப் பெறுதல் இந்தியப் பண்பாட்டிற்கு ராஜபுத்திரர்கள் மற்றும் பாலர்களின் பங்களிப்பினை மதிப்பிடுதல் அரேபியர் மற்றும் துருக்கியரின் தொடக்கக்கால இராணுவப் படையெடுப்புகள் குறித்து அறிந்து கொள்ளுதல் விரைவுத் துலங்கள் குறியீடு கொடுக்கப்பட்டுள்ளது. எண் 3, Q, X, F, U அறிமுகம் ராஜபுதனம் என்பது ராஜபுத்திர அரசுகளின் கூட்டமைப்பால் ஆனது. அவற்றுள் மிகவும் புகழ் பெ ற்றது சித்தூர் ஆகும். அனைத்து ராஜபுத்திரஇனக்குழுவினரும் ஒருங்கிணையும் மையமாகச் சித்தூர் விளங்கிற்று. மாளவம், குஜராத் ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில் சித்தூர் சிறியதே. இருந்தபோதிலும் ராஜபுத்திரர்கள் இந்த மூன்று அரசுகளிலும் ஆட்சி செய்தனர். சித்தூரின் ராணா (அரசர்) மாளவத்தை வெற்றி கொண்டதன் நினைவாக 'ஜெய ஸ்தம்பா' எனும் வெற்றித்தூண் சித்தூரில் நிறுவப்பட்டது. பிரதிகாரர்கள் மேற்கிந்தியப் பகுதியிலும், பாலர்கள் இந்தியாவின் கிழக்குப் பகுதியிலும் வலிமைமிக்க அரசுகளை நிறுவியிருந்தனர். ஒன்பதாம் நூற்றாண்டில் ராஜஸ்தான், கன்னோஜ் ஆகிய பகுதிகளின் மேல் இறையாண்மை கொண்ட சக்தியாகத் தம்மைக் கூறிக்கொள்ளும் அளவிற்குப் பிரதிகார அரசவம்சம் வளர்ச்சி பெற்றிருந்தது. படம், ஜெய ஸ்தம்பா படம் கொடுக்கப்பட்டுள்ளது. படவிளக்கம் தொடங்குகிறது. படத்தில் ஜெய் ஸ்தம்பாவின் ஒன்பது தளங்களும் அழகிய வேலைபாடுகளுடன் காணப்படுகிறன, படவிளக்கம் முடிவடைகிறது. பிரதிகார அரசின் வீழ்ச்சி, வங்காளத்தில் பாலர்களின் எழுச்சிக்கும் வடமேற்கு இந்தியாவில் சௌகான்களின் எழுச்சிக்கும் வித்திட்டது. கிறிஸ்து பிறந்தப் பின், (பொது ஆண்டு) 712இல் சிந்துப் பகுதியை அரேபியர் இந்தியாவில் கைப்பற்றியதிலிருந்தே இஸ்லாமியர் காலக்கட்ட வரலாறு தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் கன்னோஜை ஆண்ட அரசர்களின் குறிப்பாக, யசோவர்மனின் ஏறத்தாழ கிறிஸ்து பிறந்தப் பின், பொது ஆண்டு, 736 எதிர்ப்பின் காரணமாகவும் அவர்களுக்குப்பின்னர் பத்தாம் நூற்றாண்டின் இடைப்பகுதிவரை வட இந்தியாவின் பெரும்பகுதியையும் கன்னோஜையும் கட்டியாண்ட ராஜபுத்திரஅரசர்கள் மற்றும் தலைவர்களின் எதிர்ப்பின் விளைவாலும் இந்தியாவில் இஸ்லாமியரின்காலக்கட்டம் கிறிஸ்து பிறந்தப் பின், [பொது ஆண்டு], 1200இல் தான் தொடங்கிற்று. ராஜபுத்திரர்களின் தோற்றம் 'ராஜபுத்' எனும் சொல் 'ரஜ்புத்ர' எனும் சமஸ்கிருதச் சொல்லிலிருந்து பெறப்பட்டதாகும். அதன் பொருள் அரசவம்ச ரத்தத்தின் வாரிசு அல்லது வழித்தோன்றல் என்பதாகும். கிறிஸ்து பிறந்தப் பின், [பொது ஆண்டு], 647இல் ஹர்சரின் மறைவைத் தொடர்ந்து வடக்கு மற்றும் மத்திய இந்தியாவின் பல பகுதிகளில் பல்வேறு ராஜபுத்திர இனக்குழுக்கள் தங்கள் அரசுகளை நிறுவிக்கொண்டன. ராஜபுத்திரர்கள் தங்கள் வம்சாவளித் தோற்றத்தைக் கடந்தகாலத்திலிருந்து தொடங்குகின்றனர். அவர்களின் மிக முக்கியமான மூன்று குலங்கள் சூரிய வம்சி எனும் சூரிய குலம்.'சந்திர வம்சி' எனும் சந்திர குலம், அக்னி குலம் (நெருப்பிலிருந்து தோன்றியவர்கள்) என்பனவாகும். சூரிய குல சந்திர குல வழித்தோன்றல்கள் எனக் கூறிக்கொள்ளும் ராஜபுத்திரர்களுள் முக்கியமானவர்கள் பந்தேல்கண்டின் சந்தேலர்கள் ஆவர் ஹரியானா பகுதியில் தோமரர்கள் ஆட்சி புரிந்து வந்தனர். ஆனால் 12ஆம் நூற்றாண்டில் இவர்கள் சௌகான்களால் வெற்றி கொள்ளப்பட்டனர். படம், வட இந்திய அரசுகள் குறித்த இந்திய வரைபடம் கொடுக்கப்பட்டுள்ளது. படவிளக்கம் தொடங்குகிறது, வரைபடத்தில் தோமர்கள், சௌகான்கள், பிரதிகாரர்கள், சந்தேலர்கள், சோலங்கிகள், பரமாரர்கள், பாலர்கள், ராஷ்டிரகூடர்கள், சோழர்கள் முதலானவர்களின் ஆட்சிப் பகுதிகள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன, மேலும் டெல்லி, கன்னோஜ், நாளந்தா, ஆகிய இடங்களும், கங்கை, யமுனை, நர்மதை, தப்தி, மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, காவேரி மற்றும் வைகை ஆறுகள் குறிக்கப்பெற்றிருக்கின்றன. படவிளக்கம் முடிவடைகிறது. ஜேம்ஸ் டாட் எனும் கீழ்த்திசைப் புலமையாளர் கிறிஸ்து பிறந்தப் பின், பொது ஆண்டு, 1829இல் முக்கியமான 36 ராஜபுத்திர அரசகுலங்களைப் பட்டியலிட்டுள்ளார். அவற்றுள் நான்கு குலங்கள் சிறப்புத்தகுதி பெற்றவையாகும். அவர்கள் பிரதிகாரர்கள், சௌகான்கள், சோலங்கிகள் என்றழைக்கப்பட்ட சாளுக்கியர்கள் (தக்காணச் சாளுக்கியரிடமிருந்து வேறுபட்டவர்கள்). பவாரைச் சேர்ந்த பரமாரர்கள் எனப்படுவோராவர். இந்நான்கு குலமரபினரும் அக்னிகுலத் தோன்றல்கள் ஆவர். பிரதிகாரர்கள் நான்கு முக்கிய குலமரபுகளைச் சார்ந்த ராஜபுத்திரர்களில் ஒரு பிரிவினரான பிரதிகாரர் அல்லது கூர்ஜாப் பிரதிகாரர் கூர்ஜஹாட்டிராவிலிருந்து (ஜோத்பூரில் உள்ளது) ஆட்சி புரிந்தனர். கிறிஸ்து பிறந்தப் பின், பொது ஆண்டு, ஆறாம் நூற்றாண்டில் ஹரிச்சந்திரா என்பவர் கூர்ஜர அரச வம்சத்தின் அடிக்கல்லை நாட்டினார். பிரதிகார அரசர்களுள் முதலாவது மற்றும் முக்கியமான அரசர் முதலாம் நாகபட்டர் என்பவராவார். கி.பி எட்டாம் நூற்றாண்டில் பருக், ஜோத்பூர் ஆகிய பகுதிகளை ஆட்சி செய்த அவர் தனது ஆட்சிப்பரப்பைக் குவாலியர்வரை விரிவுபடுத்தினார். சிந்துவின் மீது அரேபியர் மேற்கொண்ட படையெடுப்பை அவர் முறியடித்து அவர்களின் விரிவாக்க நடவடிக்கைகளைத் தடுத்தார். அவருக்குப் பின்னர் ஆட்சிப் பொறுப்பேற்ற வத்சராஜா ஒட்டுமொத்த வட இந்தியாவின் மேல் ஆதிக்கம் செலுத்த ஆசைப்பட்டார். கன்னோஜைக் கைப்பற்ற அவர் மேற்கொண்ட முயற்சி வங்காளப் பகுதியின் பாலவம்ச அரசரான தர்மபாலாவுடன் பகை ஏற்பட வழிவகுத்தது. மாளவத்தின் கூர்ஜரப் பிரதிகாரர்கள், தக்காணத்தைச் சேர்ந்த ராஷ்டிரகூடர்கள், வங்காளத்துப் பாலர்கள் ஆகிய மூவருள் ஒவ்வொருவரும் வளம் நிறைந்த கன்னோஜின் மீது அவர்களின் மேலாதிக்கத்தை நிறுவ முயன்றனர்.இதனால் ஏற்பட்ட நீண்ட நெடிய மும்முனைப் போட்டியில் இம்மூன்று சக்திகளும் பலவீனமடைந்தன. வத்சராஜாவைத் தொடர்ந்து ஆட்சிப்பொறுப்பேற்ற இரண்டாம் நாகபட்டர், ராமபத்ரா ஆகியோர் குறிப்பிடத்தகுந்த சாதனைகள் எதுவும் புரியவில்லை. ராமபத்திராவுக்குப் பின்னர் அவருடைய மகனான மிகிரபோஜா அல்லது போஜா என்பவர் அரியணை ஏறினார். பதவியேற்ற சில ஆண்டுகளுக்குள் பிரதிகாரர்களின் அதிகாரத்தை வலுப்படுத்துவதில் அவர் வெற்றி பெற்றார். ஒரு வலிமை மிகுந்த அரசராக அவர் தனது நாட்டில் அமைதியைப் பராமரித்தார். அரேபியரின் அச்சுறுத்தல்களை உறுதியுடன் சமாளித்தார். போஜாவுக்குப் பின்னர் ஒரு நூற்றாண்டு காலம் பிரதிகாரப் பேரரசு புகழோடும், கீர்த்தியோடும் விளங்கியது. அரேபியர்களை வெற்றிகரமாக எதிர்த்த பிரதிகாரர்கள் தங்கள் கவனத்தைக் கிழக்கு நோக்கித் திருப்பினர். முதல் ஆயிரமாண்டின் இறுதியில் ராஜஸ்தான் மற்றும் மாளவத்தின் பெரும் பகுதியை அவர்கள் ஆண்டனர். கன்னோஜையும் சில காலம் தங்கள் வசம் வைத்திருந்தனர் பதினொன்று. பன்னிரெண்டாம் நூற்றாண்டுகளில் ராஜபுத்திரர்கள் தங்களுக்கிடையிலேயே முடிவற்ற போர்களை மேற்கொண்டனர். இச்சூழலைச் சாதகமாகப் பயன்படுத்திப் பல உள்ளூர் சிற்றரசர்கள் சுதந்திர அரசர்கள் ஆயினர். பாலர்கள் தர்மபாலர் கிறிஸ்து பிறந்தப் பின், [பொது ஆண்டு], 770 முதல் 810 வரை பால அரசவம்சத்தை உருவாக்கியவர் கோபாலர், அரச பரம்பரையைச் சேர்ந்தவர் என்ற வரலாற்றுப் பின்னணி அவருக்கில்லை. அவரது திறமையின் காரணமாக மக்கள்அவரை அரசராகத் தேர்வு செய்தனர். கிறிஸ்து பிறந்தப் பின், பொது ஆண்டு, 750 முதல் 770 வரையிலான ஆட்சிக்காலத்தில் அவர் வங்காளத்தில் பாலர்களின் எதிர்கால மேன்மைக்கான அடித்தளத்தை அமைத்தார். அவருடைய மகன் தர்மபாலர், பால அரசை வடஇந்திய அரசியலில் ஒரு வலிமைமிக்க சக்தியாக உருவாக்கினார். கன்னோஜுக்கு எதிராக வெற்றிகரமான படையெடுப்பை அவர் மேற்கொண்டார். அவர் மிகச் சிறந்த பௌத்த ஆதரவாளராவார். அவரால் உருவாக்கப்பட்ட விக்கிரமசீலா மடாலயம் பௌத்தக் கல்விக்கான மிகச் சிறந்த மையமாயிற்று. படம், விக்கிரம சீலா மடாலயத்தின் படம் கொடுக்கப்பட்டுள்ளது. படவிளக்கம் தொடங்குகிறது. படத்தில் பாறையை குடைந்து, செவ்வக வடிவில் வாசல் கொண்ட மடாலயம் மைக்கப்பட்டுள்ளது, வாசலின் இருபுறமும் கற்பாறைகளினால் ஆன அமருமிடம் உள்ளது. படவிளக்கம் முடிவடைகிறது. தர்மபாலரைத் தொடர்ந்து அவருடைய மகன் தேவபாலர் அவர் ஆட்சிப் பொறுப்பேற்றார். பாலர்களின் ஆட்சிஅதிகாரத்தைக் கிழக்கு நோக்கி காமரூபம் (அஸ்ஸாம்) வரை விரிவுபடுத்தினார். அவரும் தலைசிறந்த பௌத்த ஆதரவாளர் ஆவார். அவர் பௌத்தர்களுக்கு ஐந்து கிராமங்களைக் கொடையாக வழங்கினார். அவரும் மகதத்தில் மடாலயங்களையும் பல கோவில்களையும் நிறுவினார். தர்மபாலர், தேவபாலர் ஆகியோரின் ஆட்சிக்காலங்கள் வங்காள வரலாற்றின் சிறப்பு மிக்க ஒளிரும் அத்தியாயங்கள்" என வரலாற்றறிஞர் ஆர். சி. மஜும்தார் கருத்துக் கூறியுள்ளார். தேவபாலருக்குப் பின்னர் ஐந்து அரசர்கள் அப்பகுதியைச் சிறப்பித்துச் சொல்ல இயலாத அளவிற்கு ஆட்சி புரிந்தனர். ஆனால் 988ஆம் ஆண்டு முதலாம் மகிபாலர் அரியணை ஏறியதைத் தொடர்ந்து பாலர் அரசு முன்னெப்போதுமில்லாத பெயரையும் புகழையும் பெற்றது. முதலாம் மகிபாலர், 988 முதல் 1038 வரை முதலாம் மகிபாலர் பால வம்சத்தின் மிகச் சிறந்த வலிமை மிக்க அரசர் ஆவார். அவர் இரண்டாம் பால வம்சத்தைத் தோற்றுவித்தவர் ஆவார். பிரதிகாரர்களின் வீழ்ச்சியானது மகிபாலருக்கு வடஇந்திய அரசியல்நிகழ்வுகளில் முதன்மையான பாத்திரத்தை வகிக்கும் வாய்ப்பை வழங்கியது. ஆனால் தென்னிந்திய அரசரான ராஜேந்திர சோழனின் படையெடுப்பின் காரணமாய் வாரணாசிக்கு அப்பால் தனது அதிகாரத்தை விரிவுபடுத்த அவரால் இயலாமல் போயிற்று. பால வம்சத்தின் பண்டைய புகழையும் பெயரையும் மகிபாலர் மீட்டெடுத்தார். வாரணாசி, சாரநாத் நாளந்தா ஆகிய இடங்களில் சமயம் சார்ந்த ஏராளமான கட்டடங்களைக் கட்டுவித்த மகிபாலர் பழைய கட்டடங்களையும் புனரமைத்தார். மகிபாலரின் இறப்பைத் தொடர்ந்து பால வம்சம் வீழ்ச்சியுற்று சேனா வம்சத்தின் வருகைக்கு வழிவிட்டது. சௌகான்கள் சௌகான்கள் கிறிஸ்து பிறந்தப் பின், பொது ஆண்டு, 966 முதல் 1192 வரை இன்றைய ராஜஸ்தானின் கிழக்குப் பகுதிகளைச் சாகம்பரி நகரில் தலைநகரை நிறுவி ஆட்சி புரிந்தவர்களாவர். இந்த ராஜபுத்திர அரச வம்சத்தைத் தோற்றுவித்தவர் சிம்மராஜ் என்பவராவார். இவர் ஆஜ்மீர் நகரைத் தோற்றுவித்தவர் எனவும் அறியப்படுகின்றார். சௌகான்கள் பிரதிகாரர்களுக்குக் கட்டுப்பட்ட குறுநில மன்னர்களாய் இருந்தவராவர். அரேபியரின் படையெடுப்பின்போது பிரதிகாரர்களுடன் தோளோடு தோள் நின்றவராவர். சௌகான் வம்சாவளியின் கடைசி அரசனான பிருதிவிராஜ் சௌகானே அவ்வரச வம்சாவளி அரசர்களுள் தலை சிறந்தவரெனக் கருதப்படுகின்றார். அவர் 1191ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் தரெய்ன் போரில் முகமது கோரியைத் தோற்கடித்தார். இருந்தபோதிலும் 192இல் நடைபெற்ற இரண்டாம் தரெய்ன் போரில் அவர் தோற்கடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். கலை மற்றும் கட்டடக்கலைக்கு ராஜபுத்திரர்களின் பங்களிப்பு ராஜபுத்திர அரசவைகள் பண்பாட்டு மையங்களாகத் திகழ்ந்தன. அங்கு இலக்கியம், இசை, நடனம், ஓவியம், சிற்பம் ஆகிய கலைகளும் கவின் கலைகளும் செழிப்புற்றன. பெரும்பாலும் சமயக் கருத்துக்களை மையமாகக் கொண்ட ஒரு குறிப்பிட்ட பாணியிலான ஓவியக்கலைமரபு ராஜபுத்திர அரசவைகளில் தோற்றம் பெற்றது. இப்பாணியிலான ஒவியங்கள் "ராஜஸ்தானி" என என்றழைக்கப்படுகின்றன. ராஜஸ்தானி பாணியிலான ஓவியங்கள் பிக்கனேர். ஜோத்பூர், மேவார். ஜெய்சால்மர் (ராஜஸ்தான்), ஆகிய இடங்களில் காணக்கிடைக்கின்றன படம், இராஜஸ்தானி ஓவியம் கொடுக்கப்பட்டுள்ளது. படவிளக்கம் தொடங்குகிறது. படத்தில் இருவர் பல்லக்கில் அமர்ந்திருப்பது போலவும், சில பெண்கள் அவர்களுக்கு சேவை செய்வது போலவும் ஓவியம் கொடுக்கப்பட்டுள்ளது. படத்தில் பெரும்பாலும் வெள்ளை, சிவப்பு மற்றும் பச்சை நிறங்கள் இடம்பெற்றுள்ளது. படவிளக்கம் முடிவடைகிறது. உங்களுக்குத் தெரியுமா? (பெட்டிச் செய்தி) பிருதிவிராஜ் சௌகானின் மறைவுக்குப் பின் சில நூற்றாண்டுகள் கழிந்த பின்பு சந்த் பார்தை எனும் கவிஞர் "பிருதிவிராஜ ராசோ" எனும் பெயரில் ஒரு நீண்ட காவியத்தை இயற்றினார் காவியம் கூறும் கதை பின்வருமாறு, கன்னோஜின் அரசனுடைய மகளுக்குத் திருமணம் செய்ய வேண்டும். அவள் தனது கணவனைத் தேர்வு செய்வதற்கெனச் சுயம்வரம் ஏற்பாடு செய்யப்பட்டது. ஏற்கெனவே பிருதிவிராஜனிடம் காதல்வயப்பட்டிருந்த இளவரசி அவரையே மணந்துகொள்ள விரும்பினாள் ஆனால் பிருதிவிராஜ் அவள் தந்தையின் எதிரியாவார் பிருதிவிராஜை அவமானப்படுத்தும் நோக்கத்தில் கன்னோஜின் அரசர் அவருக்கு அழைப்பு அனுப்பவில்லை. மேலும் பிருதிவிராஜ் சௌகானைப் போன்று ஒரு சிலை செய்து தனது அரச சபையின் வாயிலில் வாயிற்காப்போனைப் போல நிறுத்தி வைத்தார். கூடியிருந்தோரெல்லாம் அதிர்ச்சி அடையும் வண்ணம் இளவரசி அங்கிருந்த இளவரசர்களை மறுத்து பிருதிவிராஜின் சிலைக்கு மாலையிட்டுத் தனது விருப்பத்தை வெளிப்படுத்தினாள். சற்று தொலைவில் மறைந்திருந்த பிருதிவிராஜ் இளவரசியை அழைத்துக்கொண்டு குதிரையில் தப்பினார். பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். கட்டடக்கலை கட்டடங்கள் கட்டுவதில் ராஜபுத்திரர் தலைசிறந்தவராவர், சித்தோர்கார், ரான்தம்பூர். கும்பல்கார், இவையனைத்தும் ராஜஸ்தானில் உள்ளன. மாண்டு, குவாலியர், சந்தேரி, அசிர்கார் (இவையனைத்தும் மத்தியப்பிரதேசத்தில் உள்ளன) ஆகிய இடங்களிலுள்ள வலிமை மிகுந்த கோட்டைகள் ராஜபுத்திரர்களின் கட்டடங்களுக்குச் சில எடுத்துக்காட்டுகளாகும். ராஜபுத்திரர்களின் குடியிருப்புக் கட்டடக்கலைக்கு எடுத்துக்காட்டுகளாக விளங்குபவை குவாலியரிலுள்ள மான்சிங் அரண்மனை, ஆம்பர் (ஜெய்ப்பூர்) கோட்டை உதய்பூரில் ஏரியின் நடுவே அமைந்துள்ள அரண்மனை ஆகியவைகளாகும். ராஜபுத்திரர்களின் பல நகரங்களும் அரண்மனைகளும் மலைகளின் மேல் கட்டப்பட்டுள்ள கோட்டைகளிலும், செயற்கையாக உருவாக்கப்பட்ட அழகிய ஏரிகளின் அருகேயும் அமைக்கப்பட்டுள்ளன. ஜோத்பூரில் (ராஜஸ்தான் உள்ள மாளிகை எளிதில் ஏறமுடியாத மலைப்பாறையின் மேல், நகரை நோக்கிய வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. ராஜபுத்திர அரசர்கள் கட்டியுள்ள கோவில்கள் கலை விமர்சகர்களை வியப்பில் ஆழ்த்தி அவர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டுள்ளன. கஜுராகோ எனும் இடத்திலுள்ள கோவில்கள், கொனார்க்கிலுள்ள சூரியனார் கோவில், அபு குன்றின் மீது கட்டப்பட்டுள்ள தில்வாரா சமணக்கோவில், மத்தியப்பிரதேசத்தில் அமைந்துள்ள காந்தர்யா கோவில் ஆகியன ராஜபுத்திரர்களின் கோவில் கட்டடக் கலைக்கு உன்னதமான எடுத்துக்காட்டுகளாகும். பந்தேல்கண்டிலுள்ள கஜுராகோ வளாகத்தில் மொத்தம் 30 கோவில்கள் அமைந்துள்ளன. கஜுராகோ கோவில்களின் சிகரங்கள் எழில் மிகுந்தவையாகும். கோவிலின் வெளிப்புறமும், உட்புறமும் மிக நேர்த்தியான சிற்பங்களைக் கொண்டுள்ளன. இக்கோவில்கள் சமண தீர்த்தங்கரர்களுக்கும், சிவன், விஷ்ணு ஆகிய இந்துக் கடவுள்களுக்கும் படைத்தளிக்கப்பட்டுள்ளன. படம், கஜூராகோ படம் கொடுக்கப்பட்டுள்ளது. படவிளக்கம் தொடங்குகிறது. படத்தில் கஜூராகோவில் உள்ள ஒரு கோவிலின் அழகிய வேலைபாடுடன் கூடிய கோபுரம் கொடுக்கப்பட்டுள்ளது. படவிளக்கம் முடிவடைகிறது. கோவிலின் வாயிலில் படிகட்டுகளுடன், வளைந்த நுழைவாயிலையும், வாயிலின் இரு புறமும், அழகிய வேலைபாடுடன் கூடிய தூண்களும் உள்ளன.இக்கோவில் முழுவதும் கருங்கற்களால் ஆனது. படம், உதய்பூர் அரண்மனை படம் கொடுக்கப்பட்டுள்ளது. படவிளக்கம் தொடங்குகிறது. படத்தில் ஏரியின் நடுவே அமைந்த அரண்மனையும், அழகிய வேலைபாடுடன் கூடிய குவிமாடங்களும், கட்டடம் முழுவதும் வெள்ளை நிறமாகவும் காணப்படுகின்றன. படவிளக்கம் முடிவடைகிறது. படம், ஆம்பர் கோட்டை, ஜெய்ப்பூர் படம் கொடுக்கப்பட்டுள்ளது. படவிலக்கம் தொடங்குகிறது. படத்தில் கோட்டைச் சுவறுடன் கூடிய மேல் பகுதியும், கோட்டையின் நெடிய வளைந்த வாயிலும், கோட்டையைச் சுவரைச் சுற்றி கல்தூண்களும் காணப்படுகிறன. கோட்டைச் சிவந்த நிறத்தில் காணப்படுகிறது. படவிளக்கம் முடிவடைகிறது. படம், குவாலியர் அரண்மனை படம் கொடுக்கப்பட்டுள்ளது. படவிளக்கம் தொடங்குகிறது. படத்தில் அரண்மனையின் உயர்ந்த கோபுரங்களும், மேல் மாடங்களும் காணப்படுகின்றன. படவிளக்கம் முடிவடைகிறது. ஜோத்பூரிலிருந்து 32 மைல் தொலைவில் உள்ள ஒசியான் என்னுமிடத்தில் பதினாறு இந்து மற்றும் சமணக் கோவில்கள் உள்ளன அபு குன்றின் மேலுள்ள சமணக் கோவிலில் வெண்மைநிறச் சலவைக் கற்களால் கட்டப்பட்ட கூடம் உள்ளது. அதன் மையத்தில் பதினொரு பொதுமைய வட்டங்களைக் கொண்ட குவிமாடம் அமைந்துள்ளது. மேலும் இங்குள்ள தூண்களும் விதானமும் அழகிய செதுக்கல் வேலைப்பாடுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. படம், ஓசியான் கோவில் படம் கொடுக்கப்பட்டுள்ளது. படவிளக்கம் தொடங்குகிறது. படத்தில் பாறைகளில் செதுக்கப்பட்ட கருவறையும், கோபுரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. கோவில் சுவர் முழுவதும் சிற்பங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. படவிளக்கம் முடிவடைகிறது. பாலர்களின் பண்பாட்டுப் பங்களிப்பு பாலர்கள் மகாயான பௌத்தத்தைப் பின்பற்றியவராவர். பௌத்தக்கோவில்களையும் புகழ்பெற்ற நாளந்தா, விக்கிரமசீலா ஆகிய பல்கலைக்கழகங்களையும் அவர்கள் பரந்த மனப்பான்மையுடனும் ஈகைக் குணத்தோடும் ஆதரித்தனர். அவர்களின் சமயப் பரப்பாளர்கள் மூலம் திபெத்தில் பௌத்தம் நிறுவப்பட்டது. பெயரும் புகழும் பெற்ற பௌத்தத் துறவியும், திபெத்திய பௌத்தத்தைச் சீர்திருத்தம் செய்தவருமான அதிசா 981 முதல் 1054 வரை விக்கிரமசீலா மடாலயத்தின் தலைவராக இருந்தார். சுமத்ரா மற்றும் ஜாவாவைச் சேர்ந்த இந்து பௌத்த சைலேந்திர அரசுடன் பாலர்கள் சுமூகமான உறவைப் பேணினர். பாலர்களின் ஆதரவால் தனித்தன்மை வாய்ந்த புதிய பாணியைக் கொண்ட கலைப்பள்ளி ஒன்று உருவானது. இது "பாலர்களின் கலை" அல்லது "கிழக்கு இந்தியக்கலை" என்று அழைக்கப்பட்டது. பாலர்களின் இக்கலைப்பாணி இன்றைய பீகார், மேற்குவங்கம், அண்டை நாடான பங்களாதேஷ் ஆகிய பகுதிகளில் தழைத்தோங்கியது. இக்கலைப்பாணி பெரும்பாலும் செப்புச் சிலைகளிலும், பனை ஓலைகளிலும் வரையப்பட்ட ஓவியங்கள் எனும் வடிவங்களில் வெளிப்பட்டன. இவை ஏனைய கடவுளர்களையும் புத்தரையும் புகழ்பாடுவதாய் அமைந்துள்ளன. இப்பகுதிகளைச் சேர்ந்த பாலர்களின் செப்புச் சிலைகள் தென்கிழக்கு ஆசியாவில் இந்தியப் பண்பாடு பரவியதில் முக்கியப்பங்கு வகித்தன ரக்க்ஷாபந்தன் (ராக்கி) எனும் பண்பாட்டு மரபானது ராஜபுத்திரர்களுக்கு உரியதாகும். 'ரக்ஷா' எனில் பாதுகாப்பு என்றும், பந்தன் என்பது கட்டுதல் அல்லது உறவு என்னும் பொருளாகும். இது சகோதரத்துவத்தையும், அன்பையும் கொண்டாடும் விழாவாகும். ஒரு பெண் ஓர் ஆடவனின் மணிக்கட்டில் ராக்கியைக் கட்டிவிட்டால் அப்பெண் அந்த ஆடவனை சகோதரனாகக் கருதுகிறாள் என்று பொருள் அப்படியான ஆடவர்கள் அப்பெண்களைப் பாதுகாக்கக் கடமைப்பட்டவர்கள் ஆவர். 1905ஆம் ஆண்டு வங்கப் பிரிவினையின்போது ரவீந்திரநாத் தாகூர் பெருமளவில் மக்கள் பங்கேற்ற ரக்ஷாபந்தன் விழாவைத் தொடங்கினார். அவ்விழாவில் இந்துமற்றும் முஸ்லீம் பெண்கள் அடுத்த சமூகத்தைச் சேர்ந்த ஆடவர் கைகளில் ராக்கியைக் கட்டி அவர்களைச் சகோதரர்களாக ஏற்கவைத்தார். இந்து, முஸ்லிம்களுக்கிடையே பிளவை ஏற்படுத்த ஆங்கிலேயர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு எதிராக இச்செயல்பாடு மேற்கொள்ளப்பட்டது. . படம், பாலர்கால பனை ஓலை ஓவியம் கொடுக்கப்பட்டுள்ளது. படவிளக்கம் தொடங்குகிறது. படத்தில் சில பனை ஓலைகள் எடுத்துக்காட்டாகக் கொடுக்கப்பட்டுள்ளது. படவிளக்கம் முடிவடைகிறது. இஸ்லாமின் தோற்றம் ஒரு சமய நம்பிக்கையாக இஸ்லாம் அரேபியாவிலுள்ள மெக்காவில் தோன்றியது. இதனைத் தோற்றுவித்தவர் இறைதூதர் முகமது நபிகள் நாயகமாவார். இஸ்லாமைப் பின்பற்றுபவர்கள் முஸ்லீம்கள் என அழைக்கப்படுகின்றனர். ஓர் இஸ்லாமிய அரசு அரசியல் ரீதியாகவும், மத ரீதியாகவும் ஒரே நபரால் ஆளப்பட்டால் அவ்வரசு கலீஃபத் என்றழைக்கப்பட்டது. கலீஃபா என்னும் சொல்லுக்கு, இறைதூதர் முகமது நபிகளின் பிரதிநிதி என்று பொருளாகும். "உமையத்துகளும்”,"அப்பாசித்துகளும்" தொடக்கக்கால உமையத்துகளும் கலீஃபத்துகளாகும். அப்பாசித்துகளும் தனித்தனியே தங்கள் படையெடுப்புகளின் மூலமும் இஸ்லாமின் கோட்பாடுகளைப் பரப்பியதன் வழியாகவும் தங்கள் ஆட்சியை விரிவுபடுத்தினர். எட்டாம் நூற்றாண்டு இந்தியாவில் சிந்து பகுதியைக் கைப்பற்றிய முஸ்லீம் படைவீரர்களாகவே அரேபியர்கள் முதன்முதலாக அறிமுகமாயினர். கங்கைச் சமவெளி மற்றும் தக்காண அரசர்களின் எதிர்ப்பின் விளைவாய் அரேபியர்களால் சிந்துவைத் தாண்டி தங்கள் ஆட்சியை விரிவுபடுத்த இயலவில்லை. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் அப்பாசித் கலீஃபாக்களின் வீழ்ச்சியைத் தொடர்ந்து இந்தியாவிலும் ஏனைய பகுதிகளிலும் இருந்த அரேபிய இராணுவத் தளபதிகள் கலீஃபாக்களின் அதிகாரத்தைத் தூக்கி எறிந்துவிட்டு சுதந்திரமான சுல்தான்களாக ஆட்சிபுரியத் தொடங்கினர். கஜினியைத் தலைநகராகக் கொண்ட துருக்கிய ஆளுநர் அல்ப்-டஜின் அவர்களில் ஒருவர் அவருக்குப் பின்னர் ஆட்சிப்பொறுப்பேற்ற அவருடைய மருமகன் சபக்டிஜின் வடமேற்குத் திசை வழியாக இந்தியாவைக் கைப்பற்ற விரும்பினார். ஆனால் அவரது விருப்பத்தை அவரது மகன் கஜினி மாமூது தான் நிறைவேற்றினார். கஜினி மாமூது கிறிஸ்து பிறந்தப் பின், பொது ஆண்டு, 997 முதல் 1030 வரை கஜினி மாமூது இந்தியாவின் மீது சூறையாடலை நோக்கமாகக் கொண்ட திடீர் படையெடுப்புகளைப் பதினேழு முறை நடத்தியதாகக் கூறப்படுகிறது. அ க்காலக்கட்டத்தில் இந்தியா பல சிற்றரசுகளாகப் பிரிந்திருந்தது. அவற்றுள் ஒன்றான ஷாகி அரசு பஞ்சாப் முதல் காபூல் வரை பரவியிருந்தது. கன்னோஜ், குஜராத், காஷ்மீர், நேபாளம், மாளவம், பந்தேல்கண்டு ஆகியன ஏனைய முக்கிய அரசுகளாகும். ஷாகி அரசுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட படையெடுப்புகளில் அதன் அரசர் ஜெயபாலர் 1001ஆம் ஆண்டு தோற்கடிக்கப்பட்டார். இத் தோல்வியைப் பெருத்த அவமானமாகக் கருதிய ஜெயபாலர் தன்னைத்தானே மாய்த்துக்கொண்டார். அவருக்குப்பின் வந்த ஆனந்தபாலர் கஜினி மாமூதுக்கு எதிராகப் போரிட்டார். 1008ஆம் ஆண்டு பெஷாவருக்கு அருகேயுள்ள வைகிந்த் எனுமிடத்தில் அவர் தோற்கடிக்கப்பட்டார்.வைகிந்தில் பெற்ற வெற்றியின் விளைவாக கஜினி மாமூது பஞ்சாப் வரை தனது ஆட்சி அதிகாரத்தை விரிவுபடுத்தினார். இதனைத் தொடர்ந்து இந்தியாவின் மீது அவர் மேற்கொண்ட படையெடுப்புகள் வட இந்தியாவின் செல்வச் செழிப்புமிக்க கோவில்களையும் நகரங்களையும் கொள்ளையடிப்பதையே நோக்கமாகக் கொண்டிருந்தன 1011இல் பஞ்சாபிலுள்ள நாகர்கோட் டெல்லிக்கு அருகேயுள்ள தானேஸ்வர் ஆகிய நகரங்கள் அவரால் சூறையாடப்பட்டன. (பெட்டிச் செய்தி) சிந்துவை அரேபியர் கைப்பற்றியதும் அதன் தாக்கமும் கிறிஸ்து பிறந்தப் பின், பொது .ஆண்டு, 712ஆம் ஆண்டு உமையது அரசின் படைத்தளபதியான முகமது பின் காசிம் சிந்துவின் மீது படையெடுத்தார். சிந்துவின் அரசர் நாகீர், முகமது பின் காசிமால் தோற்கடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். சிந்துவின் தலைநகர் அரோர் கைப்பற்றப்பட்டது. காசிம் முல்தானையும் கைப்பற்றினார். சிந்துவில் நிர்வாக ஏற்பாடுகளைச் செய்தார். சிந்துப்பகுதிவாழ் மக்களுக்குப் "பாதுகாக்கப்பட்ட மக்கள்" எனும் தகுதி வழங்கப்பட்டது. மக்களின் வாழ்க்கையிலும் அவர்களின் மதங்களிலும் எவ்விதத் தலையீடும் செய்யப்படவில்லை. ஆனால் காசிம் வெகுவிரைவில் கலீஃபாவால் திரும்ப அழைக்கப்பட்டார். அரேபிய அறிஞர்கள் சிந்துவிற்கு வந்து பல இந்திய இலக்கியங்களைக் கற்றனர். வானியல், தத்துவம், கணிதம், மருத்துவம் தொடர்பாகச் சமஸ்கிருத மொழியிலிருந்த பல நூல்களை அவர்கள் அரேபிய மொழியில் மொழியாக்கம் செய்தனர். 0 முதல் 9 வரையிலான எண்களை அவர்கள் இந்தியாவிலிருந்தே கற்றுக்கொண்டனர் அதுவரையிலும் மேலைநாட்டினர் பூஜ்யத்தின் பயன்பாட்டை அறிந்திருக்கவில்லை. ஐரோப்பியர்கள் கணிதம் தொடர்பான அதிக அறிவை அரேபியர் வாயிலாகப் பெற்றனர். பூஜ்யத்தின் முக்கியத்துவத்தை அவர்கள் இந்தியாவிலிருந்தே கற்றுக்கொண்டனர். மேலை நாட்டவரும் அரேபியர்களும் சதுரங்க விளையாட்டை இந்தியர்களிடமிருந்தே கற்றுக்கொண்டதாக நம்பப்படுகிறது. படம், இந்தியாவில் அரேபியர்கள் வருகை குறித்த இந்திய வரைப்படம் கொடுக்கப்பட்டுள்ளது. படவிளக்கம் தொடங்குகிறது. படத்தில் ஈரான், பெர்ஷியா, ஈராக், கலீபத் ஆகிய இடங்களிலிருந்து அரேபியர்கள் சிந்து வருகை புரிந்ததைக் குறிப்பிட்டு அம்புக் குறியிட்டுக் காட்டப்பட்டுள்ளது. படவிளக்கம் முடிவடைகிறது. விரைவுத் துலங்கள் குறியீடு கொடுக்கப்பட்டுள்ளது, எண் 9, E, 1, U, G 1018ஆம் ஆண்டில் கஜினி மாமூது புனித நகரமான மதுராவைக் கொள்ளையடித்தார். ன்னோஜையும் அவர் தாக்கினார். கன்னோஜின் அரசர் ராஜ்யபாலர் கன்னோஜைக் கைவிட்டுவிட்டு வெளியேறி பின்னர் இயற்கை எய்தினார். கஜினி மாமூது பெரும் செல்வத்துடன் ஊர் திரும்பினார். அவருடைய அடுத்தப் படையெடுப்பு குஜராத்தின் மீதானதாகும். கிறிஸ்து பிறந்தப் பின், 1024இல் கஜினி மாமூது முல்தானிலிருந்து புறப்பட்டு ராஜபுதனத்தின் குறுக்கே படையெடுத்து வந்து சோலங்கி அரசர் முதலாம் பீமதேவரைத் தோற்கடித்து அன்கில்வாட் நகரைச் சூறையாடினார். கஜினி மாமூது மிகவும் புகழ்பெற்ற சோமநாதபுரம் கோவிலைக் கொள்ளையடித்து அங்கிருந்த கடவுள் சிலையை உடைத்ததாகவும் சொல்லப்படுகிறது. இதன் பின்னர் சிந்து பாலைவனத்தின் வழியாக அவர் நாடு திரும்பினார். இப்படையெடுப்பே இந்தியாவின் மீதான அவரின் இறுதிப் படையெடுப்பாகும். கிறிஸ்து பிறந்தப் பின், 1030இல் கஜினி மாமூது மரணமடைந்தார். படம், சோமநாதபுரம் கோவிலின் இடிபாடுகள் கொடுக்கப்பட்டுள்ளது, படவிளக்கம் தொடங்குகிறது. படத்தில் சிதைந்த நிலையில் காணப்படும் தூண்களும் கோவிலின் சுற்றுச் சுவர்களும் இடம்பெற்றுள்ளது. கஜனாவியப் பேரரசு தோராயமாக பாரசீகம், ஆக்ஸஸுக்கு அப்பால் உள்ள பகுதிகள், ஆப்கானிஸ்தான், பஞ்சாப் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருந்தது. படவிளக்கம் முடிவடைகிறது. முகமது கோரி, 1149 முதல் 1206 வரை கோர் பகுதியைச் சேர்ந்த முகமது அல்லது முகமது கோரி கஜினிக்குக் கப்பம் கட்டிய குறுநிலத் தலைவராக இருந்தவர். கஜினி மாமூதின் இறப்பிற்குப் பின்னர் சுதந்திரமானவரானார். கஜனாவியப் பேரரசின் வீழ்ச்சியைச் சாதகமாக்கிக்கொண்ட முகமது கோரி கஜினியைத் தனது கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டுவந்தார். கஜினியில் தனது நிலையை வலுவானதாகவும் பாதுகாப்பானதாகவும் ஆக்கிக்கொண்ட பின்னர் இவர் தனது கவனத்தை இந்தியா மீது திருப்பினார். கஜினி மாமூதைப் போலன்றி இவர் இந்தியாவைக் கைப்பற்றி தனது பேரரசை விரிவாக்கம் செய்ய விரும்பினார் கிறிஸ்து பிறந்தப் பின், பொது ஆண்டு 1175இல் முல்தானைக் கைப்பற்றிய அவர் அடுத்தடுத்த படையெடுப்புகளின் மூலம் ஒட்டுமொத்த முல்தானையும் கைப்பற்றினார். 1186இல் பஞ்சாப்பைத் தாக்கி அதனைக் கைப்பற்றினார். தரெய்ன் போர், 1191 முதல் 1192 வரை தாங்கள் அகப்பட்டுக்கொண்ட ஆபத்தான சூழலைப் புரிந்துகொண்ட வடஇந்திய இந்து அரசர்கள் பிருதிவிராஜ் சௌகானின் தலைமையில் ஒரு கூட்டணியை உருவாக்கினர்.நெருக்கடி நிலையைச் சமாளிக்கும் ஆற்றல் கொண்டவராகப் பிருதிவிராஜ் சௌகான் 1191இல் டெல்லிக்கு அருகே தரெய்ன் எனுமிடத்தில் நடைபெற்ற போரில் முகமது கோரியைத் தோற்கடித்தார். இப்போர் முதலாம் தரெய்ன் போர் என்று அழைக்கப்படுகிறது. இத்தோல்விக்குப் பழி வாங்கும் பொருட்டு முகமது கோரி தீவிரமான ஏற்பாடுகளை மேற்கொண்டு பெரும்படையைத் திரட்டினார். தன்னுடைய பெரும்படையோடு பெஷாவர், முல்தான் வழியாக லாகூரை வந்தடைந்தார் தன்னுடைய மேலாதிக்கத்தை அங்கீகரிக்குமாறும் ஒரு முஸ்லீமாக மாறும்படியும் அவர் பிருதிவிராஜ் சௌகானுக்குச் செய்தியனுப்பினார். அதனை மறுத்த பிருதிவிராஜ் போருக்குத் தயாரானார். பல இந்து அரசர்களும் குறுநிலத் தலைவர்களும் அவருடன் அணிவகுத்தனர். 1192 நடைபெற்ற இரண்டாம் தரெய்ன் போரில் பிருதிவிராஜின் படைகளை முற்றிலுமாகத் தோற்கடித்த முகமது கோரி பின் அவரைக் கொன்றார். இரண்டாம் தரெய்ன் போர் ராஜபுத்திரர்களுக்குப் பேரிழப்பை ஏற்படுத்திய போராகும். அவர்களின் அரசியல் கௌரவம் பெரும் பின்னடைவைச் சந்தித்தது. சௌகான் அரசு அப்போது படையெடுத்து வந்தவரின் காலடியில் கிடந்தது. இவ்வாறு இந்தியாவில் ஆஜ்மீரில் முதல் இஸ்லாமிய அரசு உறுதியாக நிறுவப்பட்டது. இந்திய வரலாற்றில் புதிய சகாப்தம் தொடங்கியது. இரண்டாம் தரெய்ன் போரில் வெற்றி பெற்ற பின்னர் தனது நாட்டின் கிழக்கெல்லையில் அச்சுறுத்தல்களை ஏற்படுத்திய துருக்கியரையும் மங்கோலியரையும் எதிர்கொள்வதற்காக முகமது கோரி கஜினிக்குத் திரும்பினார். கிறிஸ்து பிறந்தப் பின், பொது ஆண்டு, 1206இல் முகமதுகோரி இயற்கை எய்தவே இந்தியாவிலிருந்த அவருடைய திறமை வாய்ந்த தளபதி குத்புதீன் ஐபக் முகமது கோரிக்குச் சொந்தமாயிருந்த இந்தியப் பகுதிகளைத் தனது கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டுவந்த பின்னர் தன்னை "டெல்லியின் முதல் சுல்தான் எனப் பிரகடனப்படுத்திக்கொண்டார். சுருக்கம் ஹர்சருக்குப் பின்னர் புதிய பிராந்திய அரசுகள் உதயமாயின. அவற்றுள் பிரதிகாரர்கள், பாலர்கள், சௌகான்கள், பரமாரர்கள் ஆகியோர் முக்கிய அரச வம்சத்தினர் ஆவர். பிரதிகாரர்களும், பாலர்களும் வடக்குச் சமவெளிகளைக் கைப்பற்றுவதில் தங்களிடையே தொடர்ந்து போரிட்டுக்கொண்டனர். குறிப்பாகக் கன்னோஜைக் கைப்பற்றுவதில் அவர்கள் தனிக்கவனம் செலுத்தினர். கன்னோஜைக் கைப்பற்ற நடைபெற்ற தொடர் மோதல்கள் குறுநிலத் தலைவர்களையும் சிற்றரசர்களையும் தங்களைச் சுதந்திர அரசர்களாக அறிவித்துக்கொள்ளத் தூண்டின. ராஜபுத்திரர்களும் பாலர்களும் படிப்படியாக வளர்ந்துவந்த இந்தியப் பண்பாட்டிற்கு மெச்சத்தகுந்த பங்களிப்பைச் செய்தனர். அரேபியரின் விரிவாக்க முயற்சிகள் பல அரசர்களால் எதிர்க்கப்பட்டன. கொள்ளையடிப்பதை நோக்கமாகக் கொண்ட கஜினி மாமூதின் திடீர் இராணுவத் தாக்குதல்கள் பதினோராம் நூற்றாண்டிலும் அவற்றைத் தொடர்ந்து முகமது கோரி மேற்கொண்ட படையெடுப்புகளும் இந்தியாவில் இஸ்லாமியர் ஆட்சி நிறுவப்படுவதற்கு வழியமைத்துக் கொடுத்தன. சொற்களஞ்சியம் வாரிசு, வழித்தோன்றல், scion, a descendant of the notable family முன்னெப்போதும் இல்லாத, unprecedented, exceptional இரு சாராருக்கும் நாசத்தை விளைவிக்கின்ற, internecine, mutually destructive சித்தரிக்கும் கலை, portraiture, the art of painting நேர்த்தியான, elegant, grand மடாலயம், monastery, a place where monks live கூட்டமைப்பு, confederacy, a league or alliance of states பயிற்சி 1, சரியான விடையைத் தேர்வு செய்க 1, பிருதிவிராஜ ராசோ' எனும் நூலை எழுதியவர் யார்? அ, கல்ஹணர் ஆ, விசாகதத்தர் இ, ராஜசேகரர் ஈ, சந்த் பார்தை 2, பிரதிகார அரசர்களுள் முதல் தலைசிறந்த அரசர் யார்? அ, முதலாம் போஜா ஆ, முதலாம் நாகபட்டர் இ, ஜெயபாலர் ஈ, சந்திரதேவர் 3, கஜினி என்னும் ஒரு சிறிய அரசு எங்கு அமைந்திருந்தது? அ, மங்கோலியா ஆ, துருக்கி இ, பாரசீகம் ஈ, ஆப்கானிஸ்தான் 4, கஜினி மாமூதின் படையெடுப்பிற்கு முக்கியக் காரணம் யாது? அ, சிலை வழிபாட்டை ஒழிப்பது. ஆ, இந்தியாவின் கொள்ளையடிப்பது இ, இந்தியாவில் இஸ்லாமைப் பரப்புவது. ஈ, இந்தியாவில் ஒரு முஸ்லீம் அரசை நிறுவுவது. 2, கோடிட்ட இடங்களை நிரப்புக 1, விக்கிரமசீலா பல்கலைக்கழகத்தைத் தோற்றுவித்தவர் டேஸ் ஆவார். 2, கிறிஸ்து பிறந்தப் பின், டேஸ் இல் சிந்துவை அரேபியர் கைப்பற்றினர். 3, ஆஜ்மீர் நகரத்தை நிர்மாணித்தவர் டேஸ் ஆவார். 4, காந்தர்யா கோவில் டேஸ் அமைந்துள்ளது. 3, பொருத்துக 1, கஜுராகோ, அபு குன்று 2, சூரியனார் கோவில், பந்தேல்கண்ட் 3, தில்வாரா கோவில், கொனாரக் . 4, சரியா? தவறா? 1, 'ராஜபுத்ர' என்பது ஒரு லத்தீன் வார்த்தை ஆகும். 2, அரசர் கோபாலர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். 3, அபுகுன்றில் கோவில் அமைந்துள்ள சிவபெருமானுக்குப் படைத்தளிக்கப்பட்டுள்ளது. 4, 'ரக்ஷாபந்தன்' சகோதர உறவு தொடர்பான விழாவாகும் 5, இந்தியர்கள் 0 முதல் 9 வரையிலான எண்களை அரேபியர்களிடமிருந்து கற்றுக் கொண்டனர் 5, கீழ்க்காணும் கூற்றுகளை ஆய்க: பொருத்தமான விடையை டிக் குறி இட்டுக் காட்டவும் கூற்று, கன்னோஜின் மீது ஆதிக்கத்தை நிறுவவே மும்முனைப் போராட்டம் நடைபெற்றது. காரணம், கன்னோஜ் மிகப்பெரும் நகரமாக இருந்தது. அ, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமே. ஆ, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல. இ, கூற்று தவறு காரணம் சரி. ஈ, கூற்றும் காரணமும் தவறு 2, கூற்று ஒன்று, மகிபாலரால் தனது நாட்டை வாரணாசியைக் கடந்து விரிவுபடுத்த முடியவில்லை. கூற்று இரண்டு, மகிபாலரும் முதலாம் ராஜேந்திர சோழனும் சமகாலத்தவர் ஆவர். அ, 1 சரி ஆ, 2 சரி இ, 1 மற்றும் 2 சரி ஈ, 1 மற்றும் 2 தவறு. 3, கூற்று, இந்தியாவில் இஸ்லாமியக் காலக்கட்டம் கிறிஸ்து பிறந்தப் பின், பொது ஆண்டு, 712 இல் அரேபியர் சிந்துவைக் கைப்பற்றிய உடன் தொடங்கவில்லை. காரணம், கூர்ஜரப் பிரதிகாரர்கள் அரேபியரைக் கடுமையாக எதிர்த்தனர். அ, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே. ஆ, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல இ, கூற்று சரி, காரணம் தவறு. ஈ, கூற்று தவறு. காரணம் சரி 4, கூற்று, இரண்டாம் தரெய்ன் போரில் பிருதிவிராஜ் தோல்வியடைந்தார். காரணம், ராஜபுத்திரர்களிடையே ஒற்றுமை இல்லை. அ, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே. ஆ, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல. இ, கூற்று சரி, காரணம் தவறு ஈ, கூற்று தவறு காரணம் சரி. 5, கீழ்க்காணும் கூற்றுகளை ஆய்க. அவற்றில் எது அல்லது எவை சரியானவை என்பதைக் கண்டறியவும் 1, ரக்ஷாபந்தன் என்ற மரபானது ராஜபுத்திரர்களுடையது. 2, வங்கப் பிரிவினையின் போது ரவீந்திரநாத் தாகூர் பெருமளவில் மக்கள் பங்கேற்ற 'ரக்ஷாபந்தன்' விழாவைத் தொடங்கினார். 3, இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிரிப்பதற்காக ஆங்கிலேயர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு எதிரானதாக இது திட்டமிடப்பட்டது. அ, கூற்று 1 சரியானது. ஆ, கூற்று 2 சரியானது. இ, கூற்று 3 சரியானது. ஈ, மேற்கண்ட அனைத்தும் சரியானவை. 6, ஒரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும் 1, கன்னோஜின் மீதான மும்முனைப் போராட்டம் குறித்து எழுதுக 2, ஏதேனும் நான்கு ராஜபுத்திரக் குலங்களின் பெயர்களை எழுதுக 3, பாலர் அரச வம்சத்தை நிறுவியவர் யார்? 4, தொடக்ககால, முதல் இரு கலிஃபாத்துகளின் பெயர்களைக் குறிப்பிடுக. 5, காசிம் தோற்கடித்த சிந்து மன்னரின் பெயரைக் குறிப்பிடுக. 7, கீழ்க்காணும் வினாவுக்கு விடையளிக்கவும் 1, சிந்துவை அரேபியர் கைப்பற்றியதன் தாக்கங்கள் யாவை? (ஏதேனும் ஐந்தைக் குறிப்பிடவும்) 8. உயர் சிந்தனை வினா அ, மாமூது கஜினியின் படையெடுப்பிற்கும் முகமது கோரியின் படையெடுப்பிற்கும் இடையேயுள்ள வேறுபாடுகள் யாவை? ஆ, கண்டு பிடித்து நிரப்புக 1, முதலாம் தரெய்ன் போர், போர் நடைபெற்ற ஆண்டு போருக்கான காரணங்கள் யார் யாரைத் தோற்கடித்தார்கள்? விளைவு என்ன? 2, இரண்டாம் தரெய்ன் போர் போர் நடைபெற்ற ஆண்டு போருக்கான காரணங்கள் யார் யாரைத் தோற்கடித்தார்கள்? விளைவு என்ன? 9, மாணவர் செயல்பாடு அ) வார்த்தைத் துளிகள் இவ்வார்த்தைகள் பற்றி மாணவர்களுக்கு என்ன தெரியும் என்பதை மாணவர்கள் விவாதிக்க வேண்டும்; குறிப்பும் எழுத வேண்டும். ஹர்சர் கன்னோஜ் ராஜபுத்திரர் விக்கிரமசீலா பிருதிவிராஜ் கலிஃபா ஆ, இந்தியாவிற்கு இஸ்லாமியரின் வருகை கிறிஸ்து பிறந்தப் பின், பொது ஆண்டு 1192 கிறிஸ்து பிறந்தப் பின், பொது ஆண்டு 1175 கிறிஸ்து பிறந்தப் பின், பொது ஆண்டு 1001 கிறிஸ்து பிறந்தப் பின், பொது ஆண்டு 1191 கிறிஸ்து பிறந்தப் பின், பொது ஆண்டு 1030 கிறிஸ்து பிறந்தப் பின், பொது ஆண்டு 712 10, வரைபட வினா இந்திய ஆறுகள் வரைபடத்தில் பிரதிகாரர்கள், சௌகான்கள், பாலர்கள், பரமாரர்கள் ஆண்ட பகுதிகளைக் குறிப்பிடுக 11, கட்டக வினாக்கள் 1. மாமூது கஜினியால் தோற்கடிக்கப்பட்ட பஞ்சாபின் ஷாகி வம்ச அரசர் யார்? விடை, 2. ராஜபுத்திர ஓவிய பாணிகள் டேஸ் என்று அழைக்கப்படுகின்றன. விடை, 3. ராஜபுத்திரக் குலங்கள் எத்தனை இருந்தன? விடை, 4, இந்தியாவில் முதல் இஸ்லாமியப் பேரரசை உருவாக்கியவர் யார்? விடை, 5. டெல்லியின் முதல் சுல்தான் யார்? விடை, 6. மெக்கா எங்குள்ளது? விடை, 12. வாழ்க்கைத் திறன் ராஜபுத்திர அரசர்களால் நிர்மாணிக்கப்பட்ட கோவில்களின் படங்களைக் கொண்டு ஒரு செருகேட்டினை (ஆல்பம்) தயார் செய்யவும். மேற்கோள் நூல்கள் 1, Romila Thapar, Early India, New Delhi: Penguin, 2002 2, Burton Stein, A History of India, New Delhi: Oxford University Press, 2004 (Reprint). 3, S.K. Singh, History of Medieval India, New Delhi: Axis Books, 2013. 4, K.V Rajendra, Ancient and Medieval Indian History, New Delhi: Pacific Publication, 2010 அலகு – 3 தென்னிந்தியப் புதிய அரசுகள்: பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும் படம், தென்னிந்தியக் கோவில் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. படவிளக்கம் தொடங்குகிறது. படத்தில், கோவில் முழுமையும் கருங்கற்களால் கட்டப்பட்டுள்ளது, கோவிலின் முகப்பு மண்டபம், அதில் ஏற படிகட்டுகளுடன் காட்சியளிக்கிறது, கோவிலின் பிரதானக் கோபுரமும், மண்டபமும் சிற்ப வேலைப்பாட்டுடன் காணப்படுகின்றன. படவிளக்கம் முடிவடைகிறது. கற்றலின் நோக்கங்கள் விரைவுத் துலங்கள் குறியீடு கொடுக்கப்பட்டுள்ளது, எண், 5, G, I, U, 3 பிற்காலச் சோழர்கள் மற்றும் பாண்டியர்களின் தோற்றத்தைக் கண்டறிதல் இவ்விரு அரசுகளின் முக்கியமான அரசர்களைப் பற்றி அறிந்துகொள்ளுதல் அவர்களின் நிர்வாகமுறைகளை அறிந்துகொள்ளுதல் அவர்களின் ஆட்சிக்காலத்திய சமூகப் பொருளாதாரப் பண்பாட்டு வளர்ச்சியைப் புரிந்துகொள்ளுதல் 1, பிற்காலச் சோழர்கள் அறிமுகம் தென்னிந்திய வரலாற்றில் பிரபலமான நன்கறியப்பட்ட முடியாட்சி அரசுகளில் சோழ அரசும் ஒன்றாகும். அவர்களின் அரசுக் கட்டமைப்பு விரிவானது. நீர்பாசன அமைப்புமுறை விரிந்து பரந்தது. அதிக எண்ணிக்கையிலான கோவில்களை அவர்கள் கட்டியுள்ளனர். கலை மற்றும் கட்டடக்கலைக்குச் சோழர்கள் பெரும் பங்காற்றியுள்ளனர். கடல் கடந்து அவர்கள் சாதனைகள் பல புரிந்துள்ளனர். இவையனைத்தும் அவர்களுக்கு வரலாற்றில் உயர்ந்த இடத்தை வழங்கியுள்ளது. சோழர்கள் ஆட்சியின் புத்தெழுச்சி பண்டைய சோழ அரசு காவிரி ஆற்றின் கழிமுகப்பகுதியை மையப்பகுதியாகக் கொண்டிருந்தது. அதன் தலைநகர் உறையூர், (இன்றைய திருச்சிராப்பள்ளி) ஆகும். கரிகாலனின் ஆட்சிக்காலத்தில் இவ்வரசு சிறப்பான இடத்தை வகித்தது. அவருக்குப் பின்வந்தோர் காலத்தில் படிப்படியாகச் சரிவினைச் சந்தித்தது. ஒன்பதாம் நூற்றாண்டில் காவிரிக்கு வடக்கே ஒரு சிறு பகுதியை ஆண்டுவந்த விஜயாலயன், சோழவம்சத்தை மீட்டெழச்செய்தார். அவர் தஞ்சாவூரைக் கைப்பற்றி அதைத் தனது தலைநகராக ஆக்கினார். பிற்காலத்தில் முதலாம் ராஜேந்திரனும் அவருக்குப் பின்வந்தோரும் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கங்கைகொண்ட சோழபுரத்தைத் தலைநகராகக் கொண்டு சோழப்பேரரசை ஆட்சி செய்தனர். முதலாம் ராஜராஜன் கிறிஸ்து பிறந்தப் பின், பொது ஆண்டு, 985 முதல் 1014 வரை சோழப்பேரரசின் மாபெரும் வல்லமை பெற்ற பேரரசர் ஆவார். அவர் காலத்தை வென்ற புகழை ஈட்டினார். தென்னிந்தியாவின் பெரும் பகுதியின் மீது சோழர்களின் அதிகாரத்தை அவர் நிலைநாட்டினார். அவருடைய கப்பற்படையெடுப்புகள் மேலைக்கடற்கரையிலும் இலங்கையிலும் சோழர்ஆட்சி விரிவடைவதற்கு வழிவகுத்தன. புகழ்பெற்ற ராஜராஜேஸ்வரம் கோவிலைத் (பிரகதீஸ்வரர் கோவில்) தஞ்சாவூரில் கட்டினார். அவருடைய மகனும் அவருக்குப்பின்னர் ஆட்சிப்பொறுப்பை ஏற்றவருமான முதலாம் ராஜேந்திரன் கிறிஸ்து பிறந்தப் பின், பொது ஆண்டு, 1014 முதல் 1044 வரை தந்தையைப் போலவே பேரரசை விரிவுபடுத்தி கைப்பற்றிய பகுதிகளை ஒருங்கிணைத்தார். அவருடைய ஆட்சிக்காலத்தில் சோழப்பேரரசு தென்னிந்தியாவில் ஒரு வலுவான சக்தியாக விளங்கியது. அரியணை ஏறிய பின்னர் அவருடைய மிக முக்கியப் படையெடுப்பான வட இந்தியப் படையெடுப்பில் பல பகுதிகளைக் கைப்பற்றினார். கங்கை கொண்டான் (கங்கையைக் கைப்பற்றியவர்) என்று தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டார். வடஇந்தியப் போர்களில் பெற்ற வெற்றியின் நினைவாக கங்கைகொண்ட சோழபுரம் கோவில் எழுப்பப்பட்டது. அவருடைய கடற்படை ஸ்ரீவிஜயப்பேரரசைக் (தெற்கு சுமத்ரா)கைப்பற்ற அவருக்குத் துணைபுரிந்தது. சோழர்களின் கடற்பகுதிகளின் மீதான கட்டுப்பாடு கடல் கடந்த வணிகம் செழித்தோங்க உதவியது. சோழப் பேரரசின் சரிவு முதலாம் ராஜேந்திர சோழனைத் தொடர்ந்து பதவியேற்ற மூவரும் திறமை வாய்ந்த அரசர்களாக இல்லை. மூன்றாவதாகப் பதவிஏற்ற வீர ராஜேந்திரனின் மகன் அதி ராஜேந்திரன் உள்நாட்டுக் கலகம் ஒன்றில் கொல்லப்பட்டார். அவருடன் விஜயாலயனின் வழிவந்தோரின் ஆட்சி முடிவுக்கு வந்தது. படம், கங்கைகொண்ட சோழ புரத்திலுள்ள இடிபாடுகள் கொடுக்கப்பட்டுள்ளது, படவிளக்கம் தொடங்குகிறது. படத்தில் சிதைந்த சில சிற்பங்களும், இடிந்த நிலையில் காணப்படும் கோபுரத்தின் ஒரு பகுதியும் கொடுக்கப்பட்டுள்ளன, சிற்பங்களும், கோபுரமும், கருங்கற்களால் வடிவமைக்கப்பட்டுள்ளன. சிற்பங்களில் சில கடவுளர்களின் சிற்பங்களாகத் தென்படுகிறது. படவிளக்கம் முடிவடைகிறது. முதலாம் ராஜராஜனின் ஆட்சிக்காலத்தில் சோழர்களுக்கும் கீழைச் சாளுக்கியர்களுக்கும் இடையிலான திருமண உறவு தொடங்கியது. அவருடைய மகளான குந்தவை சாளுக்கிய இளவரசர் விமலாதித்தனை மணந்தார். அவர்களின் மகனான ராஜராஜ நரேந்திரன் முதலாம் ராஜேந்திரனின் மகளான அம்மங்கா தேவியை மணந்தார். அவர்களின் மகனே முதலாம் குலோத்துங்கன் ஆவார். அதிராஜேந்திரனின் மறைவைக் கேள்விப்பட்டவுடன் கீழைச் சாளுக்கிய இளவரசரான ராஜேந்திர சாளுக்கியன், சோழ அரியணையைக் கைப்பற்றினார். முதலாம் குலோத்துங்கன் எனும் பெயரில் சாளுக்கிய - சோழ வம்சத்தின் ஆட்சியை அவர் தொடங்கிவைத்தார். சோழ அரியணைக்கு ஏற்பட்டிருந்த அச்சுறுத்தல்களை விரைவில் ஒழித்துக்கட்டி முதலாம் குலோத்துங்கன் தனது நிலையை உறுதிப்படுத்திக்கொண்டார். தேவையற்ற போர்களைத் தவிர்த்த அவர் பொதுமக்களின் நன்மதிப்பைப் பெற்றார். ஆனால் இலங்கையில் சோழர்களுக்குச் சொந்தமாக இருந்த பகுதிகளை இழந்தார். பாண்டிய நாட்டிலிருந்த பகுதிகளும் சோழர்களின் கட்டுப்பாட்டிலிருந்து நழுவின. காஞ்சிபுரத்தைத் தெலுங்குச் சோழர்களிடம் இழக்க நேரிட்டது. ஆயிரத்து இருநூற்று எழுபத்து ஒன்பதில் பாண்டிய அரசன் முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் மூன்றாம் ராஜேந்திர சோழனைத் தோற்கடித்துப் பாண்டியர் ஆட்சியை இன்றைய தமிழகத்தில் நிறுவினார். அத்துடன் சோழ வம்சத்தின் ஆட்சி முடிவுற்றது. நிர்வாக முறை மத்திய அரசின் நிர்வாகம் அரசரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்தது. நாட்டின் தலைமைப் பொறுப்பில் இருந்த அவர் பெருமளவு அதிகாரத்தைக் கொண்டிருந்தார். அரசரின் ஆணைகள் அவருடைய அதிகாரிகளால் பனையோலைகளில் எழுதப்பட்டன அல்லது கோவில் சுவர்களில் பொறிக்கப்பட்டன. அரசுரிமை பரம்பரை இயல்புடையதாய் இருந்தது. அரசர் தனது மூத்த மகனைத் தனது வாரிசாகத் தெரிவு செய்தார். மூத்தமகன் யுவராஜன் என்றழைக்கப்பட்டார். யுவராஜாக்கள் நிர்வாகத்தில் பயிற்சி பெறுவதற்காக மண்டல ஆளுநர்களாக நியமிக்கப்பட்டனர். சோழ அரசர்கள் நன்கு கட்டமைக்கப்பட்ட நிர்வாக முறையை உருவாக்கியிருந்தனர். நிர்வாக வசதிக்காகப் பேரரசு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு மண்டலமும் பல நாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு நாடு பிரிவுக்குள்ளும் பல கூற்றங்கள் (கிராமங்களின் தொகுப்பு) இடம் பெற்றிருந்தன. கிராமமே நிர்வாக அமைப்பின் மிகச் சிறிய அலகாகும். உள்ளாட்சி நிர்வாகம் உள்ளாட்சி நிர்வாகமானது ஊரார், சபையோர், நகரத்தார், நாட்டார் எனும் அமைப்புகளின் மூலமாகச் செயல்பட்டது. வேளாண்மையின் விரிவாக்கத்தினால் கிராமப்புறங்களில் அதிக எண்ணிக்கையில் விவசாயிகளின் குடியிருப்புகள் உருவாயின. அவை ஊர்கள் என அறியப்பட்டன. நில உடமையாளர்களாக இருந்த ஊரார், ஊரின் சார்பாகப் பேசுபவர்களாக இருந்தனர். பிராமணர், கிராமங்களைச் சேர்ந்த சபையோர் பொது நிர்வாகத்தையும், நிதி நிர்வாகத்தையும், நீதி வழங்குதலையும் மேற்கொண்டனர். வணிகர்களின் குடியிருப்புகளை நகரத்தார் நிர்வகித்தனர். இருந்தபோதிலும் தனித்திறன் பெற்ற கட்டுமானக் கலைஞர்கள், இரும்புத் தொழில் செய்வோர், தங்கவேலை செய்வோர், நெசவு செய்வோர், மட்பாண்டம் வனைவோர் ஆகியோரும் நகரத்தில் வாழ்ந்தனர். நாடுகளில் நாட்டார் எனும் அமைப்பு நாடோடு தொடர்புடைய பூசல்களையும் ஏனைய சிக்கல்களையும் தீர்த்துவைத்தது. ஊர், சபை, நகரம், நாடு ஆகியவற்றில் இருந்த மன்றங்கள் பல்வேறு குழுக்கள் மூலம் பணிகளை மேற்கொண்டன. இக் குழுக்கள் நீர்ப்பாசனம், சாலைகள், கோவில்கள், தோட்டங்கள், வரிவசூல், மத விழாக்களை நடத்துதல் போன்ற பணிகளை மேற்கொண்டன. உத்திரமேரூர் கல்வெட்டுகள் இன்றைய காஞ்சிபுர மாவட்டத்திலுள்ள உத்திரமேரூர் கிராமம் பிராமணர்களுக்குக் கொடையாக வழங்கப்பட்ட ஒரு பிரம்மதேய கிராமமாகும். இக் கிராமத்தில் கிராம சபைக்கான உறுப்பினர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பது குறித்துத் தெளிவாக விளக்கும் கல்வெட்டுகள் உள்ளன. ஒவ்வொரு குடும்பிலிருந்தும் (வார்டு) உறுப்பினர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். மொத்தம் 30 குடும்புகள் இருந்தன. போட்டியிடும் ஆடவர் 35-70 வயது வரம்புக்குள் இருத்தல் வேண்டும். வேதநூல்களிலும், சமய நூல்களிலும் தேர்ச்சி பெற்றிருப்பதும், நில உரிமையாளராகவோ, சொந்தவீடு உடையவராகவோ இருக்க வேண்டும் என்பவை தகுதிகளாகும். தேர்ந்தெடுக்கும் முறை: ஒவ்வொரு குடும்பிலிருந்தும் தகுதியுடைய வேட்பாளர்களின் பெயர்கள் பனையோலைத் துண்டுகளில் எழுதப்படும். அவை மட்பாண்டம் ஒன்றில் போடப்படும். மன்றத்தின் மூத்த உறுப்பினர் ஒரு சிறுவனை அழைத்து குடத்துக்குள் உள்ள ஓலைத் துண்டுகளை எடுக்கச் சொல்லி அதில் எழுதப்பட்டுள்ள பெயரை அறிவிப்பார். இம் முறையின்படி பல குழுக்கள் முடிவு செய்யப்படும். படம், உத்திரமேரூர் கல்வெட்டுகள் படம் கொடுக்கப்பட்டுள்ளது, படவிளக்கம் தொடங்குகிறது. படத்தில் உத்திரமேரூர் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ள சுவரின் ஒரு பகுதி இங்கே எடுத்துக்காட்டாகக் கொடுக்கப்பட்டுள்ளது. படவிளக்கம் முடிவடைகிறது. வருவாய் சோழஅரசின் பொதுவருவாய் முக்கியமாக நிலவரி மூலம் பெறப்பட்டது. நிலவரியானது 'காணிக்கடன் என அழைக்கப்பட்டது. நிலவரியை நிர்ணயம் செய்வதற்காகச் சோழஅரசு விரிவான அளவில் நிலஅளவைப் பணியை மேற்கொண்டது. மகசூலில் மூன்றில் ஒரு பகுதி வரியாக வசூலிக்கப்பட்டது. இவ் வரி பெரும்பாலும் தானியமாகவே வசூல் செய்யப்பட்டது. நிலவரியைத் தவிர தொழில் வரிகளும் வணிகத்தின் மீதான சுங்கவரிகளும் வசூலிக்கப்பட்டன. நிலம் சார்ந்த உறவுகளை அடிப்படையாகக் கொண்ட சமூக அமைப்பு சோழ அரசர்கள் வரிவிலக்கு அளிக்கப்பட்ட நிலங்களை பிராமணர்களுக்கும், அரசுஅதிகாரிகளுக்கும், கோவில்களுக்கும் (தேவதானக் கிராமங்கள்) மத நிறுவனங்களுக்கும் கொடையாக வழங்கினர். சமண சமய நிறுவனங்களுக்குக் கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள் 'பள்ளிச்சந்தம்' என அழைக்கப்பட்டது. வேளாண்வகை என்னும் நிலங்களின் உடைமையாளர்கள் வேளாளர் என்றழைக்கப்பட்டனர். வேளாளரில் ஒரு பிரிவினரான உழுகுடி என்போர் நிலங்களின் உடைமையாளர்களாக இருக்க இயலாது. அவர்கள் பிரம்மதேய, வேளாண்வகை நிலங்களில் வேளாண்பணிகளைச் செய்யவேண்டியிருந்தது. மொத்த விளைச்சலில் வேளாண்வகை நிலவுடைமையாளர்கள் 'மேல்வாரத்தைப்' (விளைச்சலில் பெரும்பகுதி) பெற்றனர். உழுகுடிகள் 'கீழ்வாரத்தைப் (விளைச்சலில் சிறிய பகுதி) பெற்றனர். 'அடிமை' மற்றும் பணிசெய் மக்கள்' என்போர் சமுதாயத்தின் கீழ்நிலையில் இருந்தனர். சமூகத்தின் இடை மட்டத்தில் போர் செய்வோரும் வணிகர்களும் இடம் பெற்றனர். நீர்ப்பாசனம் சோழர்கள் நீர்ப்பாசனத்திற்கு முக்கியத்துவம் வழங்கினர். கங்கை கொண்ட சோழ புரத்தில் முதலாம் ராஜேந்திர சோழனால் உருவாக்கப்பட்ட பதினாறு மைல் நீளம் கொண்ட ஏரிக்கரைத் தடுப்பணை மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும். காவிரியின் கழிமுகப் பகுதியில் குறுக்கும் நெடுக்குமாக மரபுசார்ந்த முறையில் நீரினைத் திசை மாற்றி விடுவதற்கான வடி- வாய்க்கால்கள்' அமைக்கப்பட்டிருந்தன. தேவைப்படும் நீரைக் கொண்டுவருவது 'வாய்க்கால்', தேவைக்கு அதிகமான நீரை வெளியேற்றுவது 'வடிகால்'. பொதுமக்கள் அனைவருக்கும் சொந்தமான வாய்க்கால் 'ஊர் வாய்க்கால்' என அழைக்கப்பட்டது. நாடு எனும் நிர்வாகப் பிரிவின் மட்டத்தில் பயன்பட்ட வாய்க்கால்கள் நாடு வாய்க்கால்கள் குறிப்பிடப்பட்டன. நீர் விநியோகத்தில் சுற்றுமுறை நடைமுறையில் இருந்தது. மதம் சோழர்கள் சைவத்தின் மீது மிகுதியான பற்றுக் கொண்டவராவர். சிவபெருமானின் திருவிளையாடல்கள் சைவ அடியார்களான நாயன்மார்களால் பாடல்களாக இயற்றப்பட்டுள்ளன. நம்பியாண்டார் நம்பியால் தொகுக்கப்பட்ட அவை 'திருமுறைகள்' என அழைக்கப்படுகின்றன. கோவில்கள் சோழர்கள் காலத்தில் பிரமாண்டமான கோவில்கள் கட்டப்பட்டன. தஞ்சாவூர், கங்கைகொண்ட சோழ புரம், தாராசுரம் ஆகிய இடங்களிலுள்ள கோவில்கள் சோழர்களின் கலைகளான கட்டடங்கள், சிற்பங்கள், செப்புச்சிலைகள், ஓவியங்கள், படிமவியல் ஆகியவற்றின் களஞ்சியமாக உள்ளன. சோழர்கள் காலக் கோவில்கள் வழிபாட்டிற்கான இடங்கள் மட்டுமல்லாமல் பெருமளவு நிலங்களைச் சொந்தமாகக் கொண்டிருந்தன. அவை கல்வியையும், பக்திக் கலைகளின் வடிவங்களான நடனம், இசை, நாடகம் ஆகியவற்றையும் வளர்த்தன. நடனமாதர், இசைக்கலைஞர்கள், பாடகர்கள், இசைக்கருவிகளை மீட்டுவோர், அர்ச்சகர்கள் ஆகியோர் கோவில் பணியாளர்கள் ஆவர். படம், தஞ்சை பெரியகோவில் படம் கொடுக்கப்பட்டுள்ளது, படவிளக்கம் தொடங்குகிறது. படத்தில் பெரியகோவிலின் கோபுரம் மற்றும் முகப்பு மண்டபப் பகுதிக் கொடுக்கப்பட்டுள்ளது. கோவிலின் உயர்ந்த கோபுரம், முகப்பு மண்டபம், நுழைவாயிலில் உள்ள படிக்கட்டுகள் ஆகியன கொடுக்கப்பட்டுள்ளன, கோவிலைச் சுற்றி புல்வெளிகளும் அழகாகக் காட்சியளிக்கின்றன. படவிளக்கம் முடிவடைகிறது. சோழர்களின் கல்விப் பணி சோழ அரசர்கள் கல்விப் பணிகளுக்குப் பெரும் ஆதரவு நல்கினர். முதலாம் ராஜேந்திரன் எண்ணாயிரம் (தற்போதைய விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது) எனும் கிராமத்தில் வேதக் கல்லூரி ஒன்றை நிறுவினார். அக் கல்லூரியில் பதிநான்கு ஆசிரியர்களின் வழிகாட்டுதலில் 340 மாணவர்கள், வேதங்கள், இலக்கணம், உபநிடதங்கள் ஆகியவற்றைக் கற்றனர். அவருக்குப் பின்வந்த ஆட்சியாளர்கள் அவருடைய அப்பணியை முன்உதாரணமாகக் கொண்டு பின்பற்றினர். அதன் விளைவாக இன்றைய புதுச்சேரிக்கு அருகேயுள்ள திருபுவனை எனும் ஊரிலும், இன்றைய செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள திருமுக்கூடலிலும் முறையே 1048, 1067 ஆகிய ஆண்டுகளில் இதே போன்ற கல்லூரிகள் நிறுவப்பட்டன. உயர்ந்த இலக்கியங்களான 'பெரியபுராணமும் கம்பராமாயணமும்' இக்காலப் பகுதியைச் சேர்ந்தவையாகும். வணிகம் சோழர்களின் காலத்தில் வணிகம் தழைத்தோங்கியது. அஞ்சு – வண்ணத்தார், மணி கிராமத்தார் எனப்படும் வணிகக் குழு அமைப்புகளைச் (கில்டு) சேர்ந்த வணிகர்கள் வணிக நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அஞ்சு-வண்ணத்தார் குழுவானது மேற்கு ஆசியர்கள், அராபியர்கள், யூதர்கள், கிறித்தவர்கள், இஸ்லாமியர்கள் ஆகியோரை உள்ளடக்கியதாகும். அவர்கள் கடல் கடந்து வணிகம் செய்தோர் ஆவர். அவர்கள் மேற்கு கடற்கரையோரத் துறைமுக நகரங்களில் குடியிருந்தனர். மணி - கிராமத்தார் வணிகக் குழு அமைப்பைச் சேர்ந்த வணிகர்கள், உள்நாட்டு வணிகத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர் எனச் சொல்லப்படுகிறது. காலப்போக்கில் அவ்விரு அமைப்புகளும் 'ஐநூற்றுவர்', 'திசை - ஆயிரத்து ஐநூற்றுவர்' எனும் பெயர்களில் ஒருங்கிணைந்தன. அவை கர்நாடக மாநிலம் ஐகோலில் இருந்த தலைமை அமைப்பின் வழிகாட்டுதலில் செயல்பட்டன. இந்த ஐநூற்றுவர் அமைப்பு தென்கிழக்காசிய நாடுகளை உள்ளடக்கிய கடல் கடந்த வணிக நடவடிக்கைகளைச் செயல்படுத்தியது. தென்கிழக்கு ஆசிய நாடுகளோடு மேற்கொள்ளப்பட்ட கடல் கடந்த வணிகத்தின் மூலம் யானைத் தந்தங்கள், பவழம், சங்குகள், ஒளிபுகும் புகா கண்ணாடிகள், பாக்கு, ஏலம், வர்ணப் பட்டு நூல்களோடு நெய்யப்பட்ட பருத்தி இழைத்துணிகள் ஆகியன இறக்குமதி செய்யப்பட்டன. சந்தனக்கட்டை, கருங்காலிக்கட்டை, சுவையூட்டும் பொருட்கள், விலையுயர்ந்த ஆபரணக் கற்கள், மிளகு, எண்ணெய், நெல், தானியங்கள், உப்பு ஆகியவை ஏற்றுமதி செய்யப்பட்டன. படம், கங்கைகொண்ட சோழபுரம் கோவில் படம் கொடுக்கப்பட்டுள்ளது, படவிளக்கம் தொடங்குகிறது. படத்தில் கோவிலின் கோபுரம் மற்றும் முகப்பில் உள்ள பெரிய நந்தி இடம்பெற்றுள்ளது. கோவிலைச் சுற்றிலும் பச்சைப்பசேல் என்று இருக்கின்ற புல்வெளிகளும் செடிகளும் காணப்படுகின்றன. முகப்பில் உள்ள பெரிய நந்தி வெளிர் மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறது. படவிளக்கம் முடிவடைகிறது. 2. பிற்காலப் பாண்டியர்கள் அறிமுகம் கிறிஸ்து பிறப்பிற்கு முன், [பொது ஆண்டுக்கு] முன் நூற்றாண்டிலிருந்து குறிப்பிட்ட நான்காம் தென்னிந்தியாவைக் இடைவெளிகளோடு ஆட்சி செய்த மூன்று பழைமையான அரசவம்சங்களுள் பாண்டியர்கள் அடங்குவர். முத்துக்குளித்தலோடு தொடர்புடைய கொற்கை, தொடக்கக்காலத்தில் அவர்களின் துறைமுகமாகவும் தலைநகரமாகவும் இருந்ததாகக் கருதப்படுகிறது. பாண்டியர்களின் பல பழைமையான தமிழ்க் கல்வெட்டுகள் மதுரையிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் கண்டறியப்பட்டுள்ளதால் அவர்கள் பிற்காலத்தில் மதுரைக்கு இடம் பெயர்ந்திருக்கலாம் எனக் கருதலாம். சங்ககாலப் பாண்டியர்களின் கீழ் மதுரை நகர் மாபெரும் பண்பாட்டு மையமாகத் திகழ்ந்தது. தமிழ்ப் புலவர்களும் எழுத்தாளர்களும் அங்கு ஒன்றுகூடித் தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்களுக்குச் சிறந்த பங்களிப்பைச் செய்துள்ளனர். கிறிஸ்து பிறப்பிற்கு பின், பொது ஆண்டு 6ஆம் நூற்றாண்டில் களப்பிரர்களை வெற்றிகொண்டு பாண்டியர்கள் தென்தமிழகத்தில் தங்களை மீண்டும் வலுவாக நிறுவிக் கொண்டனர். ஆனால் 9ஆம் நூற்றாண்டு முதல் 13ஆம் நூற்றாண்டு வரை தென்னிந்தியாவை ஆண்ட பிற்காலச் சோழர்களின் எழுச்சியைப் பாண்டியர்களால் எதிர்கொள்ள இயலவில்லை. பின்னர் சோழர்களின் வீழ்ச்சியைச் சாதகமாகப் பயன்படுத்திப் பிற்காலப் பாண்டியர் மீண்டும் தங்கள் அதிகாரத்தை நிறுவினர். அவர்களின் ஆட்சி 16ஆம் நூற்றாண்டு வரை தொடர்ந்தது. பாண்டிய அரசு மீண்டெழுதல் கிறிஸ்து பிறந்தப் பின், [பொது ஆண்டு], 600 முதல் 920 வரை கடுங்கோன் எனும் பாண்டிய அரசன் 6ஆம் நூற்றாண்டின் களப்பிரர்களிடமிருந்து இறுதியில் பாண்டியர்களின் பகுதிகளை மீட்டார். அவரைத் தொடர்ந்து வேறு இருவர் அரச பதவி ஏற்றனர். அரிகேசரி மாறவர்மன் எனும் வலிமை மிக்க முதல் பாண்டிய அரசர் கிறிஸ்து பிறந்தப் பின், பொது ஆண்டு, அறுநூற்று நாற்பத்து இரண்டில் அரியணை ஏறினார். அவர் பல்லவ அரசர்கள் முதலாம் மகேந்திரவர்மன், முதலாம் நரசிம்மவர்மன் ஆகியோரின் சமகாலத்தவராவார். கல்வெட்டுகளும் செப்புப்பட்டயங்களும் தனது எதிரிகளான சேரர், சோழர், பல்லவர், சிங்களர் ஆகியோரை அவர் வெற்றிகொண்டதைப் புகழ்பாடுகின்றன. அரிகேசரி மாறவர்மன் சமணர்களைத் துன்புறுத்திய கூன் பாண்டியனே என அடையாளப்படுத்தப்படுகிறார். பெட்டிச் செய்தி சைவத் துறவியான திருஞானசம்பந்தர் அரிகேசரியைச் சமண மதத்திலிருந்து சைவத்திற்கு மாற்றினார். மதம் மாறிய பின்னர் அரிகேசரி சமணர்களைக் கழுவேற்றியதாகக் கூறப்படுகிறது. சைவத்திற்கு மாறிய பின்னர் அரிகேசரியின் சமண எதிர்ப்புப் போக்கு சந்தேகத்திற்கு இடமில்லாதது. அரிகேசரிக்குப் பின்னர் அரசவம்சத்தின் மகத்தான பாண்டியர் மன்னனான ஜடில பராந்தக நெடுஞ்சடையன் (முதலாம் வரகுணன்) (756 முதல் 815 வரை) ஆட்சிப் பொறுப்பேற்றார். அவரே வேள்விக்குடிச் செப்பேடுகளின் கொடையாளி ஆவார். நெடுஞ்சடையன் தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, சேலம், கோயமுத்தூர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாகப் பாண்டிய அரசைவிரிவுபடுத்தினார். நெடுஞ்சடையனுக்குப் பின்னர் ஆட்சிப் பொறுப்பேற்ற ஸ்ரீமாற ஸ்ரீவல்லபன், இரண்டாம் வரகுணன் ஆகியோர் பல்லவர்களால் தோற்கடிக்கப்பட்டனர். பின்னர் முதலாம் பராந்தகனின் கீழ் எழுச்சி பெற்ற சோழவம்சத்தை அவர்களால் எதிர்கொள்ள இயலவில்லை. முதலாம் பராந்தகனிடம் தோல்வியடைந்த பாண்டிய அரசன் இரண்டாம் ராஜசிம்மன் தொள்ளாயிரத்து இருபதில் நாட்டைவிட்டு வெளியேறினார். இவ்வாறு கடுங்கோனால் மீள்எழுச்சி பெற்ற பாண்டியர் ஆட்சி முடிவுற்றது. பிற்காலப் பாண்டியர்களின் எழுச்சி, (1190 முதல் 1310 வரை) அதிராஜேந்திரனின் (விஜயாலயனின் வழிவந்த கடைசி அரசர்) மறைவுக்குப் பின்னர் பாண்டிய நாட்டில் சோழ மண்டலாதிபதிகளின் ஆட்சி பலவீனமடைந்தது. அதன் விளைவாகப் பதிமூன்றாம் நூற்றாண்டில் பாண்டியர் மட்டுமே எழுச்சி பெற்ற தமிழ் அரச வம்சமாக விளங்கினர். மதுரை அவர்களின் தலைநகராகத் தொடர்ந்தது. அவ் வமயம் காயல் அவர்களின் முக்கியத் துறைமுகமாயிற்று. வெனிஸ் நாட்டைச் சேர்ந்த புகழ் பெற்ற பயணியான மார்க்கோபோலோ இரண்டு முறை (1288 மற்றும் 1293) காயலுக்கு வருகைதந்தார். இத் துறைமுக நகர் அராபிய, சீனக் கப்பல்களால் நிரம்பியிருந்தது என்றும் விறுவிறுப்பான வணிக நடவடிக்கைகளைக் கொண்டிருந்ததாகவும் அவர் நம்மிடம் கூறுகிறார். பாண்டிய அரசு "செல்வச் செழிப்பு மிக்க, உலகிலேயே மிக அற்புதமான பகுதியாகும் என மார்க்கோ போலா புகழாரம் சூட்டுகிறார். இலங்கையோடு சேர்ந்து உலகத்தில் காணப்படும் பெரும்பாலான மாணிக்கக்கற்களையும் முத்துக்களையும் உற்பத்தி செய்கிறது என மேலும் கூறுகிறார். தன்னுடைய பயணக் குறிப்புகளில் 'சதி' (உடன்கட்டை ஏறுதல்) நிகழ்வுகளையும் அரசர்களின் பலதார மணத்தையும் பதிவு செய்துள்ளார். சடையவர்மன் சுந்தரபாண்டியன் இரண்டாம் பாண்டியப் பேரரசின் புகழ்பெற்ற அரசர் சடைய வர்மன் (ஜடா வர்மன்) சுந்தரபாண்டியன் (1251 முதல் 1268 வரை) ஆவார். ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் தனது கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டுவந்த அவருடைய ஆட்சி ஆந்திர மாநிலம் நெல்லூர் வரை பரவியிருந்தது. அவர் ஹொய்சாளர்களைக் கட்டுக்குள் வைத்திருந்தார். மலைநாட்டுத் தலைவனான சேர அரசர் சுந்தர பாண்டியனின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டு அவருக்குக் கப்பம் கட்டச் சம்மதித்தார். சோழ அரசின் வீழ்ச்சியால் ஊக்கம் பெற்ற மாளவப் பகுதியின் அரசர் வீர சோமேஸ்வரர் என்பவர் சுந்தர பாண்டியனைப் போருக்கு அழைத்தார். கண்ணனூர் என்ற இடத்தில் நடைபெற்ற போரில் சுந்தரபாண்டியன் வீர சோமேஸ்வரரைத் தோற்கடித்தார். வடதமிழகத்தில் கடலூர், காஞ்சிபுரம், மேற்குத் தமிழகத்தில் ஆற்காடு, சேலம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த குறுநிலத் தலைவர்களின் மேல் தனது அதிகாரத்தை நிறுவினார். படம், பாண்டிய அரசின் நாணயம் கொடுக்கப்பட்டுள்ளது, படவிளக்கம் தொடங்குகிறது. அந்நாணயம் செம்பினால் ஆனது, அதில் சில குறியீடுகள் உள்ளன. படவிளக்கம் முடிவடைகிறது. சுந்தர பாண்டியனின் ஆட்சியின்போது அவருடன் இரண்டு பேர் கூட்டு அரசர்களாக ஆட்சிசெய்தனர். அவர்கள் விக்கிரம பாண்டியன், வீரபாண்டியன் ஆகியோர் ஆவர். சுந்தர பாண்டியனுக்குப் பின்னர் மாறவர்மன் குலசேகரன் வெற்றிகரமாக நாற்பது ஆண்டுகள் ஆட்சிபுரிந்து நாட்டிற்கு அமைதியையும் செழிப்பையும் நல்கினார். அவருக்கு வீரபாண்டியன், சுந்தர பாண்டியன் என இரண்டு மகன்கள் இருந்தனர். அரசர் வீரபாண்டியனைக் கூட்டுஅரசராக நியமித்தார். அதனால் தந்தை மீது வெறுப்புற்ற சுந்தர பாண்டியன் தந்தையார் மாறவர்மன் குலசேகரனைக் கொன்றார். தொடர்ந்து ஏற்பட்ட உள்நாட்டுப் போரில் வீரபாண்டியன் வெற்றி பெற்றுத் தன்னை வலுவாக நிறுவிக்கொண்டார். தோல்வியுற்ற சுந்தர பாண்டியன் டெல்லிக்கு விரைந்து அலாவுதீன் கில்ஜியின் பாதுகாப்பில் அடைக்கலமானார். இதுவே மாலிக்கபூரின் படையெடுப்புக்கான வாய்ப்பை வழங்கியது. மாலிக்கபூரின் படையெடுப்புக்குப் பின்னர் ஆட்சி செய்து கொண்டிருந்த அரச குடும்பத்தைச் சேர்ந்த பல அரசர்களால் பாண்டிய நாடு பிரித்துக்கொள்ளப்பட்டது. மதுரையில் டெல்லி சுல்தானுக்குக் கட்டுப்பட்ட ஒரு முஸ்லீம் அரசு உருவாக்கப்பட்டது. ஆட்சி அமைப்பும் சமூகமும் அரசு பாண்டிய அரசர்கள் தலைநகரைப் பொருத்தமட்டிலும் மதுரைக்கே முன்னுரிமை கொடுத்தனர். மதுரை பொதுமக்களால் 'கூடல்' என்றே போற்றப்பட்டு வந்தது. பாண்டிய மன்னர்கள் பாரம்பரியமாகக் கூடல்கோன்', 'கூடல் நகர் காவலன்' என மதிக்கப்பட்டனர். ராணுவரீதியாக அண்டைநாடுகளைக் காட்டிலும் பாண்டியர்களின் ஆதிக்கம் ஓங்கியிருந்தது. இதன் காரணம் அவர்களிடம் இருந்த குதிரைப் படைகளாகும். அராபிய வணிக, பண்பாட்டு உலகில் அவர்களுக்கு இருந்த தொடர்பின் மூலம் அவர்கள் அந்தக் குதிரைகளை இறக்குமதி செய்தனர். அரசர், மனு சாஸ்திரத்தின்படிதான் ஆட்சி செய்வதாகக் கூறினார். இக்கோட்பாடு சமூகத்திலிருந்த ஏற்றத் தாழ்வு நிலைகளை நியாயப்படுத்தியது. அரசர்களும் உள்ளூர் தலைவர்களும் 'மங்கலம்' அல்லது சதுர்வேதிமங்கலம் எனும் பிராமணர் குடியிருப்புகளை உருவாக்கினர். இவை நீர்ப்பாசன வசதிகளோடு உருவாக்கப்பட்டிருந்தன. நிலத்தின் உண்மையான உடைமையாளர்கள் பூமி புத்திரர்' அல்லது 'வேளாளர்' என விவரிக்கப் பட்டுள்ளனர். வரலாற்று ரீதியாக அவர்கள் அப்பகுதியைச் சேர்ந்த மக்களாகையால் அவர்கள் 'நாட்டுமக்கள்' எனவும் குறிப்பிடப்பட்டுள்ளனர். இச் சமூக மக்கள் ஒன்றிணைந்த மன்றம் சித்திரமேழி பெரிய நாட்டார் என அழைக்கப்பட்டது. அரசு அதிகாரிகள் அதிகாரிகளின் குழுவொன்று அரசரின் ஆணைகளை நடைமுறைப்படுத்தியது. பிரதம மந்திரி 'உத்தர மந்திரி' என அழைக்கப்பட்டார். முக்கிய வரலாற்று ஆளுமைகளான மாணிக்கவாசகர், குலச்சிறையார், மாரன்காரி ஆகியோர் அமைச்சர்களாகப் பணியாற்றினர். அரசுச் செயலகம் 'எழுத்து மண்டபம்' என அழைக்கப்பட்டது. மிகவும் மதிக்கப்பட்ட அதிகாரிகள் மாறன்-எயினன்', 'சாத்தன்- கணபதி', 'ஏனாதி-சாத்தன்', திற- திறன்', 'மூர்த்தி-எயினன்' ஆகியோரும் மற்றவருமாவர். 'பள்ளி-வேலன்', 'பராந்தகன்- பள்ளி-வேலன்', 'மாறன்-ஆதித்தன்', 'தென்னவன் தமிழ்வேள்' ஆகியவை படைத் தளபதிகளின் பட்டங்களாகும். நிர்வாகப் பிரிவுகள் சோழநாட்டில் இருந்ததைப்போலவே 'பாண்டியநாடு' பல மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தன. மண்டலங்கள் 'வளநாடுகள்' என அழைக்கப்பட்டன. வளநாடுகள் பல 'நாடுகளாகவும்', 'கூற்றங்களாகவும்' பிரிக்கப்பட்டன. நாடுகளை நிர்வகித்தவர்கள் 'நாட்டார்' ஆவர். நாடுகளும் கூற்றங்களும் மங்கலம், நகரம், ஊர், குடி எனும் குடியிருப்புக்களைக் கொண்டிருந்தன. அவற்றில் பல்வகைப்பட்ட சமூகக் குழுக்களைச் சேர்ந்த மக்கள் வசித்தனர். கிராம நிர்வாகம் திருநெல்வேலி மாவட்டம் மானூர் என்னும் ஊரில் உள்ள, கிறித்து பிறப்புக்குப் பின் (பொது ஆண்டு) 800ஆம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டு கிராமநிர்வாகம் தொடர்பான செய்திகளைக் கொண்டுள்ளது. கிராம மன்றங்களையும், பல்வேறு குழுக்களையும் கொண்டிருந்த சோழர்களின் உள்ளாட்சித் துறை போலவே நிர்வாகம் காணப்படுகிறது. சிவில், ராணுவ அதிகாரங்கள் ஆகிய இரண்டும் ஒரே நபரிடம் வழங்கப்பட்டிருந்தன. நீர்ப்பாசனம் பாண்டிய மன்னர்கள் அதிக எண்ணிக்கையில் நீர் ஆதாரங்களை உருவாக்கினர். வைகை, தாமிரபரணி ஆகிய ஆறுகளின் இரு கரைகளிலும் நீர்நிலைகளுக்கு நீர் கொண்டுசெல்லும் கால்வாய்கள் வெட்டப்பட்டன. தென்தமிழகத்தில் சோழர்களைப் போலவே பாண்டியர்களும் புதிய நீர்ப்பாசனத் தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்தனர். நீர்பாசனப் பணிகள் உள்ளாட்சி அமைப்புகளாலும், அதிகாரிகள் மற்றும் உள்ளூர் தலைவர்களாலும் மேற்கொள்ளப்பட்டன. பழுதுநீக்கும் பணிகள் பெரும்பாலும் உள்ளாட்சி அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்டன. சிலசமயங்களில் நீர்ப்பாசன ஏரிகளை வணிகர்கள் வெட்டிக்கொடுத்துள்ளனர். மதம் பாண்டிய அரசர்கள் வேத நடைமுறைகளுக்கு ஆதரவு நல்கினர். வேள்விக்குடிச் செப்பேடுகளும் பொறிப்பியல் சான்றுகளும் ஏனைய சிறந்த பாண்டிய அரசர்கள் ஒவ்வொருவரும் செய்த அஸ்வமேதயாகம், ஹிரண்ய கர்ப்பம், வாஜ்பேய வேள்வி போன்றவற்றைக் குறிப்பிடுகின்றன. பாண்டிய மன்னர்கள் சைவம், வைணவம் ஆகிய இரண்டையும் சமமாகவே கருதினர் என்பதைப் பொறிப்புச் சான்றுகளின் தொடக்கப் பகுதிகள் உணர்த்துகின்றன. இரு பிரிவைச் சேர்ந்த கோவில்களும் பாண்டிய மன்னர்களின் ஆதரவைப் பெற்றிருந்தன. இக் கோவில்களுக்கு நிலங்கள் கொடையாக வழங்கப்பட்டன. வரிவிலக்கும் அளிக்கப்பட்டது. அவை புனரமைக்கப்பட்டுப் புதிய கோபுரங்களும் விசாலமான மண்டபங்களும் கட்டப்பட்டன. புகழ் பெற்ற சைவ, வைணவ அடியார்கள் (நாயன்மார்கள், ஆழ்வார்கள்) தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும், ஆன்மிக அறிவு மேம்பாட்டிற்கும் பெரும் பங்களிப்பைச் செய்தனர். அக்காலப்பகுதியில் தீவிர மதமோதல்கள் இருந்ததாக குறிப்பிடப்படுகிறது. அக் காலகட்டப் பக்தி இயக்கம் புற சமயத்தாரை வாதத்திற்குத்தூண்டின. அப்படிப்பட்ட விவாதப் போட்டிகளில் பலமுறை பௌத்தர்களும் சமணர்களும் தோற்கடிக்கப்பட்டதாகப் பக்தி இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. அக்காலப் பாண்டிய அரசர்கள் தமிழ், சமஸ்கிருதம் ஆகியவற்றை ஆதரித்து வளர்த்தனர். கோவில்கள் இடைக்காலப் பாண்டியர்களும் பிற்காலப் பாண்டியர்களும் புதிய கோவில்கள் எதையும் நிர்மாணிக்கவில்லை. ஏற்கெனவே இருந்த கோவில்களைப் பராமரித்தனர், புதிய கோபுரங்களையும் மண்டபங்களையும் கட்டிப் பெரிதாக்கினர். பெரிய வடிவிலான அலங்கார வேலைப்பாடுகளுடன் கூடிய ஒற்றைக்கல் தூண்கள் இடைக்காலப் பாண்டியர்களின் தனித்தன்மை வாய்ந்த பாணியாகும். சிவன், விஷ்ணு, கொற்றவை, கணேசர், சுப்ரமணியர் ஆகிய தெய்வங்களின் சிற்பங்கள் இக் கோவில்களில் காணப்படும் சிறந்த கலை வடிவங்களாகும். வரலாற்றுச் சிறப்புமிக்க மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குப் பாண்டியர் பேராதரவு நல்கினர். புதிய கோபுரங்களையும் மண்டபங்களையும் கட்டிக் கோவிலைத் தொடர்ந்து விசாலப்படுத்தினர். படம், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கொடுக்கப்பட்டுள்ளது, படவிளக்கம் தொடங்குகிறது. படத்தில் பொற்றாமரை குளமும், இரு ராஜகோபுரங்கள், மூன்று சிறிய கோபுரங்களுடன் கூடிய சுற்று மண்டபமும் கொடுக்கப்பட்டுள்ளன. அக் குளத்தைச் சுற்றி அழகிய தூண்களுடன் கூடிய சுற்று மண்டபம் உள்ளது, குளத்தின் நடுவே சிறிய கொடிக்கம்பம் ஒன்று உள்ளது. படவிளக்கம் முடிவடைகிறது. வணிகம் ஏழாம் நூற்றாண்டு முதல் தென்னிந்தியாவின் மேற்குக் கடற்கரையில் உருவாகியிருந்த அராபிய வணிகர்களின் குடியிருப்புகள் அவர்களின் வணிக உறவுகள் கிழக்குக் கடற்கரைக்கு விரிவடைய வழிவகுத்தன. கிழக்குக் கடற்கரையில் இருந்த அரசுகள் அயல்நாட்டு வணிகர்களைப் பொறுத்தமட்டில் மிக தாராளமான, அறிவுபூர்வமான கொள்கையைப் பின்பற்றின. அவற்றின் பட்டயச் சட்டங்கள் வணிகர்களுக்குப் பல துறைமுக வரிகளிலிருந்தும், சுங்க வரிகளிலிருந்தும் விலக்கு அளித்தன. காயல் துறைமுகத்தில் மாலிக் உல் இஸ்லாம் ஜமாலுதீன் எனும் அராபிய வணிகரின் வணிக நிறுவனம் செயல்பட்டது. பாண்டிய அரசர்களுக்குக் குதிரைகள் எளிதாகக் கிடைப்பதற்கான வசதிகளை இந்நிறுவனம் செய்துகொடுத்தது. பதின்மூன்று மற்றும் பதினான்காம் நூற்றாண்டுகளில் குதிரை வணிகம் மேலும் அதிகரித்தது. சம்பிரதாய விழாக்களுக்கும், போர்புரிவதற்கும் குதிரைகள் தேவைப்பட்டதால் அரசர்கள் குதிரைகளுக்காக முதலீடு செய்தனர் என்று மார்க்கோபோலோவும், வாசப்பும் குறிப்பிட்டுள்ளனர். குதிரை வணிகத்தில் ஈடுபட்டவர்கள் குதிரைச் செட்டிகள்' என அழைக்கப்பட்டனர். அவர்கள் கடல்சார் வணிகத்தில் தீவிரமாக ஈடுபட்டனர். பாண்டியர்களின் துறைமுகங்களில் மிகவும் விறுவிறுப்பாக வணிகம் நடைபெற்ற துறைமுகம் கிழக்குக் கடற்கரையிலிருந்த காயல்பட்டினம் ஆகும். இது இன்றைய தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது. வணிகப் பரிமாற்றங்கள் தங்க நாணயங்கள் மூலம் நடைபெற்றதால் நாணயங்கள் அதிக அளவில் புழக்கத்தில் இருந்தன. அவை காசு, கழஞ்சு, மூன்று பொன் எனப் பலவாறு அழைக்கப்பட்டன. பெட்டிச் செய்தி விரிவான அளவில் இக்காலத்தில் நடைபெற்ற குதிரை வணிகம் குறித்து வாசப் என்பவர் பதிவு செய்துள்ளார். பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட குதிரைகள் காயலிலும் ஏனைய இந்தியத் துறைமுகங்களிலும் இறக்குமதியாயின. அவற்றில் 1400 குதிரைகள் ஜமாலுதீன் பொறுப்பில் இனப்பெருக்கம் செய்து வளர்த்துவந்த குதிரைகளாகும். ஒவ்வொரு குதிரையின் சராசரிவிலை சொக்கத் தங்கத்தினாலான 220 தினார்களாகும்" என அவர் எழுதுகிறார். சுருக்கம் சோழர்களும் பாண்டியர்களும் நன்கறியப்பட்ட தமிழ் முடியாட்சி மன்னர்கள் ஆவர். விஜயாலயன், சோழர்கள் வம்சாவழியை மீண்டெழச் செய்தார். முதலாம் ராஜராஜன், முதலாம் ராஜேந்திரன் ஆகியோர் சிறப்பு வாய்ந்த சோழ அரசர்களாவர். உத்திரமேரூர் பொறிப்புகள் கிராம நிர்வாகம் குறித்த விவரங்களை வழங்குகின்றன. கடுங்கோன் பாண்டிய நாட்டுப் பகுதிகளைக் களப்பிரரிடமிருந்து மீட்டார். அரிகேசரி மாறவர்மன், பராந்தக நெடுஞ்சடையோன் ஆகியோர் அக் காலத்தின் மிகச் சிறந்த பாண்டிய அரசர்கள் ஆவர். பிற்காலப் பாண்டிய அரசின் தலைசிறந்த அரசர்கள் சடையவர்மன் சுந்தர பாண்டியன், மாறவர்மன் குலசேகரன் ஆகியோர் ஆவர். பாண்டியர் காலத்துக் கடல்சார் வணிகம் மார்க்கோபோலோ, வாசப் ஆகியோரால் புகழப்பட்டுள்ளது. சொற்களஞ்சியம், அட்டவணை தொடங்குகிறது திருமண உறவுகள் மூலம் அரசியல் கூட்டு Matrimonial alliances political alliances through marriages தடுப்பணை Embankment a wall or stone structure built to prevent a river தீவிரமான Ardent passionate flooding an area as well as to store its water அரசருக்குக் கட்டுப்பட்ட குறுநில மன்னர் Feudatory a subordinate to another sovereign or ruler புகலிடம் Refuge shelter கருவூலம் Repository place in which things are stored அட்டவணை முடிவடைகிறது. பயிற்சி விரைவுத் துலங்கள் குறியீடு கொடுக்கப்பட்டுள்ளது, எண் M, E, I, 2, 1 1, சரியான விடையைத் தேர்வு செய்க 1, பிற்கால சோழ வம்சத்தை மீட்டெழச் செய்தவர் யார்? அ, விஜயாலயன் ஆ, முதலாம் ராஜராஜன் இ, முதலாம் ராஜேந்திரன் ஈ, அதிராஜேந்திரன் 2, கீழ்க்காணும் பாண்டிய அரசர்களுள், களப்பிரர் ஆட்சியை முடித்துவைத்தவர் என அறியப்படுபவர் யார்? அ, கடுங்கோன் ஆ, வீரபாண்டியன் இ, கூன்பாண்டியன் ஈ, வரகுணன் 3, கீழ்க்காண்பனவற்றுள் சோழர்களின் நிர்வாகத்தில் மிகச் சிறிய அலகு எது? அ, மண்டலம் ஆ, நாடு இ, கூற்றம் ஈ, ஊர் 4, விஜயாலயன் வழி வந்த சோழ வம்சத்தின் கடைசி அரசர் யார்? அ, வீர ராஜேந்திரன் ஆ, ராஜாதிராஜா இ, ஆதி ராஜேந்திரன் ஈ, இரண்டாம் ராஜாதிராஜா 5, சோழர்களின் கட்டடக்கலைக்கான எடுத்துக்காட்டை எங்குக் காணலாம்? அ, கண்ணாயிரம் ஆ, உறையூர் இ, காஞ்சிபுரம் ஈ, தஞ்சாவூர் 6, கீழ்க்காண்பனவற்றுள் எந்த இந்தியப் பகுதிக்கு மார்க்கோபோலோ 13ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் சென்றார்? அ, சோழமண்டலம் ஆ, பாண்டிய நாடு இ, கொங்குப்பகுதி ஈ, மலைநாடு 2, கோடிட்ட இடங்களை நிரப்புக 1, டேஷ் தஞ்சாவூரிலுள்ள புகழ்பெற்ற பிரகதீஸ்வரர் கோவிலை நிர்மாணித்தார். 2, டேஷ் வேதக் கல்லூரி ஒன்றை எண்ணாயிரத்தில் நிறுவினார். 3, டேஷ் வேள்விக்குடி செப்பேடுகளின் கொடையாளி ஆவார். 4, பாண்டியப் பேரரசின் அரசுச் செயலகம் டேஷ் என அறியப்பட்டது. 3, பொருத்துக 1, மதுரை, உள்நாட்டு வணிகர் 2, கங்கைகொண்ட சோழபுரம், கடல்சார் வணிகர் 3, அஞ்சு வண்ணத்தார், சோழர்களின் தலைநகர் 4, மணி – கிராமத்தார், பாண்டியர்களின் தலைநகர் 4, சரியா? தவறா? 1, டெல்லி சுல்தானுக்குக் கட்டுப்பட்ட ஒரு முஸ்லீம் அரசு மதுரையில் உருவானது. 2, 'கூடல் நகர் காவலன்' என்பது பாண்டிய அரசரின் பட்டமாகும். 3, சோழ அரசு வைகையின் கழிமுகப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்தது. 4, முதலாம் குலோத்துங்கன் சாளுக்கிய சோழ அரச வம்சத்தைச் சேர்ந்தவர். 5, சோழ அரசரின் மூத்த மகன் யுவராஜன் என அழைக்கப்பட்டார். 5, கீழ்க்காணும் கூற்றுகளை ஆய்க பொருத்தமான விடையை டிக் இட்டுக் காட்டவும் 1, பிற்காலச் சோழர்கள் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் எவை சரியானவை? 1, அவர்கள் துறைத் ஓர் உள்ளாட்சித் தன்னாட்சிஅமைப்பைக் கொண்டிருந்தனர். 2, அவர்கள் வலுவான கப்பற்படையைக் கொண்டிருந்தனர். 3, அவர்கள் பௌத்தத்தைப் பின்பற்றினர். 4, அவர்கள் பெரிய கோவில்களைக் கட்டினர். அ, 1, 2 மற்றும் 3 ஆ, 2, 3 மற்றும் 4 இ, 1, 2 மற்றும் 4 ஈ, 1, 3 மற்றும் 4 2, இராஜேந்திர சோழனைப் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் எவை சரியானவை? 1, அவர் கங்கைகொண்ட சோழன் எனும் பட்டத்தைச் சூட்டிக்கொண்டார். 2, அவர் தெற்கு சுமத்ராவைக் கைப்பற்றினார். 3, அவர் சோழர்களின் அதிகாரத்தை நிலைநிறுத்தினார் எனப் போற்றப்படுகிறார். 4, அவர் ஸ்ரீவிஜயத்தைக் கைப்பற்ற அவருடைய கப்பற்படை உதவியது. அ, 1 மற்றும் 2 ஆ, 3 மற்றும் 4 இ, 1, 2 மற்றும் 4 ஈ, இவை அனைத்தும் 3, கூற்று, யுவராஜாக்கள் மாநிலங்களின் ஆளுநர்களாகப் பணியமர்த்தப்பட்டனர். காரணம், நிர்வாகத்தில் பயிற்சி பெறுவதற்காக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அ) காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே. ஆ)காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல. இ) கூற்று தவறு, காரணம் சரி. ஈ) கூற்றும் காரணமும் தவறு. 4, கீழ்க்காணும் நிர்வாகப் பிரிவுகளை இறங்குவரிசையில் வரிசைப்படுத்தவும். 1, நாடு 2, மண்டலம் 3, ஊர் 4, கூற்றம் 5, கீழ்க்காணும் நிகழ்வுகளைக் கால வரிசைப்படி எழுதவும். 1, மாறவர்மன், வீரபாண்டியனைக் கூட்டு அரசராகப் பணியமர்த்தினார். 2, உள்நாட்டுப்போர் தொடங்கியது. 3, மதுரையில் ஓர் இஸ்லாமிய அரசு உருவாக்கப்பட்டது. 4, மாறவர்மன் குலசேகரனுக்கு இரண்டு, மகன்கள். ஒருவர் வீரபாண்டியன் மற்றொருவர் சுந்தரபாண்டியன். 5, ந்தரபாண்டியன் அலாவுதீன் கில்ஜியின் உதவியை நாடினார். 6, மாலிக்கபூர் படையெடுத்தார். மதுரையின் மீது 6, கண்டுபிடிக்கவும்: பிரம்மதேயம் தேவதானம் பள்ளிச்சந்தம் வேளாண்வகை 6, ஓரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும் 1, பிற்கால சோழர்கள் காலத்தில் ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்கள் யாவை? 2, 'சதுர்வேதி மங்கலம் என எது அழைக்கப்பட்டது? 7, கீழ்க்காணும் வினாவுக்கு விடையளிக்கவும் 1, சோழர்களின் ஆட்சித்திறம் பற்றிய ஐந்து முக்கிய அம்சங்களை விவரித்து எழுதவும். 8, உயர் சிந்தனை வினா 1, 'சோழ அரசர்கள் பெரும் கல்விப்புரவலர்கள்' இக்கூற்றை உறுதிசெய்க. 9, மாணவர் செயல்பாடு நான் யார்? 1, மாலிக்கபூரின் தென்னிந்தியப் படையெடுப்பிற்கு நானே பொறுப்பு. 2, நான் பதினாறு மைல் நீளமுள்ள தடுப்பு அணையைக் கங்கைகொண்ட சோழபுரத்தில் கட்டினேன். 3, நான் நீர் விநியோகம் செய்வதற்காகக் கட்டப்பட்டவன். 4, நான் திருமுறையைத் தொகுத்தேன். 5, நான் ஒரு சிறப்பு வாய்ந்த துறைமுகம். மார்க்கோபோலோ என்னை இருமுறை காணவந்தார். மார்க்கோபோலோ யார் அவர்? அவர் ஏன் முக்கியமானவர்? பாண்டிய நாட்டைப் பற்றி அவருடைய அவதானிப்புகள் யாவை? அவருடைய அவதானிப்புகள் முக்கியமானவை என ஏன் நீ கருதுகிறாய்? 10, கட்டக வினாக்கள் 1, சோழர்கால இலக்கியங்கள் இரண்டின் பெயர்களைக் எழுதுக. விடை: 2, முத்துக்குளித்தலோடு தொடர்புடைய துறைமுகம் எது? விடை: 3, காசு, களஞ்சு, பொன் என்பவை எதைக் குறிக்கின்றன? விடை: 4, காயல்பட்டினம் எந்த மாவட்டத்தில் உள்ளது? விடை: 5, முதலாம் பராந்தகனால் தோற்கடிக்கப்பட்ட பாண்டிய அரசன் யார்? விடை: 6, புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் எங்குள்ளது? விடை: 11, களப்பயணம் சோழர்கள் அல்லது பாண்டியர்களால் கட்டப்பட்ட ஏதேனும் ஒரு கோவிலுக்குச் சென்று அதன் உன்னதத்தைப் பார்க்கவும். மேற்கோள் நூல்கள் 1, K. A. Nilakanda Sastri, A History of South India, New Delhi: Oxford University Press, 2002. 2, Y. Subbarayalu, South India under The Cholas, New Delhi: Oxford University Press, 2012. 3, R. Champakalakshmi, Trade, Ideology and Urbanization South India- 300 BC to AD 1300, New Delhi: Oxford University Press, 1996. 4, Satish Chandra, History of Medieval India, New Delhi: Orient Blackswan, 2010. அலகு – 4 டெல்லி சுல்தானியம் படம், சுல்தானிய கட்டடக்கலைக்குச் சான்றாக ஒரு பழங்காலக் கட்டடம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. படவிளக்கம் தொடங்குகிறது, அக்கட்டடம் செங்கற்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது, சுமார் பதினைந்து படிக்கட்டுகள் அதில் காணப்படுகின்றன. அக்கட்டடத்தின் மேல் பகுதி குவிமாடம் போன்ற அமைப்பில் கட்டப்பட்டுள்ளது, அக்கட்டடத்திற்கு இரண்டு நுழைவாயில்கள் காணப்படுகின்றன. படவிளக்கம் முடிவடைகிறது. கற்றலின் நோக்கங்கள் விரைவுத் துலங்கள் குறியீடு கொடுக்கப்பட்டுள்ளது. எண் T, N, 1, 3, Q டெல்லியைத் தலைநகராகக் கொண்டு இந்தியாவை ஆட்சிசெய்த பல்வேறு வம்சாவளிகளைச் சேர்ந்த துருக்கியச் சுல்தான்கள் அவர்களின் ராணுவப் படையெடுப்புகள் மற்றும் இறையாண்மை விரிவாக்கம் பற்றி தெரிந்து கொள்ளுதல் டெல்லி சுல்தானியத்தின் நிர்வாகம் பற்றி அறிதல் அக்காலப் பகுதியின் கலை மற்றும் கட்டடக்கலை பற்றி தெரிந்து கொள்ளுதல் அறிமுகம் பதினொன்றாம் நூற்றாண்டில் வடஇந்தியாவைக் கொள்ளையடித்த துருக்கியக் குதிரைப்படை வீரர்கள் அடுத்த நூற்றாண்டில் கங்கைச் சமவெளியைத் தங்கள் அரசியல் ஆதிக்கத்தின் கீழ்க் கொண்டுவருவதில் வெற்றி பெற்றனர். அவர்களின் துணிச்சலும் மூர்க்கக்குணமுமே வெற்றிக்குக் காரணங்களாகச் சொல்லப்பட்டாலும், தங்களையும் தங்கள் நாட்டையும் காத்துக்கொள்ளத் தவறிய இந்திய அரசர்களின் இயலாமையே அவர்களின் வெற்றிக்கான உண்மைக் காரணங்களாகும். இந்தியர்கள் தங்களிடையே ஒருவர்மேலொருவர் அவநம்பிக்கை கொண்டிருந்தனர். இஸ்லாமின் தொடக்கக் கால வெற்றிகளையும் அது பரவிவருவதையும் கவனத்தில் கொள்ளத் தவறினர். முஸ்லீம் வீரர்களின் மேம்பட்ட போர் செய்யும் ஆற்றல் அவர்களின் வெற்றிக்கு மற்றொரு காரணமாகும். இப்பாடத்தில் துருக்கியப் போர்வீரர்கள் எவ்வாறு இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியை நிறுவினர், பாபரின் வருகை வரை அவ் ஆட்சியை எவ்வாறு நிலைகொள்ளச் செய்தனர் என்பன குறித்து நாம் விவாதிப்போம். மாம்லுக் வம்சம், [1206 முதல் 1290 வரை] இந்தியாவில் முஸ்லீம்களின் ஆட்சி முகமது கோரியால் கிறிஸ்து பிறப்பிற்கு பின், பொது ஆண்டு, 12 ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது. அவருக்கு மகன்கள் இல்லாத காரணத்தால் பன்டகன் (ராணுவப் பணிக்காக விலைக்கு வாங்கப்பட்ட அடிமைகளைக் குறிக்கும் பாரசீகச் சொல்) எனும் தனிவகை அடிமைகளைப் பேணினார். அவர்கள் மாகாண அளவில் ஆளுநர்களாகப் பதவியில் அமர்த்தப்பட்டுப் பின்னர் சுல்தான் எனும் நிலைக்கு உயர்த்தப்பட்டனர். ஆயிரத்து இருநூற்று ஆறில் கோரியின் இறப்பிற்குப் பின்னர், அவரின் அடிமையான குத்புதீன் ஐபக் இந்தியாவிலிருந்த துருக்கியப் பகுதிகளுக்கு அரசராக தன்னை அறிவித்துக்கொண்டார். அடிமை வம்சத்தின் ஆட்சிக்கான அடிக்கல்லை அவர் நாட்டினார். இவ் அரச மரபு "மாம்லுக்" அரச மரபென்றும் அழைக்கப்பட்டது. மாம்லுக் எனும் அராபிய வார்த்தைக்கு அடிமை' என்று பொருள். குத்புதீன் ஐபக், சம்சுதீன் இல்துமிஷ், கியாசுதீன் பால்பன் ஆகிய மூவரும் இவ் வம்சத்தைச் சேர்ந்த மூன்று மாபெரும் சுல்தான்கள் ஆவர். அடிமை வம்சத்தினர் இத் துணைக்கண்டத்தை எண்பத்து நான்கு ஆண்டுகள் ஆட்சி செய்தனர். குத்புதீன் ஐபக், [1206 முதல் 1210 வரை] குத்புதீன் லாகூரைத் தலைநகராகக் கொண்டு தனது ஆட்சியைத் தொடங்கினார். பின்னர் தனது தலைநகரை டெல்லிக்கு மாற்றினார். டெல்லியில் ஆட்சிபுரிந்தவரை செயல்திறன் மிக்கவராகச் செயல்பட்டுப் பல புதிய பகுதிகளைக் கைப்பற்றினார். கலகங்களை ஒடுக்கினார். மத்திய மற்றும் மேற்கு சிந்து கங்கைச் சமவெளிப் பகுதிகளுக்குத் (வடஇந்தியா) தானே தலைமையேற்றுப் படைநடத்திச்சென்று பலபகுதிகளைக் கைப்பற்றினார். கீழை கங்கைச் சமவெளியைக் (பீகார், வங்காளம்) கைப்பற்றும் பொறுப்பைப் பக்தியார் கல்ஜி என்பாரிடம் ஒப்படைத்தார். ஐபக் டெல்லியில் குவ்வத்-உல்-இஸ்லாம் மஸ்ஜித் எனும் மசூதியைக் கட்டினார். அதுவே இந்தியாவிலுள்ள மிகப் பழமையான மசூதி எனக் கருதப்படுகிறது. குதுப்மினாருக்கு அவரே அடிக்கல் நாட்டினார். ஆனால் அவரால் அப் பணிகளை முடிக்க இயலாமல் போயிற்று. அவருடைய மருமகனும் அவருக்குப் பின் ஆட்சிப் பொறுப்பேற்றவருமான இல்துமிஷ் குதுப்மினாரைக் கட்டி முடித்தார். போலோ விளையாட்டின்போது குதிரையிலிருந்து தவறி விழுந்ததில் படுகாயமடைந்த ஐபக் 1210ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். படம், குவ்வத் உல் இஸ்லாம் மசூதி படம் கொடுக்கப்பட்டுள்ளது, படவிளக்கம் தொடங்குகிறது. படத்தில் ப வடிவில் கட்டட அமைப்பு உள்ளது, மேலும் செவ்வக வடிவத் முற்றம் மற்றும் மூன்று பிரதான நுழைவாயிலுடன் மசூதி காணப்படுகிறது. நுழைவாயில் சற்று வளைந்து மேல்பகுதி குறுகி அழகிய வேலைப்பாட்டுடன் காணப்படுகிறது, மசூதியின் மேல் பகுதி குவிமாடம் போன்ற அமைப்புடன் காணப்படுகிறது. படவிளக்கம் முடிவடைகிறது. இல்து மிஷ், [1210 முதல் 1236 வரை] ஐபக்கின் மகன் ஆரம் ஷா திறமையற்றவராக இருந்தார். எனவே துருக்கியப் பிரபுக்கள் படைத்தளபதியும் ஐபக்கின் மருமகனுமான இல்துமிஷைச் சுல்தானாகத் தேர்வு செய்தனர். இல்துமிஷ் கலகக்காரர்களை ஒடுக்கி ஆட்சிப்பகுதிகளின் மீதான தனது கட்டுப்பாட்டை உறுதியாக நிறுவினார். இவருடைய ஆட்சியின்போதுதான் செங்கிஸ்கானின் தலைமையில் மங்கோலியர்கள் இந்தியாவின் எல்லைப்பகுதிகளை அச்சுறுத்தினர். ஏற்கெனவே செங்கிஸ்கானால் தோற்கடிக்கப்பட்டு விரட்டப்பட்டிருந்த குவாரிஜம் ஷா ஜலாலூதீன் என்பார் இல்துமிஷிடம் அடைக்கலமும் பாதுகாப்பும் கேட்டிருந்தார். அவருடைய வேண்டுகோளை ஏற்க மறுத்ததன் மூலம் இல்துமிஷ் மங்கோலிய ஆபத்தைத் தவிர்த்தார். மங்கோலியர்கள் தாக்குதல் மேற்கொண்டால் அதை எதிர்கொள்வதற்காகத் துருக்கியப் பிரபுக்கள் நாற்பது பேரைக் கொண்ட ஒரு குழுவை உருவாக்கினார். அக்குழு"சகல்கானி" அல்லது நாற்பதின்மர் என அறியப்பட்டது. இல்துமிஷ் தனது படைகளில் பணியாற்றியோர்க்கு 'இக்தாக்களை' (நிலங்கள்) வழங்கினார். "இக்தா" என்பது ராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியத்திற்காகக் கொடுக்கப்பட்ட நிலமாகும். நிலத்தைப் பெற்றவர் இக்தாதார் அல்லது முக்தி என்றழைக்கப்பட்டார். இவர் போர்க்காலங்களில் சுல்தானுக்கு ராணுவ உதவிகள் செய்ய வேண்டும். தனது படைகளையும் குதிரைகளையும் பராமரிப்பதற்காக இக்தாதார் தனக்கு வழங்கப்பட்ட நிலங்களிலிருந்து வரிவசூல் செய்துகொள்வார். படம், குதுப்மினார், கொடுக்கப்பட்டுள்ளது, படவிளக்கம் தொடங்குகிறது. குதுப்மினார் தூபி ஆறு தளங்களாகக் கட்டப்பட்டுள்ளது, இது சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் காணப்படுகிறது, மேலும் அதனைச் சுற்றி மரங்கள் காட்சியளிக்கின்றன. படவிளக்கம் முடிவடைகிறது. ஐபக்கால் தொடங்கப்பட்ட குதுப்மினாரின் கட்டுமானப் பணிகளை இல்துமிஷ் நிறைவுசெய்தார். இருபத்தாறு ஆண்டுகள் ஆட்சிபுரிந்த இல்துமிஷ் ஏப்ரல் மாதம் ஆயிரத்து இருநூற்று முப்பத்து ஆறில் இயற்கை எய்தினார். ரஸ்ஸியா, [1236 முதல் 1240 வரை] இல்துமிஷ்ஷின் திறமை வாய்ந்த மகன் ருக்குதீன் பிரோஷ் மரணமுற்றதால், இல்துமிஷ் தனது மகளான ரஸ்ஸியா சுல்தானாவைத் தனக்குப் பின்னர் டெல்லியின் அரியணைக்கான வாரிசாக அறிவித்தார். ரஸ்ஸியா திறமையுள்ளவரும் மனவலிமை கொண்ட வீராங்கனையுமாவார். அவர் துருக்கிய இனத்தைச் சாராத பிரபுக்களுக்கு ஆதரவாக இருந்ததால் துருக்கியப் பிரபுக்களின் வெறுப்பைச் சம்பாதித்தார். அதே நேரத்தில் பஞ்சாபின் மீதான மூர்க்கம் நிறைந்த மங்கோலியரின் தாக்குதலையும் அவர் எதிர்கொள்ள நேர்ந்தது. ரஸ்ஸியா, ஜலாலுதீன் யாகுத் எனும் எத்தியோப்பிய அடிமையைத் தனது தனி உதவியாளராக நியமித்து அவரைப் பெரிதும் நம்பத் தொடங்கினார். அப் போக்கு துருக்கிய பிரபுக்கள் கலகம் செய்யக் காரணமாயிற்று. அவருக்கு எதிராகத் துருக்கிய பிரபுக்கள் செய்த சதியால் ஆயிரத்து இருநூற்று நாற்பதில் ரஸ்ஸியா கொலையுண்டார். கியாசுதீன் பால்பன், [1266 முதல் 1287 வரை] ரஸ்ஸியாவிற்குப் பின்னர் வலிமை குன்றிய மூன்று சுல்தான்கள் ஆட்சிபுரிந்தனர். அவர்களுக்குப் பின்னர் கியாசுதீன் பால்பன் அரசாளும் பொறுப்பேற்றார். "நாற்பதின்மர்" என்றறியப்பட்ட துருக்கியப் பிரபுக்கள் குழு அவரோடு பகைமை பாராட்டியதால் அவ் வமைப்பைப் பால்பன் ஒழித்தார். தனது ஆட்சிக்கு எதிராகச் சதி செய்வோரையும்,இடையூறாய் இருப்போரையும் கண்டறிய ஒற்றர் துறையொன்றை நிறுவினார். அரசு அதிகாரத்திற்குக் கீழ்ப்படியாமை, எதிர்த்தல் போன்றவற்றைக் கடுமையாகக் கையாண்டார். பால்பனுக்கு எதிராகக் கலகம் செய்ததால் வங்காள மாகாண ஆளுநராக இருந்த துக்ரில்கான் கைது செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார். தனது எதிரிகளான மீவாட்டைச் சேர்ந்த மியோக்கள் (வடமேற்கு இந்தியாவைச் சேர்ந்த ராஜபுத்திர முஸ்லீம் இனத்தினர்) போன்றோரிடம் கருணையில்லாமல் நடந்துகொண்டார். இருந்தபோதிலும் இணக்கமான மங்கோலியர்களுடன் உறவைப் பராமரிப்பதில் கவனத்துடன் செயல்பட்டார். செங்கிஸ்கானின் பேரனும், ஈரானின் மங்கோலிய வைஸ்ராயுமான குலகுகான் என்பாரிடமிருந்து "மங்கோலியர்கள் சட்லஜ் நதியைக் கடந்து படையெடுத்து வரமாட்டார்கள்" எனும் உறுதிமொழியைப் பால்பன் பெற்றார். படம், பால்பன் கல்லறை கொடுக்கப்பட்டுள்ளது, படவிளக்கம் தொடங்குகிறது. படத்தில், புல்வெளிக்கு நடுவே அமைந்த கல்லறையின் மீது உள்ள கற்களில் ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன, கல்லறையை சுற்றிலும் பழுதடைந்த நிலையில் காணப்படும் சுற்றுச் சுவர்களுடன் இப்படம் காணப்படுகிறது. சுற்றுச்சுவர் கருங்கற்களால் கட்டப்பட்டுள்ளன. படவிளக்கம் முடிவடைகிறது. மங்கோலியரின் தாக்குதல்களிலிருந்து நாட்டைப் பாதுகாப்பதற்காகப் பால்பன் பல கோட்டைகளைக் கட்டினார். பாரசீகத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற கவிஞரான அமிர்குஸ்ரு என்பாரைப் பால்பன் ஆதரித்தார். பால்பன் 1287 இல் மரணமுற்றார். பால்பனின் மகனான கைகுபாத் திறமையற்றவராக இருந்தார். 1290 இல் படைத்தளபதியாக பணியாற்றிய மாலிக் ஜலாலுதீன் கில்ஜி அரசப்பிரதிநிதியாகப் (நாயிப்) பொறுப்பேற்றார். சுல்தான் கைகுபாத்தின் பெயரால் அவர் நாட்டையாண்டார். பின்னர் ஒரு நாளில் ஜலாலுதீனால் அனுப்பப்பட்ட அதிகாரி ஒருவரால் கைகுபாத் கொல்லப்பட்டார். அதன் பின்னர் ஜலாலுதீன் முறையாக அரியணை ஏறினார். அவரிலிருந்து கில்ஜி வம்சத்தின் ஆட்சி தொடங்கிற்று. கில்ஜி அரச வம்சம், [1290 முதல் 1320 வரை] ஜலாலுதீன் கில்ஜி, [1290 முதல் 1296 வரை] ஜலாலுதீனின் ஆட்சியின்போது பல படையெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில் பெரும்பாலான படையெடுப்புகளைத் திட்டமிட்டுத் தலைமையேற்று நடத்தியது காராவின் ஆளுநரான அலாவுதீன் கில்ஜி ஆவார். அவர் ஜலாலுதீனின் உடன் பிறந்தோரின் மகனாவார். அவரின் முக்கியப் படையெடுப்பு தக்காண அரசான தேவகிரிக்கு எதிராக மேற்கொண்டதாகும். அலாவுதீன் தேவகிரி யாதவ அரசர் ராமச்சந்திரனைத் தோற்கடித்த பின்னர் அந்நகரைக் கொள்ளையடித்துப் பெருஞ்செல்வத்தோடு திரும்பினார். அச் செல்வத்தை முக்கியமான பிரபுக்களுக்கும் படைத்தளபதிகளுக்கும் கையூட்டாகக் கொடுத்து அவர்களைத் தன்பக்கம் ஈர்த்தார். பின்னர் ஜலாலுதீனை வஞ்சகமாகக் கொன்றார். அதனைத் தொடர்ந்து 1296 ஆம் ஆண்டு தன்னை டெல்லியின் சுல்தானாக அறிவித்துக்கொண்டார். அலாவுதீன் கில்ஜி, [1296 முதல் 1316 வரை] அலாவுதீன் டெல்லி சுல்தானியத்தை ஒருங்கிணைத்து உறுதிப்படுத்தினார். பஞ்சாபில் மங்கோலியர்களுக்கு எதிராக, ராஜஸ்தானத்திற்கும் குஜராத்திற்கும் எதிராக என அவருடைய படையெடுப்புகள் பாராட்டுக்குரியனவாகும். வட எல்லைகளின் தனது பாதுகாப்பை உறுதிசெய்துகொண்ட பின்னர் தனது தலைமைத் தளபதி மாலிக் கபூரை 1310 ஆம் ஆண்டு தென்புலத்தின் வெகுதொலைவிலுள்ள மதுரை வரை படையெடுக்கப் பணித்தார். தக்காண அரசுகளான தேவகிரி யாதவர்கள், வாரசமுத்திரத்தின் ஹொய்சாளர்கள், வாரங்கல் காகதியர்கள், மதுரைப் பாண்டியர்கள் ஆகிய அனைவரும் அலாவுதீனின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டனர். பெட்டிச் செய்தி சித்தூர் சூறையாடல் (1303) விரைவுத் துலங்கள் குறியீடு கொடுக்கப்பட்டுள்ளது, எண் I, 2, Z, Q, Y சித்தூரில் ராஜபுத்திரப் படைகளை அலாவுதீனின் படைகள் திணறடித்த நிலையில் தோல்வியடைந்துவிடுவோம் என்ற சூழலில் கோட்டைக்குள் இருந்த ஆடவரும் பெண்டிரும் தங்களது பண்டைய மரபின்படி "ஜவ்ஹர்" எனப்படும் சடங்கை நடத்தினர், இதன்படி, ஆடவர் கோட்டையை விட்டு வெளியேறிப் போர்க்களத்தில் மாள்வர். பெண்கள் தீயில் புகுந்து தங்களை மாய்த்துக் கொள்வர். படம், சித்தூர் கோட்டை கொடுக்கப்பட்டுள்ளது, படவிளக்கம் தொடங்குகிறது. படத்தில் கோட்டையின் சிதிலமடைந்த சுவர்கள் மற்றும் கோபுரங்கள் காணப்படுகின்றன. படவிளக்கம் முடிவடைகிறது. அலாவுதீனின் படையெடுப்புகளைப் போலவே அவருடைய அரசியல் நிர்வாகச் சீர்திருத்தங்களும் பாராட்டுக்குரியனவாகும். டெல்லியைச் சுற்றியுள்ள வேளாண் நிலங்களை முறையாக அளந்து செய்த அவர் ஒரு குறிப்பிட்ட அளவிலான நிரந்தர வரியை விதித்தார். வரிகளை வசூல் செய்யும் பணியை ராணுவ அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். இந்த நிர்வாக மாற்றத்தால் உள்ளூர் தலைவர்களும் குறுநில மன்னர்களும் காலகாலமாகத் தாங்கள் அனுபவித்துவந்த உரிமையை இழந்தனர். டெல்லியிலும் ஏனைய இடங்களிலும் முகாமிட்டிருந்த தனது படைப் பிரிவுகளுக்காகக் கட்டாய உணவு தானியக் கொள்முதல் முறையை அறிமுகம் செய்தார். கொள்முதல் விலை சுல்தானால் நிர்ணயம் செய்யப்பட்டது. வரியாக வசூலிக்கப்பட்ட தானியம் அரசாங்கப் பண்டகசாலைகளில் சேகரித்துவைக்கப்பட்டது. தனது புதிய சட்டதிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்துகொள்ள ஒற்றர்களை நியமித்தார். அவ் ஒற்றர்கள் நேரடியாக சுல்தானிடம் நிலைமைகளைத் தெரியப்படுத்தினர். அலாவுதீன் 1316 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். அவருடைய வழித்தோன்றல்கள் அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்வதில் தோல்வியுற்றதால் கியாசுதீன் துக்ளக் என்பவர் அதிகாரத்தைக் கைப்பற்றி துக்ளக் அரசவம்ச ஆட்சிக்கு அடிக்கல் நாட்டினார். துக்ளக் அரச வம்சம், [1320 முதல் 1414 வரை] கியாசுதீன் துக்ளக், [1320 முதல் 1324 வரை] அலாவுதீன்கில்ஜியின் இறப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் குழப்பத்தின் காரணமாக டெல்லி சுல்தானியம் பல பகுதிகளை இழக்க நேரிட்டது. அவற்றை மீட்பதே கியாசுதீனுக்குப் பெரும்பணியாக அமைந்தது. கியாசுதீன் துக்ளக் தனது மகன் ஜூனாகானை வாராங்கல்லுக்கு எதிராகப் போரிட அனுப்பிவைத்தார். ஜூனாகான் வாராங்கல் அரசர் பிரதாப ருத்ரனை வெற்றி கொண்டு கொள்ளையடித்த பெருஞ்செல்வத்தோடு ஊர் திரும்பினார். இச் செல்வத்தைக் கொண்டே கியாசுதீன் துக்ளக் டெல்லிக்கு அருகே துக்ளகாபாத் எனும் புதிய நகரை நிர்மாணம் செய்ய அடிக்கல் நாட்டினார். இருந்தபோதிலும் அலாவுதீன் தனது மாமனாரை வஞ்சமாகக் கொன்றது போலவே ஜூனாகானும் தனது தந்தையைக் கொன்று ஆட்சியைக் கைப்பற்றியதாகச் சொல்லப்படுகிறது. ஜூனாகான் முகமதுபின் துக்ளக் எனும் பெயரோடு 1325 ஆம் ஆண்டு அரியணை ஏறினார். முகமது பின் துக்ளக், [1325 முதல் 1351 வரை] முகமது பின் துக்ளக் மிகவும் கற்றறிந்த மனிதர். ஆனாலும் அவர் கடுமையானவராக இருந்தார். அலாவுதீன் நாடுகளைக் கைப்பற்றினார், கொள்ளையடித்தார். அவ்வரச குடும்பங்கள் தன்னைச் சார்ந்திருக்குமாறு செய்தார். அதற்கு நேர்மாறாக முகமது பின் துக்ளக் இத்துணைக்கண்டம் முழுவதையும் தனது நாடாக மாற்றக் கனவு கண்டார். தனது இறையாண்மையை விரிவு செய்வதற்கு வசதியாக தனது தலைநகரை டெல்லியிலிருந்து நாட்டின் மையப்பகுதியிலிருந்த தேவகிரிக்கு மாற்றினார். தேவகிரியின் பெயரையும் தௌலதாபாத் என மாற்றினார். தனது திட்டம் தவறானது என முகமது பின் துக்ளக் உணர்ந்ததால் மீண்டும் டெல்லிக்கே திரும்புமாறு அனைவருக்கும் ஆணையிட்டார். சுல்தானுடன் டெல்லி திரும்பிய மொராக்கோ நாட்டுப் பயணியான இபன் பதூதா டெல்லியை அடைந்தபோது அது, "காலியாக, கைவிடப்பட்டதாக ஆனால் குறைந்தளவு மக்களுடன் இருந்தது" எனக் குறிப்பிட்டுள்ளார். அலாவுதீன் நிலவரியைத் தானியமாக வசூல் செய்யும் முறையைப் பின்பற்றினார். துக்ளக் நிலவரியை உயர்த்தியதோடு அதுமுதல் நிலவரி பணமாக வசூலிக்கப்பட வேண்டுமென ஆணை பிறப்பித்தார். அது பஞ்சகாலங்களில் பெரும் இடர்ப்பாடுகளை ஏற்படுத்தியது. போதுமான அளவுக்கு நாணயங்களோ, புதிய நாணயங்களை வெளியிடும் அளவுக்கு வெள்ளியோ கைவசம் இல்லை என்பதை அறிந்துகொண்ட துக்ளக் செப்பு நாணயங்களை அடையாளப் பணமாக வெளியிட்டார். பெட்டிச் செய்தி முகமது பின் துக்ளக் டெல்லியிலிருந்து தௌலதாபாத்திற்கு தனது தலைநகரை மாற்றிய போது, டெல்லியிலிருந்த குடிமக்கள் அனைவரையும் இடம்பெயரச் செய்ததொடு, கால் நடைகளையும் இடம்பெயரச் செய்தார். வெகுவிரைவில் கள்ள நாணயங்கள் பெருகுவது அன்றாட நிகழ்ச்சியானது. இதன் விளைவாக ஒட்டு மொத்த வருவாய் நிர்வாகமுறை சீர்குலைந்தது. வெளிநாட்டு வணிகர்கள் வியாபாரத்தை நிறுத்தியதால் வணிகம் பாதிப்புக்குள்ளானது. சுல்தான் செப்பு நாணயங்களை திரும்பப் பெற்றுக்கொண்டு அதற்கு மாற்றாகத் தங்க, வெள்ளி நாணயங்களை வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால் அரசு திவாலானது. தோஆப் பகுதியில், முகமது, நிலவரியை உயர்த்தியதன் விளைவாக விவசாயிகளின் கிளர்ச்சிகள் வெடித்தன. அவை கொடூரமான முறைகளில் அடக்கப்பட்டதால் விவசாயிகள் வேளாண்மையைக் கைவிட்டனர். அதன் விளைவாக அடிக்கடிப் பஞ்சங்கள் ஏற்பட்டன. முகமது பின் துக்ளக் சுல்தானாக இருபத்தைந்து ஆண்டுகள் ஆட்சிபுரிந்தார். இந்த நீண்ட ஆட்சிக்காலத்தில் பல மாகாண ஆளுநர்களின் கிளர்ச்சிகளை அவர் எதிர்கொள்ள நேர்ந்தது. அவுத், முல்தான், சிந்து ஆகிய மாகாணங்களின் ஆளுநர்கள் சுல்தானுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்து தங்களைச் சுதந்திர அரசர்களாகப் பிரகடனம் செய்து கொண்டனர். தென்இந்தியாவில் பல புதிய அரசுகள் எழுச்சி பெற்றன. துக்ளக்கிடம் முன்னர் படைவீரராகப் பணியாற்றிய பாமினி என்பார் தௌலதாபாத்தையும் அதைச் சுற்றிக் கைப்பற்றப்பட்ட பகுதிகளையும் சுதந்திர அரசாக அறிவித்தார். அவரது பெயரிலேயே அது பாமினி சுல்தானியம் என அழைக்கப்பட்டது. படம், முகமது பின் துக்ளக் நாணயங்கள் படம் கொடுக்கப்பட்டுள்ளது, படவிளக்கம் தொடங்குகிறது. அந் நாணயங்கள் செம்பினால் செய்யப்பட்டுள்ளன, அவற்றின் மீது சில குறியீடுகள் காணப்படுகின்றன. படவிளக்கம் முடிவடைகிறது. கிறித்து பிறப்புக்குப் பின் 1335 ஆம் ஆண்டு மதுரை தனி சுல்தானியமாக உருவானது. 1346 ஆம் ஆண்டு வங்காளம் சுதந்திர அரசானது. துக்ளக் 1351 மார்ச் 23 ஆம் நாள் மரணமடைந்தார். படம், இந்திய வரைபடம் கொடுக்கப்பட்டுள்ளது, படவிளக்கம் தொடங்குகிறது. அவ்வரைபடத்தில் துக்ளக் பேரரசின் ஆட்சிப் பகுதிகள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன. படத்தில் இளஞ்சிவப்பு நிறத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் பகுதிகள் அனைத்தும் துக்ளக் பேரரசை குறிக்கும், வரைபடத்தில் சிந்து, லாகூர், டெல்லி, அகமதாபாத், தௌலதாபாத், பம்பாய், கோவா, கோழிக்கோடு, மதுரை, தரங்கம்பாடி, மெட்ராஸ் முதலிய இடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும், கங்கை, யமுனை, நர்மதை, தப்தி, கோதாவரி, காவிரி முதலிய ஆறுகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. படவிளக்கம் முடிவடைகிறது. பிரோஷ் ஷா துக்ளக் (1351 முதல் 1388 வரை) முகமது பின் துக்ளக்கைத் தொடர்ந்து கியாசுதீனின் இளைய சகோதரரின் மகனான பிரோஷ் அரியணை ஏறினார். அவரால் கிளர்ச்சிகளை அடக்கவும் இயலவில்லை; பிரிந்துசென்ற மாகாணங்களை மீட்கவும் முடியவில்லை. தென்பகுதி மாகாணங்களை மீண்டும் கைப்பற்றுவதிலும் அவர் ஆர்வம் காட்டவில்லை. தக்காணப் பிரச்சனைகளில் தலையிட வேண்டும் எனக் கேட்டுப் பாமினி இளவரசர் விடுத்த அழைப்பையும் (ஏறத்தாழ 1365) அவர் ஏற்க மறுத்துவிட்டார். சூபி ஞானிகளுக்கும் ஏனைய மதத் தலைவர்களுக்கும் பிரோஷ் தாராளமனதுடன் பரிசுகள் வழங்கி கௌரவித்து அவர்களின் அறிவுரைகளுக்குச் ஏழை செவிமடுத்தார். முஸ்லீம்களுக்கு உதவுவதற்கான அறக்கட்டளைகளை நிறுவினார். கல்லூரிகள், மருத்துவமனைகள், மசூதிகள் ஆகியவற்றைக் கட்டினார். பல மனிதாபிமான நடவடிக்கைகளையும் அவர் மேற்கொண்டார். மனிதாபிமானமற்ற, கொடூரமான தண்டனைகளை ஒழித்தார். இஸ்லாமியச் சட்டங்களால் அங்கீகரிக்கப்படாத வரிகளை ரத்து செய்தார். விவசாயிகளின் கடன்களை ரத்து செய்தும் பல நீர்ப்பாசனக் கால்வாய்களை வெட்டியும் வேளாண்மையை மேம்படுத்தினார். 1200புதிய தோட்டங்களை உருவாக்கிய அவர் அலாவுதீன் கில்ஜியின் காலத்தைச் சேர்ந்த 30 பழைய தோட்டங்களைப் புனரமைத்தார். பிரோஷாபாத், ஜான்பூர், ஹிசார், பிரோஷ்பூர் ஆகிய புதிய நகரங்களையும் அவர் நிர்மாணித்தார். சுல்தானியத்தைக் கட்டிக்காக்க அமைதியான முறையில் பல முயற்சிகளை அவர் மேற்கொண்டார். இருந்தபோதிலும் பிரோஷா துக்ளக்கின் இறுதி நாட்கள் மகிழ்ச்சி நிறைந்தவையாக இல்லை. அவருடைய மகன் முகமதுகான் தந்தைக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தார். 1388இல் தனது 83 ஆவது வயதில் பிரோஷ் ஷா துக்ளக் இயற்கை எய்தினார். படம், பிரோஷ் ஷா துக்ளக் கல்லறை படம் கொடுக்கப்பட்டுள்ளது, படவிளக்கம் தொடங்குகிறது. படத்தில் இரு கட்டடங்கள் காணப்படுகின்றன, அதன் முன்பகுதி செவ்வக வடிவ முற்றத்துடன், ஒரு பிரதான நுழைவாயிலைக் கொண்டுள்ளன, நுழைவாயில்கள் வளைந்து, மேல்பகுதி குறுகி காணப்படுகின்றன, கட்டடத்தின் மேற்பகுதி, குவிமாடம் வடிவில் காணப்படுகிறது, அதனைச் சுற்றிலும் இரும்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. படவிளக்கம் முடிவடைகிறது. தைமூரின் படையெடுப்பு (1398) பிரோஷ் ஷா துக்ளக் மரணமுற்று பத்தாண்டுகள் கழிந்த நிலையில் "தாமர்லைன்" என்றழைக்கப்பட்ட தைமூர் டெல்லியைத் தாக்கிச் சூறையாடி மாபெரும் மனிதப் படுகொலையை அரங்கேற்றினார். மத்திய ஆசியாவில் சாமர்கண்ட் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை ஆட்சி செய்த தைமூர் வடஇந்தியாவிற்கு மேற்கில் சில இடங்களைக் கைப்பற்றினார். இந்தியாவின் வலிமையின்மையைச் சாதகமாக்கிக் கொண்டு இந்தியாவிற்குள் படையெடுத்து நுழைந்து 1398 டிசம்பர் மாதத்தில் டெல்லியைக் கொள்ளையடித்தார். தைமூரின் படையெடுப்பால் டெல்லிக்கு அடுத்ததாக அதிகம் பாதிப்புக்கு உள்ளான பகுதி பஞ்சாப் ஆகும். தங்கம், வெள்ளி, நகைகள் எனப் பெரும் செல்வத்தைக் கொள்ளையடித்து எடுத்துச்சென்றார். மேலும் தைமூர் செல்லும்போது சாமர்கண்டில் நினைவுச்சின்னங்களைக் கட்டுவதற்காகத் தச்சுவேலை செய்வோர், கட்டடக் கலைஞர்கள் போன்ற இந்தியக் கைவினைஞர்களையும் உடன் அழைத்துச் சென்றார். சையது அரச வம்சம் (1414 முதல் 1451 வரை) டெல்லி சுல்தானியம் பல சுதந்திர அரசுகளாகச் சிதறுண்டுபோனாலும் முகலாயர் படையெடுப்புவரை 114 ஆண்டுகள் தாக்குப்பிடித்து நின்றது. டெல்லியை விட்டுச் செல்வதற்கு முன்பாகத் தைமூர் தான் கைப்பற்றிய பகுதிகளுக்கு (டெல்லி, மீரட், பஞ்சாப்) கிசிர்கான் என்ற தனது பிரதிநிதியை ஆளுநராக நியமித்துச்சென்றார். அவர் 1414இல் சையது அரச வம்சத்தைத் தோன்றுவித்தார். அவ்வரச வம்சம் 1451 வரை நீடித்தது. அவ்வம்சத்தின் கடைசி சுல்தான் அலாவுதீன் ஆலம் ஷா 1451இல் அரச பதவியைத் துறந்தார். இது சிர்ஹிந்த் (பஞ்சாப்) பகுதியின் ஆளுநராக இருந்த பகலூல் லோடிக்கு டெல்லியின் சுல்தானாகும் வாய்ப்பினை வழங்கியது. அவரே லோடி வம்ச ஆட்சியைத் தோற்றுவித்தார். லோடி அரச சம்பவம் (1451 முதல் 1526 வரை) 1489இல் பகலூல் லோடியைத் தொடர்ந்து அவரது மகன் சிக்கந்தர் லோடி சுல்தானாகப் பொறுப்பேற்றார். அவர் கலைகளையும் கல்வியையும் ஆதரித்தார். ஆக்ரா நகரை நிர்மாணித்த அவர் அந்நகரைத் தலைநகர் ஆக்கினார். அவர் 1517இல் மரணமுற்றதைத் தொடர்ந்து அவருடைய மகன் இப்ராகிம் லோடி அரசப் பதவியேற்றார். இப்ராகிம் லோடி பாபரால் 1526இல் பானிபட் போர்க்களத்தில் தோற்கடிக்கப்பட்டார். இவ்வாறு லோடி அரச வம்சத்திற்கும் டெல்லி சுல்தானியத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்த பாபர் முகலாயப் பேரரசை நிறுவினார். இஸ்லாமியக் கலை, கட்டடக்கலை உயர்வகுப்பைச் சேர்ந்த முஸ்லீம் பிரபுக்கள், அதிகாரிகள், வீரர்கள் ஆகியோர் தங்கள் குடியிருப்புக் கட்டடங்களை முதலில் நகரங்களிலும் புறநகர்ப் பகுதிகளிலும் கட்டிக் கொண்டனர். அவற்றைச் சுற்றிப் பேரரசு பாணியிலான அழகு மிக்க மசூதிகளை டெல்லி முஸ்லீம் ஆட்சியாளர்கள் கட்டினர். மசூதிகளும் மதரசாக்களும் (கல்வி நிலையங்கள்) கட்டட வடிவத்தில் வேறுபட்டிருந்தன. குரானிலுள்ள வரிகளைச் செதுக்கி நேர்த்தியாகவும் நளினமாகவும் அலங்கரிக்கப்பட்ட கதவுகளும், சுவர்களும் அக்கட்டங்களுக்குத் தனித்தன்மையான தோற்றத்தை வழங்கின. அக்கட்டடங்களின் வடிவங்கள் பாரசீகப் பாணியிலும் அலங்கார வேலைப்பாடுகள் இந்தியப் பாணியிலும் அமைந்திருந்தன. எனவே அப்பாணி இந்தோ சாராசானிக் கலைவடிவம் என அழைக்கப்பட்டது. குதுப்மினார். அலெய் தர்வாசா, குவ்வத்-உல்-இஸ்லாம் மசூதி, மோத்தி மசூதி, இல்துமிஷ், பால்பன் ஆகியோரின் கல்லறைகள், தௌலதாபாத், பிரோஷ் ஷா பாத் ஆகிய இடங்களிலுள்ள கோட்டைகள் என அனைத்தும் அப்பாணியில் அமைக்கப்பட்டனவாகும். படம், அலெய் தர்வாசா படம் கொடுக்கப்பட்டுள்ளது, படவிளக்கம் தொடங்குகிறது. படத்தில் கட்டடம் சதுர குவிமாடம் கொண்ட, இரு வளைந்த நுழைவாயிலுடன் காணப்படுகின்றன, அக்கட்டடம் சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில், அழகிய வேலைபாடுடன் காட்சியளிக்கின்றன, படவிளக்கம் முடிவடைகிறது. படம், தௌலதாபாத் கோட்டை படம் கொடுக்கப்பட்டுள்ளது, படவிளக்கம் தொடங்குகிறது. படத்தில், கோட்டைச் சுவர்கள் செங்கற்களால் கட்டப்பட்டுள்ளது, ஒரு நுழைவாயில் வளைந்து காணப்படுகிறது, படவிளக்கம் முடிவடைகிறது. சுருக்கம் இந்தியாவில் முஸ்லீம் ஆட்சி முகமது கோரியால் நிறுவப்பட்டது. குத்புதீன் ஐபக் அடிமை வம்ச ஆட்சியை நிறுவினார். அவருடைய மருமகன் இல்துமிஷ் அதனை ஒருங்கிணைத்து வலிமைப்படுத்தினார். இல்துமிஷின் மகளான ரஸ்ஸியா தைரியமிக்க போராளியும் மிகச்சிறந்த நிர்வாகியும் ஆவார். பால்பனின் ஒற்றறியும் முறையும், நாற்பதின்மர் அமைப்பை அவர் அழித்ததும் துருக்கியப் பிரபுக்களின் அதிகாரத்தை மட்டுப்படுத்தியது. கில்ஜி அரச வம்சத்தை நிறுவிய அலாவுதீன் கில்ஜி, அவரது படையெடுப்புகள் மற்றும் நிர்வாகச் சீர்திருத்த நடவடிக்கைகள். பிரோஷ் ஷா துக்ளக், மக்களின் நல்வாழ்க்கையில் அக்கறை கொண்ட இரக்கமுள்ள அரசர். தைமூரால் டெல்லி கொள்ளையடிக்கப்படுதல் சையது அரசவம்சத்தை கிசிர்கான் தோற்றுவித்தல். சர்கிந்தின் ஆளுநரான பகலூல்லோடி டெல்லியில் லோடி வம்சத்தை நிறுவியது. முதலாம் பானிபட் போர் கிறிஸ்து பிறப்பிற்கு பின், பொது ஆண்டு, 1526இல் பாபர் முகலாய அரசை நிறுவுவதற்கு வழிவகுத்தது சொற்களஞ்சியம், அட்டவணைத் தொடங்குகிறது எக்கணமும் நடைபெற இருக்கிற /அச்சுறுத்தும் நிலையில் இருக்கிற impending about to happen மூர்க்கமான/ அச்சம் தருகிற வகையில் ferocious cruel, violent சதிகாரர்கள் conspirator someone who conspires secretly with other புரவலர் patron people to do something unlawful or harmful கொள்ளையடி plunder supporter, promoter கொள்முதல் procurement to steal goods forcibly from a place especially பேரழிவு disastrous during a war துண்டு துண்டாக fragment the process of getting supplies போலியான counterfeit causing great damage விலக்கு அளி waiving break into pieces அட்டவணை முடிவடைகிறது. பயிற்சி 1, சரியான விடையைத் தேர்வு செய்க 1, டேஷ் மாம்லுக் அரச வம்சத்திற்கான அடிக்கல்லை நாட்டினார். அ) முகமதுகோரி ஆ) ஜலாலுதீன் இ) குத்புதீன் ஐபக் ஈ) இல்துமிஷ் 2, குத்புதீன் தனது தலைநகரை டேஷ் லிருந்து டெல்லிக்கு மாற்றினார். அ) லாகூர் ஆ) புனே இ) தௌலதாபாத் ஈ) ஆக்ரா 3, டேஷ் குதுப்மினாரின் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்தார். அ) ரஸ்ஸியா ஆ) குத்புதீன் ஐபக் இ) இல்துமிஷ் ஈ) பால்பன் 4, டெல்லிக்கு அருகே துக்ளகாபாத் நகருக்கான அடிக்கல்லை நாட்டியவர் டேஷ் ஆவார். அ) முகமதுபின் துக்ளக் ஆ) பிரோஷ் ஷா துக்ளக் இ) ஜலாலுதீன் ஈ) கியாசுதீன் 2, கோடிட்ட இடங்களை நிரப்புக 1, துக்ளக் அரசவம்சத்தைத் தோற்றுவித்தவர் டேஷ் ஆவார். 2, முகமது பின் துக்ளக் தனது தலைநகரை டெல்லியிலிருந்து டேஷ் க்கு மாற்றினார். 3, புகழ்பெற்ற பாரசீகக் கவிஞர் அமிர் குஸ்ருவை டேஷ் ஆதரித்தார். 4, டெல்லியிலுள்ள குவ்வத்-உல்-இஸ்லாம் மசூதியை டேஷ் கட்டினார். 5, இந்தியாவிற்கு செங்கிஸ்கான் தலைமையிலான மங்கோலியரின் அச்சுறுத்தல் டேஷ் ஆட்சியின் போது ஏற்பட்டது. 3, பொருத்துக 1, துக்ரில்கான், காராவின் ஆளுநர் 2, அலாவுதீன், ஜலாலுதீன் யாகுத் 3, பகலூல் லோடி, வங்காள ஆளுநர் 4, ரஸ்ஸியா, சிர்கந்தின் ஆளுநர் 4, சரியா? தவறா? 1, குத்புதீன் இனங்காண முடியாத காய்ச்சலால் மரணமடைந்தார். 2, ரஸ்ஸியா திறமை மிக்க, மனவலிமை கொண்ட போர்வீரர். 3, ஐபக்கின்மறைவுக்குப்பின்னர் அவருடைய மகன் இல்துமிஷைத் துருக்கியப் பிரபுக்கள் சுல்தானாகத் தேர்வு செய்தனர். 4, தக்காண விசயங்களில் தலையிடக்கோரி பாமினி இளவரசர் விடுத்த அழைப்பை ஏற்றுக்கொள்ள பிரோஷ் ஷா மறுத்துவிட்டார். 5, கூற்றைக் காரணத்தோடு ஒப்பிடுக. சரியான விடையை டிக் செய்யவும் 1) கூற்று, மங்கோலியருடன் பால்பன் சுமூகமான உறவை மேற்கொண்டார். காரணம், செங்கிஸ்கானின் பேரனான மங்கோலிய அரசன், சட்லஜ் நதியைக் கடந்து மங்கோலியர் படையெடுத்து வரமாட்டார்கள், என உறுதி கூறியிருந்தார். அ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமே. ஆ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல. இ) காரணமும் கூற்றும் தவறானவை. ஈ) கூற்று தவறு; காரணம் சரி. 2, சரியான இணையைத் தேர்வு செய்க. அ) ஹொய்சாளர் - தேவகிரி ஆ) யாதவர் - துவாரசமுத்திரம் இ) காகதியர் - வாராங்கல் ஈ) பல்லவர் – மதுரை 3, தவறான கூற்றினை கண்டறியவும். அ) 1206இல் கோரி முகமதுவின் மரணத்திற்குப் பின்னர், அவருடைய அடிமையான குத்புதீன் ஐபக், இந்தியாவிலிருந்த துருக்கியப் பகுதிகளுக்குத் தன்னை அரசனாக அறிவித்துக்கொண்டார் ஆ) ரஸ்ஸியா, தனது ஆட்சிக்கு எதிராகச் சதி செய்வோரைப் பற்றியும் இடையூறு ஏற்படுத்துவோர் பற்றியும் செய்திகள் சேகரிக்க ஒற்றர்கள் துறையொன்றை நிறுவினார் இ) மங்கோலியரின் தாக்குதலிலிருந்து தனது நாட்டைப் பாதுகாக்கப் பால்பன் கோட்டைகளைக் கட்டினார் ஈ) இப்ராகிம் லோடி 1526இல் பாபரால் தோற்கடிக்கப்பட்டார். 6, கீழ்க்காண்பனவற்றிற்கு ஓரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும் 1, முறையான ஊதியத்திற்கு மாற்றாக ராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட நிலத்தின் பெயரென்ன? 2, ஆக்ரா நகரை நிர்மாணித்தவர் யார்? 3, கிறிஸ்து பிறப்பிற்கு பின், பொது ஆண்டு, பன்னிரெண்டாம் நூற்றாண்டில் இந்தியாவில் முஸ்லீம் ஆட்சியை நிறுவியவர் யார்? 4, 'சகல்கானி' குறித்து சிறுகுறிப்பு வரைக. 5, அலாவுதீன் கில்ஜி எவ்வாறு டெல்லி சுல்தானியத்தை ஒருங்கிணைத்தார்? 6, பிரோஷ் ஷா துக்ளக்கின் சாதனைகளைப் பட்டியலிடுக. 7, கீழ்க்காணும் வினாவுக்கு விடையளிக்கவும் 1, 1398ஆம் ஆண்டில் நடைபெற்ற தைமூரின் படையெடுப்பை விவரி. 8, உயர் சிந்தனை வினா 1, முகமது பின் துக்ளக்கை டெல்லியின் சுல்தானாக நீ எவ்வாறு மதிப்பீடு செய்வாய்? 9, வரைபட வினா இந்திய ஆறுகள் வரைபடத்தில் துக்ளக் வம்சத்தின் ஆட்சி எல்லையையும் கீழ்க்காணும் பகுதிகளையும் குறிப்பிடுக. 1, டெல்லி 2, தேவகிரி 3, லாகூர் 4, மதுரை 10, மாணவர் செயல்பாடு 1, பொருத்துக தந்தை மகன் 1, தந்தை, குத்புதீன் ஐபக் மகன், ருக்குதீன் பிரோஷ் 2, தந்தை, இல்துமிஷ் மகன், கைகுபாத் 3, தந்தை, பால்பன் மகன், அலாவுதீன் 4, தந்தை, கியாசுதீன் மகன், சிக்கந்தர் லோடி 5, தந்தை, பகலூல் லோடி மகன், ஆரம் ஷா 2, டெல்லி சுல்தானியத்தின் இஸ்லாமிய கலை, கட்டடக் கலை தொடர்பான படங்களைக் கொண்டு செருகேடு (ஆல்பம்) ஒன்றைத் தயார் செய்யவும். மேற்கோள் நூல்கள் 1, Abraham Eraly, The Age of Wrath, New Delhi: Penguin, 2014. 2, R. C Majumdar, H. C. Ray Chaudhuri and Kalikinkar Datta, An Advanced History of India, New Delhi: Trinity, 3, Burton Stein, A History of India, New Delhi: Oxford University Press, 2004 (Reprint). 4, S. K. Singh, History of Medieval India, New Delhi: Axis Books, 2013. இணையச் செயல்பாடு டெல்லி சுல்தானியம் இச் செயல்பாட்டின் மூலம் இடைக்கால டெல்லியின் வரலாற்றுக் கால வரிசையினை அறியலாம். படம், டெல்லி சுல்தானியம் பாடத்திற்கான இணையச் செயல்பாடு படம் கொடுக்கப்பட்டுள்ளது. படவிளக்கம் தொடங்குகிறது. படிநிலைகள்: படி 1: கீழ்காணும் உரலி அல்லது விரைவுக் குறியீட்டைப் பயன்படுத்தி இச் செயல்பாட்டிற்கான இணைய பக்கத்திற்குச் செல்லவும். படி 2: சுட்டியைப் பயன்படுத்தி " TIMELINE" செல்க படி 3: குறிப்பிட்ட வருடத்தை சொடுக்கி அது தொடர்பான விளக்கத்தினை அறியலாம். படம், படிநிலைகளுக்கானப் படம் கொடுக்கப்பட்டுள்ளது, படி 1, படி 2, படி 3 ஆகியவற்றை எவ்வாறு செய்வது என விளக்கப்படம் கொடுக்கப்பட்டுள்ளது. படவிளக்கம் முடிவடைகிறது. டெல்லி சுல்தானியம் உரலி: https://delhi-timeline.in/ **படங்கள் அடையாளத்திற்கு மட்டுமே. *தேவையெனில் 'Adobe Flash' ஐ அனுமதிக்கவும். விரைவுத் துலங்கள்குறியீடு கொடுக்கப்பட்டுள்ளது, எண் 7, D, 1, K, 0 புவியியல் அலகு - 1 புவியின் உள்ளமைப்பு படம், புவியின் உள்ளமைப்பு படம் கொடுக்கப்பட்டுள்ளது, படவிளக்கம் தொடங்குகிறது. புவிகோளத்தின் மூன்று அடுக்குகள் இங்கே பிரித்து காட்டப்பட்டுள்ளது, புவி ஓடு நீல நீறத்திலும், உள்ளமைப்பு சிவப்பு, மஞ்சள், வெளிர் மஞ்சள் நிறத்திலும் உள்ளன. படவிளக்கம் முடிவடைகிறது. கற்றலின் நோக்கங்கள் விரைவுத் துலங்கள் குறியீடு, கொடுக்கப்பட்டுள்ளது, எண் V, F, Q, 2, T புவியின் உள்ளமைப்பைப் பற்றி விளக்கமாக அறிதல் புவித்தட்டுகளின் இயக்கங்களை கற்றறிதல் நிலநடுக்கம் மற்றும் எரிமலைகள் பற்றி புரிந்து கொள்ளுதல் அறிமுகம் நாம் வாழும் இப் புவியானது பல்வேறு இயக்கங்களுக்கு உட்பட்டது. புவிப்பரப்பின் மேற்பகுதியில், வானளாவிய மலைகள், உயர் பீடபூமிகள், பரந்த சமவெளிகள், ஆழ் பள்ளத்தாக்குகள் மற்றும் பல நிலத்தோற்றங்கள் அமைந்துள்ளன. புவியின் உள்ளேயும் வெளியேயும் பல்வேறு செயல்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. புவியின் உள்ளமைப்பு எவ்வாறாக இருக்கும், புவி எதனால் ஆனது என்று எப்பொழுதாவது ஆச்சரியப்பட்டது உண்டா? இதைப் பற்றி விரிவாகக் காண்போம். புவியின் உள்ளமைப்பு புவியின் உள்ளமைப்பினை ஓர் ஆப்பிள் பழத்தோடு ஒப்பிடலாம். புவி அதிர்வு அலைகள் பற்றிய ஆய்வின் அடிப்படையில், புவிக்கோளம் மூன்று செறிந்த அடுக்குகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அவை, 1, புவி மேலோடு 2, கவசம் 3, புவிக்கருவம் 1, புவி மேலோடு (Crust) புவியின் வெளிப்புற அடுக்கு மேலோடு ஆகும். இதன் சராசரி பருமன் 5 முதல் 30 கிலோ மீட்டர் வரை உள்ளது. இதன் பருமன் கண்டப் பகுதிகளில் 35 கிலோ மீட்டர்களாகவும், கடற்தளங்களில் 5 கிலோ மீட்டர்களாகவும் உள்ளது. கண்டத்தின் மேலோடு அதிக பருமனாக இருந்தபோதிலும், கண்டப்பகுதிகளின் அடர்த்தி கடல் மேலோட்டின் அடர்த்தியை விட குறைந்தே காணப்படுகிறது. ஏனெனில் கடல் மேலோடுகள் இலகுவான மற்றும் அடர்ந்த பாறைகளின் கலவையாகும். பெரும்பாலும் கடல் மேற்பரப்பானது பசால்ட் பாறையால் ஆனது. உங்களுக்குத் தெரியுமா? (பெட்டிச் செய்தி) பூமி ஒரு நீல நிறக் கோள். 71% பூமியின் பரப்பு நீரால் சூழப்பட்டுள்ளது. புவிமேலோடு இரண்டு பிரத்யேகப் பிரிவுகளைக் கொண்டது. கண்டங்களின் மேற்பகுதி கருங்கற்பாறைகளால் ஆனது. இப்பகுதி முக்கிய கனிமக் கூறுகளான சிலிக்கா மற்றும் அலுமினிய தாதுக்களால் ஆனது. இப்பகுதியை சியால் (SIAL) என்று அழைக்கின்றோம். இதன் சராசரி அடர்த்தி 2 புள்ளி 7 கிராம் பர் சென்டி மீட்டர், மேலோட்டின் கீழ்ப்பகுதி அடர்ந்த பசால்ட் பாறைகளாலான ஓர் தொடர்ச்சியான பிரதேசமாகும். கடல் தரைகளாலான இப்பகுதி சிலிக்கா மற்றும் மெக்னீசியத்தை மூலக்கூறுகளாக கொண்டு அமைந்ததாகும். எனவே இப்பகுதியை சிமா (SIMA) என்று அழைக்கிறோம். இதன் சராசரி அடர்த்தி 3 புள்ளி பூஜியம் கிராம் பர் சென்டி மீட்டர். சியாலும் சீமாவும் சேர்ந்து புவியின் மேலோட்டின் கருப்பொருளாக அமைகின்றது. சியாலின் அடர்த்தி சிமா அடர்த்தியைவிடக் குறைவானதால், இவை சிமா அடுக்கின் மீது மிதக்கிறது. படம், புவியின் உள்ளமைப்பு படம் கொடுக்கப்பட்டுள்ளது, படவிளக்கம் தொடங்குகிறது. படத்தில் மேலோடு. வெளி கவசம், உட்கவசம், வெளிக்கருவம், உட்கருவம் என வண்ணங்களைக் கொண்டு, புவியின் உள்ளமைப்பு பிரித்துக் காட்டப்பட்டுள்ளன, படவிளக்கம் முடிவடைகிறது. 2, கவசம் (மேண்டில்) புவி மேலோட்டின் கீழ் அடுக்கு கவசம் என அழைக்கப்படுகிறது. புவி மேலோடும் கவசமும் மோஹோரோவிசிக் என்ற எல்லை மூலம் பிரிக்கப்படுகிறது. கவசமானது சுமார் 2900 கிலோ மீட்டர் தடிமன் கொண்டதாக காணப்படுகிறது. கவசத்தை இரண்டாக பிரிக்கலாம். (1) மேல் கவசம் 3 புள்ளி 4 முதல் 4 புள்ளி4 கிலோ பர் சென்டி மீட்டர், அடர்த்தியுடன், 700 கிலோ மீட்டர் ஆழம் வரை உள்ளது. 2, கீழ்க்கவசம் 4 புள்ளி 4 முதல் 5 புள்ளி 5 கிலோ பர் சென்டி மீட்டர், அடர்த்தியுடன், 700 முதல் 2,900 கிலோ மீட்டர் ஆழம் வரை காணப்படுகிறது. புவியின் உட்பகுதி மிகுந்த வெப்பமாக காணப்படுவது ஏன்? 3, புவிக் கருவம் (Core) புவியின் மையப்பகுதி புவிக் கருவம் எனக் குறிப்பிடப்படுகிறது. புவிக்கருவம் பேரிஸ்பியர் Barysphere) என்றும் அழைக்கப்படுகிறது. வெய்சார்ட் குட்டன்பெர்க் என்ற இடைவெளி புவிக்கருவத்திற்கும் கவசத்திற்கும் இடையே எல்லையாக அமைகின்றது. புவிக்கருவம் இரண்டு அடுக்குகளைக் கொண்டதாக உள்ளது. அவை, 1, வெளிக்கருவம் : இது திரவ நிலையில் உள்ள இரும்பு குழம்பாலானது. இக்கருவம் 2,900 கிலோமீட்டர் முதல் 5,150 கிலோமீட்டர் ஆழம் வரை காணப்படுகிறது. 2, உட்கருவம் இது திடநிலையில் உள்ள நிக்கல் (Ni) மற்றும் இரும்பால் (Fe) ஆனது. உட்கருவம் அதிக வெப்பம் மற்றும் அழுத்தத்துடன் காணப்படுகிறது. நைஃப் (Nife) என்ற உட்கருவம் 5,150 முதல் 6,370 கிலோ மீட்டர் ஆழம் வரை பரந்துள்ளது. இதன் அடர்த்தி 13 புள்ளி பூஜியம் கிராம் பர் சென்டி மீட்டர் ஆகும். உங்களுக்குத் தெரியுமா? (பெட்டிச் செய்தி) புவியின் கொள்ளளவில் புவி மேலோடு 1 சதவீதம், கவசம் 84 சதவீதம், மீதமுள்ள 15 சதவீதம், புவிக்கருவம் உள்ளது. புவியின் ஆரம் 6,371 கிலோ மீட்டர் ஆகும். புவியின் நகர்வுகள் பாறைக் கோளத்தில் ஏற்படும் உடைப்பு புவித் தட்டுகளை உருவாக்குகின்றது. ஒவ்வொரு நிலத்தட்டும் கண்டத் தட்டுகளாகவோ அல்லது கடற்தட்டுகளாகவோ தன்னிச்சையாக புவிமேலோட்டின் கீழ் உள்ள மென் அடுக்கின் (Asthenosphere) மேல் மிதக்கின்றன. நிலத் தட்டுகளின் நகர்வுகளே கண்டத்தட்டு நகர்வுகளாகும். புவியின் உட்புறத்திலிருந்து வெளிப்படும் வெப்பமானது இத்தட்டுகளின் இயக்க சக்தியாக செயல்படுகிறது. இத்தட்டுகள் வெவ்வேறு திசைகளில் வெவ்வேறு வேகத்தில் நகர்கின்றன. படம், புவித்தட்டுகள் படம் கொடுக்கப்பட்டுள்ளது, படவிளக்கம் தொடங்குமிறது. படத்தில் அஸ்தினோஸ்பியர், பாறைக்கோளம், பெருங்கடல் மேலோடு, கண்ட மேலோடு, எரிமலை வளைவு, அகழி ஆகியன கொடுக்கப்பட்டுள்ளன, அஸ்தினோஸ்பியர் ஆரஞ்சு நிறத்திலும், பாறைக்கோளம் வெளிர் சாம்பல் நிறத்திலும், கண்ட மேலோடு அடர் சாம்பல் நிறத்திலும், பெருங்கடல் மேலோடு நீல நிறத்திலும், எரிமலை வளைவு வெளிர் ஆரஞ்சு நிறத்திலும் கொடுக்கப்பட்டுள்ளன,மேலும் பாறைக் கோளத்தின் நகர்வு அம்பு குறியிட்டுக் காட்டப்பட்டுள்ளது. படவிளக்கம் முடிவடைகிறது. இத்தகைய தட்டுகள் ஒன்றிலிருந்து மற்றொன்று விலகிச் செல்லும்போது அகன்ற பிளவுகளை புவியின் மேற்பரப்பில் உருவாக்குகின்றன. அதேசமயம் சிற்சில பகுதிகளில் ஒன்று மற்றொன்றின் அருகாமையில் நெருங்கி வரும்போது மோதிக் கொள்கின்றன. ஓர் கடற்தட்டானது கண்டத்தட்டின் மேல் மோதும்போது அடர்த்தி மிகுந்த கடற்தட்டு கண்டத்தட்டின் கீழே சென்றுவிடுகிறது. அவ்வாறு செல்லும்போது ஏற்படும் அழுத்தத்தினால் மேற்பரப்பு வெப்பமடைந்து உருகத்தொடங்கி கண்டத்தட்டுகளின் விளிம்பு பகுதியில் எரிமலைகளாக உருவெடுக்கின்றது. அதேபோன்று அடர்த்தி வேறுபடுவதால் இரண்டு தட்டுகள் மோதிக் கொள்ளும்போது கடல் அகழிகள் உருவாகின்றன. சிற்சில சமயங்களில் தட்டுகள் ஒன்றின் மேல் மற்றொன்று மோதும் போது வளைந்து மடிப்புகளை உருவாக்குகின்றன. இமயமலைச் சிகரங்கள் உருவானதும் இவ்வகையில்தான். கண்டத்தட்டு நகர்வுகள் புவியின் மேற்பரப்பில் பல்வேறு மாற்றங்களை உருவாக்குகின்றன. புவியின் நகர்வுகளை அதன் ஆக்க சக்திகளின் அடிப்படையில் இரண்டாகப் பிரிக்கலாம். புவியின் உள்ளிருந்து வெளிப்படும் ஆற்றலானது அக உந்து சக்திகள் எனவும், புவியின் வெளிப்புறத்தில் இருந்து இயங்கும் சக்திகள் புற உந்து சக்திகள் எனவும் அழைக்கப்படுகின்றன. அக உந்து சக்திகள் விரைவான எதிர்பாராத நகர்வுகளையும், புற உந்து சக்திகள் வேகம் குறைந்த நகர்வுகளையும் ஏற்படுத்துகின்றன. அக உந்து சக்திகள் நிலநடுக்கம் மற்றும் எரிமலை வெடிப்பு போன்ற அளவற்ற பேரழிவுகளை புவியின் மேற்பரப்பில் ஏற்படுத்துகின்றன. உங்களுக்குத் தெரியாமா? (பெட்டிச் செய்தி) புவி மேலோட்டிற்கும் கவச மேலடுக்கிற்கும் இடையே உள்ள பகுதியே மென் பாறைக் கோளம் ஆகும். நிலநடுக்கம் புவியின் மேலோட்டின், ஒரு பகுதியில் ஏற்படும் திடீர் நகர்வானது, நிலத்தை அதிரவைக்கும் அசைவையும், நடுக்கத்தையும், ஏற்படுத்துவதையே நிலநடுக்கம் என்கிறோம். எந்த ஒரு இடத்தில் நிலநடுக்கத்தை ஏற்படுத்துகின்றனவோ அதனை நிலநடுக்க மையம் (Focus) என்கிறோம். மையத்திற்கு மேல் புவியோட்டு பகுதியில் அமைந்திருக்கும் புள்ளி நிலநடுக்க மேல் மையப்புள்ளி (Epicentre) என அழைக்கப்படுகிறது. நிலநடுக்க மையத்திலிருந்து அதிர்வுகள் பல்வேறு திசைகளில் பயணிக்கின்றன. புவி அதிர்வு அலைகளை பதிவு செய்யும் கருவியை நில அதிர்வுமானி (Seismograph) என குறிப்பிடுகின்றனர். இதன் ஆற்றல் செறிவின் அளவினை ரிக்டர் அளவையைக் கொண்டு கணக்கிடுக்கின்றனர். ரிக்டர் அளவை (Richter scale) O வில் தொடங்கி 9 வரை உள்ளது. படம், நிலநடுக்கம் படம் கொடுக்கப்பட்டுள்ளது, படவிளக்கம் தொடங்குகிறது. படத்தில் பிளவுத்தளம், நிலநடுக்க மையம், மையப்புள்ளி, நில அதிர்வு அலைகள், பிளவு சுவடு, செங்குத்துச் சரிவு பிளவு ஆகியன குறிக்கப்பட்டுளன, நில அதிர்வு அலைகள் வட்ட வடிவில் உள்ளது. படவிளக்கம் முடிவடைகிறது. நிலநடுக்கத்திற்கான காரணங்கள் புவி மேலோட்டின் ஒரு பகுதியானது பிளவு மற்றும் விரிசல்கள் கொண்ட பகுதிகளின் கீழ் இறங்குவது நிலநடுக்கத்திற்கான முக்கிய காரணமாகும். இளகிய கற்குழம்புபுவியோட்டின் கீழே திடீரென வேகமாக நகரும் போது மேற்பகுதியில் ஏற்படும் அழுத்தம் பாறைகளை உடையச் செய்கிறது. புவியதிர்வானது புவி மேற்பரப்பில் அலைகளை பரவச் செய்கிறது. இதனால் புவியின் மேலோட்டில் பிளவு ஏற்படுகிறது. நிலநடுக்கத்தின் விளைவுகள் நிலநடுக்கம் புவி பரப்பில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துகின்றது. நிலநடுக்கங்கள், மலைப்பிரதேசங்களில் நிலச் சரிவுகளை ஏற்படுத்துகின்றன. கட்டடங்கள் இடிந்து விழுவது நிலநடுக்கத்தின் முக்கிய விளைவாகும். மண்ணாலும், செங்கற்களாலும் கட்டப்பட்ட வீடுகள் இடிந்து நொறுங்கி மரணக்குழிகளாக மாறுகின்றன. நிலத்தடிநீர் அமைப்பு நிலநடுக்கத்தால் பெரிதும் பாதிப்படைகிறது. தீப்பற்றுதல் மற்றோர் முக்கிய ஆபத்தாகும். மூன்று வகையான நில அதிர்வலைகள் P, அலைகள் (அல்லது) அழுத்த அலைகள் S, அலைகள் (அல்லது) முறிவு அலைகள் L, அலைகள் (அல்லது) மேற்பரப்பு அலைகள் கடலுக்கு அடியில் அல்லது கடற்கரை ஓரங்களில் ஏற்படும் நிலநடுக்கமானது கடல் பேரலைகளை ஏற்படுத்துகின்றன. பெரிய அலைகளும் அதனால் ஏற்படும் வெள்ளமும் சில நேரங்களில் புவியதிர்வலைகளால் ஏற்படும் உயிரிழப்பு மற்றும் பொருட் சேதங்களை விட அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றன. சுனாமி என்ற ஜப்பானிய சொற்றொடர் நிலநடுக்கத்தால் கடலில் ஏற்படும் பெரிய அலைகளை குறிப்பிடுகின்றது. ஜப்பானிய கடலோரப் பகுதி மற்றும் ஏனைய பசிபிக் கடலோர பகுதிகளிலும் சுனாமியின் நிகழ்வு அதிகம் காணப்படுகிறது. உங்களுக்குத் தெரியுமா? (பெட்டிச் செய்தி) டிசம்பர் 2004 அன்று ஏற்பட்ட இந்தியப் பெருங்கடலில் 26 தெரியுமா? சுனாமி, இந்தோனேஷியா, இந்தியா, இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகளின் கடலோரப் பகுதிகளில் பெரும் பொருள் மற்றும் உயிர் சேதத்தை தோற்றுவித்தது. நிலநடுக்கத்தின் பரவல் (Distribution of Earthquake) நிலநடுக்கப் பிரதேசங்கள் பெரும்பாலும் எரிமலைப்பகுதிகளை ஒட்டியே ஏற்படுகின்றன. உலகின் நிலநடுக்க பகுதிகளின் பெரும்பகுதி பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ளன. உலகில் 68 சதவீதம் நிலநடுக்கங்கள் இப்பகுதிகளில்தான் ஏற்படுகின்றன. மீதமுள்ள 31 சதவீதம் நிலநடுக்கங்கள் ஆசியா கண்டத்தில் உள்ள இமயமலைப் பகுதியிலும், வடமேற்கு சீனாவிலிருந்து மத்திய தரைக்கடல் பகுதிவரையிலும் ஏற்படுகின்றன. மீதமுள்ள 1 சதவீதம் நிலநடுக்கம் வட ஆப்பிரிக்காவிலும், செங்கடல் மற்றும் சாக்கடல் பகுதிகளின் பிளவு பள்ளத்தாக்குப் பகுதிகளிலும் ஏற்படுகின்றன. படம், நிலநடுக்கத்தின் பரவல் உலக வரைபடத்தில் கொடுக்கப்பட்டுள்ளது, படவிளக்கம் தொடங்குகிறது. படத்தில் வட அமெரிக்க புவித்தட்டு, தென் அமெரிக்க புவித்தட்டு, ஆப்பிரிக்க புவித்தட்டு, யுரீசியன் புவித்தட்டு, ஆஸ்திரேலியன் புவித்தட்டு, அண்டார்டிக் புவித்தட்டு, நாஸ்கா புவித்தட்டு ஆகியன குறிக்கப்பட்டுள்ளன, மவுண்ட் பியூஜியாமா, மாயன் எரிமலை, மவுண்ட் கிளிமாஞ்சாரோ, கரக்கட்டவோ எரிமலை, மவுண்ட் செயிண்ட் ஹெலினா ஆகிய இடங்களும் அதில் குறிக்கப்பட்டுள்ளன. படவிளக்கம் முடிவடைகிறது. இந்தியாவின் இமயமலைப் பகுதிகள், கங்கை-பிரம்மபுத்திரா சமவெளிகள், நிலநடுக்க பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன. அதிக எண்ணிக்கையிலுள்ள நிலநடுக்கங்கள் இப்பகுதிகளில் ஏற்பட்டுள்ளன. மோசமான மற்றும் மிக மோசமான அழிவுகளை ஏற்படுத்திய நிலநடுக்கங்கள் இப்பகுதியில் ஏற்பட்டுள்ளது. 1991இல் உத்திரகாசியிலும், 1999 சாமோலியிலும் ஏற்பட்ட நிலநடுக்கங்களை இதற்கு எடுத்துக்காட்டாக கூறலாம். நிலநடுக்க பாதிப்புகள் அற்ற பகுதிகளாக சொல்லப்பட்ட தக்காண பீடபூமியிலேயே இரண்டு மிக மோசமான நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. அவை 1967இல் கொய்னாவிலும் (Koyna, Maharashtra) 1993இல் லாத்தூரிலும் ஏற்பட்ட நிலநடுக்கங்கள் ஆகும். எரிமலைகள் விரைவுத் துலங்கள் குறியீடு கொடுக்கப்பட்டுள்ளது, எண் U, 6, A, J, E புவியின் மேற்பரப்பில் உள்ள பிளவு அல்லது துளை வழியே வெப்பம் மிகுந்த மாக்மா (Magma) என்னும் பாறைக்குழம்பு வெளியேறுவதையே எரிமலை என்கிறோம். பொதுவாக எரிமலையின் வாய் வட்ட வடிவில் காணப்படும். நீளமான பிளவு மூலமும் சிலசமயங்களில் நீராவியுடன் கூடிய எரிமலைப் பாறைக் குழம்பு வெளியேறும். புவியினுள் உள்ள வாயுக்களுடன் கூடிய பாறைக் குழம்பு மாக்மா எனவும் இவை புவி மேற்பரப்பிற்கு வரும்பொழுது "லாவா" (lava) எனவும் அழைக்கப்படுகிறது. எரிமலையின் திறப்பு எரிமலை வாய் (Vent) என அழைக்கப்படுகிறது. படம், எரிமலையின் பாகங்கள் குறித்த ஒரு படம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது, படவிளக்கம் தொடங்குகிறது. அதில் பாறைக்குழம்பு தேக்கம், பாறை அடுக்குகளிலான புவிமேலோடு, துளை, பக்கத்துளை, எரிமலை வாய், சாம்பல் புகை மண்டலம், சாம்பல் வீழ்தல், லாவா வழிதல் ஆகியன குறியிட்டுக் காட்டப்பட்டுள்ளன,. படவிளக்கம் முடிவடைகிறது. காலப்போக்கில் துளை வழியே வெளியேறும் லாவாவும் இதர பொருட்களும் துளைப் பகுதியை சுற்றி படிந்து ஓர் கூம்பு வடிவ குன்று அல்லது மலையை உருவாக்குகின்றது. கூம்பு வடிவ குன்றின் உச்சி பகுதியில் தோன்றும் பள்ளத்தையே எரிமலைப் பள்ளம் (crater) என்கின்றனர். எரிமலை வெடிப்பின் போது பொருட்கள் வாய்ப் பகுதியில் படிந்து வழியை அடைத்துக் கொள்ளும். அப்போது எரிமலை மீண்டும் பயங்கரமாக வெடித்து கூம்பு வடிவ குன்றின் உச்சியில் பெரிய பள்ளத்தை தோற்றுவிக்கும். இதனை பெரிய எரிமலை வாய் (Caldera) என்கிறோம். எரிமலை வெடிப்பிற்கான காரணங்கள் புவியின் உள்ஆழம் அதிகரிக்க, அதிகரிக்க வெப்பமானது ஒவ்வொரு 32 மீட்டருக்கும் 1 டிகிரி சென்டிமீட்டர் வீதம் உயர்ந்து கொண்டே செல்கிறது. வெப்பத்துடன் அழுத்தமும் அதிகரிக்கின்றது. 15 கிலோமீட்டர் ஆழத்தில் அழுத்தமானது சதுர சென்டிமீட்டருக்கு 5 டன்கள் என்ற அளவில் உயருகின்றது. இத்தகைய நிலையில் புவியினுள் உள்ள பாறையானது குழம்பு நிலைக்கு மாறுகிறது. இதனையே மாக்மா என்கிறோம். மிகுதியான அழுத்த நிலையில் மாக்மாவானது எளிதில் பற்றக் கூடிய வாயுக்களை ஈர்த்துக் கொள்ளும் திறன் கொண்டதாக காணப்படுகிறது. இத்திறன் காரணமாகவே பலவீனமான புவி மேலோட்டுப் பகுதிகளில் மாக்மா பாறைக்குழம்பு வெடித்து வெளியேறுகிறது. எரிமலைகள் பற்றிய அறிவியல் பூர்வமான ஆய்வுகளை எரிமலை ஆய்வியல் (Volcanology) என அழைக்கின்றோம். ஆய்வு மேற்கொள்ளும் வல்லுநர்கள் எரிமலை ஆய்வியலாளர்கள் (Volcanologist) என அழைக்கப்படுகின்றனர். எரிமலை வெடிப்புகளின் தன்மைகள் சில சமயங்களில் எரிமலைக் குழம்பின் வெளியேற்றம் மற்றும் பரவல் மெதுவாக நடைபெறுகின்றது. இதனையே பிளவு வெடிப்பு வகை எரிமலை என்கிறோம். சில சமநிலங்களும் பீடபூமிகளும் இம்முறையில் தோன்றின. எடுத்துக்காட்டு: இந்தியாவின் தக்காண பீடபூமி மற்றும் வடஅமெரிக்காவின் கொலம்பியா பீடபூமிகளைக் கூறலாம் புவியினுள்ளேயிருந்து மாக்மா திடீரென வேகமாக வெளியேறுவதால் அது வளிமண்டலத்தை நோக்கி தூக்கி எறியப்படுகிறது. அந்த சமயத்தில் லாவா, சாம்பல், நீராவி மற்றும் வாயுக்களோடு கற்களும் தூக்கி எறியப்படுகின்றன. இதனையே எரிமலை வெடிப்பு வெளியேற்றம் என்கிறோம். இந்தோனேஷியாவில், கரக்காட்டாவோ தீவிலுள்ள எரிமலை, 27 ஆகஸ்ட் 1883ஆம் ஆண்டு இவ்வாறு வெடித்து மாக்மாவை வெளியேற்றியது. லாவாவின் பரவல் மற்றும் வேகம் அதிலுள்ள சிலிகா மற்றும் நீரின் அளவை பொறுத்ததாகும். சிலிகா அதிகமுள்ள அமில லாவா மெதுவாகவும், சிலிகா குறைவாக உள்ள கார லாவா வேகமாகவும் பரவுகின்றது. பேரென்தீவானது (Barren Island) அந்தமான் தலைநகரிலிருந்து 138 கிலோ மீட்டர் வடகிழக்கே அமைந்துள்ளது. சுமத்ராவிலிருந்து மியான்மர் வரை உள்ள நெருப்பு வளையத்தினுள் இருக்கும் ஒரு செயல்படும் எரிமலை இதுவே ஆகும். கடைசியாக 2017ஆம் ஆண்டில் இதுஎரிமலைக்குழம்பை வெடித்து வெளியேற்றியது. எரிமலைகளின் வகைகள் எரிமலைகள் அதன் எரிமலை குழம்பு வெளியேறும் கால அளவு மற்றும் செயல்படும் விதத்தைக் கொண்டு மூன்று வகைகளாகப் பிரிக்கப் படுகின்றன. அவை: 1, செயல்படும் எரிமலை 2, உறங்கும் எரிமலை 3, செயலிழந்த எரிமலை 1, செயல்படும் எரிமலை (Active Volcano) அடிக்கடி வெடித்தும், பாறைக் குழம்பை வெளியேற்றும் எரிமலைகள் செயல்படும் எரிமலைகள் என்றழைக்கப்படுகின்றன. பசிபிக் கடற்கரையோரமாக உள்ள பெரும்பாலான எரிமலைகள் இவ்வகையைச் சார்ந்தது. சராசரியாக உலகெங்கும் 600 செயல்படும் எரிமலைகள் உள்ளன. அவற்றுள் மத்திய தரைக்கடல் பகுதியிலுள்ள ஸ்ட்ராம்போலி, அமெரிக்க ஐக்கிய நாடுகளிலுள்ள செயிண்ட் ஹெலன், பிலிப்பைன்ஸ் தீவிலுள்ள பினாடுபோ போன்றவையும் அடங்கும். ஹவாய் தீவிலுள்ள மவுனா லோ எரிமலை உலகின் மிகப் பெரிய செயல்படும் எரிமலை ஆகும். ஸ்ட்ராம்போலி எரிமலை மத்தியதரைக் கடலின் கலங்கரை விளக்கம் என அழைக்கப்படுகிறது. 2, உறங்கும் எரிமலை (Dormant Volcano) பல வருடங்களாக எரிமலைக் குழம்பை வெளியேற்றுவதற்கான எந்த ஒரு அறிகுறியும் வெளிப்படுத்தாமல், எப்போது வேண்டுமானாலும் செயல்படலாம் என்ற நிலையில் உள்ள எரிமலைகள் உறங்கும் எரிமலைகள் என அழைக்கப்படுகின்றன. இத்தாலியின், வெசுவியஸ், ஜப்பானில் பியூஜியாமா, இந்தோனேஷியாவில் கரக்கடோவா ஆகியவை இவ்வகைக்கு எடுத்துக்காட்டுகளாகும். 3, செயலிழந்த எரிமலை (Extinct Volcano) வெடிப்பு ஆற்றல் முழுவதையும் இழந்து, சுமார் 1000 ஆண்டுகளாக வெடிப்பதை நிறுத்திவிட்ட எரிமலை, செயலிழந்த எரிமலை என அழைக்கப்படுகிறது. பெரும்பாலான செயலிழந்த எரிமலைகளின் உச்சிப் பகுதிகள் முழுவதும் அரிக்கப்பட்டுவிட்டன. மியான்மரின் போப்பா, ஆப்பிரிக்காவின் கிளிமாஞ்சரோ மற்றும் கென்யா எரிமலைகள் இதற்கான உதாரணங்களாகும். உலக எரிமலை பரவல் (distribution of volcano in the world) எரிமலைகளின் அமைவிடமானது பொதுவாகவே தெளிவான வரையறுக்கப்பட்ட முறையிலேயே காணப்படுகிறது. அதிகமாக வளைந்த அல்லது பிளவுபட்ட பகுதிகளில்தான் எரிமலை வெடிப்பு ஏற்படுகின்றது. சுமார் 600 செயல்படும் எரிமலைகளும், ஆயிரக்கணக்கிலான உறங்கும் எரிமலைகளும், பல செயலிழந்த எரிமலைகளும் உள்ளன. இவை பெரும்பாலும் கடலோரமும், மலைப்பிரதேசங்களிலும், கடற்கரையோர தீவுகளிலும், கடலுக்கு மத்தியிலும் அமைந்துள்ளன. ஒரு சில எரிமலைகள் மட்டுமே கண்டங்களின் உட்பகுதியில் காணப்படுகின்றன. உலகின் எரிமலை பிரதேசங்களே முக்கிய நில அதிர்வு பகுதிகளாக விளங்குகின்றன. உலகில் மூன்று முக்கிய எரிமலை நிகழ்வு பகுதிகள் உள்ளன. அவை 1, பசிபிக் வளையப் பகுதி (The Cirum-Pacific belt) 2, மத்திய கண்டப் பகுதி (The Mid Continental belt) 3, மத்தியஅட்லாண்டிக் பகுதி (The Mid Atlantic belt) 1, பசிபிக் வளையப் பகுதி இந்த எரிமலைப் பகுதியானது குவிய கடல்தட்டின் எல்லை பகுதியில் அமையப் பெற்றுள்ளது. பசிபிக் பெருங்கடலின் கிழக்கு மற்றும் மேற்கு கடலோரப் பகுதிகளில் அமைந்துள்ளது. மூன்றில் இரண்டு பங்கு எரிமலைகள் இப்பகுதியில் அமைந்திருப்பதால் இப்பகுதியை பசிபிக் நெருப்பு வளையம் (Pacific Ring of Fire) என்று அழைக்கின்றனர். படம், பசிபிக் நெருப்பு வளையத்தின் படம் கொடுக்கப்பட்டுள்ளது. படவிளக்கம் தொடங்குகிறது. உலக வரைபடத்தில் பசிபிக் நெருப்பு வளையம் சிவப்பு நிறத்தில் வண்ணமிட்டுக் காட்டப்பட்டுள்ளது, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஆசியா, இந்தியப் பெருங்கடல், தென்கடல், பசிபிக் பெருங்கடல், ஆர்டிக் கடல், வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, அட்லாண்டிக் பெருங்கடல் ஆகியன இவ்வுலக வரைப்படத்தில் குறிக்கப்பட்டுள்ளன. படவிளக்கம் முடிவடைகிறது. 2, மத்திய கண்டப் பகுதி கண்டத்தட்டுகள் இணையும் எல்லைப் பகுதியிலுள்ள இந்தப் பகுதி அல்பைன் மலைத் தொடர் எரிமலைப்பகுதிகள், மத்திய தரைக்கடல் பகுதி மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவின் பிளவுப் பள்ளத்தாக்கு ஆகிய பகுதிகளில் அமையப் பெற்றுள்ளன. முக்கிய எரிமலைகளான வெசுவியஸ், ஸ்ட்ராம்போலி, எட்னா, கிளிமாஞ்சாரோ மற்றும் கென்யா எரிமலைகள் இதற்கு உதாரணமாகும். இமயமலைப் பகுதியில் ஆச்சரியப்படும் வகையில் எந்த ஒரு செயல்படும் எரிமலையும் இடம் பெறவில்லை. 3, மத்திய அட்லாண்டிக் பகுதி விலகிச் செல்லுகின்ற தட்டுகளின் எல்லையான மத்திய அட்லாண்டிக் பகுதியில் அமைந்துள்ள இந்த எரிமலைப் பகுதி, பிளவு வடிவ எரிமலை வெளியேற்ற வகையைச் சார்ந்ததாகும். மத்திய அட்லாண்டிக் மலைத்தொடரில் அமைந்துள்ள ஐஸ்லாந்தில் செயல்படும் எரிமலைகள் அமைந்துள்ளன. செயிண்ட் ஹெலினா மற்றும் அசோர்ஸ் தீவுகள் ஆகியவை இதற்கு வேறு உதாரணங்களாகும். சுருக்கம் புவியின் உட்பகுதி ஆப்பிள் பழத்தோடு ஒப்பிடப்பட்டுள்ளது. புவியின் வெளிப்புற அடுக்கு மேலோடு எனப்படுகிறது. புவியின் மேலோடு சியால் (SIAL) ஆகும். புவியின் மேலோட்டின் கீழ்ப்பகுதி சிமா (SIMA) ஆகும். கவசமானது சுமார் 2900 கிலோ மீட்டர் ஆழம் வரை பரவியுள்ளது. பாறைக்கோள உடைப்பால் ஏற்படும் தட்டுக்களை பாறைக்கோளத் தட்டுகள் என்கிறோம். புவி அதிர்வு அலைகளை பதிவு செய்யும் கருவியை புவி அதிர்வு வரைமானி என்கிறோம். கடலுக்கு அடியில் ஏற்படக்கூடிய நிலநடுக்கமானது சுனாமி அலைகளைத் தோற்றுவிக்கிறது. புவியின் மேற்பரப்பில் உள்ள பிளவு அல்லது துளை வழியே வெப்பம் மிகுந்த மாக்மா என்னும் பாறைக்குழம்பு வெளியேறுவதை எரிமலை என்கிறோம். லாவாக்களின் தன்மை மற்றும் அது வெளியேறும் விதம் ஆகியவற்றை பொருத்தே எரிமலைகளின் வடிவம் அமையப் பெறுகிறது. உலகில் மூன்று முக்கிய எரிமலை நிகழ்வுப் பகுதிகள் உள்ளன. கலைச்சொற்கள் கருவம், Core, புவியின் மையப்பகுதியே கருவமாகும் கவசம், Mantle, புவி மேலோட்டின் கீழ் பகுதி மோஹோரோவிசிக் எல்லை, Mohorovicic discontinuity, புவி மேலோட்டையும் கவசத்தையும் பிரிக்கும் எல்லை நிலச்சரிவு, Land slide, மலைச் சரிவுப் பகுதிகளில் மண் மற்றும் பாறைகளின் கீழ்நோக்கிய நகர்வு சீஸ்மோகிராப், Seismograph, புவி அதிர்வு அலைகளை பதிவு செய்யும் கருவி ஆழிப்பேரலை, Tsunami, கடலுக்கு அடியில் (அ) கடற்கரை ஓரங்களில் ஏற்படும் நிலநடுக்கத்தால் தோன்றும் பேரலைகள் எரிமலைவாய், Vent, புவியிலுள்ள பாறைக்குழம்பு வெளியேறும் பகுதி பாறைக்குழம்பு, Magma, உருகிய நிலையில் புவிக்குள் உள்ள பாறை எரிமலைக்குழம்பு, Lava, பாறைக்குழம்பு புவி மேற்பரப்பிற்கு வந்து படிதல் மதிப்பீடு விரைவுத் துலங்கள் குறியீடு கொடுக்கப்பட்டுள்ளது, எண், X, T, 0, J, 0 1, சரியான விடையைத் தேர்வு செய்க 1, நைஃப் [Nife] டேஷ் ஆல் உருவானது. அ) நிக்கல் மற்றும் ஃபெர்ரஸ் ஆ) சிலிக்கா மற்றும் அலுமினியம் இ) சிலிக்கா மற்றும் மெக்னீசியம் ஈ) இரும்பு மற்றும் மெக்னீசியம் 2, நிலநடுக்கம் மற்றும் எரிமலை வெடிப்பு டேஷ் விளிம்பின் அருகில் ஏற்படுகின்றது. அ) மலை இ) தட்டுகள் ஆ) சமவெளிகள் ஈ) பீடபூமிகள் 3, நிலநடுக்கத்தின் ஆற்றல் செறிவின் அளவினை டேஷ் மூலம் அளக்கலாம். அ) சீஸ்மோகிராஃப் ஆ) ரிக்டர் அளவு கோல் இ) அம்மீட்டர் ஈ) ரோட்டா மீட்டர் 4, பாறைக் குழம்பு வெளியேறும் குறுகலான பிளவு டேஷ் என்று அழைக்கப்படுகிறது. அ) எரிமலைத்துளை ஆ) எரிமலைப் பள்ளம் இ) நிலநடுக்க மையம் ஈ) எரிமலை வாய் 5. மத்திய தரைக் கடலின் கலங்கரை விளக்கம் என அழைக்கப்படும் எரிமலை டேஷ் அ) ஸ்ட்ராம்போலி ஆ) கரக்கடோவா இ) பியூஜியாமா ஈ) கிளிமாஞ்சாரோ 6, டேஷ் பகுதி "பசிபிக் நெருப்பு வளையம்" என்று அழைக்கப்படுகிறது. அ) பசிபிக் வளையம் ஆ) மத்திய அட்லாண்டிக் இ) மத்திய-கண்டம் ஈ) அண்டார்ட்டிக் 2, கோடிட்ட இடங்களை நிரப்புக 1, புவிக்கருவத்திற்கும் கவசத்திற்கும் இடையே அமையும் எல்லைக்கோடு டேஷ் என்று அழைக்கப்படுகிறது. 2, நிலநடுக்க அலைகளைப் பதிவு செய்யும் கருவியின் பெயர் டேஷ் ஆகும். 3, பாறைக் குழம்பு வெளியேறி அது பரவிக்கிடக்கும் பகுதி டேஷ் என்று அழைக்கப்படுகிறது. 4, செயல்படும் எரிமலைக்கு உதாரணம் டேஷ் ஆகும். 5, எரிமலைகளின் அறிவியல் பூர்வமான ஆய்வுகளை டேஷ் என அழைக்கின்றனர். 3, பொருந்தாததை வட்டமிடுக. 1, மேலோடு, மாக்மா, புவிக்கருவம், கவசம் 2, நிலநடுக்க மையம், நிலநடுக்க மேல் மையப்புள்ளி, எரிமலைவாய், சிஸ்மிக் அலைகள் 3, உத்தரகாசி, கரக்கடோவா சாமோலி, கொய்னா, 4, லாவா, எரிமலைவாய், சிலிக்கா, எரிமலைப் பள்ளம் 5, ஸ்ட்ராம்போலி, ஹெலென், ஹவாய், பியூஜியாமா 4, பொருத்துக 1, நிலநடுக்கம், ஜப்பானிய சொல் 2, சிமா, ஆப்பிரிக்கா 3, பசிபிக் நெருப்பு வளையம், திடீர் அதிர்வு 4, சுனாமி, சிலிகா மற்றும் மக்னீசியம் 5, கென்யா மலை, உலக எரிமலைகள் 5, கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்தை கருத்தில் கொண்டு சரியானதை டிக் செய்யவும் 1, கூற்று: புவியின் உருவத்தை ஒரு ஆப்பிளோடு ஒப்பிடலாம். காரணம்: புவியின் உட்பகுதியானது மேலோடு, மெல்லிய புறத்தோல், புவிக்கருவம் ஆகியவற்றைக் கொண்டது. அ) கூற்றும் காரணமும் சரி, கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது. ஆ) கூற்றும் காரணமும் சரி, ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை இ) கூற்று சரி, காரணம் தவறு ஈ) கூற்றும் காரணமும் தவறானவை 2, கூற்று: உலகின் மூன்றில் இரண்டு பங்கு எரிமலைகள் பசிபிக் கடலில் உள்ளன. காரணம்: பசிபிக்கடலின் மேற்கு மற்றும் கிழக்குக் கடற்கரைப் பகுதியை பசிபிக் நெருப்பு வளையம் என அழைக்கிறோம். அ) கூற்றும் காரணமும் சரி, கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது ஆ) கூற்றும் காரணமும் சரி, ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை இ) கூற்று தவறு, காரணம் சரி ஈ) கூற்றும் காரணமும் தவறானவை 6, ஒரு வரியில் விடையளிக்கவும் 1, புவியின் மேலோட்டின் பெயரை எழுதுக. 2, சியால் (SIAL) என்றால் என்ன? 3, புவிப் பாறைக்கோளத் தட்டின் நகர்வின் பெயர் என்ன? 4, செயலிழந்த எரிமலைக்கு உதாரணம் தருக. 7, கீழ்கண்டவற்றிற்கு சுருக்கமாக விடையளிக்கவும் 1, மெல்லிய புறத்தோல் (அ) கவசம் என்றால் என்ன? 2, புவிக்கருவம் பற்றி சுருக்கமாக எழுதவும் 3, நிலநடுக்கம் வரையறு. 4, சீஸ்மோகிராஃப் என்றால் என்ன? 5, எரிமலை என்றால் என்ன? 6, செயல்படும் அடிப்படையில் மூன்று எரிமலைகளின் பெயர்களை எழுதுக. 8, காரணம் கூறு 1, புவியின் உட்புறத்திலிருந்து ஒருவருமே மாதிரி எடுக்கவில்லை. 2, கண்டங்களின் மேலோடு கடலின் மேலோட்டைவிட அடர்த்தி குறைவு. 9, வேறுபடுத்துக 1, சியால் மற்றும் சிமா 2, செயல்படும் எரிமலை மற்றும் உறங்கும் எரிமலை 10, பத்தியளவில் விடையளி 1, நிலநடுக்கத்தின் விளைவுகள் பற்றி எழுதுக. 2, எரிமலை வெடிப்பின் அடிப்படையில் அதன் வகைகளை விளக்குக. 3, முக்கியமான எரிமலை மண்டலங்களை எழுதி ஏதேனும் ஒன்று பற்றி விவரி. 11, சிந்தனை வினா (HOTs) 1, பூமியின் உட்கருவம் மிகவும் வெப்பமானது ஏன்? 2, எரிமலைகள் அழிவானதா அல்லது ஆக்கப்பூர்வமானதா? 3, எரிமலை எவ்வாறு ஒரு தீவை உருவாக்குகிறது? 12, செயல்பாடுகள் 1, நிலநடுக்கம் மற்றும் எரிமலை பற்றிய படங்களை வைத்து ஒரு படத்தொகுப்பு தயாரிக்கவும். 2, எரிமலையின் பாகங்களைக் குறிக்கவும் படம், எரிமலையின் படம் கொடுக்கப்பட்டுள்ளது. படவிளக்கம் தொடங்குகிறது. படத்தில்டஓர் எரிமலை பூமியின் உள்ளிருந்து வெடித்து குழம்பாக வெளியேறுகிறது. அதில் பாகங்களைக் குறிக்க வெள்ளை நிறச் செவ்வகப் பெட்டிகள் கொடுக்கப்பட்டுள்ளன. படவிளக்கம் முடிவடைகிறது. 3, உலக வரைபடத்தில் பசிபிக் நெருப்பு வளையத்தைக் குறிப்பிடுக. படம், உலக வரைப்படம் கொடுக்கப்பட்டுள்ளது. படவிளக்கம் தொடங்குகிறது, படத்தில், பசிபிக் நெருப்பு வளையப் பகுதிகளை நிறமிட்டு காட்டவும். மேற்கோள் நூல்கள் 1. Majid Husain, Physical Geography Anmol Publication Pvt Ltd 2. A Das Gupta, A.N. Kapoor, Principles of Physical Geography, S. Chand & Company Ltd., New Delhi 3. Goh Cheng Leong, certificate Physical and Human Geography, Oxford University press. 4. Savindra Singh (2015) Physical Geography Pravalika publications Allahabad. இணையச் செயல்பாடு புவியின் உள்ளமைப்பு இந்த செயல்பாட்டின் மூலம் பூமியின் உட்பகுதிகள் பற்றிதெரிந்து கொள்ள முடியும் படம், புவியின் உட்பகுதி படம் கொடுக்கப்பட்டுள்ளது. அச்செயல்பாட்டினை செய்வதற்க்குறிய படிநிலைகள் கீழேக் கொடுக்கப்பட்டுள்ளது. படிநிலைகள்: படி 1: URL அல்லது QR குறியீட்டினைப் பயன்படுத்தி இச்செயல்பாட்டிற்கான இணையப்பக்கத்திற்கு செல்க. படி 2: தொடங்குவதற்கு வரைபடத்தில் கிளிக் செய்யவும் படி 3: முழுத்திரை பக்கமாக மாற்றவும், பின்னர் தோன்றும் பூமியின் உட்பகுதி விளக்கப்படத்தை ஒவ்வொன்றாக தேர்ந்தெடுத்து விளையாடவும். புவியின் உள்ளமைப்பு உரலி: http://world-geography-games.com/earth/index.html விரைவுத் துலங்கள் குறியீடு, கொடுக்கப்பட்டுள்ளது, எண், A, Y, T, M, P அலகு -2 நிலத்தோற்றங்கள் படம், நிலத்தோற்றங்கள் கொடுக்கப்பட்டுள்ளது, படவிளக்கம் தொடங்குகிறது. படத்தில் கடல் பகுதி, மலை முகடு, புல்வெளிகள், பாலைவனம், தீவு, பனிமலைச் சிகரம், ஆகியவற்றின் படங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. படவிளக்கம் முடிவடைகிறது. கற்றலின் நோக்கங்கள் விரைவுத் துலங்கள் குறியீடு கொடுக்கப்பட்டுள்ளது, எண், U, B, 4, Y, F ஆறுகளினால் தோற்றுவிக்கப்படும் நிலத்தோற்றங்கள் பற்றி அறிதல் பனியாறுகளினால் தோற்றுவிக்கப்படும் நிலத்தோற்றங்களை விளக்குதல் காற்றின் செயல்பாடுகளால் தோற்றுவிக்கப்படும் நிலத்தோற்றங்களை வகைப்படுத்துதல் கடல் அலைகளின் செயல்பாடுகளால் உருவாகும் நிலத்தோற்றங்களை கண்டறிதல் அறிமுகம் புவியின் மேற்பரப்பில் காணப்படும் நிலத் தோற்றங்கள் அனைத்து இடங்களிலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை என்று முந்தைய வகுப்புகளில் படித்தறிந்தோம். புவி மேற்பரப்பானது மலைகள், பீடபூமிகள் சமவெளிகள் மற்றும் பள்ளத்தாக்குகள் போன்ற எண்ணற்ற வகையான நிலத்தோற்றங்களுடன் காணப்படுகின்றது. பாறைக்கோளத்தின் பகுதிகள் கரடு முரடாகவும் மற்றும் சில பகுதிகள் சமநிலமாகவும் உள்ளன. புவியின் இவ்வாறான நிலத்தோற்றங்கள் அகச் செயல்முறைகளாலும் புறச்செயல் முறைகளாலும் தோற்றுவிக்கப்படுகின்றன. 1, அகச் செயல்முறைகள் (அகவிசை) புவியின் மேற்பரப்பில் பல இடங்களில் ஏற்படும் உயர்நிலப் பகுதிகள் மற்றும் தாழ்வு நிலப்பகுதிகள் அகச் செயல்முறைகளால் ஏற்படுகின்றன. 2, புறச் செயல்முறை (புறவிசை) புவிப்பரப்பில் தொடர்ந்து ஏற்படும் அரித்தல் மற்றும் மறுகட்டமைத்தல் ஆகியன புறச் செயல்முறைகளால் ஏற்படுகின்றன. உயர்நிலங்களை அரித்தல் மூலம் தாழ்நிலங்களாகவும், தாழ்நிலங்களை படியவைத்தல் மூலம் உயர்நிலங்களாகவும் மாற்றுவதற்கு நிலங்களை சமப்படுத்துதல் என்று பெயர். நிலத்தோற்றங்கள் நிலப்பரப்பானது, வானிலை சிதைவு மற்றும் அரித்தல் ஆகிய இரு செயல்முறைகள் மூலம் தொடர்ந்து உட்படுத்தப்படுகின்றன. தேய்மானத்திற்கு புவி மேற்பரப்பில் பாறைகள் உடைந்து மற்றும் சிறுசிறு கற்களாகவும், துகள்களாகவும் சிதறுவது வானிலைச் சிதைவு எனப்படுகின்றது. நீர், காற்று, பனி மற்றும் கடல் அலைகள் என பல வகைப்பட்ட காரணிகளால் புவியின் நிலத்தோற்றங்கள் அடித்துச் செல்லப்படுவதை அரித்தல் என்கிறோம். அரித்தலுக்கு உட்பட்ட பொருள்கள் நீர், காற்று, பனி மற்றும் கடல் அலைகள் ஆகியவற்றால் கடத்தப்பட்டு இறுதியில் படிய வைக்கப்படுகின்றன. அரித்தல் மற்றும் படியவைத்தல் முறைகளால் புவியின் மேற்பரப்பில் பல தரப்பட்ட நிலத்தோற்றங்கள் தோற்றுவிக்கப்படுகின்றன. ஆறு ஒரு குறிப்பிட்ட பாதையில் தோன்றுமிடத்திலிருந்து முகத்துவாரம் வரை ஓடுகின்ற நீர் ஆறு என அழைக்கப்படுகிறது. பொதுவாக ஆறுகள், ஒரு மலையில் இருந்தோ அல்லது குன்றிலிருந்தோ உற்பத்தியாகின்றன. ஆறு தோன்றுமிடம் இடம் ஆற்றின் பிறப்பிடம் என்று அழைக்கப்படும். ஆறு ஒரு ஏரியிலோ, கடலிலோ அல்லது ஒரு பேராழியிலோ கலக்கும் இடம் ஆற்று முகத்துவாரம் எனப்படுகிறது. ஆற்று நீரானது ஒரு செங்குத்து சரிவைக் கொண்ட மலைப் பிரதேசத்தை அரிப்பதால் அங்கு ஆழமான V வடிவ பள்ளத்தாக்குகளை உருவாக்குகிறது. ஆற்று நீரானது பாறையின் வன்சரிவின் செங்குத்துப் விளிம்பில் கீழ்நோக்கி வீழ்வதை நீர்வீழ்ச்சி எனலாம். படம், ஆறு உருவாக்கும் நிலத்தோற்றங்களின் படம் கொடுக்கப்பட்டுள்ளது, படவிளக்கம் தொடங்குகிறது. படத்தில் ஆறு தோன்றுமிடம், நீர் வீழ்ச்சி, துணை ஆறு, குதிரைக் குளம்பு ஏரி,ஆற்று வளைவு, வெள்ளச் சமவெளி, டெல்டா, ஆற்றின் முகத்துவாரம், பேராழி ஆகியன அதில் இடம்பெற்றுள்ளன. படவிளக்கம் முடிவடைகிறது. படம், வி வடிவ பள்ளத்தாகுப் படம் கொடுக்கப்பட்டுள்ளது, படவிளக்கம் தொடங்குகிறது. படத்தில் இரு மலைச் சரிவுக்கு இடையே உள்ள நிலப்பகுதி, ஆங்கில எழுத்து வி வடிவில் தோற்றமளிக்கிறது. படவிளக்கம் முடிவடைகிறது. மென்பாறைகள் அரிக்கப்படுவதால் நீர்வீழ்ச்சி தோன்றுகின்றது. உதாரணம்: தமிழ்நாட்டில் சிற்றாற்றின் குறுக்கே உள்ள குற்றால நீர்வீழ்ச்சி. நீர்வீழ்ச்சியின் கீழ் பகுதியில் குழிவுறுதல் காரணமாக ஏற்படும் பெரும் பள்ளம் உட்பாய்வு தேக்கம் (Plunge pool) எனப்படுகின்றது. ஆறு ஒரு சமவெளிப் பகுதியையோ அல்லது மலையடிவாரப் பகுதியையோ அடையும் போது படியும் படிவுகளை வண்டல் விசிறிகள் என்கிறோம். துணையாறு - ஒரு நீரோடை அல்லது ஆறு தன் போக்கில் ஒரு முதன்மை ஆற்றுடன் இணைவது. கிளையாறு- ஒரு முதன்மை ஆற்றிலிருந்து பிரிந்து செல்லும் ஆறு. உங்களுக்குத் தெரியுமா? (பெட்டிச் செய்தி) தென் அமெரிக்காவில் உள்ள வெனிசுலா நாட்டில் காணப்படும் ஏஞ்சல் நீர்வீழ்ச்சி உலகிலேயே மிக உயரமான நீர்வீழ்ச்சி ஆகும். வட அமெரிக்காவில் கனடா மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் எல்லையில் உள்ள நயாகரா நீர்வீழ்ச்சி மற்றும் ஆப்பிரிக்காவில் ஜாம்பியா மற்றும் ஜிம்பாப்வே நாடுகளின் எல்லையில் உள்ள விக்டோரியா நீர்வீழ்ச்சிஆகியன மற்ற முக்கிய நீர்வீழ்ச்சிகளாகும். ஆறானது சமவெளிப் பகுதியை அடையும் போது நீரின் அலைதலால் ஆற்றில் வளைவுகள் தோன்றுகின்றன. ஆறு வளைந்து மற்றும் சுழன்று செல்வதால் தோன்றும் பெரிய வளைவுகள் ஆற்று வளைவுகள் (Meanders) எனப்படுகின்றன. உதாரணம்: தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்தில் சேத்தியாத்தோப்பு அருகே வெள்ளாற்று பகுதியில் ஆற்று வளைவுகள் காணப்படுகின்றன. ஆற்று வளைவுகளின் (Meanders) இருபக்கங்களிலும் தொடர்ந்து அரித்தல் மற்றும் படிதல் ஏற்படுவதால், ஆற்று வளைவின் கழுத்துப் பகுதிகள் நெருங்கி வருகின்றன. நாளடைவில், ஆற்று வளைவு ஆற்றிலிருந்து துண்டிக்கப்பட்டு ஒரு ஏரியாக உருவெடுக்கின்றது. இதுவே குதிரைக் குளம்பு ஏரி (Oxbow lake) எனப்படுகிறது. படம், ஆற்று வளைவுகள் படம் கொடுக்கப்பட்டுள்ளது, படவிளக்கம் தொடங்குகிறது. படத்தில், ஓர் ஆறு வளைந்து நெளிந்து செல்வது போன்ற தோற்றத்தோடு உள்ளது. படவிளக்கம் முடிவடைகிறது. படம், குதிரைக்குளம்பு ஏரி உருவாகும் படம் கொடுக்கப்பட்டுள்ளது, படவிளக்கம் தொடங்குகிறது, படத்தில், மூன்று படங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. முதல் படத்தில் ஓர் ஆற்றின் பாதையில், ஆற்றின் அரிப்பு கழுத்துப் பகுதிகளைச் குறுகச் செய்கிறது, இரண்டாவது படத்தில், வெள்ளப்பெருக்கு காலங்களில் ஆறு தன் போக்கை நேராக மாற்றிக் கொள்கிறது, மூன்றாவது படத்தில், புதிய நேரான ஆற்றுப்பாதை, துண்டிக்கப்பட்ட ஆற்றுவளைவு அல்லது குதிரைக்குளம்பு ஏரி உருவாதல் கொடுக்கப்பட்டுள்ளது. படத்தில் மஞ்சள்நிறம், படிய வைத்தலால் ஏற்படும் இடங்களைக் குறிக்கும், சிவப்பு நிறம், அரிப்புகள் ஏற்படும் இடங்களைக் குறிக்கும். படவிளக்கம் முடிவடைகிறது. உங்களுக்குத் தெரியுமா? (பெட்டிச் செய்தி) ஆசியா மைனர் (துருக்கி) என்ற நாட்டில் உள்ள மியாண்டர் ஆற்றின் பெயரின் அடிப்படையில் ஆற்றுவளைவு என்ற சொல் ஏற்பட்டது. காரணம், இந்த ஆறு அதிக திருப்பங்களுடனும் மற்றும் அதிக வளைவுகளுடனும் ஓடுகின்றது. சில நேரங்களில் நீர் ஆற்றங்கரைகளை தாண்டி நிரம்பி வழிகின்றது. இதனால் ஆற்றின் அண்டைப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகின்றது. இவ்வெள்ளப் பெருக்கானது நுண் துகள்கள், மண் மற்றும் இதர பொருள்களை கரையை ஒட்டிய பகுதிகளில் அடுக்குகளாக படிய வைக்கின்றன. இவை வண்டல் படிவுகள் எனப்படுகிறது. இதனால் வளமான சமதள வெள்ளச்சமவெளி உருவாகின்றது. இது உயர்ந்த ஆற்றங்கரைகளை உருவாக்குகிறது. இது லெவீஸ் (Levees) (உயர் அணை) என அழைக்கப்படுகிறது. ஆறு கடலை அடையும் போது, ஆற்று நீரின் வேகம் குறைந்து விடுகின்றது. இதனால் ஆறு பல பிரிவுகளாக பிரிந்து செல்கின்றது. இவை கிளையாறுகள் என்று அழைக்கப்படுகின்றன. இங்கு ஆற்றின் வேகம் மிகவும் குறைவதால் ஆற்றினால் கடத்தப்பட்ட பொருள்கள் படியவைக்கப்படுகின்றன. கிளையாற்றின் முகத்துவாரங்களில் தோற்றுவிக்கப்படும் படிவுகள் டெல்டாக்களை உருவாக்குகின்றன. டெல்டாக்கள் உற்பத்தித்திறன் மிகுந்த மண்ணாகும். எடுத்துக்காட்டு காவிரி டெல்டா, கங்கை டெல்டா மற்றும் மிசிசிபி டெல்டா. படம், டெல்டா உருவாகும் படம் கொடுக்கப்பட்டுள்ளது, படவிளக்கம் தொடங்குகிறது. படத்தில் ஆற்றின் போக்கின் திசை, ஆற்றின் வளைவு, ஏரி, கிளை ஆறுகள், பொருட்களைப் படிய வைத்தல், கடல் ஆகியனக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. படவிளக்கம் முடிவடைகிறது. நிலவரைபடத்தின் உதவியுடன் உலகில் உள்ள டெல்டாவை உருவாக்கும் சில ஆறுகளின் பெயர்களை கண்டறியவும். பனியாறு பனியாறு என்பது மலைச்சரிவில் ஈர்ப்பு விசையின் காரணமாக சரிவை நோக்கி மெல்ல நகரும் பெரிய பனிக்குவியல் ஆகும். இது மலை அல்லது பள்ளத்தாக்கு பனியாறுகள் மற்றும் கண்டப் பனியாறுகள் என இருவகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. கண்டப் பனியாறு: கண்டப்பகுதியில் பெரும் பரப்பில் பரவிக் காணப்படும் அடர்ந்த பனிப்படலம் கண்டப் பனியாறு எனப்படுகின்றது. எடுத்துக்காட்டு அண்டார்டிகா மற்றும் கிரீன்லாந்து. மலை அல்லது பள்ளத்தாக்குப் பனியாறு: மலையிலிருந்து பள்ளத்தாக்கை நோக்கி நகரும் பனியாறு பள்ளத்தாக்கு பனியாறு எனப்படுகின்றது. முன்னர் அமைந்துள்ள ஆற்று போக்குகளை பின்பற்றி பள்ளத்தாக்கு பனியாறு செல்கின்றன. இது செங்குத்தான பக்கங்களால் சூழப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டு இமயமலைப் பகுதி மற்றும் ஆல்ப்ஸ் மலைப் பகுதி. பனியாறுகள் மேற்பரப்பில் உள்ள துகள்கள் மற்றும் கற்களை அரிப்பதன் மூலம் கீழே உள்ள கடின பாறைப் பகுதியை வெளிப்படுத்துகிறது. மலைச்சரிவில் பனி அரிப்பால் சர்க்குகள் (Cirque) ஏற்படுகின்றன. சர்க்குகள் என்பது பனியாறுகளால் அரிபடா பாறைகளில் தோன்றும் கை நாற்காலி போன்ற ஒரு நிலத் தோற்றமாகும். இதன் அனைத்து பக்கமும் செங்குத்தாகவும் தலைப்பகுதி செங்குத்து சுவர் போன்றும் காணப்படும். இந்நிலத் தோற்றம் ஸ்காட்லாந்தில் கார்ரி சர்க் என்றும் ஜெர்மனியில் கார்சர்க் என்றும் அழைக்கப்படுகிறது. பனி உருகும் போது, சர்க் நீரால் நிரப்பப்பட்டு அழகான ஏரிகளாக மலைப்பகுதிகளில் தோற்றமளிக்கின்றன. இந்த ஏரிகள் டார்ன் ஏரி என்று அழைக்கப்படுகின்றன. படம், சர்க் உருவாதல் படம் கொடுக்கப்பட்டுள்ளது, படவிளக்கம் தொடங்குகிறது, படத்தில், முனைச்சுவர், ராண்டலுப்ட், பனியாற்றுப் பள்ளம், முனைச் சுவர் இடைவெளி, பனிக்கட்டி, விளிம்பு மொரைன்கள், பனிப்பாறை அரிப்பு மண்டலம், பனிப்பாறை உருகும் போது ஏரி அமையும் [ டார்ன் ஏரி], சீராய்வு மண்டலம் ஆகியன கொடுக்கப்பட்டுள்ளன. படவிளக்கம் முடிவடைகிறது. இரண்டோ அல்லது அதற்கு மேற்பட்ட சர்க்குகள் ஒன்றை நோக்கி ஒன்று நகரும் போது குறுகிய, செங்குத்து மற்றும் சரிவான பக்கங்களுடன் கூடிய முகடுகளாக மாற்றம் அடைகின்றன. இம்முகடுகள் அரெட்டுகள் என்ற கத்திமுனைக் குன்றுகளாக உருவெடுக்கின்றன. படம், அரெட் படம் கொடுக்கப்பட்டுள்ளது. படவிளக்கம் தொடங்குகிறது. படத்தில் ஒரு மலை முகடு இரு பக்கமும் சரிவுகளோடு காணப்படுகிறது, படவிளக்கம் முடிவடைகிறது. 'U' வடிவ பள்ளத்தாக்கு பனியாற்றின் பக்கவாட்டு மற்றும் செங்குத்து அரிப்பினால் ஆழப்படுத்துதல் மற்றும் அகலப்படுத்துதல் மூலம் உருவாகின்றன. பனியாற்றினால் கடத்தப்படும் பெரிய மற்றும் சிறிய மணல் மற்றும் வண்டல் ஆகியன படிய வைக்கப்படுகின்றன. இவை பனியாற்று மொரைன்கள் எனப்படுகின்றன. படம், மொரைங்கள் ஏரியின் படம் கொடுக்கப்பட்டுள்ளது. படவிளக்கம் தொடங்குகிறது. மொரைன்கள், பனி சூழ்ந்த மலைகளுக்கு நடுவே இம்மொரைன்கள் அமையப் பெற்றுள்ளது. படவிளக்கம் முடிவடைகிறது. காற்று நீங்கள் எப்பொழுதாவது ஒரு பாலைவனத்திற்கு சென்றிருக்கிறீர்களா? மணல் குன்றுகளின், மேடுகளின் படங்கள் சிலவற்றை சேகரிக்கவும். பாலைவனத்தில் அரித்தல் மற்றும் படியவைத்தல் செயல்முறைகளை வேகமாக செயல்படுத்தும் காரணி காற்று ஆகும். பாறையின் மேற்பகுதியைவிட கீழ்ப்பகுதியை காற்று வேகமாக அரிக்கின்ற காரணத்தினால் அப்பாறைகளின் மேற்பகுதி அகன்றும் மற்றும் அடிப்பகுதி குறுகலாகவும் காணப்படுகின்றன. இவை காளான் பாறைகள் எனப்படுகின்றன. இதை பாலைவனப் பகுதியில் நம்மால் காண முடியும். படம், காளான் பாறைப் படம், கொடுக்கப்பட்டுள்ளது, படவிளக்கம் தொடங்குகிறது. படத்தில் உள்ளப் பாறை காளான் வடிவில் உள்ளது. பாறையைச் சுற்றிலும் மணல் மேடுகளாகக் காட்சியளிக்கின்றது. படவிளக்கம் முடிவடைகிறது. ஒரு தனித்து விடப்பட்ட எஞ்சிய குன்று வட்டமான தலைப்பகுதியுடன் நிற்கும் ஒரு தூண் போன்று காட்சி அளிப்பது காற்று அரிப்புத் தனிக்குன்றுகள் (Inselbergs) என்று அழைக்கப்படுகின்றன. (எடுத்துக்காட்டு) தென் ஆப்பிரிக்காவின் கலஹாரி பாலைவனத்தில் காணப்படும் காற்றரிப்புத் தனிக்குன்றுகள். படம், காற்று அரிப்புத் தனிக்குன்றின் படம் கொடுக்கப்பட்டுள்ளது, படவிளக்கம் தொடங்குகிறது. படத்தில் ஒரு உயரமான பாறை மணற்பாங்கான இடம், பாலைவனத்திற்கு நடுவே அமையப்பெற்றுள்ளது. படவிளக்கம் முடிவடைகிறது. காற்று அரிப்புத் தனிக்குன்று காற்று வீசும் போது மணலை ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு கடத்துகின்றது. காற்றின் வேகம் குறையும் போது மணலானது உயரம் குறைவான குன்றுகள் போன்று படிகின்றது. இப்படிவுகள் மணல் குன்றுகள் என அழைக்கப்படுகின்றன. பிறைச்சந்திர தோற்றமுடன் கூடிய மணல் குன்றுகள் -பர்கான்கள் எனப்படுகின்றன. படம், பிறை வடிவ மணல் குன்றின் படம் கொடுக்கப்பட்டுள்ளது, படவிளக்கம் தொடங்குகிறது. ஒரு பாலைவனத்தில் உள்ள மணல் மேடு பிறை வடிவில் காட்சியளிக்கிறது. படவிளக்கம் முடிவடைகிறது. மணல் துகள்கள் மிக லேசாகவும் மற்றும் எடை குறைவாகவும் இருக்கும் போது காற்று நீண்ட தொலைவிற்கு கடத்திச் செல்கின்றது. இவ்வாறுகடத்தப்பட்ட மணல் ஒரு பெரும் பரப்பில் படிவது காற்றடி வண்டல் படிவுகள் (Loess) எனப்படுகிறது. காற்றடி வண்டல் படிவுகள் சீனாவில் அதிகமாக காணப்படுகின்றன. படம், காற்றடி வண்டல் படிவுகளின் படம் கொடுக்கப்பட்டுள்ளது, படவிளக்கம் தொடங்குகிறது. படத்தில் ஒரு பாலைவனத்தில் மணல் மேடுகள் நேர்கோடுகளக அழகாக அமைந்துள்ளது. படவிளக்கம் முடிவடைகிறது. உங்களுக்குத் தெரியுமா? (பெட்டிச் செய்தி) வடக்கு சீனாவில் படிந்துள்ள காற்றடி வண்டல் படிவுகள் கோபி இருந்து கடத்தப்பட்டவை ஆகும். கடல் அலைகள் நிலத்தின் ஒரு பகுதி கடலை அடுத்தோ அல்லது ஒட்டியோ காணப்படுவது கடற்கரை எனப்படுகிறது. கடலோர எல்லை என்பது கடல் நீரும், நிலமும் சந்திக்கின்ற இடம் ஆகும். அலைகளின் அரிப்பினாலும், படிதலாலும் கடற்கரை மாற்றத்திற்கு உள்ளாகின்றது. படம், கடலோர நிலத்தோற்றங்களின் படம் கொடுக்கப்பட்டுள்ளது, படவிளக்கம் தொடங்குகிறது. படத்தில் கடலோர காயல்கள், கடலோர மணற்குண்று, விரிகுடா, ஆறு, டெல்டா, மணற்திட்டு, நிலக்கூம்பு, செங்குத்தானப்பாறை, கடல் வில்வளைவு, கடற்கரை, கடல் குவியல், கடற்கரை விலகிய மணல் திட்டு, பெருங்கடல் ஆகியனக் கொடுக்கப்பட்டுள்ளன. படவிளக்கம் முடிவடைகிறது. கடல் அலைகளின் அரிப்பினாலும் மற்றும் படிதலாலும் பல வகைப்பட்ட கடலோர நிலப்பரப்புக்கள் உருவாகின்றன. கடற்கரையை அடுத்துள்ள நிலம் அலைகளின் மோதலாலும், அரிப்பினாலும் கடலை நோக்கி செங்குத்தாக உயர்ந்து காணப்படும். அவை பாறை கடல் ஓங்கல் (Sea Cliff) எனப்படும். படம், கடல் ஓங்கல் படம் கொடுக்கப்பட்டுள்ளது, படவிளக்கம் தொடங்குகிறது. படத்தில், கடற்கரை ஓரம் செங்குத்தான பாறை உள்ளது, கடலலை அப்பாறையில் வந்து மோதுகிறது. படவிளக்கம் முடிவடைகிறது. கடல் அலைகள் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்துவதால் பாறையில் விரிசல்கள் உருவாகின்றது. காலப்போக்கில் இவை பெரிய மற்றும் பரந்த விரிசல்களாக மாறுகின்றன. இதனால் செங்குத்துப் பாறையில் குகைகள் போன்ற வெற்றிடங்கள் தோன்றுகின்றன.இவை கடற்குகைகள் (Sea Caves) எனப்படுகின்றன. கடல் குகைகளின் உட்குழிவு பெரிதாகும் போது குகையின் மேற்கூரை மட்டும் எஞ்சி நின்று கடல் வளைவுகளை (Sea Arches) தோற்றுவிக்கின்றது. படம், கடற்குகை ஒன்றின் படம் கொடுக்கப்பட்டுள்ளது. படவிளக்கம் தொடங்குகிறது. படத்தில், கடல் நீரால் மலைப்பாறை குழிவாக குடைந்து குகைப் போலக் காட்சியளிக்கின்றது. படவிளக்கம் முடிவடைகிறது. மேலும் கடல் அலைகள் மேற்கூரையை அரிப்பதால் பக்கச்சுவர்கள் மட்டும் எஞ்சி நிற்கின்றன. இந்த சுவர் போன்ற தோற்றங்கள் கடல் தூண்கள் (Sea Stacks) எனப்படும். படம், கடல் வளைவு மற்றும் கடல் தூண் படம் கொடுக்கப்பட்டுள்ளது, படவிளக்கம் தொடங்குகிறது. படத்தில் கடலுக்கு நடுவே இரு பாறைகள் காட்சியளிக்கின்றன, ஒன்று தனியே செங்குத்தாகவும், இன்னொன்று பாறைக்கு நடுவே ஒரு பெரிய ஓட்டையோடும் உள்ளன. படவிளக்கம் முடிவடைகிறது. கடல் அலைகளால் மணல் மற்றும் சரளைகள் படிந்துள்ள கடலோரப்பகுதி கடற்கரை (Beach) எனப்படும். ஏறக்குறைய கடற்கரைக்கு இணையாக கடலில் நீள்வட்ட வடிவில் படிந்துள்ள மணல் அல்லது சேறு மணல் திட்டுக்கள் எனப்படுகின்றன. படம், கடற்கரை மற்றும் மணற் திட்டு படம் கொடுக்கப்பட்டுள்ளது, படவிளக்கம் தொடங்குகிறது. படத்தில் தெளிவான வெண்நிற மணலுடன் கடற்கரை காணப்படுகிறது. கடற்கரையிலிருந்து பகுதியாகவோஅல்லது முற்றிலுமாக பிரிக்கப்பட்ட ஆழம் குறைவான நீர் தேக்கம் காயல்கள் அல்லது உப்பங்கழிகள் (Lagoon) எனப்படும். எடுத்துக்காட்டு ஒடிசாவிலுள்ள சிலிக்கா ஏரி, தமிழ்நாட்டிலுள்ள பழவேற்காடு ஏரி மற்றும் கேரளாவிலுள்ள வேம்பநாடு ஏரி போன்றவை இந்தியாவில் அமைந்துள்ள முக்கிய உப்பங்கழிகள் ஆகும். படம், காயல் அல்லது உப்பங்கழியின் படம் கொடுக்கப்பட்டுள்ளது. படவிளக்கம் தொடங்குகிறது. படத்தில், மலைகளுக்கு நடுவே கடல் நீர் தேங்கி காணப்படுகிறது. படவிளக்கம் முடிவடைகிறது. உங்களுக்குத் தெரியுமா? (பெட்டிச் செய்தி) மியாமி கடற்கரை, படம் கொடுக்கப்பட்டுள்ளது. படத்தில் இடம்பெற்றுள்ள கருத்தாவது, உலகிலேயே மிக நீளமான கடற்கரை அமெரிக்காவில் புளோரிடா மாநிலத்தின் தெற்கில் காணப்படும் மியாமி கடற்கரை ஆகும். இரண்டாவது நீண்ட கடற்கரை சென்னையில் அமைந்துள்ள மெரினா கடற்கரை ஆகும். சுருக்கம் வானிலைச் சிதைவு மற்றும் அரித்தல் செயல்கள் மூலம் நிலத்தோற்றங்கள் தொடர்ந்து மாற்றத்திற்கு உள்ளாகின்றன. ஆறு, பனியாறு, காற்றுமற்றும் கடல் அலைகள் ஆகியன முதன்மை புறச்செயல்முறைகளாகும். ஆற்றின் பிறப்பிடத்திலிருந்து முகத்துவாரம் வரை ஆறானது நிலப்பகுதியை தொடர்ந்து மறு வடிவமைப்பதால் பல்வேறுபட்ட நிலத்தோற்றங்கள் உருவாகின்றன. ஒரு முதன்மை ஆற்றிலிருந்து பிரிந்து செல்லும் ஆறுகளை கிளையாறுகள் என்று அழைக்கிறோம். டெல்டாக்கள் உற்பத்தி திறன் மிகுந்த பகுதிகளாகும் . புவிஈர்ப்பு விசையின் காரணமாக மலைச்சரிவின் கீழ்நோக்கி மெல்ல நகரும் பெரும் பனிக்குவியல்கள் பனியாறுகள் எனப்படுகின்றன. மலைச்சரிவின் கீழ் நோக்கி மெல்ல நகரும் பெரும் பனிக்குவியல்கள் பனியாறுகள் எனப்படுகின்றன. பனியாற்று படிவுகள் மொரைன்கள் எனப்படுகின்றன. பாலைவனத்தில் அரித்தல் மற்றும் படிய வைத்தலை ஏற்படுத்தும் முதன்மை காரணி காற்றாகும். கடல் அலைகளால் மணல் மற்றும் சரளைகள் படிந்துள்ள கடலோரப்பகுதி கடற்கரை எனப்படும். கலைச்சொற்கள், அட்டவணை தொடங்குகிறது சமநிலைப் படுத்துதல் Gradation உயர்ந்த நிலங்கள் அரிப்பு செயல்கள் மூலம், தாழ்நிலப் பகுதிகளாகவும் படிய வைத்தல் செயல்கள் மூலம் உயர்நிலங்களாகவும் மாறுவது நிலமட்டம் சமமாக்கல் எனப்படுகிறது. வானிலைச் சிதைவு Weathering புவி மேற்பரப்பில் பாறைகள் உடைவதும் மற்றும் நொறுங்குவதும் பாறை சிதைவடைதல் எனப்படுகின்றது. ஆற்று முகத்துவாரம் River mouth ஆறு ஒரு ஏரியிலோ, கடலிலோ அல்லது ஒரு பேராழியிலோ கலக்கும் இடம் ஆற்று முகத்துவாரம் எனப்படுகிறது. துணை ஆறு Tributary ஒரு முதன்மை ஆற்றுடன் இணையும் ஆறு அல்லது நீரோடையானது துணையாறு எனப்படுகிறது. ஆற்று வளைவு Meander ஆறானது சமவெளிப் பகுதியை அடையும் போது வளைந்து மற்றும் சுழன்று செல்வதால் தோன்றும் பெரிய வளைவுகள் ஆற்று வளைவுகள் (Meander) எனப்படுகின்றன. டெல்டா Delta ஆற்றினால் தோற்றுவிக்கப்படும் பெரிய விசிறி வடிவ படிவுகள். சர்க் Cirque சர்க் என்பது பனியாற்று அரிப்பினால் உருவாகும் வன்சரிவு சுவர் கொண்ட, கை வைத்த ஒரு நாற்காலி போன்ற நிலத்தோற்றமாகும். பிறைவடிவ மணற்குன்று Barchans பிறைச் சந்திர தோற்றமுடன் கூடிய மணல் மேடுகள் பிறைவடிவ மணல் குன்றுகள் எனப்படுகின்றன. காயல் Lagoon கடற்கரையிலிருந்து ஒரு பகுதியாகவோ அல்லது முற்றிலுமாகவோ பிரிக்கப்பட்ட ஆழம் குறைவான நீர் தேக்கம் காயல்கள் அல்லது உப்பங்கழிகள் எனப்படும். அட்டவணை முடிவடைகிறது மதிப்பீடு விரைவுத் துலங்கள் குறியீடு கொடுக்கப்பட்டுள்ளது, எண், H, 7, M, B, 1 1, சரியான விடையைத்தேர்வு செய்க 1, மலை அடிவாரத்தில் ஆறுகளால் படியவைக்கப்படும் வண்டல் படிவுகள்ட டேஷ் ஆகும். அ) உட்பாயத் தேக்கம் ஆ) வண்டல் விசிறி இ) வெள்ளச் சமவெளி ஈ) டெல்டா 2, குற்றால நீர்வீழ்ச்சி டேஷ் ஆற்றின் குறுக்காக அமைந்துள்ளது. அ) காவிரி ஆ) பெண்ணாறு இ) சிற்றாறு ஈ) வைகை 3, பனியாற்றுபடிவுகளால் தோற்றுவிக்கப்படும் நிலத்தோற்றம் டேஷ் ஆகும். அ) சர்க் ஆ) அரெட்டுகள் இ) மொரைன் ஈ) டார்ன் ஏரி 4, மிகப்பெரிய காற்றடி வண்டல் படிவுகள் காணப்படும் இடம். அ) அமெரிக்கா ஆ) இந்தியா இ) சீனா ஈ) பிரேசில் 5, பின் குறிப்பிட்டவையில் கடல் அலை அரிப்புடன் தொடர்பில்லாத ஒன்று டேஷ் அ) கடல் ஓங்கல்கள் ஆ) கடல் வளைவுகள் இ) கடல் தூண்கள் ஈ) கடற்கரைகள் 2, கோடிட்ட இடங்களை நிரப்புக 1, பாறைகள் உடைவதையும் மற்றும் நொறுங்குவதையும் டேஷ் என்கிறோம். 2, ஆறு, ஏரியில் அல்லது கடலில் சேரும் இடம் டேஷ் எனப்படுகிறது. 3, காற்று அரிப்புத் தனிக்குன்றுகள் தென் ஆப்பிரிக்காவில் டேஷ் பாலைவனத்தில் காணப்படுகிறது. 4, ஜெர்மனியில் காணப்படும் சர்க் டேஷ் என்று அழைக்கப்படுகிறது. 5, உலகின் மிக நீண்டகடற்கரை டேஷ் ஆகும். 3, பொருத்துக: 1, பாறை உடைதல் மற்றும் நொறுங்குதல் - பனியாறுகள் 2, கைவிடப்பட்ட மியாண்டர்வளைவுகள் – பர்கான்கள் 3, நகரும் ஒரு பெரும் பனிக்குவியல் – காயல் 4, பிறை வடிவ மணல் குன்றுகள் - பாறைச் சிதைவுகள் 5, கம்பநாடு ஏரி -குதிரைக் குளம்பு ஏரி 4, பின்வரும் தகவல்களை கருத்தில் கொண்டு சரியான விடையை குறியிடுக 1, கூற்று: முகத்துவாரப் பகுதியில் ஆறுகளால் டெல்டாக்கள் உருவாக்கப்படுகின்றன. காரணம்: ஆறு கடல் பகுதியை அடையும் போது ஆற்றின் வேகம் குறைகிறது. அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆ) கூற்று சரி, காரணம் தவறு இ) கூற்று தவறு மற்றும் காரணம் சரி ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு 2, கூற்று: கடல் வளைவுகள் இறுதியில் கடல் தூண்களாகின்றன. காரணம்: கடல் தூண்கள் அலைகளின் படிவுகளால் ஏற்படுகின்றன. அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆ) கூற்று சரி, காரணம் தவறு இ) கூற்று தவறு மற்றும் காரணம் சரி ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு 5, பின்வருவனவற்றிற்கு விடையளிக்க. 1, அரித்தல் வரையறு. 2, உட்பாயத் தேக்கம் என்றால் என்ன? 3, குதிரைக் குளம்பு ஏரி எவ்வாறு உருவாகிறது? 4, பனியாற்று அரித்தலினால் ஏற்படும் முதன்மை நிலத்தோற்றங்களை குறிப்பிடவும். 5, காளான் பாறைகள் பற்றி குறிப்பு எழுதுக. 6, காயல்கள் என்றால் என்ன? ஒரு உதாரணம் தருக. 6, கீழ் குறிப்பிட்டவைகளை வேறுபடுத்துக 1, கிளையாறு மற்றும் துணையாறு. 2, 'V'வடிவ பள்ளத்தாக்கு மற்றும் 'U'வடிவ பள்ளத்தாக்கு. 3, கண்டப் பனியாறு மற்றும் மலைப்பனியாறு 7, காரணம் தருக 1, ஆற்று வளைவுகளின் கழுத்துப் பகுதிகள் நெருங்கி வருகின்றன. 2, வெள்ளச் சமவெளிகள் மிகவும் வளமிக்கதாக உள்ளன. 3, கடல் குகைகள் கடல் தூண்களாக மாறுகின்றன. 8, பத்தி அளவில் விடை அளிக்க. 1, ஆற்றின் அரிப்பால் தோன்றும் வேறுபட்ட நிலத்தோற்றங்களை விவரிக்க. 2, காற்றின் செயல்களால் ஏற்படும் நிலத்தோற்றங்களை விளக்குக. 3, அரெட்டுகள் எவ்வாறு தோன்றுகின்றன? 9, 1. கீழே கொடுக்கப்பட்டுள்ள நிலத்தோற்றங்களை தொடர்புடைய கட்டங்களில் நிரப்பவும். (பர்கான், 'V' வடிவ பள்ளத்தாக்கு, ஓங்கல், அரெட், தனிக்குன்றுகள், மொரைன், வண்டல் விசிறி மற்றும் காயல்) வரிசை எண் இயற்கை செயலிகள் நிலத்தோற்றங்கள் வரிசை எண், 1 இயற்கை செயலி, ஆறு அரிப்பு படிய வைத்தல் வரிசை எண், 2 இயற்கை செயலி, பனியாறு வரிசை எண், 3 இயற்கை செயலி, காற்று வரிசை எண், 4 இயற்கை செயலி, கடல் அலை 2. உன் வீட்டு அருகே கீழ்க்காணும் ஏதேனும் ஒரு நிலத்தோற்றத்தை கண்டறிந்து குறிப்பு எழுதுக 1, குன்று 2, நீர்வீழ்ச்சி 3, ஆறு அல்லது ஓடை 4, கடற்கரை மேற்கோள் நூல்கள் 1. Savindra Singh (2015), Physical Geography, Pravalika Publications, Allahabad. 2. Rajeev Gupta (2012), Physical Geography, Sonali Publications, New Delhi. 3. A. Das Gupta, A.N. Kapoor, Physical Geography, S. Chand and Company Ltd, New Delhi. 4. Nater Singh Raina (2012), Contemporary Physical Geography, Concept Publishing Company Pvt. Ltd, New Delhi. இணையச் செயல்பாடு நிலத்தோற்றங்கள் படம், நிலத்தோற்றங்கள் பாடத்திற்கான செயல்பாட்டுப் படம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த செயல்பாட்டின் மூலம் நாம் வாழும் பூமியில் எத்தனை வகை நில அமைப்புகள் உள்ளன என்பதைப்பற்றி தெரிந்துகொள்ளமுடியும் படம், செயல்பாட்டின் படிநிலைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.படிநிலகள் பின்வருமாறு, படிநிலைகள்: படி 1: URL அல்லது QR குறியீட்டினைப் பயன்படுத்தி இச் செயல்பாட்டிற்கான இணையப்பக்கத்திற்கு செல்க படி 2: இடது புறமாக தோன்றும் மெனு (Menu) பக்கத்திற்கு சென்று ஏதாவது ஒரு நில அமைப்பைதேர்ந்தெடுக்கவும் (எ.கா) Glacier படி 3: (எ.கா Glacier) இருக்கும் இடங்கள் உலக வரைபடத்தில் சிவப்புபுள்ளிகளாக தோன்றும். ஒவ்வொன்றாக தெரிவு செய்துபட விளக்கத்தை பெறவும் நிலத்தோற்றங்கள் உரலி: http://www.harcourtschool.com/activity/types_of_land_2/index.html **படங்கள் அடையாளத்திற்கு மட்டுமே. *தேவையெனில் 'Adobe Flash' ஐ அனுமதிக்கவும். விரைவுத் துலங்கள் குறியீடு கொடுக்கப்பட்டுள்ளது, எண், 9, 5, U, I, 2 அலகு – 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும் படம், படவிளக்கம் தொடங்குகிறது. மக்கள் தொகையும் குடியிருப்புகளும், பாடம் தொடர்பாக வயல் வெளிகளுக்கு நடுவே அமைந்த கூரை வீடும், அதற்கு கீழே அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. படவிளக்கம் முடிவடைகிறது. கற்றலின் நோக்கங்கள் விரைவுத் துலங்கள் குறியீடு கொடுக்கப்பட்டுள்ளது, எண், F, P, V, C, 0 மனித இனம், அவற்றின் வகைப்பாடுகளை அறிதல் பல்வேறு வகையான மதங்களை அறிந்துகொள்ளுதல் முக்கியமான மொழிகளைப் பற்றி தெரிந்துகொள்ளுதல் குடியிருப்புகள் அமைய சாதகமான சூழ்நிலைகளை பற்றி புரிந்துகொள்ளுதல் கிராம மற்றும் நகர்ப்புற குடியிருப்புகளின் தன்மைகளை புரிந்துகொள்ளுதல் குடியிருப்புகளின் வகைபாடுகளைப் பற்றி கற்றறிதல் அறிமுகம் மக்கட் புவியியல் என்பது மக்களின் விகிதம், பிறப்பு, இறப்பு, வளர்ச்சி விகிதம், காலம் மற்றும் இடத்திற்கு ஏற்ப அவற்றில் ஏற்படும் மாற்றத்தைப் பற்றிய கற்றலாகும். மக்கள் தொகை அதிகரித்தல், குறைதல் என்பது மக்கள் பரவல் மற்றும் வளர்ச்சியைக் குறிப்பதாகும். மக்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்வது இடம்பெயர்தல் எனப்படும். இனங்கள் விரைவுத் துலங்கள் குறியீடு கொடுக்கப்பட்டுள்ளது, எண், 3, L, 9, 0, D மானுட பிரிவை அவர்களின் பௌதீகமற்றும் உயிரியல் பண்புகளின் அடிப்படையில் பிரிப்பதே மனித இன வகையாகும். ஒரே பண்புகள் மற்றும் பழக்க வழக்கங்களை காலங்காலமாக பின்பற்றக் கூடிய மக்கள் குழுக்கள், மனித இனம் என்று அழைக்கப்படுகிறது. பெருமளவில் பரந்து காணப்படும் மனித இனத்தின் வகைகள் தலையின் வடிவம், முகம், மூக்கு, கண், முடியின் வகை, தோலின் நிறம், உயரம் மற்றும் ரத்தத்தின் வகை போன்ற பல காரணிகளை அடிப்படையாகக் கொண்டு பிரிக்கப்பட்டுள்ளது. உலகின் முக்கிய மனித இனங்கள் காக்கச இனம் நீக்ரோ இனம் மங்கோலிய இனம் ஆஸ்ட்ரலாய்டு இனம் காக்கச இனம் காக்கச இன மக்கள் என்பவர்கள் ஐரோப்பிய இனத்தவர்கள் ஆவர். இவ்வின மக்கள் வெள்ளை நிறத்தோலும், அடர்பழுப்பு நிறக்கண்களும், அலை போன்ற முடியும், குறுகலான மூக்கும் உடையவர்களாவர். இவர்கள் யுரேசியாவிலும் காணப்படுகிறார்கள். படம், மனித இனங்களின் மாதிரிப்படம் கொடுக்கப்பட்டுள்ளது, படவிளக்கம் தொடங்குகிறது. படத்தில், காக்கச இனம், நீக்ரோ இனம், மங்கோலிய இனம், ஆஸ்ட்ரலாய்டு இனம் முதலிய இனங்களின் மாதிரி முகம் கொடுக்கப்பட்டுள்ளது. படவிளக்கம் முடிவடைகிறது. உங்களுக்குத் தெரியுமா? (பெட்டிச் செய்தி) மனிதப் புவியியல் என்பது மனிதன் மற்றும் அவனின் சுற்றுப்புறத்தை இயற்கைச் சூழலோடு படிப்பதே ஆகும். நீக்ரோ இனம் நீக்ரோ இன மக்கள் கருமைநிறக் கண்கள், கருப்புநிறத் தோல், கருமையான சுருள் முடி, அகலமான மூக்கு, நீளமான தலை, மற்றும் தடித்த உதடுகளைக் கொண்டவர்களாவார்கள். இவர்கள் ஆப்பிரிக்காவின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்து வருகிறார்கள். மங்கோலிய இனம் மங்கோலிய இன மக்கள் பொதுவாக ஆசிய-அமெரிக்க இனத்தவர்கள் ஆவர். அவர்கள் வெளிர் மஞ்சள் முதல் பழுப்புநிறத் தோல், நீளமானமுடி, தட்டையான முக அமைப்பு, பெரிய தலை மற்றும் தட்டையான மூக்கை உடையவர்களாவார்கள். இவர்கள் ஆசியா மற்றும் ஆர்க்டிக் பிரதேசத்தில் காணப்படுகிறார்கள். ஆஸ்ட்ரலாய்டு இனம் ஆஸ்ட்ரலாய்டு இன மக்கள் அகலமான மூக்கு, சுருள்முடி, கருப்புநிறத்தோல் மற்றும் குட்டையானவர்களாகக் காணப்படுகிறார்கள். இவர்கள் ஆஸ்திரேலியா மற்றும் ஆசியாவில் வாழ்ந்து வருகிறார்கள். இந்தியாவின் இனங்கள் மனித நாகரிகத்தின் தொட்டில்களில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. வட இந்தியாவில், திராவிடர்களின் தோற்றம் பண்டைய சிந்துவெளி நாகரிகத்திலிருந்து தோன்றின என நம்பப்படுகிறது. பிற்காலத்தில் இந்தோ ஆரியர்களின் வருகைக்குப் பிறகு திராவிட மக்கள் இந்தியாவின் தென்பகுதிக்குத் தள்ளப்பட்டார்கள். இந்தியாவின் தென்பகுதி மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டிய மன்னர்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் துளு ஆகியவை திராவிட மொழிகளாகும். பெரும்பாலும் இவர்கள் இந்தியாவின் தென் பகுதியில் வாழ்ந்து வருகின்றார்கள். மதம் மதம் என்பது ஒரு குறிப்பிட்ட நம்பிக்கையையும், வழிபாட்டு முறைகளையும் கொண்டதாகும். இது மனிதர்களை மனித சமுதாயத்துடன் சேர்க்கிறது. மதம் ஒரு குழுவின் அடையாளமாகவும், கலாச்சார புத்துணர்வின் அடையாளமாகவும் திகழ்கிறது. மதங்களின் வகைபாடு (அ) உலகளாவிய மதங்கள் கிறிஸ்துவம், இஸ்லாம் மற்றும் புத்த மதம் (ஆ) மனித இனப்பிரிவு மதங்கள் ஜூடோயிசம், இந்து மதம் மற்றும் ஷிண்டோயிசம் (இ) நாடோடிகள் (அல்லது) பாரம்பரிய மதங்கள் அனிமிஸம், ஷாமானிஸம் மற்றும் ஷாமன் அட்டவணை தொடங்குகிறது, மதம் வழிபாட்டுத்தலம் புத்த மதம் விஹாராம் கிறிஸ்துவ மதம் தேவாலயம் இந்து மதம் கோவில் இஸ்லாம் மதம் மசூதி சமண மதம் பசாதி ஜூடாய்ஸ மதம் சினகாக் ஜொராஸ்டிரிய மதம் அகியாரி அட்டவணை முடிவடைகிறது. மொழி சமுதாய அமைப்பில் மொழியானத கலாச்சாரத்தை பரப்பும் ஒரு பிரதான கருவியாகும். ஒருவர்மற்றொருவருடன்தொடர்பு கொள்வதற்கு எழுத்து வடிவிலோ அல்லது ஒலி வடிவிலோ மொழி பயன்படுத்தப்படுகிறது. அரசியல், பொருளாதார சமூக மற்றும் மத செயல்பாடுகளின் கருத்துக்களை பரிமாறிக் கொள்ள மொழி வழி வகுக்கிறது. உலகின் முக்கிய மொழிகள் தமிழ் இந்தி சீனமொழி ஆங்கிலம் ஸ்பானிஷ் போர்ச்சுக்கீஸ் ரஷ்யன் அராபிக் மொழி ஜெர்மன் இந்திய மொழிகள் இந்தியா பலவகையான மொழிகளையும் கலாச்சாரத்தையும் கொண்ட நாடு. ஒவ்வொரு மாநிலமும் தனக்கேயுரிய மொழி அடையாளத்தை கொண்டுள்ளது. இந்திய அரசியலமைப்பு 22 மொழிகளை அங்கீகரித்துள்ளது. வட இந்தியாவில் காஷ்மீரி, உருது, பஞ்சாபி, இந்தி, ராஜஸ்தானி, குஜராத்தி, பெங்காலி, அஸ்ஸாமி மற்றும் பல மொழிகள் பேசப்படுகின்றன. தென்னிந்தியாவில் பேசப்படும் முக்கியமான மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்றவை திராவிட மொழிகள் என்றழைக்கப்படுகிறது. இன்றைய மொழிப் பயன்பாடு மாறியுள்ளது. மொழி இது பெரும்பாலும் தொடர்புக் கருவியாகவே பயன்படுத்தப்படுகிறது. தொழில் நுட்ப வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தின் மூலம் பல மொழிகளை எளிமையாக புரிந்து கொள்ள முடிகிறது. இந்த தொழில் நுட்பங்கள் உலகத்தை மனித சமூகத்திற்கு மிக அருகில் கொண்டு வந்திருக்கின்றன. நிகழ்வுகள் அட்டவணை தொடங்குகிறது, தேதி நிகழ்வுகள் தேதி, ஜூலை 11 நிகழ்வு, உலக மக்கள் தொகை தினம் தேதி, பிப்ரவரி 21 நிகழ்வு, பன்னாட்டு தாய்மொழி தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரியில் வரும் 3வது ஞாயிற்றுக்கிழமை நிகழ்வு, உலக மத நல்லிணக்க தினம் தேதி, மே 21 நிகழ்வு, உலக கலாச்சார பன்முகத்தன்மை தினம் அட்டவணை முடிவடைகிறது. குடியிருப்பு குடியிருப்பு என்பது மனித வாழ்விடமாகும். அங்கு விவசாயம், வாணிபம் மற்றும் பொழுதுபோக்கு ஆகிய செயல்களின் மூலம் ஒருவருக்கொருவர் கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்கின்றனர். கிராமக் குடியிருப்பு என்பது ஒரு சமுதாய மக்கள், அவர்கள் தங்களின் முதன்மைத் தொழிலான வேளாண்மை, மரம் வெட்டுதல், மீன்பிடித்தல் மற்றும் சுரங்கத் தொழிலில் ஈடுபடுத்திக் கொள்வதைக் குறிக்கும். நகர்ப்புற குடியிருப்பில் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை தொழில்களான தொழிற்சாலை, வாணிபம் மற்றும் வங்கிப்பணிகளில் ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். கிராமப்புற குடியிருப்பில் மக்கள் தொகையின் அளவு மற்றும் அடர்த்தி குறைவாகவும், நகர்ப்புற குடியிருப்பில் அதிகமாகவும் காணப்படுகிறது. தளம் மற்றும் சூழலமைவு தளம் மற்றும் சூழலமைவு என்பது ஒரு குடியிருப்பின் உண்மையான அமைவிடத்தைக் குறிப்பதாகும். ஒரு குடியிருப்பின் அமைவிடமானது நம் அன்றாடத் தேவைகளான நீர் அளிப்பு, வேளாண் நிலம், கட்டுமானப் பொருட்கள், எரிபொருள் போன்ற காரணிகளைக் கருத்தில் கொண்டு அமைகிறது. பண்டைய குடியிருப்பின் வகைகள் முற்காலத்தில் ஒரு குடியிருப்பானது அங்கேயே கிடைக்கக் கூடிய பொருட்களைக் கொண்டு கட்டப்பட்டது. ஒரு வீட்டின் அமைப்பானது அங்குள்ள சுற்றுச் சூழலுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தது. விவசாயப் பிரதேசங்களில் வீடுகளின் சுவர்கள் களிமண்ணாலும், கூரைகள் வைக்கோலாலும் அல்லது மற்ற செடிகளின் புற்களாலும் வேயப்பட்டிருந்தது. கூரை அமைப்பதற்கான சட்டங்களுக்கு அங்குள்ள மரங்களையே பயன்படுத்திக் கொண்டனர். இம்மாதிரியான பண்டைய வீடுகளில் பெரிய முற்றம், திறந்த வெளிக் காற்றோட்ட வசதிகள் இருந்தன. வீட்டின் அளவானது அங்குள்ளவர்களின் பொருளாதாரத்தைச் சார்ந்திருந்தது. படம், பண்டைய குடியிருப்பின் வகைக்கான மாதிரிப் படம் கொடுக்கப்பட்டுள்ளது, படவிளக்கம் தொடங்குகிறது, படத்தில் வைக்கோலால் வேயப்பட்ட மூன்று வீடுகளின் படம் கொடுக்கப்பட்டுள்ளது. படவிளக்கம் முடிவடைகிறது. குடியிருப்பின் அமைப்புகள் குடியிருப்பு, குழுமிய குடியிருப்பு, சிதறிய குடியிருப்பு என வகைப்படுத்தப்படுகிறது. குழுமிய குடியிருப்பு குழுமிய குடியிருப்பை மையக் குடியிருப்பு எனவும் அழைக்கலாம். இவ்வகையான குடியிருப்பில் வீடுகள் ஒன்றுக்கொன்று அருகருகே அமைந்துள்ளன. இவ்வகைக் குடியிருப்புகள் ஆற்றுச் சமவெளிகளிலும், வளமான சமவெளியை ஒட்டியும் அமைந்திருக்கும். இந்தியாவில் குழுமிய குடியிருப்புகளை, வடக்குச் சமவெளிகள் மற்றும் தீபகற்ப கடற்கரைச் சமவெளிகளிலும் காணலாம். படம், படவிளக்கம் தொடங்குகிறது. குழுமிய குடியிருப்பு வீடுகள், மலை பகுதியில் நெருக்கமாக அமைந்துள்ள குடியிருப்புகளின் படம் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது, படவிளக்கம் முடிவடைகிறது. சிதறிய குடியிருப்புகள் சிதறிய குடியிருப்புகளை பொதுவாக அதிக வெப்பப் பகுதிகளிலும், மலைப்பாதைகளிலும், அடர்ந்த காட்டுப்பகுதிகளிலும், புல்வெளிகளிலும், தீவிர சாகுபடிப் பிரதேசங்களிலும் காண முடியும். இவ்வகைக் குடியிருப்புகளில் வீடுகள் இடைவெளி விட்டுக் காணப்படுவதுடன் வயல்வெளிகளோடு கலந்தும் காணப்படும். இந்தியாவில் இவ்வகையான குடியிருப்புகளை கோசி மலைப் பாதையின் வடக்குப் பகுதியிலும், கங்கைச் சமவெளியிலும், ராஜஸ்தானின் பாலைவனப் பகுதியிலும், இமயமலை மற்றும் நீலகிரியின் மலையடிவாரத்திலும் காணமுடியும். படம், படவிளக்கம் தொடங்குகிறது. சிதறிய குடியிருப்பு, படத்தில் புல்வெளி மிகுந்த மலைப்பிரதேசத்தில் ஆங்காங்கே குடியிருப்புகள் காணப்படுகின்றன. படவிளக்கம் முடிவடைகிறது. குடியிருப்புகளின் படிநிலை படம், தொடர்ப்படம் கொடுக்கப்பட்டுள்ளது. படவிளக்கம் தொடங்குகிறது. படத்தில், குடியிருப்புகளின் படிநிலைகள் கொடுக்கப்பட்டுள்ளது, அதில் குடியிருப்புகள் இரு வகைகளாகவும், ஒன்று கிராமப்புறக் குடியிருப்பு, இரண்டாவது நகர்ப்புற குடியிருப்பு எனவும், மேலும் கிராமப்புறம் தனித்த, சிறுகிராமம், கிராமம், சிறுசந்தை எனவும், நகர்புறம், நகரம், மாநகரம், இணைந்த நகரம் எனவும் பிரிப்பட்டுள்ளன. படவிளக்கம் முடிவடைகிறது. கிராமப்புறக் குடியிருப்பு நீர் நிலையை ஒட்டிய இடங்களாகிய ஆறுகள், ஏரிகள் மற்றும் ஊற்றுக்கள் அருகிலேயே பெரும்பாலும் கிராமப்புறக் குடியிருப்புக்கள் அமைந்திருக்கும். ஏனென்றால் வேளாண் தொழிலுக்கு ஏற்ற நிலங்களுடன் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய இடங்களையே மக்கள் குடியேறத் தேர்ந்தெடுக்கிறார்கள். அதனால் விவசாய தொழிலுக்கு ஏற்ப ஆற்றுப் பள்ளத்தாக்குகளையும், கடற்கரைச் சமவெளிகளையும் கிராம மக்கள் வாழ்வதற்கு ஏற்ற இடமாகக் கருதுகிறார்கள். கட்டடப் பொருள்களான மரம், கல் மற்றும் களிமண் போன்றவை எளிதில் கிடைப்பதால் கிராமங்களை குடியிருப்பு அமைக்க சிறந்த இடமாக கருதுகிறார்கள். கிராமப்புறக் குடியிருப்புக்கு ஏற்ற காரணிகள் இயற்கையான நிலத்தோற்றம் உள்ளூர் தட்பவெப்பநிலை மண் வளம் மற்றும் நீர் வளங்கள் சமூக அமைப்புகள் பொருளாதார நிலை படம், கிராமப்புற குடியிருப்புக்கான படம் கொடுக்கப்பட்டுள்ளது, படவிளக்கம் தொடங்குகிறது. படத்தில் அழகான கிராமம், அங்கே சில வீடுகள், சுற்றிலும் பசுமையாக உள்ள படம் தரப்பட்டுள்ளது. படவிளக்கம் முடிவடைகிறது. கிராமப்புறக் குடியிருப்பின் அமைப்புகள் (Pattern of Rural settlement) கிராமப்புறக் குடியிருப்பின் அமைப்புகள் என்பது வீடுகள் மற்றும் கட்டடங்களுக்கு இடையேயான தொடர்பைக் குறிப்பதாகும். கிராமப்புறக் குடியிருப்பின் அமைப்பு அதன்நிலத்தோற்றம், தட்பவெப்பம், நீர் நிலைகள் மற்றும் சமூகப் பொருளாதாரக் காரணிகளின் செயல்பாடுகளைப் பொறுத்து அமையும். கிராமப்புறக் குடியிருப்புகள் அவற்றின் அமைப்பின் அடிப்படையில் நீள்வடிவமான, செவ்வக வடிவமான, வட்டவடிவமான, நட்சத்திர வடிவமான குடியிருப்புகள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. நீள்வடிவக் குடியிருப்பு சாலைகள், இருப்புப் பாதைகள், ஆறு அல்லது கால்வாய், பள்ளத்தாக்கின் சரிவு ஆகியவற்றிற்கு அருகில் கட்டப்பட்ட வீடுகளின் தொகுப்பு நீள்வடிவம் குடியிருப்பு எனப்படும். எடுத்துக்காட்டு இமயமலை, ஆல்ப்ஸ் மற்றும் ராக்கி மலைத்தொடர் ஆகிய பகுதிகளில் காணப்படும் குடியிருப்புகள். படம், படவிளக்கம் தொடங்குகிறது. நீள்வடிவக் குடியிருப்புப் படம், அங்கே நீண்ட வரிசையாக வீடுகள் அமைந்துள்ளன. படவிளக்கம் முடிவடைகிறது. செவ்வக வடிவக் குடியிருப்புகள் பெரும்பாலும் செவ்வக வடிவில் நீளமானதாகவும் அகலம் குறைந்தும் காணப்படும். இவ்வகையான குடியிருப்புகள் சமவெளிப் பகுதிகள் மற்றும் மலைகளுக்கிடையே உள்ள பள்ளத்தாக்குகளில் காணப்படுகின்றன. (எ.கா) சட்லஜ் பகுதிகளில் காணப்படும் குடியிருப்புகள். ஒரு மையப்பகுதியைச் சுற்றி வட்ட வடிவமாக காணப்படும் குடியிருப்புகளை வட்ட வடிவக் குடியிருப்புகள் என்கிறோம். இத்தகைய குடியிருப்புகள், ஏரிகள் மற்றும் குளங்களை சுற்றிக் காணப்படுகின்றன. நட்சத்திர வடிவக் குடியிருப்புகள் சாலைகள் ஒன்று சேரும் இடங்களிலிருந்து, சாலைகளின் இருபக்கங்களிலும் மற்றும் எல்லா திசைகளிலும் பரவி நட்சத்திர வடிவில் காணப்படும். எடுத்துக்காட்டு நாமக்கல் நகர்ப்புற குடியிருப்புகள். படம், படவிளக்கம் தொடங்குகிறது. நட்சத்திர வடிவ அமைப்பு மற்றும் வட்ட வடிவ அமைப்பு குடியிருப்புகளின் படம் இங்கே தரப்பட்டுள்ளன, இதில் முதல் படத்தில் குடியிருப்பு நட்சத்திர அமைப்பிலும், இரண்டாவது படத்தில் வட்ட வடிவ அமைப்பிலும் வீடுகள் காணப்படுகின்றன. படவிளக்கம் முடிவடைகிறது. நீர் நிலைக் குடியிருப்புகள் (Wet Point Settlement) இவ்வகையான குடியிருப்புகள் வறண்ட நிலப் பிரதேசங்களில் நீர்நிலையையொட்டிய பகுதிகளில் காணப்படுகிறது. படம், படவிளக்கம் தொடங்குகிறது. நீர்நிலைக் குடியிருப்புக்கான படம், கடற்கரை ஒட்டிய பகுதியில் வீடுகள் அமைந்துள்ளது போல் உள்ளன. படவிளக்கம் முடிவடைகிறது. வறண்ட நில குடியிருப்புகள் (Dry Point Settlement) வறண்ட நில குடியிருப்பு என்பது அதை சுற்றியுள்ள நிலத்தைக் காட்டிலும் சற்று உயரத்தில் அமைந்துள்ள குடியிருப்பு ஆகும். நீர் ஆதாரங்களாலும், நிலத்தோற்ற அமைப்பாலும், உலர்நிலைக் குடியிருப்புகள் வெள்ளத்தால் பாதிக்கப்படுவதில்லை. இந்தியாவில் கேரளா கடற்கரையோரத்திலும் மற்றும் கிழக்கு கடற்கரை டெல்டா கரையோரப் பகுதிகளிலும் இவ்வகையான குடியிருப்புகள் காணப்படுகின்றன. உங்களுக்குத் தெரியுமா? (பெட்டிச் செய்தி) யாத்திரைக் குடியிருப்பு என்பது வழிபாட்டுத் தலங்களைச் சுற்றியும் அல்லது மத முக்கியத்துவம் வாய்ந்த இடங்களிலும் அமையும். எடுத்துக்க்காட்டு, தமிழ் நாட்டில் உள்ள பழனியில் காணப்படும் குடியிருப்புகள் நகர்ப்புறக் குடியிருப்புகள் நகர்ப்புறக் குடியிருப்புகளில் மக்கள் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலைத் தொழில்களில் ஈடுபடுகின்றனர். நகரம், மாநகரம், பெருநகரம் ஆகியவை நகர்புறமாகக் கருதப்படுகிறது. நகர்ப்புற குடியிருப்புகளின் வகைகள் நகர்ப்புறத்திற்கான வரையறையானது ஒரு நாட்டிற்கும் மற்றொரு நாட்டிற்கும் வேறுபடும். பொதுவான சில வகைப்பாடுகளாவன. மக்கள் தொகையின் அளவு தொழில் அமைப்பு நிர்வாகம் நகரம் (Town) வ்ரைவுத் துலங்கள் குறியீடு கொடுக்கப்பட்டுள்ளது, எண், G, S, U, Y, 2 குறைந்த பட்ச மக்கள் தொகையான 5000க்கும் அதிகமான மக்கள் இருக்கும் இடத்தையே நகரம் என்கிறோம். நகரங்கள் செயல்படும் நிகழ்வுகளின் அடிப்படையில் நிர்வாக நகரம், இராணுவ நகரம் மற்றும் கல்வி நகரம் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. மாநகரம் (City) நகரங்கள் பெரியதாக வளர்ச்சியடையும் போது, அவை பெருநகரங்கள் 6T601 அழைக்கப்படுகின்றன. நன்கு வளர்ச்சி அடைந்த மத்திய வாணிப வட்டத்தைக் கொண்ட, பல்வேறு தொழில்களை உள்ளடக்கிய ஒரு தனித்த குடியிருப்பே மாநகரமாகும். இந்தியாவில் ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு அதிகமானோர் உள்ள இடங்களையே மாநகரம் என அழைக்கிறோம். மிகப் பெரிய நகரம் (Mega City) 10 மில்லியனுக்கு மேல் மக்கள் தொகை கொண்ட பெரிய நகரமே மிகப்பெரிய நகரங்களாகும். இது ஒரு தனித்த தலைநகரமாகவும் செயல்படும். கேன்டன், டோக்கியோ, டெல்லி, மும்பை முதலியன மிகப்பெரிய நகரத்திற்கு சில எடுத்துக்காட்டுகள் ஆகும். உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) கூற்றுப்படி ஒரு ஆரோக்கியமான நகரத்திற்கு அவசியம் இருக்க வேண்டியவையாவன. தூய்மையான மற்றும் பாதுகாப்பான சுற்றுச்சூழல் அனைத்து மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுதல். உள்ளாட்சியில் உள்ளூர் மக்களை ஈடுபடுத்திக் கொள்ளுதல். எளிதாக கிடைக்கக் கூடிய ஆரோக்கிய சேவைகளை ஏற்படுத்திக்கொடுத்தல். மீப்பெரு நகர் (Megalopolis) இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மிகப்பெரிய நகரங்களின் மக்கள் தொகை பத்து மில்லியனுக்கும் மேலாகவும், பெரிய நகராக்கப் பரப்பையும் கொண்ட இடத்தைக் குறிப்பதே மீப்பெரு நகராகும். பாஸ்டனுக்கும் வாஷிங்டனுக்கும் இடைப்பட்ட பிரதேசம் நன்கு அறிந்த மீப்பெரு நகரமாகும். இந்தியாவில் டில்லி, மும்பை, கொல்கத்தா மிகபெரிய நகர்ப்புறப் பகுதியே மீப்பெரு நகரமாகும். குஜராத்தின் காந்தி நகர், சூரத், வதோதரா, இராஜ்கோட் ஆகியவையே முக்கியமான மீப்பெரு நகரங்களாகும். இணைந்த நகரம் (CONURBATION) மக்கள் தொகை வளர்ச்சியின் காரணமாக நில விரிவாக்கம் அடைந்து, தொழில் வளர்ச்சி அடைந்து சில நகரங்களையும் பெரு நகரங்களையும் நகர்ப்புறங்களையும் கொண்ட பிரதேசமே இணைந்த நகரமாகும். இந்தியாவில் மஹாராஷ்டிராவில் உள்ள மும்பை, ஹரியானாவின் குர்ஹான், பரிதாபாத், உத்திரப்பிரதேசத்தில் உள்ள நொய்டா ஆகியவை இணைந்த நகரத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டுகள் ஆகும். துணை நகரம் (Satellite town) அதிக அளவு மக்கள் தொகையைக் கொண்ட முக்கியமான பெரு நகரங்களில், நகர்ப்புறங்களுக்கு வடிவமைக்கப்படும் வெளியே வீடுகளே செயற்கைக் கோள் நகரமாகும். பொதுவாக செயற்கைகோள் நகரங்கள் கிராம, நகர்ப்புற எல்லைக்கு வெளியே அமைந்திருக்கும். இந்தியாவில் உள்ள அநேக செயற்கைக்கோள் நகரங்கள் குடியிருப்புப் பகுதிகளைக் கொண்டதாகவே உள்ளது. படம், துணை நகரத்திற்கானப் படம் கொடுக்கப்பட்டுள்ளது. படவிளக்கம் தொடங்குகிறது. படத்தில், வானளாவியக் அடுக்குமாடிக் கட்டடங்கள், வாகனங்கள், தூய்மையான சாலைகள் அதில் இடம் பெற்றுள்ளன. படவிளக்கம் முடிவடைகிறது. ஊரகத்திற்கும் நகரத்திற்கும் இடையே உள்ள ஒற்றுமை, வேற்றுமைகள் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன. அட்டவணை தொடங்குகிறது. ஊரகம் நகரம் ஊரகம், கிராமத்தில் வேளாண்மை முதன்மைத் தொழிலாகும். நகரம், நகர்ப்புறத்தில் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலைத் தொழில்களான தொழிற்சாலைகள் ஆட்கொண்டிருக்கும். ஊரகம், மக்களடர்த்தி குறைவு நகரம், மக்களடர்த்தி அதிகம் ஊரகம், கிராமங்கள் மற்றும் குக்கிராமங்கள் நகரம், பெருநகரங்கள் மற்றும் நகரங்கள் எளிதான, அமைதியான வாழ்க்கை நகரம், வேகமான, சிக்கல் நிறைந்த வாழ்க்கை அட்டவணை முடிவடைகிறது. பொலிவுறு நகரம் (Smart City) நகர்ப்புறப் பகுதியில் உள்கட்டமைப்பு வசதி, வீட்டுமனை விற்பனை, தொலைத்தொடர்பு, எளிதாக கிடைக்கக் கூடிய சந்தை உள்ள நகரங்களே சிறப்பு பொலிவுறு நகரங்களாகும். இந்தியாவில் உள்ள முதல் பத்து சிறப்புப் பொருளாதார நகரங்களாவன: புவனேஷ்வர், புனே, ஜெய்ப்பூர், சூரத், லூதியானா, கொச்சி, அகமதாபாத், ஜபல்பூர், விசாகப்பட்டினம், சோலாப்பூர் மற்றும் தாவனகெரா ஆகியன ஆகும். தமிழ்நாட்டில் 12 முக்கிய நகரங்கள் பொலிவுறு நகரங்களாக மாற்றப்பட உள்ளன. அவை சென்னை, மதுரை, திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருப்பூர், சேலம், வேலூர், கோயம்புத்தூர், தூத்துக்குடி, திண்டுக்கல் மற்றும் ஈரோடு ஆகும். படம், பொலிவுறு நகரத்தின் படம் கொடுக்கப்பட்டுள்ளது. படவிளக்கம் தொடங்குகிறது. படத்தில் அகண்ட நீண்ட சாலைகள், சாலையில் வாகனங்கள், இருபுறமும் பெரிய அடுக்குமாடி கட்டடங்கள் என காட்சியளிக்கின்றன. படவிளக்கம் முடிவடைகிறது. சுருக்கம்: பல்வேறு வகையான மரபுவழிக் கடத்தல் மூலம் மனித உயிரினம், உயிரியல் குழுக்களாக பிரிக்கப்படுவதே இனம் ஆகும். காக்கசா, நீக்ரோ, மங்கோலியர்கள், ஆஸ்ட்ரோலாய்டு ஆகியவை முக்கியமான இன வகைகளாகும். மொழியானது கலாச்சாரத்தின் நிலையான மதிப்புமிக்க அமைப்பாகும். மொழியினால் கலாச்சாரத்தை உயிர்ப்பிக்க முடியும். வாழவைக்க முடியும். குடியிருப்பானது, மக்கள்தொகையின் அடிப்படையில் கிராமம் மற்றும் நகரம் என்று பிரிக்கப்படுகிறது. குழுமிய குடியிருப்புகள் ஆற்றுப் பள்ளத்தாக்குகளிலும் வளமான சமவெளிகளிலும் வளர்ச்சியடைகின்றன. சிதறிய குடியிருப்பு பொதுவாக உயர்ந்த தட்பவெப்பநிலை, மலைப்பாதை, அடர்ந்த காடு, புல்வெளிகள் மற்றும் விவசாயத்திற்கு உகந்ததல்லாத நிலங்களின் அருகில் காணப்படும். பொலிவுறு நகரத்தில் உள்கட்டமைப்பு வசதிகள் மிகவும் முன்னேற்றத்துடன் இருக்கும். மதிப்பீடு விரைவுத் துலங்கள் குறியீடு கொடுக்கப்பட்டுள்ளது, எண், W, P, M, N, 9 1, சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் 1, காக்கச இனத்தை டேஷ் என்றும் அழைக்கலாம். அ) ஐரோப்பியர்கள் ஆ) நீக்ரோய்டுகள் இ) மங்கோலியர்கள் ஈ) ஆஸ்திரேலியர்கள் 2, டேஷ் இனம் ஆசிய அமெரிக்க இனமாகும். அ) காக்கச இனம் ஆ) நீக்ரோக்கள் இ) மங்கோலியர்கள் ஈ) ஆஸ்திரேலியர்கள் 3, உலக மக்கள் தொகை தினம் டேஷ் ஆகும். அ) செப்டம்பர் 1 ஆ) ஜூன் 11 இ) ஜூலை 11 ஈ) டிசம்பர் 2 4, கிராமப்புறக் குடியிருப்புகள் டேஷ் அருகில் அமைந்துள்ளது. அ) நீர்நிலைகள் ஆ) மலைப் பகுதிகள் இ) கடலோரப் பகுதிகள் ஈ) பாலைவனப் பகுதிகள் 5, அளவின் அடிப்படையில் கீழ்க்காணும் நகர்ப்புற குடியிருப்புகளை வரிசைப்படுத்துக. 1) நகரம் 2) மீப்பெருநகரம் 3) பெரு நகரம் 4) இணைந்த நகரம் அ) 4, 1, 3, 2 ஆ) 1, 3, 4, 2 இ) 2, 1, 3, 4 ஈ) 3,1,2,4 2, கோடிட்ட இடங்களை நிரப்புக 1, தென் ஆப்பிரிக்காவின் டேஷ் பாலைவனத்தில் புஷ்மென்கள் காணப்படுகின்றனர். 2, மொழியின் பங்கு என்பது டேஷ் குடும்ப பகிர்வு அம்சங்களின் தோற்றம் மற்றும் தொகுப்பாகும். 3, டேஷ் குடியிருப்பில் மக்கள் பெரும்பாலும் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை செயல்களில் ஈடுபட்டிருப்பார்கள். 4, டேஷ் நகரங்கள் பொதுவாக கிராமப்புற நகர்ப்புற எல்லைக்கு வெளியே அமைந்திருக்கும். 5, டேஷ் குடியிருப்பானது வழிபாட்டுத் தலங்களைச் சுற்றி அமைந்திருக்கும். 3, அ, பொருத்துக 1, காக்கச இனம் - ஆசிய அமெரிக்கர்கள் 2, நீக்ரோ இனம் - ஆஸ்திரேலியர்கள் 3, மங்கோலிய இனம் - ஐரோப்பியர்கள் 4, ஆஸ்ட்ரலாய்டு இனம் – ஆப்பிரிக்கர்கள் ஆ, பொருத்துக 1, சட்லஜ்-கங்கைச் சமவெளி - சிதறிய குடியிருப்பு 2, நீலகிரி - நட்சத்திர வடிவக் குடியிருப்பு 3, தென் இந்தியா- செவ்வக வடிவஅமைப்பு 4, கடற்கரை- குழுமிய குடியிருப்பு 5, ஹரியானா - வட்டக் குடியிருப்பு 4, கீழே கொடுக்கப்பட்டுள்ளவாக்கியத்தை கருத்தில் கொண்டு சரியானதை டிக் செய்யவும் 1, கூற்று: உலகில் அநேக மொழிகள் பேசப்படுகின்றன. காரணம்: மொழி வேற்றுமை உலகில் அதிக அளவில் காணப்படுகிறது. அ) கூற்றும் காரணமும் சரி, கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது ஆ) கூற்றும் காரணமும் சரி ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை இ) கூற்று தவறு, காரணம் சரி ஈ) கூற்றும் காரணமும் தவறானவை. 2, கூற்று: பழனி தமிழ்நாட்டில் யாத்திரைக் குடியிருப்பிற்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும். காரணம்: அங்கு இரும்பு எஃகு தொழிற்சாலை அமைந்துள்ளது. அ) கூற்றும் காரணமும் சரி, கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது ஆ) கூற்றும் காரணமும் சரி ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை இ) கூற்று தவறு காரணம் சரி ஈ) கூற்று சரி காரணம் தவறு 5, பொருந்தாததை வட்டமிடுக 1, மீன்பிடித்தல், மரம் அறுத்தல், விவசாயம், வங்கி அலுவல் 2, இமயமலை, ஆல்பஸ், ராக்கி, கங்கை 3, சென்னை, மதுரை, திருநெல்வேலி, காஞ்சிபுரம் 6, கீழ்க்காண்பனவற்றிற்கு சுருக்கமாக விடையளிக்கவும் 1, இனங்களின் வகைகள் யாவை? 2, மொழி என்றால் என்ன? 3, குடியிருப்பு வரையறு. 4, நகர்ப்புறகுடியிருப்புகள் எதன் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன? 5, பொலிவுறு நகரம் பற்றி சிறு குறிப்பு வரைக. 7, காரணம் கூறுக 1, மும்பை ஒரு மிகப்பெரிய நகரம். 2, இமயமலைப் பகுதியில் சிதறிய குடியிருப்பு காணப்படுகிறது. 8, வேறுபடுத்துக 1, மொழி மற்றும் மதம் 2, நீக்ரோஇனம் மற்றும் மங்கோலியஇனம் 3, பெருநகரம் மற்றும் நகரம் 4, நகர்ப்புற குடியிருப்பு மற்றும் கிராமப்புறக் குடியிருப்பு 9, பத்தியளவில் விடையளி 1, நான்கு முக்கிய மனித இனங்களைப் பற்றி விவரிக்கவும். 2, கிராமப்புறக் குடியிருப்பைக் கட்டுப்படுத்தும் காரணிகள் யாவை? 3, கிராமப்புறக் குடியிருப்பின் வகைகள் யாவை? ஏதேனும் மூன்றினைப் பற்றி விரிவாக எழுதவும். 10, செயல்முறைகள் ஆராய்க, கேட்கப்பட்டுள்ள வினாக்களுக்கு கிராமம் அல்லது நகரம் என பதில் எழுதவேண்டும். அட்டவணை தொடங்குகிறது. 1. நீ எங்கு வசிக்கிறாய்? கிராமம் /நகரம் 2. நீ வசிக்கும் குடியிருப்பு அமைப்பின் பெயரை எழுதவும் 3. நீ இருக்கும் இடத்தில் அமைந்துள்ள நீர் நிலைகளைப் பற்றிக் குறிப்பிடுக. 4. உன் பகுதியில் நடைபெறும் செயல்பாடுகள் சிலவற்றைக் குறிப்பிடுக 5. உன் பகுதியில் பயன்படுத்தப்படும் போக்குவரத்து வாகனங்களின் பெயர்களை எழுதுக. அட்டவணை முடிவடைகிறது. மேற்கோள் நூல்கள் 1, Dr. S.D Maurya (2016) Cultural Geography, Sharda Pustak Bhawan publication, Allahabad. 2, R.Y. Singh (2007) Geography of Settlements, Rawat publications, New Delhi 3, Majid Husain (2002) Human Geography, Rawat publications Jaipur ad New Delhi குடிமையியல் அலகு – 1 சமத்துவம் படம், நியாயத் தராசு படம் தரப்பட்டுள்ளது. கற்றலின் நோக்கங்கள் விரைவுத் துலங்கள் குறியீடு கொடுக்கப்பட்டுள்ளது, எண், M, 2, 1, Z, W சமத்துவத்தின் பொருள் பற்றி புரிந்துகொள்ளல் சமத்துவத்தின் முக்கியத்துவத்தை தெரிந்துகொள்ளுதல் சமத்துவத்தின் பல்வேறு வகைகளைப் பற்றி கற்றுக்கொள்ளல் நமது அரசியலமைப்பில் சமத்துவத்தை உறுதி செய்வதற்கான பல்வேறு சட்டப்பிரிவுகளைப் பற்றி தெரிந்துகொள்ளல். படம், படவிளக்கம் தொடங்குகிறது. ஒரு குடும்பத்தில் வேளைக்குச் செல்லும் தம்பதியினர் பேசிக்கொள்வது போல் அமைந்துள்ளது, நீ இன்று மிகவும் களைப்பாக இருக்கிறாயே ஏன்? அலுவலகத்தில் மிக அதிகமான வேலை வீட்டு வேலைகளை நாம் பகிர்ந்து கொள்வோம் சரி, மிகவும் நன்றி!, அந்த ஆண் துணி துவைப்பது போலவும், சமையல் செய்வது போலவும் படம் அமைந்துள்ளது. படவிளக்கம் முடிவடைகிறது. அறிமுகம் இயற்கை மனிதனை நிறம், உயரம், திறமை, உடல் வலிமை ஆகியவற்றில் சமமாக உருவாக்கவில்லை. மேலும் இயற்கையான சமத்துவமின்மையை சரிசெய்ய இயலாது. ஒரே மாதிரியாக உள்ள இரட்டைக் குழந்தைகள் கூட அவர்களது திறமையில் ஒன்றாக இருப்பதில்லை. சாதி, மதம், மொழி, பொருளாதாரம் ஆகியவற்றின் அடிப்படையில் மனிதனால் ஏற்படுத்தப்பட்ட சமத்துவமின்மையை சரி செய்ய முடியும். மனிதர்கள் தங்களது திறன், வலிமை, எண்ணம் ஆகியவற்றில் வேறுபடுவார்கள என்பது அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்று. அது போல அவர்கள் அனைவருக்கும் திறன்கள் மற்றும் திறமைகள் மேம்பட சமமான வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும். சமத்துவம் என்றால் என்ன? சமத்துவம் என்பது ஒரு தனி மனிதன் அல்லது ஒரு குழு வேறுபாடு காட்டி நடத்தப்படாமல் இருத்தல் அல்லது சிறப்பாக பாதுகாக்கப்பட்ட இயல்புகளான இனம், பாலினம், இயலாமை, சமயம் அல்லது நம்பிக்கை, பாலியல் சார்ந்த போக்கு, வயது ஆகியவற்றின் அடிப்படையில் குறைவாக நடத்தப்படாமல் இருத்தல் ஆகும். பேராசிரியர் லாஸ்கி அவர்களது கூற்றின்படி சமத்துவம் என்பது சமமாக நடத்துவது மட்டுமல்ல, வெகுமதி அளிப்பதிலும் சமத்துவம் இருப்பதாகும். முதலாவதாக சமூக சிறப்புரிமை இல்லாததும் இரண்டாவதாக போதுமான வாய்ப்புகள் அனைவருக்கும் வழங்கப்படுவதும் ஆகும்." சமத்துவத்தின் முக்கியத்துவம் சமத்துவம் பல நூற்றாண்டுகளாக மனித சமூகத்தை ஊக்குவித்து வழி நடத்திய ஆற்றல் வாய்ந்த நீதி மற்றும் அரசியல் கோட்பாடாகும். சமத்துவம் என்ற கோட்பாடு மனித இனம் அதனுடைய சாதி, நிறம், பாலினம், இனம் அல்லது தேசியம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அனைத்து மனிதர்களும் சமமான மதிப்புள்ளவர்கள் என்ற கோட்பாட்டை அறைகூவுகிறது. மக்களாட்சிக் கோட்பாடுகளான சுதந்திரம், சமத்துவம் ஆகியவை நீதியின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படும்போது மட்டுமே பொருளுடையவையாக இருக்கும். சமத்துவத்தின் வகைகள் சமூக சமத்துவம் அனைத்து குடிமக்களும் சம தகுதியை அடைய உரிமை கொண்டவர்கள் என்பதே சமூக சமத்துவம் ஆகும். சமூகத்தில் சாதி, சமயக்கொள்கை, நிறம் மற்றும் இனம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு இருத்தல் கூடாது. அனைவரும் தங்களது ஆளுமை மற்றும் நோக்கங்களை அடைவதற்கு சமமான வாய்ப்புகளைப் பெற்றிருத்தல் வேண்டும். படம், சமூக சமத்துவத்திற்கானப் படம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது, பட விளக்கம் தொடங்குகிறது. படத்தில் வயதானவர், வாலிபர், மாற்றுத் திறனாளி, இளம் பெண்கள், சிறுமிகள், சிறுவர்கள் ஆகியோரின் படம் தரப்பட்டுள்ளது. படவிளக்கம் முடிவடைகிறது. குடிமை சமத்துவம் அனைத்து குடிமக்களும் குடியியல் உரிமைகளை அடைதல் வேண்டும் என்பதே குடிமை சமத்துவம் ஆகும். குடிமக்களிடையே உயர்ந்தோர், தாழ்ந்தோர்; ஏழை, பணக்காரர், சாதி மற்றும் சமயக்கொள்கை ஆகியவை காரணமாக பாகுபாடு இருத்தல் கூடாது. சமத்துவ உரிமைகள் அனைவருக்கும் கிடைக்கச் செய்வதோடு எந்த உரிமையும் எவருக்கும் மறுக்கப்படுதல் கூடாது. இங்கிலாந்தில் சட்டத்தின் ஆட்சி என்ற கோட்பாடு உள்ளது. அங்கு சட்டத்தின் பார்வையில் அனைவரும் சமம் என்பதோடு அது அனைவரையும் சமமாக நடத்துகிறது. இந்தியாவிலும் அதைப் போலவே சட்டத்தின் ஆட்சிக் கோட்பாடு பின்பற்றப்படுகிறது. சட்டத்தின் ஆட்சி என்ற பதத்தை, ஏ.வி.டைசி என்ற பிரிட்டிஷ் சட்ட வல்லுநர் வாதுரைத்தார். அரசியல் சமத்துவம் இந்தியா உள்ளிட்ட அனைத்து மக்களாட்சி நாடுகளும் அவற்றின் குடிமக்களுக்கு அரசியல் உரிமைகளை உறுதியளிக்கின்றன. அவை பின்வருமாறு: வாக்களிக்கும் உரிமை பொது அலுவலகத்தில் பங்குகொள்ளும் உரிமை அரசை விமர்சனம் செய்யும் உரிமை படம், படவிளக்கம் தொடங்குகிறது. அரசியல் சமத்துவம், வாக்களித்தவர்களின் மையிட்ட விரல்கள் இங்கே வட்ட வடிவில் படமாகத் தரப்பட்டுள்ளன. படவிளக்கம் முடிவடைகிறது. குடிமக்கள் அனைவரும் அரசியல் வாழ்வில் தீவிரமாக பங்கெடுப்பதற்கு சமமான வாய்ப்பினை பெற்றிருத்தல் வேண்டும் இந்த உரிமைகள் அனைவருக்கும் வாக்குரிமை என்பதன் அடிப்படையில் மக்களுக்கு கிடைக்கின்றது. இந்தியாவில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் எவ்வித பாகுபாடும் இல்லாமல் வாக்குரிமை அளிக்கப்பட்டுள்ளது. 1952ஆம் ஆண்டில் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலிலேயே இந்தியாவில் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது. ஆனால் சுவிட்சர்லாந்து நாட்டில் 1971ஆம் ஆண்டில் தான் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது. இந்தியாவில் 25 வயது பூர்த்தி அடைந்த எவரும் தேர்தலில் போட்டியிடலாம். அரசை விமர்சிக்கலாம் என்ற உரிமை ஒரு முக்கியமான உரிமை என்பதோடு மக்கள் தங்களது மாறுபட்ட கருத்துக்களை பல்வேறு வகையிலும் தெரிவிக்கலாம். நாட்டின் பிரதமரின் வாக்கின் மதிப்பும் ஒரு சாதாரண மனிதனின் வாக்கின் மதிப்பும் பொதுத் தேர்தலில் ஒன்றே என்பது அரசியல் சமத்துவத்தைக் குறிக்கிறது. பாலின சமத்துவம் மனித இனங்களில் ஆண் பெண் இருவரும் தமது தனிப்பட்ட திறனை சுதந்திரமாக மேம்படுத்திக் கொள்ளலாம். தங்களது விருப்பங்களை எவ்வித கட்டுப்பாடுமின்றி ஏற்படுத்தியும் கொள்ளலாம். பெண்களுக்கு சம உரிமை அளிக்கப்படவில்லை மேலும் அவர்கள் ஆண்களைக் காட்டிலும் பலவீனமானவர்கள் என்பதோடு சமூகத்தில் ஆண்களுக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் அவர்களை வைத்துள்ளனர். அவர்கள் சமமாக நடத்தப்பட வேண்டும். சமமாக நடத்தப்பட வேண்டும் என்பது அவர்கள் இருவரும் ஒன்றாகஆக வேண்டும் என்பது இல்லை. ஆனால் உரிமைகள், பொறுப்புகள் மற்றும் வாய்ப்புகள் ஆகியவை ஆண், பெண் என்பதை பொறுத்து அமைதல் கூடாது. பாலியல் சமத்துவம் என்பது ஆண், பெண் இருவரும் வாய்ப்புகள் மற்றும் வளங்களை பெறுதல் ஆகும். பெண்கள் பொருளாதார நடவடிக்கைகளில் பங்கெடுக்கவும் முக்கியமான முடிவுகளை எடுக்கவும் உரிமை கொண்டவர்கள் ஆவர். பெண்கள் தமது திறன் மற்றும் கடின உழைப்பால் எவ்விதத்திலும் ஆண்களுக்கு குறைவானவர்கள் அல்லர் என்பதை நிரூபித்துள்ளனர். பெண்கள் தற்போது எல்லை பாதுகாப்பு படை, இந்திய விமானப்படைகளில்வெற்றிகரமாக பணிபுரிந்து வருகின்றனர். பெண்களை மேம்படுத்தும் விதமாக உள்ளாட்சி அமைப்புகளில் 50% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. பெட்டிச் செய்தி பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்து பல்வேறு முயற்சிகள் பெண்களின் முன்னேற்றத்திற்காக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ராஜா ராம் மோகன் ராய், ஈஸ்வர சந்திர வித்யாசாகர், தயானந்த சரஸ்வதி, மகாதேவ் கோவிந்தரானடே, தாராபாய் ஷிண்டே, பேகம் ருகேயா சகாவத் உசேன், சாவித்திரிபா புலே ஆகியோர் பெண்கள் சம அந்தஸ்து பெறுவதற்கு கடினமாக பணியாற்றியவர்களில் குறிப்பிடத்தகுந்தவர்கள் ஆவர். பாலின சமத்துவம் என்பது "பெண்கள், ஆண்கள், சிறுவர், சிறுமியர் ஆகியோர் சமமான உரிமைகள், வாய்ப்புகள் பெற வேண்டும் என்று கூறுவதோடு அவர்கள் ஒன்று போல நடத்தப்பட வேண்டும்" எனயூனிசெப் நிறுவனம் கூறுகிறது. ஐக்கிய நாடுகள் சபை 2017ஆம் ஆண்டில் நிலையான மேம்பாட்டிற்கான 17 குறிக்கோள்களில் பாலின சமத்துவம் என்பது ஐந்தாவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மனித மாண்பு மனித மாண்பு என்பது சுய மரியாதை ஆகும். மனித மாண்பு என்பது முக்கியமான மனித உரிமை என்பதோடு மட்டுமல்லாமல் இதிலிருந்தே அனைத்து அடிப்படை உரிமைகளும் தோன்றுகின்றன. மாண்பு என்பது கௌரவமான, மேலான மற்றும் சிறந்த தகுதி ஆகும். ஒவ்வொரு மனிதனும் சமூகத்தின் ஒரு மதிப்பு மிக்க உறுப்பினர் என்பதை கருதுதல் வேண்டும். வாய்ப்பு மற்றும் கல்வியில் சமத்துவம் அனைத்து தனி மனிதர்களும் கல்வியினை பெறுவதற்கு வாய்ப்புகளை கொண்டிருத்தல் வேண்டும். அவர்களது ஆளுமையை மேம்படுத்த வாய்ப்புகள் பெற்றிருத்தல் வேண்டும். சமூகத்தில் நாம் சமமாக நடத்தப்படுவதற்கு நமக்கு சமத்துவம் தேவைப்படுகிறது. நாம் சமமாக நடத்தப்பட்டால் மதிப்பையும் மாண்பையும் பெறுவோம். இந்திய அரசியலமைப்பில் சமத்துவம் உலகின் அனைத்து நாடுகளின் அரசியல் அமைப்புகளும் அதன்மக்களுக்கு சமத்துவத்தை உறுதி அளித்துள்ளன. இதேபோன்று இந்திய அரசியலமைப்பு அதன் குடிமக்களுக்கு அரசியலமைப்பு சட்டப்பிரிவுகள் 14-18 மூலம் சமத்துவத்தை அளிக்கிறது. சட்டத்தின் முன் அனைவரும் சமம் மற்றும் அனைவருக்கும் சட்டத்தின்படி சமமான பாதுகாப்பு என்பது அரசியலமைப்பு சட்டப் பிரிவு21 இல் மேலும் வலிமைப்படுத்தப்பட்டுள்ளது. பெட்டிச் செய்தி சட்டப்பிரிவு 14 - சட்டத்தின் முன் அனைவரும் சமம் என உத்தரவாதம் அளிக்கிறது. சட்டப்பிரிவு 15 - பாகுபாட்டை தடை செய்கிறது. சட்டப்பிரிவு 16 -பொது வேலைவாய்ப்பில் அனைவருக்கும் சம வாய்ப்பு அளிக்கிறது. சட்டப்பிரிவு 17 - தீண்டாமையை ஒழிக்கிறது. சட்டப்பிரிவு 18 - பட்டங்கள் அளித்து வேறுபடுத்துதலை தடை செய்கிறது. நாம் பின்வரும் வழிகளில் சமத்துவத்தை மேம்படுத்தலாம் அனைவரையும் நியாயமாக நடத்துதல் அனைவரையும் உள்ளடக்கிய ஒரு பண்பாட்டினை உருவாக்குதல் அனைவரும் வாய்ப்புகள் பெறுவதை உறுதிப்படுத்துதல் முழுஆற்றலையும் மேம்படுத்த ஊக்குவித்தல் சட்டம் மற்றும் கொள்கைகளை வகுத்தல் கல்வி முடிவுரை இந்தியா உலகின் மிகப்பெரிய மக்களாட்சி நாடாகும். சமத்துவம் மற்றும் நீதி என்பது மக்களாட்சியின் தூண்கள் ஆகும். மக்கள் சமமாக நடத்தப்படும்போது நீதி எட்டப்படும். சமத்துவம் என்பது மிகவும் முக்கியமானதாகும், ஏனெனில் அது தனிமனித மாண்பினை தக்க வைக்கிறது. சமூகம் நல்ல முறையில் இயங்குவதற்கு சமத்துவம் ஒரு முக்கியமான கோட்பாடு ஆகும். சுருக்கம்: சுதந்திரம் மற்றும் சமத்துவம் என்பது மக்களாட்சியின் இரண்டு அடிப்படைக் கோட்பாடுகள் ஆகும். அனைத்து மக்களும் சட்டத்தின் முன்பாக சமம். அனைவருக்கும் அரசியல் வாழ்வில் பங்கேற்க சமமான வாய்ப்புகள் வழங்கப்படுதல் வேண்டும். குடியியல் உரிமை என்பது சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை குறிக்கிறது. பாலின சமத்துவம் என்பது ஆண், பெண் இருவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதை குறிக்கிறது. அரசாங்கத்தின் பல்வேறு சட்டச் செயல்பாடுகள் பாலின சமத்துவத்தை நோக்கமாகக் கொண்டுள்ளன. கலைச்சொற்கள், அட்டவணை தொடங்குகிறது. சமத்துவம் Equality absence of any privilege to anybody சட்டத்தின் ஆட்சி Rule of law rule based on law முடியாட்சி Monarchy government by a single person சலுகைகள் Privileges special concessions பாகுபாடு Discrimination difference அட்டவணை முடிவடைகிறது. பயிற்சி விரைவுத் துலங்கள் குறியீடு கொடுக்கப்பட்டுள்ளது, எண், 2, C, P, 6, 5 1, சரியான விடையைத் தேர்வு செய்க 1, பின்வருவனவற்றுள் எது சமத்துவத்தின் கீழ் வருவதில்லை? அ) பிறப்பு, சாதி, மதம், இனம், நிறம், பாலினம் அடிப்படையில் பாகுபாடு இன்மை ஆ) தேர்தலில் போட்டியிடும் உரிமை இ) அனைவரும் சட்டத்தின் முன் சமமாக நடத்தப்படுதல் ஈ) பணக்காரர்கள் மற்றும் ஏழைகள் இடையில் சமத்துவமின்மையைக் காட்டுதல் 2, கீழ்கண்டவைகளில் எது அரசியல் சமத்துவம் ஆகும்? அ) அரசாங்கத்திற்கு மனு செய்வது மற்றும் பொதுக் கொள்கைகளை விமர்சிப்பது. ஆ) இனம், நிறம், பாலினம் மற்றும் சாதி அடிப்படையில் சமத்துவமின்மை அகற்றப்படுதல் இ) சட்டத்தின் முன் அனைவரும் சமம் ஈ) சட்டம் கைகளில் செல்வம் செறிவு தடுப்பு 3, இந்தியாவில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் வாக்களிக்கும் உரிமை வழங்கப்படும் வயது. அ) 21 ஆ) 18 இ) 25 ஈ) 31 4, சாதி, பணம், அடிப்படையில் மதம் ஆகியவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சமத்துவமின்மை அ) இயற்கை சமத்துவமின்மை ஆ) மனிதனால் உருவாக்கப்பட்ட சமத்துவமின்மை இ) பொருளாதார சமத்துவமின்மை ஈ) பாலின சமத்துவமின்மை 5, சுவிட்சர்லாந்தில், பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்ட ஆண்டு அ) 1981 ஆ) 1971 இ) 1991 ஈ) 1961 2, கோடிட்ட இடங்களை நிரப்புக 1, குடிமை சமத்துவம் டேஷ் க்கு முன்பு அனைவரும் சமம் என்பதைக் குறிக்கிறது. 2, டேஷ் முதல் டேஷ் வரையிலான இந்திய அரசியலமைப்புச் சட்ட பிரிவுகள் சமத்துவ உரிமையைப்பற்றி குறிப்பிடுகின்றன. 3, தேர்தலில் போட்டியிடும் உரிமை என்பது டேஷ் உரிமை ஆகும். 4, சமத்துவம் என்பது முதலாவதாக டேஷ் இல்லாததாகும். 3, குறுகிய விடையளி 1, சமத்துவம் என்றால் என்ன? 2, பாலின சமத்துவம் ஏன் தேவையானது? 3, குடிமை சமத்துவம் என்றால் என்ன? 4, விரிவான விடையளி 1, சமத்துவத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி எழுதுக. 2, அரசியல் சமத்துவம் என்றால் என்ன? 3, இந்திய அரசியலமைப்பு சட்டம் சமத்துவத்திற்கான உரிமையை எவ்வாறு பாதுகாக்கிறது? 5, உயர் சிந்தனை வினா 1, பள்ளிகளில் சமத்துவமின்மையை நாம் எவ்வாறு அகற்ற முடியும்? 6, வாழ்வியல் திறன், எந்த சமத்துவ வகையைச் சார்ந்தது என எழுத வேண்டும். சமத்துவத்தின் வகைகள் பற்றி அறிதல் எந்த சமத்துவ வகையைச் சார்ந்தது வரிசை எண், 1. சமத்துவத்தின் வகை, தகுதி, சாதி, நிறம், மதம் மற்றும் தரம் ஆகியவற்றின் அடிப்படையில் குடிமக்கள் மத்தியில் எந்த பாகுபாடுகளும் இருக்கக் கூடாது. வரிசை எண், 2. சமத்துவத்தின் வகை, சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் வரிசை எண், 3. சமத்துவத்தின் வகை, வாக்களிப்பதற்கான உரிமை, அரசாங்க அலுவலகத்தில் பணியாற்றும் உரிமை, அரசாங்கத்தை விமர்சிக்கும் உரிமை வரிசை எண், 4. சமத்துவத்தின் வகை, எந்த விதத்திலும் ஆணுக்கு குறைவாக என் திறமை இல்லை. மேற்கோள் நூல்கள் 1, Eddy Asirvatham, Misra, K.K, Political Theory, S.Chand & Company, New Delhi, 2004. 2, Agarwal, R.C, Political Theory, S.Chand & Company, New Delhi, 2009. 3, Kapur, A.C. Principles of Political Science, S.Chand & Company, New Delhi, 2000 அலகு – 2 அரசியல் கட்சிகள் படம், படவிளக்கம் தொடங்குகிறது. அரசியல் கட்சிகள் பாடத்தலைப்புக்காக தமிழ்நாடு அரசு தலைமைச் செயலக முகப்புப் படமும், இந்தியப் பாராளுமன்றத்தின் முகப்புப் படமும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன, படவிளக்கம் முடிவடைகிறது. கற்றலின் நோக்கங்கள் விரைவுத் துலங்கள் குறியீடு கொடுக்கப்பட்டுள்ளது, எண், E, 2, S, D, 9 அரசியல் கட்சி என்பதை வரையறை செய்தல் மற்றும் அதன் முக்கியத்துவத்தை அறிதல் அரசியல் கட்சியின் பங்கு மற்றும் செயல்பாட்டினை தெரிந்துகொள்ளல் இந்தியாவில் கட்சி முறையையும் எதிர்க்கட்சியின் பங்கினையும் அறிந்துகொள்ளுதல் மாணவன் சிவாவும் ஆசிரியை ஆதியும் பேசிக்கொள்ளும் உரையாடல் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. மாணவன் சிவா: வணக்கம் அம்மா. நான் உள்ளே வரலாமா? ஆசிரியை ஆதி: வணக்கம் சிவா. எப்போதும் சரியான நேரத்திற்கு வருகைதரும் நீ இன்று ஏன் தாமதம்? சிவா: மன்னிக்க வேண்டும் அம்மா. ஒரு ஊர்வலத்தின் காரணமாக எனக்கு தாமதம் நேரிட்டது. ஆதி: என்ன ஊர்வலம் அது? யார் ஏற்பாடு செய்தது? சிவா: அது ஒரு அரசியல் கட்சியின் ஏற்பாடு என்று எனது மாமா சொன்னார். ஆதி: அப்படியா? சிவா: அரசியல் கட்சி என்றால் என்ன அம்மா? ஏன் அவர்கள் அவ்வாறு செய்கிறார்கள்? ஆதி: காத்திரு. இன்று அரசியல் கட்சிகளைப் பற்றிதான் பாடம் நடத்த உள்ளேன். அவற்றைப் பற்றி நாம் அறிந்து கொள்வோம். ஆரம்பக் காலங்களில் பேரரசர்களும் அரசர்களும் ஆட்சி செய்தனர். அரசர், சட்டம் இயற்றுதல், நிர்வாகம், நீதி வழங்குதல் ஆகியவற்றின் தலைமையிடமாக இருந்தார். நிர்வாகம் அவர் ஒருரின் கையில் மட்டுமே இருந்தது. மக்களின் நலன் என்பது அரசரை பொருத்துதிருந்தது. மக்கள் அரசருக்கு எதிராக செயல்படும் உரிமையை பெற்றிருக்கவில்லை. பின்னர் அன்னிய நாடுகள் இந்தியாவை குடியேற்ற நாடாக உருவாக்கின. குடியேற்ற நாடுகள் பின்னர் சுதந்திர நாடுகளாக அறிவிக்கப்பட்டன. இந்தியா 1950ஆம் ஆண்டு மக்களாட்சி நாடானது. துடிப்பான ஒரு மக்களாட்சி நாட்டிற்கு ஒரு வலிமையான அரசியல் கட்சி முறை அவசியமான ஒன்றாகும். கட்சி முறை என்பது நவீனகால தோன்றல் ஆகும். மக்களாட்சியில் மக்கள் எந்த செயல்பாடுகள் குறித்தும் தங்களது கருத்துக்களை வெளியிடலாம். அரசியல் கட்சிகள் என்றால் என்ன? அரசியல் கட்சிகள் என்பவை தன்னார்வத்தோடு ஏற்படுத்தப்பட்ட தனி மனிதர்களின் அமைப்பு ஆகும். இவை பரந்த கருத்தியல் அடையாளங்களோடு சில கொள்கைகளை ஏற்றுக்கொண்டு சமூகத்திற்கான திட்டங்களையும் நிரல்களையும் வடிவமைக்கின்றன. மேலும் அரசியல் கட்சிகள் மக்களின் ஆதரவை பெற்று தேர்தலில் வெற்றிபெறுவதன் மூலம் தமது கொள்கைகளை நடைமுறைப்படுத்துகின்றன. அவற்றின் அளவு, அமைப்பு மற்றும் கொள்கை ஆகியவற்றின் அடிப்படையில் வேறுபடுகின்றன. எந்த ஒரு அரசியல் கட்சியும் பின்வரும் மூன்று அடிப்படைக் அங்கங்களைக் கொண்டிருக்கும். தலைவர் செயல் உறுப்பினர்கள் தொண்டர்கள் அரசியல் கட்சிகளின் முக்கியத்துவம் அரசியல் கட்சிகள் மக்களாட்சியின் முதுகெலும்பு எனலாம். அரசியல் கட்சிகள் முறையாக அமைக்கப்பட்ட அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இல்லாமல் அரசாங்கத்தை அமைக்கும் முக்கிய காரணிகளாக இருக்கின்றன. அவை பொதுகருத்துக்களை உருவாக்குகின்றன. கட்சிகள் குடிமக்களுக்கும் கொள்கை வகுப்பாளர்களுக்கும் இடையே பாலமாக சேவை செய்கின்றன. ஒரு கட்சி அங்கீகரிக்கப்படுவது எவ்வாறு எனில் ஐந்து ஆண்டுகளாக அக்கட்சி அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட்டிருக்க வேண்டும். அக்கட்சி வேட்பாளர்கள் குறைந்தபட்சம் 6% வாக்குகளை இறுதியாக நடைபெற்ற பொதுத் தேர்தலில் பெற்றிருத்தல் வேண்டும். அரசியல் கட்சிகளின் பண்புகள் அரசியல் கட்சிகள் என்பது பொதுவான குறிக்கோள்கள் மற்றும் பகிர்ந்தளிக்கப்பட்ட மதிப்பீடுகளை கொண்ட மக்கள் குழுக்களாக இருக்கின்றன. தனக்கென கொள்கை மற்றும் திட்டங்களை கொண்டிருக்கின்றன. அரசியல் அமைப்பின் வழியாக மட்டுமே அதிகாரத்தை கைப்பற்ற முயற்சிக்கின்றன. தேசியம் மற்றும் தேசிய நலன்களை மேம்படுத்த முயற்சிக்கின்றன. கட்சியின் 'தேர்தல் அறிக்கை' தேர்தலுக்கு முன்பான பரப்புரையில் வேட்பாளர்கள் தங்களது கட்சி ஆட்சிக்கு வந்தால் மேற்கொள்ளப்படும் திட்டங்கள், கொள்கைகளை அறிவிப்பார்கள். கட்சி முறைகளின் வகைகள் மூன்று வகையான கட்சி முறைகள் நடைமுறையில் இருக்கின்றன. ஒரு கட்சி முறை இம்முறையில் ஒரே அரசியல் கட்சி மட்டும் அரசாங்கத்தை ஏற்படுத்தும் உரிமையைக் கொண்டிருக்கும். இவ்வகையான ஒரு கட்சி முறை பொதுவுடைமை நாடுகளான சீனா, வடகொரியா மற்றும் கியூபா ஆகிய நாடுகளில் நடைமுறையில் இருக்கின்றன. படம், அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் குறித்து கருத்து வரைபடம் கொடுக்கப்பட்டுள்ளது. அதிலுள்ள கருத்துகள் பின்வருமாறு, அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் வழங்குதல், நேர்மையான எதிர்ப்பு, பொறுப்புடைமை, ஸ்திரத்தன்மை வழங்குதல். பரிந்துரைத்தல், தேர்ந்தெடுக்கப்பட்ட அலுவலகத்திற்கு தனி நபரை பரிந்துரைத்தல். ஏற்பாடு செய்தல், அரசியல் பிரச்சாரம், பேரணி ஆகியவற்றை ஏற்பாடு செய்தல், தேர்தலில் வெற்றிபெற தேர்தல் அறிக்கையை வெளியிடுதல். ஊக்குவித்தல், மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களையும் கொள்கைகளையும் முன்வைத்தல். ஒருங்கிணைத்தல், சமுதாயத்தையும் அரசையும் இணைத்தல். தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களை ஒருங்கிணைத்தல். ஆட்சி அமைத்தல், அரசாங்கத்தை ஏற்படுத்தி இயக்குதல். பொதுவான கொள்கையை உருவாக்குதல். இரு கட்சி முறை இம் முறையில் இரண்டு கட்சிகள் அதிகாரத்தை பங்கு கொள்ளும் வகையில் ஏற்படுத்தப்பட்டிருக்கும். இவற்றில் ஒன்று ஆளும் கட்சியாகவும் மற்றொன்று எதிர்க்கட்சியாகவும் செயல்படும். இருகட்சி முறை, பிரிட்டன் (தொழிலாளர் கட்சி மற்றும் பழமைவாதக் கட்சி), அமெரிக்க ஐக்கிய நாடுகளில் (குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி) காணப்படுகின்றன. பல கட்சி முறை அதிகாரத்திற்கான போட்டி மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட கட்சிகளிடையே இருக்குமாயின் அது பல கட்சி முறை என அழைக்கப்படுகிறது. இம்முறை இந்தியா பிரான்ஸ், சுவீடன், நார்வே உள்ளிட்ட நாடுகளில் காணப்படுகிறது. இந்தியாவில் அரசியல் கட்சி முறை கூட்டாட்சி அமைப்பினை பின்பற்றும் நாடுகளில் இருவகையான கட்சிகள் காணப்படுகின்றன. இந்தியாவில் கட்சி முறை பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றியது. உண்மையில் இந்தியாவில், உலகின் அதி எண்ணிக்கையிலான கட்சிகள் காணப்படுகின்றன. இந்தியாவில் கட்சிகள் மூன்று படிநிலையில் அமைந்திருப்பதை நாம் காணலாம். அவை தேசியக் கட்சிகள், மாநிலக் கட்சிகள், பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத (சுயேட்சைகள்) கட்சிகள் ஆகும். ஒவ்வொரு கட்சியும் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து கொள்ளுதல் வேண்டும். தேர்தல் ஆணையம் - சட்டபூர்வ அமைப்பு இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல்களை நடத்துவதற்கு அதிகாரம் கொண்ட ஒரு சுதந்திரமான, சட்டப்படியான அமைப்பு ஆகும். இதன் தலைமை இடம் புதுதில்லியில் அமைந்துள்ளது. படம், தேர்தல் ஆணையச் சின்னம் இங்கே தரப்பட்டுள்ளது, ஆரஞ்சு, வெள்ளை, பச்சை நிற செவ்வப்பட்டையின் மேல் பகுதியில் வட்டம் உள்ளது, அவ்வட்டம் சாம்பல் நிறத்தில் உள்ளது, படம், ஒரு அரசியல் கட்சியை தோற்றுவிப்பது எப்படி என்பதற்கானப் படம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது, படவிளக்கம் தொடங்குகிறது. அதில் முதலில் இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து கொள்ளுதல் வேண்டும், என்பதைக் குறிக்கும் வகையில் தேர்தல் ஆணையச் சின்னமும், இரண்டாவதாக குறைந்தபட்சம் நூறு உறுப்பினர்கள், அவர்கள் ஒவ்வொருவரும் வாக்காளர் அட்டையை கொண்டிருத்தல் வேண்டும் என்பதைக் குறிக்கும் வகையில் மனிதர்களின் படமும், கட்சி அமைப்பு குறித்த ஆவணத்தை கொண்டிருத்தல் வேண்டும், என்பதைக் குறிக்கும் வகையில், ஒரு சிவப்பு நிற புத்தகமும் இடம்பெற்றுள்ளன. படவிளக்கம் முடிவடைகிறது. கட்சிகள் அங்கீகரிக்கப்படுவதற்கான நிபந்தனைகள் இந்தியாவில் அரசியல் கட்சிகளை அங்கீகரிப்பதற்கு இந்தியத் தேர்தல் ஆணையம் சில விதிமுறைகளை வகுத்துள்ளது. தேசியக்கட்சிகள் மக்களவைத் தேர்தலில் அல்லது நான்கு மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தலில் செல்லத்தக்க மொத்த வாக்குகளில் ஒரு கட்சி 6 சதவீதம் வாக்குகளை பெற்றிருத்தல் வேண்டும். ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட மாநிலங்களில் நான்கு மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெற்றிருத்தல் வேண்டும். இறுதியாக நடைபெற்ற மக்களவை தேர்தலில் குறைந்தபட்சம் மூன்று மாநிலங்களில் 2 சதவீதம், தொகுதிகளில் வெற்றி பெற்றிருத்தல் வேண்டும். பிராந்திய அல்லது மாநிலக்கட்சிகள் மாநில சட்டப் பேரவைக்கான தேர்தலில் செல்லத்தக்க வாக்குகளில் குறைந்த பட்சம் 6 சதவீதம் வாக்குகளை பெற்றிருத்தல் வேண்டும். ஒவ்வொரு 25 தொகுதிகளுக்கும் ஒரு மக்களவைத் தொகுதி அல்லது சட்டப் பேரவைத் தேர்தலில் குறைந்தபட்சம் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றிருத்தல் வேண்டும். சட்டப் பேரவையில் மொத்த தொகுதிகளில் குறைந்தபட்சம் 3 சதவீதம், தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். சுயேட்சை வேட்பாளர் சுயேட்சை வேட்பாளர் என்பவர் எந்த கட்சியிலும் சேராமல் தானாக மக்களவை அல்லது மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் நபர் ஆவார். அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் மேலே தெரிவித்த நிபந்தனைகளை பூர்த்தி செய்த கட்சிகள் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் என அழைக்கப்படும். அவற்றிற்கு தேர்தல் ஆணையத்தால் சின்னம் ஒன்றும் ஒதுக்கீடு செய்யப்படும். பதிவு செய்யப்பட்ட ஆனால் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சி தாங்கள் விரும்பும் சின்னத்தில் தேர்தலில் போட்டியிட முடியாது. இத்தகைய கட்சி தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்படும் தேர்தல் குழுவில் (Poll Panel) உள்ள ஏதேனும் ஒரு சின்னத்தை தேர்வு செய்தல் வேண்டும். தேர்தல் குழு சின்னங்கள் 1968 ஆம் ஆண்டின் தேர்தல் சின்னங்கள் ஆணையின்படி, ஒதுக்கப்பட்ட சின்னங்கள் மற்றும் ஒதுக்கப்படாத சின்னங்கள் என இரண்டு வகை உள்ளது. ஒதுக்கப்பட்ட சின்னம் என்பது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிக்கு மட்டுமானது என பொருள்படும். ஒதுக்கப்படாத சின்னம் என்பது அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் சின்னம் ஆகும். பெரும்பான்மைக் கட்சி தேர்தலில் ஒரு அரசியல் கட்சியின் வேட்பாளர்கள் மற்ற கட்சிகளின் வேட்பாளர்களை விட அதிக எண்ணிக்கையில் தேர்வு பெற்று இருப்பின் அக்கட்சியானது பெரும்பான்மைக் கட்சி என அழைக்கப்படுகிறது. பெரும்பான்மை பெற்ற கட்சி, அரசாங்கத்தை அமைத்து ஆட்சி நடத்துகிறது. அக் கட்சி அரசு நிர்வாகத்தை நடத்த அமைச்சர்களைத் தேர்ந்தெடுத்து நியமிக்கிறது. அது நாட்டிற்குச் சட்டம் இயற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. படம், படவிளக்கம் தொடங்குகிறது. பெரும்பான்மைக் கட்சியை குறிக்கும் வகையில் 100 என குறிப்பிட்டு நீலம் மற்றும் சிவப்பு நிறத்தில் புள்ளிகள் அரை வட்ட வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. படவிளக்கம் முடிவடைகிறது. சிறிய கட்சி சிறிய கட்சி என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள் எண்ணிக்கையில் குறைவான எண்ணிக்கையைக் கொண்ட கட்சி ஆகும். எதிர்க்கட்சி தேர்தலில் பெரும்பான்மை பெற்ற கட்சிக்கு, இரண்டாவதாக அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்களை கொண்ட கட்சி எதிர்க்கட்சி என அழைக்கப்படுகிறது. மக்களாட்சி வெற்றிகரமாக செயல்படுவதற்கு ஆற்றல் வாய்ந்த எதிர்க்கட்சி மிகவும் அவசியம் ஆகும். அது ஆளும் கட்சி போன்றே முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். எதிர்க்கட்சி ஆளுங்கட்சியின் தன்னிச்சையான போக்கினை கட்டுப்படுத்தும் ஆற்றல் வாய்ந்தது. அது அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் அறிமுகப்படுத்தப்படும் சட்ட மசோதாக்களை தீவிரமாக விமர்சிக்கும். எதிர்க்கட்சி, அரசின் தவறான கொள்கைகள் மற்றும் தோல்விகளை வெளிப்படுத்தும். அரசால் செயல்படுத்தப்படாத விவகாரங்கள் குறித்து அதன் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும். எதிர்க்கட்சித் தலைவர் கேபினட் அமைச்சர் அந்தஸ்தைக் கொண்டிருப்பார். கூட்டணி அரசாங்கம் பல கட்சி அமைப்பில் சில நேரங்களில் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையை ஒரு கட்சி பெறுவதில்லை. இது போன்ற நேர்வில் சில கட்சிகள் இணைந்து அரசாங்கத்தை அமைக்கின்றன. இது கூட்டணி அரசாங்கம் என அழைக்கப்படுகிறது. படம், கூட்டணி அரசாங்கத்தைக் குறிக்கும் வகையில் பை வரைபடம் கொடுக்கப்பட்டுள்ளது, படவிளக்கம் தொடங்குகிறது. அதில் கட்சி 1, கட்சி 2, மற்றும் கட்சி 3 மூவரும் ஒருவரை ஒருவர் கைக்குளுக்கிக் கொள்வது போல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. படவிளக்கம் முடிவடைகிறது. தேர்தல் சின்னங்கள் மற்றும் அவற்றின் முக்கியத்துவம் தேர்தல் சின்னம் என்பது அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும் அங்கீகரிக்கப்பட்ட சின்னம் ஆகும். அது தேர்தலில் ஒரு முக்கிய பங்கினை வகிக்கிறது. தேர்தல் சின்னங்கள் வாக்காளர்களால் எளிதில் அடையாளம் காணவும், புரிந்து கொள்ளவும், நினைவில் கொள்ளவும் மற்றும் அங்கீகரிக்கவும் உதவுகிறது. விலங்குகளின் சின்னங்களை வழங்குவதைத் தேர்தல் ஆணையம் நிறுத்தியுள்ளது. விதிவிலக்காக யானை மற்றும் சிங்கம் ஆகிய சின்னங்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. தேசிய அளவிலான அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் சின்னம் நாடு முழுவதும் ஒன்றாக இருக்கும். இத்தகைய சின்னங்கள் வேறு எந்த கட்சிக்கும் அல்லது சுயேட்சை நபருக்கும் ஒதுக்கப்படமாட்டாது. மாநில கட்சிகளுக்கு அந்தக் குறிப்பிட்ட மாநிலத்தில் பயன்படுத்துவதற்கு ஏதுவாக சின்னம் ஒதுக்கீடு செய்யப்படும். இதனை வேறு எந்த கட்சியும் அந்தக் குறிப்பிட்ட மாநிலத்தில் பயன்படுத்த இயலாது. ஆனால் பல்வேறு மாநிலங்களில் உள்ள மாநிலக்கட்சிகள் தங்களது மாநிலங்களில் இதே போன்ற சின்னத்தை பயன்படுத்தலாம். (உதாரணமாக மகாராஷ்டிராவில் சிவசேனை கட்சி, ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகிய கட்சிகள் வில் மற்றும் அம்பு சின்னத்தை பயன்படுத்துகின்றன). அட்டவணைத் தொடங்குகிறது. தேசியக் கட்சி பிராந்திய அல்லது மாநிலக் கட்சி தேசியக் கட்சி, தேசியக் கட்சி என்பது இந்தியா முழுவதும் நடைபெறும் தேர்தல்களில் போட்டியிடும் அரசியல் கட்சியாகும். பிராந்திய அல்லது மாநிலக் கட்சி மாநிலக் கட்சிகள் என்பவை ஒரு மாநிலத்திற்குள் நடைபெறும் பல்வேறு தேர்தல்களில் போட்டியிடும் அரசியல் கட்சியாகும். தேசியக் கட்சி , தேசியக் கட்சி குறைந்த பட்சம் நான்கு மாநிலங்களில் வலிமை உடையதாக இருக்க வேண்டும். இது பிராந்திய அல்லது மாநிலக் கட்சி ஒன்று அல்லது இரண்டு மாநிலங்களில் வலிமை உடையதாக இருக்க வேண்டும். தேசியக் கட்சி , இது தனக்கென பிரத்தியேகமான சின்னத்தை நாடு முழுவதற்கும் கொண்டிருக்கும். பிராந்திய அல்லது மாநிலக் கட்சி இதற்கு அங்கீகரிக்கப்பட்ட ஒரு சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும். ஆனால் இத்தகைய சின்னம் வேறு மாநிலத்தில் உள்ள கட்சிக்கும் ஒதுக்கீடு செய்யப்படலாம். தேசியக் கட்சி , இது தனக்கென பிரத்தியேகமான சின்னத்தை |நாடு முழுவதற்கும் கொண்டிருக்கும். இது மாநில, தேசிய மற்றும் சர்வதேச விவகாரங்களைத் தீர்த்து வைக்கிறது. பிராந்திய அல்லது மாநிலக் கட்சி இது பிராந்திய மற்றும் மாநில நலன்களை வலியுறுத்துகிறது. அட்டவணை முடிவடைகிறது. சுருக்கம்: நவீன காலம் என்பது பெரிய சமூகத்தையும் அதிக மக்கள் தொகையையும் கொண்டதாகும். கட்சி முறை என்பது நவீன காலத்தின் தோன்றல் ஆகும். பரந்த பொது நலனோடு உள்ள ஒரு குழு தேர்தலில் வெற்றிபெற்று அரசாங்கத்தைக் கட்டுப்படுத்தவும், அதன் கொள்கைகளின் மீது செல்வாக்கை செலுத்தவும் முடியும். பொதுவாக மூன்று வகையான கட்சி முறைகள் காணப்படுகின்றன. அவை ஒரு கட்சி முறை, இரு கட்சி முறை மற்றும் பல கட்சி முறை. இந்தியாவில் பல கட்சி முறை நடைமுறையில் உள்ளது. கட்சியில் உறுப்பினராக இல்லாத ஒருவரும் தேர்ந்தெடுக்கப்படலாம். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுபவர் சுயேட்சை உறுப்பினர் என அழைக்கப்படுவார். சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் பொறுப்பு வாய்ந்தது ஆகும். கலைச்சொற்கள், அட்டவணைத் தொடங்குகிறது மக்களாட்சி Democracy Government by the people தேர்தல் அறிக்கை Election manifesto a public declaration of policies and aims by political parties எதிர்க்கட்சி Opposition party a party opposing to the other parties கூட்டாட்சி அமைப்பு Federal system system of government in which several states form a unity but remain independent in internal affairs தேர்தல் ஆணையம் Election commission a body for implementation of election procedures தேர்தல் சின்னங்கள் Electoral symbols symbols allocated to a political party கேபினட் அமைச்சர் Cabinet Minister member of a parliament or legislative assembly cabinet அட்டவணை முடிவடைகிறது. பயிற்சி விரைவுத் துலங்கள் குறியீடு கொடுக்கப்பட்டுள்ளது, எண், W, P, Q, Y, B 1, சரியான விடையைத் தேர்வு செய்க 1, இரு கட்சி முறை என்பது அ) இரண்டு கட்சிகள் அரசாங்கத்தை நடத்துவது ஆ) இரண்டு உறுப்பினர் ஒரு கட்சியை நடத்துவது. இ) இரண்டு பெரிய அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவது. ஈ) இவற்றுள் எதுவும் இல்லை. 2, இந்தியாவில் காணப்படும் கட்சி முறை அ) ஒரு கட்சி முறை ஆ) இரு கட்சி முறை இ) பல கட்சி முறை ஈ) இவற்றுள் எதுவுமில்லை 3, அரசியல் கட்சிகளை அமைப்பு அங்கீகரிக்கும் அ) தேர்தல் ஆணையம் ஆ) குடியரசுத் தலைவர் இ) உச்ச நீதிமன்றம் ஈ) ஒரு குழு 4, அரசியல் கட்சிகள் பொதுவாக எதன் அடிப்படையில் தோற்றுவிக்கப்படுகின்றன? அ) சமயக் கொள்கைகள் ஆ) பொது நலன் இ) பொருளாதார கோட்பாடுகள் ஈ) சாதி 5, ஒரு கட்சி முறை எங்கு நடைமுறையில் உள்ளது? அ) இந்தியா ஆ) அமெரிக்க ஐக்கிய நாடுகள் இ) பிரான்ஸ் ஈ) சீனா 2, கோடிட்ட இடங்களை நிரப்புக 1, மக்களாட்சியின் முதுகெலும்பாகத் திகழ்வது டேஷ் 2, நமது நாட்டின் ஒவ்வொரு கட்சியும் டேஷ் என்ற அமைப்பில் பதிவு செய்தல் வேண்டும். 3, அரசியல் கட்சிகள் டேஷ் மற்றும் டேஷ் இடையே பாலமாக செயல்படுகின்றன. 4, ஒரு பதிவு செய்யப்பட்ட ஆனால் டேஷ் அரசியல் கட்சி தேர்தலில் தாங்கள் விரும்பும் சின்னத்தில் போட்டியிட இயலாது. 5, எதிர்க்கட்சித் தலைவர் டேஷ் அந்தஸ்தில் இருப்பார். 3, பொருத்துக 1, மக்களாட்சி அரசின் கொள்கைகளை விமர்சிப்பது 2, தேர்தல் ஆணையம் அரசாங்கத்தை அமைப்பது 3, பெரும்பான்மைக் கட்சி மக்களின் ஆட்சி சுதந்திரமான 4, எதிர்க்கட்சி மற்றும் நியாயமான தேர்தல் 4, கீழ்க்காணும் கூற்றுகளை ஆய்வு செய்து பொருத்தமான விடையை தேர்வு செய்க 1, பின்வரும் கூற்றுகளில் சரியானதை தேர்வு செய்க அ)நாட்டில் உள்ள ஒவ்வொரு கட்சியும் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து கொள்ளுதல் வேண்டும். ஆ) தேர்தல் ஆணையம் அனைத்து கட்சிகளையும் சமமாக நடத்துகிறது. இ) தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு தனி சின்னத்தை ஒதுக்குகிறது. ஈ) இவை அனைத்தும். 2, கூற்று: பெரும்பான்மை கட்சி ஒரு நாட்டின் சட்டங்களை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. காரணம்: தேர்தலில் பிற கட்சிகளைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது ஆகும். அ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும் ஆ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல இ) காரணம் தவறு, கூற்று சரி ஈ) கூற்று, காரணம் இரண்டும் தவறு. 5, ஓரிரு வாக்கியங்களில் விடைகளை எழுதுக. 1, ஒரு அரசியல் கட்சியின் அடிப்படை கூறுகள் யாவை? 2. மூன்று குறிப்பிடுக. வகை கட்சி முறைகளைக் 3. இரு கட்சி முறை காணப்படும் நாடுகளின் பெயர்களை எழுதுக. 4. குறிப்பு வரைக: கூட்டணி அரசாங்கம். 6, பின்வருவனவற்றிற்கு விடை அளிக்கவும் 1. அரசியல் கட்சியின் செயல்பாடுகளில் ஏதேனும் நான்கினை எழுதுக. 2. ஒரு அரசியல் கட்சி எப்போது தேசிய கட்சியாக அங்கீகரிக்கப்படுகிறது? 7, உயர்சிந்தனை வினா 1. ஒரு மக்களாட்சி நாட்டிற்கு அரசியல் கட்சி அவசியமா? 2. தேசிய கட்சி, மாநிலக் கட்சி மற்றும் பதிவு செய்யப்பட்ட ஆனால் அங்கீகரிக்கப்படாத கட்சி ஆகியவற்றிற்கு சில உதாரணங்கள் தருக. 8, செயல்பாடுகள் 1. ஒரு தேர்தல் அறிக்கையை எழுதுக (election manifesto) (நீ ஒரு கட்சித் தலைவராக இருந்தால்). இணையச் செயல்பாடு அரசியல் கட்சிகள் படம், படவிளக்கம் தொடங்குகிறது. அரசியல் கட்சிகள் தொடர்பான முத்திரை இங்கே கொடுக்கப்பட்டுள்ளது, படவிளக்கம் முடிவடைகிறது. இந்தச் செயல்பாடு மாணவர்களுக்குத் தேர்தல் ஆணையம் குறித்து அறிவிக்கும், இச்செயல்பாட்டினைச் செய்வதற்கான படிநிலைகள் பின்வருமாறு, படிநிலைகள்: படி 1: URL அல்லது QR குறியீட்டினைப் பயன்படுத்தி இச்செயல்பாட்டிற்கான இணையப்பக்கத்திற்கு செல்க. படி 2: அதில் "Election India" (Eg: Parties) என்பதை தெரிவு செய்க. அதன் மூலம் இந்திய அரசியல் கட்சிகள் குறித்து சிறிது அறிந்து கொள்ளலாம். படி 3: கொடுக்கப்பட்டிருக்கிற விருப்பப்பட்டியலில் இருந்து ஏதேனும் ஒரு தலைப்பை தேர்ந்தெடுத்து (எ.கா. தலைவர்கள்) அதை காண்க. படி 4: மறுபடி தாங்கு பலகைக்குச் சென்று வரப்போகும் தேர்தல் நிலையைத் தெரிந்து கொள்க. தேர்தல் ஆணையம் உரலி: https://play.google.com/store/search?q=election விரைவுத் துலங்கள் குறியீடு கொடுக்கப்பட்டுள்ளது, எண், U, 3, P, 6, I பொருளியல் அலகு - 1 உற்பத்தி படம், உற்பத்தி பாடத்தலைப்புக்கான படம் கொடுக்கப்பட்டுள்ளது, படவிளக்கம் தொடங்குகிறது. படத்தில் ஒரு தொழிற்சாலை இயங்குவது போலவும், வாகனங்களை இயக்குவது போலவும், உள்ளது. படவிளக்கம் முடிவடைகிறது. கற்றலின் நோக்கங்கள் உற்பத்தி என்பதன் பொருளறிதல் உற்பத்தி வகைகளை அறிந்துகொள்ளுதல் உற்பத்திக்கான காரணிகளைத் தெரிந்துகொள்ளுதல் உற்பத்திக்கான காரணிகளின் சிறப்பியல்புகளைப் புரிந்துகொள்ளுதல் விரைவுத் துலங்கள் குறியீடு கொடுக்கப்பட்டுள்ளது, எண், 5, 8, 2, 7, I படம், பூங்காவின் படம் கொடுக்கப்பட்டுள்ளது, படவிளக்கம் தொடங்குகிறது. அங்கே யாழினி, ஜோஸ்பின், மற்றும் அவர்களது மாமா ஆகியோர் உரையாடுவது போன்ற படம் கொடுக்கப்பட்டுள்ளது, உரையாடல் பின்வருமாறு, யாழினியும் ஜோஸ்பினும் ஒரு நாள், தங்கள் வீட்டின் அருகிலிருந்த பூங்காவில் அமர்ந்து, கரும்பு தின்று கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியே வந்த யாழினியின் மாமா இராஜா, அவர்களிருவரையும் பார்த்துப் பேசத்தொடங்கினார். படவிளக்கம் முடிவடைகிறது. மாமா "குழந்தைகளே, கரும்பிலிருந்து என்ன பொருளைத் தயாரிக்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா?" யாழினியும் ஜோஸ்பினும், (சற்றுச் சிந்தித்து) " கரும்பிலிருந்து சர்க்கரை தயாரிக்கிறார்கள் மாமா". மாமா "சரியாகச் சொன்னீர்கள். அந்தக் கரும்பிலிருந்து தயாரிக்கப்படும் சர்க்கரையை நாம் பயன்படுத்துவதற்கு ஏற்றவாறு எவ்வாறு உருவாக்குகிறார்கள் எனத் தெரியுமா?" யாழினி, "எங்களுக்குத் தெரியவில்லையே! ஆனால், நீங்கள் அதைப்பற்றிக் கூறினால், நாங்களும் தெரிந்துகொள்வோம், அல்லவா! மாமா நானே சொல்கிறேன். நீங்கள் அறிந்துகொண்டபின், இந்தச் செய்தியை உங்கள் நண்பர்களுக்கும் எடுத்துச்சொல்ல வேண்டும். புரிந்ததா? யாழினியும் ஜோஸ்பினும் "கட்டாயம் சொல்வோம் மாமா" என்று கூற, இராஜா தம் பேச்சைத் தொடர்ந்தார். கரும்பு வேளாண்மை மூலம் விளைவிக்கப்படுகிறது. இதனை, நாம் முதன்மை உற்பத்தி என்று கூறுகிறோம். இவ்வாறு விளைவிக்கப்பட்ட கரும்புகளைச் சர்க்கரை ஆலைகளுக்குக் கொண்டு செல்கிறோம். அங்குள்ள இயந்திரங்களின் உதவியால், அவை சர்க்கரையாகத் தயாரிக்கப்படுகின்றன. இதனை, நாம் இரண்டாம் நிலை உற்பத்தி என்கிறோம். இங்கு சர்க்கரை ஆலைகள் போன்ற இதர பிற தொழிற்சாலைகளுமே இரண்டாம் நிலை உற்பத்தியாகும். சர்க்கரை ஆலைகள், கரும்பிலிருந்து தயாரித்த சர்க்கரையை விற்பனைக் கூடங்களுக்கு அனுப்புகின்றன. அவை தாம் பெற்றுக்கொண்ட சர்க்கரையை நல்லமுறையில், பயன்படுத்துவதற்கேற்ற வகையில், முழுமைபெறச் செய்து, நுகர்வோராகிய நமக்கு அளிக்கின்றன. இதனை மூன்றாம் நிலை உற்பத்தி என்கிறோம். இந்த மூன்றாம் நிலை உற்பத்தியில் இடம்பெறும் விற்பனைக் கூடங்கள், நம்முடைய தேவையை நிறைவேற்றும் சேவைத் துறைகளாக உள்ளன. எடுத்துக்காட்டாக விற்பனைக் கூடங்கள், வங்கிகள், காப்பீடு நிறுவனங்கள் முதலானவற்றைச் சேவைத் துறை நிறுவனங்களாகக் கூறலாம். இவற்றை மூன்றாம் நிலை உற்பத்தி என்கிறோம். ஆகவே உற்பத்தி என்பது. மூலப்பொருள்களை மாற்றியமைத்து நம் பயன்பாட்டிற்கேற்றவாறு முழுமையாக்கும் ஒரு செயலாகும். விளைபொருளான கரும்பு ஆலை, இயந்திரம் மற்றும் தொழிலாளர்களின் உழைப்பு முதலியவை உற்பத்தி செய்வதற்கான உள்ளீடுகளாகவும், இவற்றின் வாயிலாக நாம் பெறும் சர்க்கரை உற்பத்தியின் வெளியீடாகவும் அமைகின்றது. உற்பத்தி, அதற்கு உதவுகின்ற பல்வேறு காரணிகளான நிலம், உழைப்பு, முதலீடு, அமைப்பு அல்லது நிறுவனம், அவற்றின் சிறப்பியல்புகள் ஆகியவை குறித்து, மேலும் பல செய்திகளைச் சற்று விரிவாகத் தெரிந்துகொள்வோமா? என்று இராஜா கேட்க, யாழினியும் ஜோஸ்பினும் சொல்லுங்கள் மாமா, நாங்கள் தெரிந்துகொள்கிறோம்" என்று கூறினர். நாமும் தெரிந்துகொள்வோம், வாருங்கள். பொருளாதாரத்தில், உற்பத்தியும் நுகர்வும் இரு இன்றியமையாத செயல்கள். அதேபோன்று, பொருளாதாரத்தில் உற்பத்தியாளர், நுகர்வோர் என இருவரும் இன்றியமையாதவர்களாக உற்பத்தியாளருக்கும் நுகர்வோருக்கும் உள்ளனர். உற்பத்தியாளருக்கும் நுகர்வோருக்கும் இடையே காணப்படும் சிறந்த செயலாற்றல், திறன்மிக்க நல்ல பொருள்கள் தயாரிப்பை உறுதிசெய்கிறது. இருவருக்குமிடையே நிகழும் இந்த இடைவினையாற்றல், நுகர்வோரை உற்பத்தியாளரின் வாடிக்கையாளர், வழங்குநர் என இருவழிகளில் செயல்பட வைக்கிறது. அதாவது, உற்பத்தியாளரிடமிருந்து பொருளை வாங்குபவராகவும், உற்பத்தியாளருக்குப் பொருளை வழங்குபவராகவும் நுகர்வோர் செயல்படுகிறார். வாடிக்கையாளர்களின் நலன் அவர்கள் வாங்கும் மற்றும் நுகரும் பண்டங்களிலிருந்து எழுகிறது. உற்பத்தியாளர்கள் நலன் என்பது பண்டங்கள் மற்றும் பணிகளை விற்கும்போது அவர்கள் பெறும் வருமானத்துடன் தொடர்புடையது. ஒரு பொருளாதாரத்தில் அனைவரும் நுகர்வோர். ஆனால், அனைவரும் உற்பத்தியாளரோ அல்லது விற்பனையாளர்களோ அல்லர். உற்பத்தி -பொருள் விளக்கம் நுகர்வோரின் மூலப்பொருளையும்,அல்லாதனவற்றையும் பயன்பாட்டுக்காக, மூலப்பொருள் ஒன்றிணைத்து, ஒரு பொருளை உருவாக்கும் செயலே உற்பத்தியாகும். இஃது, ஒவ்வொருவரின் தேவைக்கேற்பச் சிறந்த சேவையையும் மதிப்பையும் அளிப்பதில் இன்றியமையாத இடத்தைப்பெறுகிறது. படம், பயன்பாட்டிற்கான படம், கொடுக்கப்பட்டுள்ளது, படவிளக்கம் தொடங்குகிறது. படத்தில் பருத்திச் செடி, ஆடைகள், போக்குவரத்து ஊர்திகளான, வானூர்தி, கப்பல், தொடர்வண்டி ஆகியனவும், தானிய சேமிப்புக் கிடங்கு ஒன்றும் தரப்பட்டுள்ளது, மேலும் அப்படத்தில் அடங்கிய கருத்துகள் பின்வருமாறு தரப்பட்டுள்ளது, படவிளக்கம் முடிவடைகிறது. பயன்பாட்டின் வகைகள் வடிவப் பயன்பாடு ஒரு பொருளின் வடிவம் மாற்றப்படும்போது, அதன் பயன்பாடு மிகுதியாகிறது. எடுத்துக்காட்டாக, பருத்தியைக்கொண்டு விளைபொருளாகிய ஆடைகள் உருவாக்கப்படும்போது, அதன் தேவையும் பயன்பாடும் உயர்கின்றன. இடப்பயன்பாடு ஒரு பொருள், ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குக் கொண்டு செல்லப்படும்போது, அதன் பயன்பாடு மிகுதியாகிறது. போக்குவரத்து எடுத்துக்காட்டாக, விளைபொருளான அரிசி தமிழ்நாட்டிலிருந்து கேரளாவுக்கு கொண்டு செல்லப்படும்போது, அதன் தேவையும் பயன்பாடும் அதிகரிக்கின்றன. காலப் பயன்பாடு ஒரு பொருளை எதிர்காலத் தேவைக்காக சேமித்து வைக்கும்போது, அதன் பயன்பாடு மிகுகிறது. எடுத்துக்காட்டாக, நுகர்வோர்களால் ஆண்டு முழுவதும் பயன்படுத்தக்கூடிய உணவுப் பயிர்களான நெல், கோதுமை போன்றவற்றைச் சேமித்து வைப்பதால், அவற்றின் தேவையும் பயன்பாடும் மிகுதியாகின்றன. பொருளாதாரத்தில் உற்பத்தி என்னும் சொல், மாற்றத் தக்க மதிப்புடைய பொருள்களையும் உருவாக்குவதைக் சேவைகளையும் குறிக்கிறது. அதாவது, பயன்பாட்டை உருவாக்குதலே உற்பத்தியாகும். பயன்பாடு என்பது, நமது தேவைகளையும் விருப்பங்களையும் நிறைவு செய்வதாகும்.பயன்பாட்டை அதன் இயல்பைப் பொருத்து வடிவப் பயன்பாடு, இடப்பயன்பாடு, காலப் பயன்பாடு என வகைப்படுத்தலாம். உங்களுக்குத் தெரியுமா? (பெட்டிச் செய்தி) இந்தியாவில் கலப்பு பொருளாதார நிலை காணப்படுகிறது. அதாவது, பொருளாதாரத்தில் தனியார் துறை நிறுவனங்களும் பொதுத் துறை நிறுவனங்களும் ஒன்றாக இணைந்து செயல்படுகின்றன. உற்பத்தியின் வகைகள் உற்பத்தியில் மூன்று வகைகள் உள்ளன. அவையாவன: 1, முதன்மை நிலை உற்பத்தி 2, இரண்டாம் நிலை உற்பத்தி 3, மூன்றாம் நிலை உற்பத்தி 1, முதன்மை நிலை உற்பத்தி இயற்கையாகக் கிடைக்கும் பொருள்களை, நேரடியாகப் பயன்படுத்திச் செய்கின்ற செயல்பாடுகளுக்குட்பட்ட நிலையை முதன்மை நிலை உற்பத்தி என்கிறோம். முதன்மை நிலையில் வேளாண்மைக்கு முதலிடம் அளிக்கப்படுவதால், இதனை வேளாண்மைத் துறை உற்பத்தி எனவும் கூறுவர். வேளாண்மை, காடுவளர்ப்பு, மீன் பிடித்தல், சுரங்கத்தொழில் மற்றும் எண்ணெய் வளங்களைப் பிரித்தெடுத்தல் போன்றவை முதன்மை நிலை உற்பத்திக்கு உதாரணங்களாகும். 2, இரண்டாம் நிலை உற்பத்தி முதன்மை நிலையிலிருந்து கிடைக்கின்ற பொருள்களை மூலப்பொருள்களாகப் பயன்படுத்திப் புதிய உற்பத்திப் பொருள்களாக உருவாக்கும் செயல்பாட்டை இரண்டாம் நிலை உற்பத்தி என்கிறோம். இரண்டாம் நிலையில் தொழிற்சாலைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதால், இதனைத் தொழில்துறை உற்பத்தி எனவும் கூறுவர். நான்கு சக்கர வாகனங்கள், ஆயத்த ஆடைகள், இரசாயனப் பொருள்கள், பொறியியல் மற்றும் கட்டுமானப் பணிகள் போன்றவைகள் இரண்டாம் நிலை உற்பத்திக்கு உதாரணங்களாகும் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை உற்பத்தி பருத்தி (முதன்மைத் துறை), பருத்தி ஆலை (இரண்டாம் நிலை உற்பத்தி) சமம் ஆடை உற்பத்தி இரும்புத்தாது (முதன்மைத் துறை), இரும்பு ஆலை (இரண்டாம் நிலை உற்பத்தி) சமம் பொருள் தயாரிப்பு படம், படவிளக்கம் தொடங்குகிறது. வேளாண்மையைக் குறிக்கும் வகையில் பயிர்களின் படம் கொடுக்கப்பட்டுள்ளது. படவிளக்கம் முடிவடைகிறது. படம், படவிளக்கம் தொடங்குகிறது. காடுகளைக் குறிக்கும் விதமாக காடுகளில் வெட்டப்பட்ட மரங்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் படம் கொடுக்கப்பட்டுள்ளது. படவிளக்கம் முடிவடைகிறது. படம், படவிளக்கம் தொடங்குகிறது. சுரங்கத்தில் இரு பெரிய இயந்திரங்கள் வேலை செய்வது போல, சுரங்கத் தொழில் படம் கொடுக்கப்பட்டிருக்கிறது. படவிளக்கம் முடிவடைகிறது. படம், படவிளக்கம் தொடங்குகிறது. பருத்தி தொழிற்சாலை, ஒரு தொழிற்சாலையில் நூற்கண்டுகள் தயாரிக்கும் வேலை நடைபெறுவது போல படம் கொடுக்கப்பட்டுள்ளது. படவிளக்கம் முடிவடைகிறது. படம், படவிளக்கம் தொடங்குகிறது. பொறியியல் மற்றும் கட்டுமானத் துறை படம், படத்தில் ஒரு கட்டுமான தொழிற்சாலையில் பணிகள் நடைபெறுவது போல காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. படவிளக்கம் முடிவடைகிறது. 3, மூன்றாம் நிலை உற்பத்தி சமூகத்தில் ஆசிரியர்கள், மருத்துவர்கள் போன்றோர் ஆற்றும் சேவைகள் மூன்றாம் நிலை உற்பத்தி எனலாம். இவைகள் கண்களுக்குப் புலப்படாதவை.வங்கி, காப்பீடு, கல்வி, மற்றும் பாதுகாப்புஆகியவைகள் சேவைத் துறைகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும். படம், பாதுகாப்புத்துறை, வங்கித் துறை, கல்வித் துறை படம் கொடுக்கப்பட்டுள்ளது. படவிளக்கம் தொடங்குகிறது. படத்தில், பீரங்கி வண்டி, ஹெலிகாப்டர், கப்பல் முதலிய படங்கள் பாதுகாப்புத்துறைக்கும், கணினியில் சிலர் வேலை செய்வது போல வங்கித்துறைக்கும், ஒரு ஆசிரியர் மாணவர்களுக்கு பாடம் போதிப்பது போல கல்வித்துறைக்கும் படங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. படவிளக்கம் முடிவடைகிறது. உங்களுக்குத் தெரியுமா? (பெட்டிச் செய்தி) நமது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், பெரும்பங்கு வகிப்பவை மூன்றாம் நிலை அல்லது சேவைத் துறை உற்பத்திகளே. உற்பத்திக்கான காரணிகள் உற்பத்திக் காரணிகளை உற்பத்தியின் உள்ளீடுகள் என அழைக்கலாம். அவைகள் வெளியீடு அல்லது உற்பத்திப் பொருள்களாக மாற்றப்படுகின்றன. உற்பத்திக் காரணிகள் இரண்டு முக்கிய பிரிவுகளாக உள்ளன. அவை, 1, முதன்மை உற்பத்திக் காரணிகள் 2, பெறப்பட்ட உற்பத்திக் காரணிகள் அல்லது இரண்டாம் நிலை உற்பத்திக் காரணிகள் அல்லது நவீன உற்பத்திக் காரணிகள் நிலம் மற்றும் உழைப்பு ஆகியவை முதன்மை உற்பத்திக் காரணிகள் என்றும்,மூலதனம் மற்றும் தொழிலமைப்பு ஆகியவை பெறப்பட்ட அல்லது இரண்டாம் நிலை உற்பத்திக் காரணிகள் என்றும் அழைக்கப்படுகின்றன. மூலதனம் என்பது முதலீடு என்றும், தொழிலமைப்பு என்பது உற்பத்தியில் நிலம், உழைப்பு மற்றும் மூலதனத்தை ஒருங்கிணைப்பதாகும். தொழில் அமைப்பு என்பது தொழில் முனைவோர் என்றும் அழைக்கப்படுகிறது. படம், படவிளக்கம் தொடங்குகிறது. உற்பத்திக்கான காரணிகளின் இரு பிரிவுகள் குறித்த ஓட்ட விளக்கப்படம், [flow chart], கொடுக்கப்பட்டுள்ளது, அதில் உள்ள கருத்துகள் பின்வருமாறு, முதன்மை உற்பத்தி காரணிகள், நிலம், மற்றும் உழைப்பு இரண்டாம் நிலை உற்பத்தி காரணிகள், மூலதனம், மற்றும் தொழில் அமைப்பு படவிளக்கம் முடிவடைகிறது. நிலம் 'நிலம்' என்னும் உற்பத்திக் காரணி, இயற்கை வளங்கள் அனைத்தையும் அல்லது இயற்கை மனிதனுக்கு இலவசமாகக் கொடுத்திருக்கும் கொடை அனைத்தையும் குறிப்பதாகும். நிலப்பரப்பு, நீர், காற்று, கனிமவளங்கள், காடுகள், ஆறுகள், ஏரிகள், கடல்கள், மலைகள், வானிலை, காலநிலை ஆகிய அனைத்தும் நிலம் என்ற சொல்லுக்குள்அடங்குகின்றன. ஆகவே, இவையாவும் ஒமனிதனால் உருவாக்கப்படாத பொருள்கள் ஆகும். படம், படவிளக்கம் தொடங்குகிறது வயல்வெளி சூழ்ந்த ஒரு பரந்த நிலப்பகுதியின் படம் கொடுக்கப்பட்டுள்ளது. படவிளக்கம் முடிவடைகிறது. குறிப்பிட்ட நிலப்பகுதி அமைந்துள்ள இடத்தில் கிடைக்கும் வளங்களைப் பொருத்து, நிலத்தின் வடிவம் மாற்றமடைகிறது. எடுத்துக்காட்டாக, வேளாண்மை செய்யும்போது, விளைநிலமாகவும் மனை விற்பனை செய்யும்போது, வீட்டு மனையாகவும் மாறுகிறது. நிலத்தின் சிறப்பியல்புகள் 1, நிலம் இயற்கையின் கொடை மனிதன் மற்ற உற்பத்திக் காரணிகளைப் பெறுவதற்காக முயற்சி செய்கிறான். ஆனால் நிலம் என்ற உற்பத்திக் காரணியைப் பெறுவதற்கு அவன் எந்த முயற்சியும் செய்ய வேண்டியதில்லை. நிலமானது மனித உழைப்பினால் உருவானதன்று. மாறாக, அது மனிதனின் பரிணாம வளர்ச்சி தொடங்குவதற்கு முன்பே தோன்றியதாகும். 2, நிலத்தின் அளிப்பு நிலையானது நிலத்தின் மொத்த பரப்பளவையும் எந்த மாற்றத்திற்கும் உட்படுத்த இயலாது. மனிதன் மேற்கொள்ளும் முயற்சியால் நிலத்தின் அளவை அதிகரிக்கவோ, குறைக்கவோ முடியாது. நிலத்தின் மேற்பரப்பிலும் எவ்வித மாற்றமும் செய்ய இயலாது. நிலத்தின் செழிப்பை உயர்த்த முடி யுமே தவிர, அதன் அளவை மாற்ற முடியாது. 3, நிலம் அழிவில்லாதது மனிதனால் உருவாக்கப்பட்ட அனைத்துப் பண்டங்களும் அழிந்து போகக் கூடியவை. ஆனால் நிலம் அழிவில்லாதது. நிலத்தின் அளிப்பு என்றும் மாறாததாக, அழிவற்றதாக உள்ளது. 4, நிலம் ஒரு முதன்மை உற்பத்திக் காரணி நாம் செய்கின்ற எந்த ஓர் உற்பத்திப் பொருளுக்கும் அமைகிறது. நிலமே அடிப்படையாக எடுத்துக்காட்டாக, தேவையான தொழிற்சாலைகளுக்குத் மூலப்பொருள்களை அளிக்க உதவுகிறது. வேளாண்மை மூலம், பயிர்களை விளைவிக்க உதவுகிறது. 5, நிலம் இடம் பெயரக் கூடியதன்று நிலத்தை ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குக் கொண்டு செல்ல முடியாது. உதாரணமாக, இந்திய நிலப்பரப்பின் எந்த ஒரு பகுதியையும் வேறு நாட்டிற்கு இடம் பெயரச் செய்ய இயலாது. 6, நிலம் ஆற்றல் வாய்ந்தது மனிதனால் உண்மையான அழிக்க முடியாத ஆற்றல்கள் சிலவற்றை நிலம் கொண்டுள்ளது. இயற்கையில் ஏற்படும் மாற்றங்களால் நிலத்தின் செழிப்புத் தன்மையில் மாற்றம் ஏற்படலாம். ஆனால் அதனை முழுமையாக அழித்தல் இயலாது. 7, நிலம் செழிப்புத் தன்மையில் மாறுபடும் நிலம், அதனுடைய செழிப்புத் தன்மையின் அடிப்படையில் இடத்திற்கு இடம் மாறுபடுகிறது. அதனால் தான் நிலத்தின் உற்பத்தித் திறன் எல்லா இடத்திலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. ஒரிடத்தில் அதிக உற்பத்தி இருந்தால் மற்றொரு இடத்தில் உற்பத்தி குறைவாக இருக்கும். நிலம் என்பது இயற்கையின் நன்கொடை நிலத்தின் ஆரம்ப அளிப்பு விலை பூஜ்யமாகும். இருப்பினும், உற்பத்திக்காகப் பயன்படும் நிலம் போதுமானதாக இருப்பதில்லை. எனவே பற்றாக்குறையைப் பொறுத்தே சந்தையில் விலை பெறுகிறது. உழைப்பு (Labour) உற்பத்திப் பாதையில் உழைப்பு என்பது மனித இடுபொருள் ஆகும். "ஒரு பணியை ஒருவர் செய்வதால், அவருக்குக் கிடைக்கும் மனநிறை மட்டுமின்றி அதனை செய்வதற்காககைமாறு எதிர்பார்த்து மனிதன் தன் உடல் அல்லது அறிவை முழுமையாகவோ பகுதியாகவோ பயன்படுத்தி, மேற்கொள்ளும்கடும் முயற்சியே உழைப்பாகும் என ஆல்பிரட் மார்ஷல் உழைப்பை வரையறுத்துள்ளார். உங்களுக்கு தெரியுமா? (பெட்டிச் செய்தி) ஆடம்ஸ்மித் பொருளியலின் தந்தை என அழைக்கப்படுகிறார். இவரது கோட்பாடு, செல்வத்தை அடிப்படையாகக் கொண்ட செல்வ இலக்கணம் ஆகும். "நன்னெறி கருத்து உணர்வுக் கொள்கை" (1759) "நாடுகளின் செல்வமும், அவற்றை உருவாக்குகின்ற காரணிகளும் ஓர் ஆய்வு” (1776) என்பன, அவரின் சிறந்த இரு படைப்பு நூல்கள் ஆகும். படம், இயந்திரப்பணி படம் கொடுக்கப்பட்டுள்ளது. பட விளக்கம் தொடங்குகிறது. இரு பெண்மணிகள் இயந்திரத்தில் பணி புரிவதுபோல் படத்தில் காட்டப்பட்டுள்ளது. படவிளக்கம் முடிவடைகிறது. படம், உடல் உழைப்பை விளக்கும் படம் கொடுக்கப்பட்டுள்ளது. படவிளக்கம் தொடங்குகிறது. சில பெண்மணிகள் வயல் வெளியில் நாற்று நடுவது போன்ற படம் கொடுக்கப்பட்டுள்ளது. படவிளக்கம் முடிவடைகிறது. படம், மன உழைப்பை விளக்கும் படம் கொடுக்கப்பட்டுள்ளது. படவிளக்கம் தொடங்குகிறது. ஓர் அலுவலகத்தில் சில பணியாளர்கள் கணினினியில் பணிபுரிவது போன்று கொடுக்கப்பட்டுள்ளன. படவிளக்கம் முடிவடைகிறது. உழைப்பின் சிறப்பியல்புகள் மற்ற உற்பத்திக் காரணிகளைக் காட்டிலும் உழைப்பு அதிகமாக அழியக் கூடியதாக உள்ளது. அதாவது உழைப்பைச் சேமித்துவைக்க இயலாது. வேலையில்லாத தொழிலாளியின் உழைப்பானது அவர் வேலை செய்யாத நாளில் இழக்கப்படுகிறது. உழைப்பைத் திரட்டவோ அல்லது அடுத்த நாள் தள்ளிப்போடவோ இயலாது. அதனை ஒருமுறை இழந்தால் மீண்டும் திரும்பப் பெற இயலாது. உற்பத்தியில் உழைப்பு என்பது ஓர் செயற்படு காரணியாகும். நிலமோ, மூலதனமோ உழைப்பு இல்லாமல் அதிக உற்பத்தியை அளிக்க இயலாது. உழைப்பு ஒரே சீரானதல்ல. திறமையும் பயிற்சியும் நபருக்கு நபர் மாறுபடுகின்றன. உழைப்பை, உழைப்பாளரிடமிருந்து பிரிக்க இயலாது. உழைப்பு இடம் பெயரக்கூடியது. குறைந்த ஊதியம் பெறுவதைக் காட்டிலும் அதிக ஊதியம் பெற வேண்டும் என்பதற்காக, மனிதர்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம் பெயர்கிறார்கள். தனியாக உழைக்கும் உழைப்பாளரிடம் பேரம்பேசும் ஆற்றல் குறைவு. தமக்கு வேலை அளித்தவரிடம் தம் உழைப்புக்கான கூலியை உயர்த்த வேண்டுமென்றோ பணிபுரியும் இடத்தை மேம்படுத்த வேண்டுமென்றோ போராட முடியாது. தொழிலாளிகள் தங்களுக்குள் ஒருங்கிணைந்து தொழிற்சங்கம் அமைத்துப் போராடுவதன் மூலம் பேரம் பேசும் ஆற்றல் அதிகரிக்கிறது. வேலை பகுப்பு முறை வேலை பகுப்பு முறையை, ஆடம்ஸ்மித், தனது "நாடுகளின் செல்வமும் அவற்றை உருவாக்கும் காரணிகளும் ஓர் ஆய்வு" என்ற நூலின் மூலம் அறிமுகப்படுத்தியுள்ளார். ஒரு உற்பத்தியை நன்கு வரையறுக்கப்பட்ட வெவ்வேறு உட்பிரிவுகளாகப் பிரித்து அந்த உட்பிரிவுகள் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு தனிப்பட்ட உழைப்பாளி அல்லது உழைப்பாளர் குழுவினரிடம் ஒப்படைத்தலே வேலைப்பகுப்பு முறை எனப்படும். அதாவது, பல்வேறு கட்டங்களிலும் ஒரே தொழிலாளி ஈடுபடாமல், அவற்றைப் பிரித்துக் கொண்டு, ஒவ்வொரு கட்டப்பணியையும் ஒரு தொழிலாளி மேற்கொள்ள வேண்டும். படம், படவிளக்கம் தொடங்குகிறது. நான்கு சக்கர வாகன உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்றின் படம் கொடுக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலையில் பணியாளர்கள் மகிழிந்து பணியாற்றுவது போன்று காட்டப்பட்டுள்ளது. படவிளக்கம் முடிவடைகிறது. படம், பட விளக்கம் தொடங்குகிறது. இரு சக்கர வாகன உற்பத்தி தொழிற்சாலை ஒன்றின் படம் கொடுக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலையில், பணியாளர்கள் வாகன இஞ்சின் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். படவிளக்கம் முடிவடைகிறது. எடுத்துக்காட்டு ஒரு தையல்காரர் ஒரு சட்டையை முழுமையாகத் தைத்து உருவாக்குவதில் தையல்காரர் மட்டுமே ஈடுபடுகிறார். ஆனால், ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களில் துணிகளை உடல்பகுதி துணிகளைத் வெட்டுதல், தைத்தல், கைப்பகுதிகளைத் தைத்தல், கழுத்துப் பகுதிகளைத் தைத்தல், பொத்தான் வைக்கும் பகுதிகளைத் தைத்தல் போன்ற ஒவ்வொரு பணிகளும் தனித்தனி உழைப்பாளர்களால் மேற்கொள்ளப்படுகிறது. இறுதியாக, அனைத்துப் பகுதிகளையும் இணைத்துச் சிலர் தைக்கின்றனர். இந்நிலையில் அத்துணி முழுமையான ஒரு ஆடையாக உருவாகிறது. படம், படவிளக்கம் தொடங்குகிறது. ஆடை ஏற்றுமதி தொழிற்சாலை ஒன்றின் படம் கொடுக்கப்பட்டுள்ளது. படத்தில், ஆயத்த ஆடை தயாரிக்கும் தொழிலகத்தில் பெண்கள் பணிபுரிவது காட்டப்பட்டுள்ளது. படவிளக்கம் முடிவடைகிறது. வேலைப்பகுப்பு முறையின் நன்மைகள் உழைப்பாளி ஒருவர். ஒரே வேலையை மீண்டும் மீண்டும் செய்வதனால், அந்த வேலையில் திறமையுடையவராக ஆகிறார். இம்முறை நவீன இயந்திரங்களை உற்பத்தியில் அதிகமாக ஈடுபடுத்துவதற்கு வழி வகுக்கிறது. உதாரணம் கம்பியில்லாத் தந்தியின் கண்டுபிடிப்பு. காலமும், மூலப்பொருள்களும் மிகத் திறமையாகப் பயன்படுத்தப்படுகின்றன. வேலைப்பகுப்பு முறையின் தீமைகள் தொழிலாளி, ஒரே வேலையைத் திரும்ப, திரும்ப செய்வதால், சுவையற்ற, களிப்பற்ற. தன்மையை அடைகிறார். இது மனிதத் தன்மையை அழிக்கிறது. ஒரு பகுதி பணியினை மட்டும் ஒரு தொழிலாளி மேற்கொள்வதால், அவர் குறுகிய தேர்ச்சியை மட்டுமே பெறுகிறார். இதனால் வேலை வாய்ப்பின்மை பெருகும் நிலை உருவாகிறது. இம்முறை, கைவினைப் பொருள்களின் வளர்ச்சியினைப் பாதிக்கின்றது. ஒரு தொழிலாளி, ஒரு பொருளினை முழுவதுமாக உருவாக்கிய மன நிறைவினைப் பெறுவதில்லை. மாணவர்களைத் தம் பள்ளி/ வீடு அருகிலுள்ள தனியார் தையல் கடையையும், ஆயத்த ஆடை ஏற்றுமதி நிறுவனத்தையும் பார்வையிடச் செய்தல், ஆசிரியரும் மாணவர்களும், தையல் கடையிலும், ஆயத்த ஆடை ஏற்றுமதி நிறுவனத்திலும் ஆடைகளை எந்த முறைகளைப் பின்பற்றி தைக்கிறார்கள் எனக் கலந்துரையாடல் மூலதனம் (Capital) மூலதனம் என்பது பண்டங்களை உற்பத்தி பல்வேறு செய்வதற்காக மனித முயற்சியால் உருவாக்கப்பட்டதாகும். எளிமையாகக் கூறினால், மூலதனம் என்பது பணத்தைக் குறிக்கும். செல்வத்தை உற்பத்தி செய்வதற்காக ஒதுக்கப்பட்ட செல்வம் என்றும் மூலதனத்தைக் கூறலாம். மார்ஷலின் கருத்துப்படி, "இயற்கையின் கொடை தவிர்த்த வருமானம் அளிக்கக் கூடிய பிற வகைச் செல்வங்களே மூலதனம் ஆகும்." படம், படவிளக்கம் தொடங்குகிறது. அலுவலகம், ஒரு அலுவலக கட்டிடப் படம் கொடுக்கப்பட்டுள்ளது. படவிளக்கம் முடிவடைகிறது. படம், இயந்திரங்கள், பட விளக்கம் தொடங்குகிறது. ஒரு தொழிற்சாலையின் உள்ளே உள்ள இயந்திரத்தில் பணியாளர்கள் பணி புரிவது போன்ற படம் கொடுக்கப்பட்டுள்ளது. படவிளக்கம் முடிவடைகிறது. படம், தொழிற்சாலை, படவிளக்கம் தொடங்குகிறது. ஒரு தொழிற்சாலையின் வெளிப்புறத் தோற்றம் கொடுக்கப்பட்டுள்ளது. படவிளக்கம் முடிவடைகிறது. மூலதனத்தின் வடிவங்கள் 1. பருமப்பொருள் மூலதனம் அல்லது பொருட்சார் மூலதனம். (எடுத்து காட்டு) இயந்திரங்கள், கருவிகள், கட்டடங்கள் போன்றவை 2. பணமூலதனம் அல்லது பணவியல் வளங்கள் (எடுத்து காட்டு) வங்கி வைப்புகள், பங்குகள் மற்றும் பத்திரங்கள் போன்றவை. 3. மனித மூலதனம் அல்லது மனிதத் திறன் வளங்கள் (எடுத்து காட்டு) கல்வி, பயிற்சி மற்றும் சுகாதாரம் ஆகியவற்றில் முதலீடுகள் மூலதனத்தின் சிறப்பியல்புகள் மூலதனம் செயலற்ற ஓர் உற்பத்திக் காரணி மனித முயற்சியால் உருவாக்கப்படுகிறது இது உற்பத்தியில் தவிர்க்க முடியாத காரணியல்ல. இது இன்றியும் உற்பத்தி நடைபெறும் மூலதனம் அதிகம் இயங்கும் தன்மையுடையது இதன் அளிப்பு நெகிழும் தன்மையுடையது மூலதனம் ஆக்கமுடையது மூலதனம் பல ஆண்டுகள் நீடிக்கும் மூலதனத்தை ஈடுபடுத்துவதன் நோக்கம், எதிர்காலத்தில் வருமானம் பெற வேண்டும் என்பதேயாகும். தொழில் முனைவோர் (அல்லது) தொழிலமைப்பு (Entrepreneur or Organisation) தொழில் முனைவோர் எனப்படுபவர் பல உற்பத்திக் காரணிகளை (நிலம், உழைப்பு, மூலதனம்) ஒருங்கிணைத்துச் செயல்படுபவர் ஆவார். அக்காரணிகளைச் சரியான அளவிலும், முறையிலும் தொடங்கி, இடர்ப்பாடுகளை ஏற்று, உற்பத்தி அதிகரிக்க முயல்பவரே தொழில் முனைவோர் ஆவார். தொழில் முனைவோர், தொழில் அமைப்பாளர் எனவும் அழைக்கப்படுகிறார். தற்காலத்தில், தொழில் முனைவோர், மாற்றம் காணும் முகவர்"என அழைக்கப்படுகிறார். இவர் சமுதாய விருப்பமுள்ள உற்பத்தியைக் கொடுப்பதோடு மட்டுமல்லாமல் சமுதாய நலம் மேம்படவும் காரணமாகிறார். படம், படவிளக்கம் தொடங்குகிறது. தொழில் முனைவோர், படம் கொடுக்கப்பட்டுள்ளது. படவிளக்கம் முடிவடைகிறது. தொழில் முனைவோரின் சிறப்பியல்புகள் இலாபகரமான முதலீட்டு வாய்ப்புகளை அடையாளம் காணுதல் உற்பத்தி அலகின் இருப்பிடத்தைத் தீர்மானித்தல் புத்தாக்கத்தினை உருவாக்குதல் வெகுமதி செலவைத் தீர்மானித்தல் இடர்களை ஏற்றல் மற்றும் நிச்சயமற்ற தன்மையை எதிர்கொள்ளல் மாணவர்களைத் தங்கள் பள்ளி, வீட்டின் அருகிலுள்ள சிறந்த தொழில் முனைவோரைச் சந்தித்து அவர்களது தொழிலைப் பற்றிய விவரங்களை அறிந்து வரக் கூறுதல். ஆசிரியரும், மாணவர்களும் அதைப் பற்றிக் கலந்துரையாடுதல். சுருக்கம் நுகர்வோரின் பயன்பாட்டுக்காக, மூலப்பொருளையும், மூலப்பொருள் அல்லாதனவற்றையும் ஒன்றிணைத்து ஒரு பொருளை உருவாக்கும் செயலே உற்பத்தியாகும். பயன்பாடு என்பது நமது தேவைகளையும் விருப்பங்களையும் நிறைவு செய்வதாகும். பயன்பாட்டை அதன் இயல்பைப் பொருத்து வடிவப் பயன்பாடு. இடப்பயன்பாடு, காலப் பயன்பாடு என வகைப்படுத்தலாம். உற்பத்தியில் மூன்று வகைகள் உள்ளன. அவையாவன முதன்மை நிலை உற்பத்தி, இரண்டாம் நிலை உற்பத்தி மற்றும் மூன்றாம் நிலை உற்பத்தி ஒரு பொருளின் உற்பத்திக்கு உதவுகின்ற காரணிகளை நிலம், உழைப்பு முதலீடு மற்றும் தொழில் முனைவோர் என வகைப்படுத்தலாம். வேலை பகுப்புமுறையை ஆடம்ஸ்மித் தனது நாடுகளின் செல்வமும் அவற்றை உருவாக்குகின்ற காரணிகளும் ஓர் ஆய்வு" என்ற நூலின் மூலம் அறிமுகப்படுத்தியுள்ளார். தொழில் முனைவோர் எனப்படுபவர் பல உற்பத்திக் காரணிகளை (நிலம், உழைப்பு, மூலதனம்) ஒருங்கிணைத்துச் செயல்படுபவர் ஆவார். கலைச்சொற்கள் உற்பத்தி, Manufacture Production பயன்பாடு, Usefulness Utility நிறுவனம், Firm Organization தொழில் முனைவோர், Businessman Entrepreneur காரணிகள், Component Factors பகுப்பு, Dividing Division வளங்கள், Assets Resources பயிற்சி விரைவுத் துலங்கள் குறியீடு கொடுக்கப்பட்டுள்ளது, எண், O, B, P, 8,X 1, சரியான விடையை தேர்ந்தெடுக்க 1, உற்பத்தி என்பது அ) பயன்பாட்டை அழித்தல் ஆ) பயன்பாட்டை உருவாக்குதல் இ) மாற்று மதிப்பு ஈ) மேற்கண்ட எதுவுமில்லை 2, பயன்பாட்டின் வகைகளாவன அ) வடிவப் பயன்பாடு ஆ) காலப் பயன்பாடு இ) இடப் பயன்பாடு ஈ) மேற்கண்ட அனைத்தும் 3, முதன்மைக் காரணிகள் என்பன டேஸ் அ) நிலம், மூலதனம் ஆ) மூலதனம், உழைப்பு இ) நிலம், உழைப்பு ஈ) எதுவுமில்லை 4, தொழில் முனைவோர் என அழைக்கப்படுபவர் . அ) பரிமாற்றம் செய்பவர் ஆ) முகவர் இ) அமைப்பாளர் ஈ) தொடர்பாளர் 2, கோடிட்ட இடத்தை நிரப்புக. 1, டேஸ் என்பது பண்டத்திற்கான விருப்பங்களை நிறைவு செய்யும் சக்தியாகும். 2, பெறப்பட்ட காரணிகள் என்பது டேஸ் மற்றும் டேஸ் ஆகும். 3, டேஸ் என்பது நிலையான அளிப்பினை உடையது. 4, டேஸ் என்பது மனித உற்பத்தியில் ஓர் இடு பொருள். 5, டேஸ் என்பது பல்வேறு பண்டங்களை உற்பத்தி செய்திட மனித முயற்சியால் உருவாக்கப்பட்டதாகும். 3, பொருத்துக. 1, முதன்மை உற்பத்தி - ஆடம் ஸ்மித் 2, காலப் பயன்பாடு - மீன்பிடித்தல். சுரங்கத் தொழில் 3, நாடுகளின் செல்வம் – தொழில் முனைவோர் 4, மனித மூலதனம் - எதிர்கால சேமிப்பு 5 புதுமை புனைபவர் - கல்வி, உடல்நலம் 4, குறுகிய விடையளி 1, உற்பத்தி என்றால் என்ன? 2, பயன்பாடு என்பது என்ன? 3, பயன்பாட்டின் வகைகளை எழுதுக 4, உற்பத்திக் காரணிகளைக் கூறுக 5, உழைப்பு வரையறு 6, வேலை பகுப்பு முறை வரையறு 7, மூலதனத்தின் வடிவங்கள் யாவை? 8, தொழில் முனைவோரின் பண்புகள் மூன்றினைக் கூறுக 5. விரிவான விடையளி, 1, உற்பத்தியின் வகைகளை விரிவாக எழுதுக. 2, நிலம் என்றால் என்ன? அதன் சிறப்பியல்புகளை விவரிக்க? 3, வேலை பகுப்பு முறையின் நன்மைகள் மற்றும் தீமைகளை எழுதுக 4. மூலதனத்தின் சிறப்பியல்புகளை விளக்குக. 6, செயல்திட்டம் 1, மாணவர்களை முதன்மை, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை உற்பத்தித் தொடர்புடைய மாதிரிப் படங்களைச் சேகரித்துவரச் செய்து, ஒட்டச்செய்தல் 2, மாணவர்களைத் தங்கள் வீட்டின் அருகிலுள்ள வேளாண்மை செய்யும் விவசாயிகளுடன் கலந்துரையாடி நிலம் மற்றும் அதன் தொடர்புடையவற்றை புகைப்படங்கள் எடுத்துத் தாளில் ஒட்டச் செய்தல். 7, வாழ்வியல் திறன்கள் 1, மாணவர்கள் தொழில் முனைவோர் பற்றி அறிந்து கொள்ள வகுப்பறையை ஒரு நிறுவனம் போல் அமைத்தல் மாணவர்கள் சிலரைத் தொழில் முனைவோர் போலவும் உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபடுவது போலவும் நடிக்கச் செய்தல் ஆசிரியரும், மாணவர்களும் சமூதாய முன்னேற்றத்திற்குத் தொழில் முனைவோரின் பங்கு பற்றிக் கலந்துரையாடுதல்.

No comments:

Post a Comment